புவி மணிநேரம்

புவி மணி (Earth Hour) என்பது, வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், தேவை இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும்.

இது உலகளாவிய இயற்கை நிதியம் நிறுவிய ஆண்டுதோறும் மார்ச்சில் கடைபிடிக்கும் ஆற்றல் வளம் பேணும் நாளாகும். இந்த நிகழ்ச்சி தனியர்களையும் குமுகங்களையும் வணிக அமைப்புகளையும் ஊக்குவித்து மார்ச்சு இறுதியில் ஒருநாளில் ஒருமணி நேரத்துக்கு தேவையற்ற விளக்குகளை இரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரையில் புவிக்கோளுக்காக அணைத்துவைக்குமாறு வேண்டும் நாளாகும். இது ஆத்திரேலியாவில் சிட்னி நகரில் விளக்கணைப்பு நாளாக 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதர்குப் பிறகு இது 7,000 நகரங்களிலும் நகரியங்களிலும் 187 நாடுகளிலும் ஆட்சிப் பகுதிகளிலும் கடபிடித்த பெரிய நிகழ்ச்சியாக வளர்ந்தது.

புவி மணி நேரம்
புவி மணிநேரம்
புவி மணிக்கான சின்னம்
நாள்24 மார்ச்சு 2018, இரவு 8:30 இல் இருந்து இரவு 9:30 வரை.
புவி மணிநேரம்
சிட்னி துறைமுகப் பாலம் மற்றும் ஓப்பரா மாளிகை ஆகியன 2007 புவி மணி அன்று இருளில் மூழ்கின.

அடிக்கடி, புனித சனி மார்ச்சில் கடை வாரத்தில் வரும் ஆண்டுகளில், புவி மணிநேரக் கடைபிடிப்பு வழக்கமான நாளினும் ஒருவாரம் முன்னகர்த்தப்படுகிறது. 2018 ஆம் ஆண்டின் புவி மணி மார்ச்சு 24இல் இரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரையில் கடைபிடிக்கப்பட்டது.

வரலாறு

கருத்துருவின் தொடக்கம்: 2004–2007

அறிவியல் காணுகைகளால் ஆர்வமுற்ற ஆத்திரேலிய உலகளாவிய இயற்கைக்கான நிதியம் 2004 இல் சிட்னியில் உள்ல உலகளாவிய இலியோ பெர்னாட் விளம்பர முகவாண்மையை சந்தித்து ஆத்திரேலியர்களைக் காலநிலைக்காக எப்ப்படி செயல்படவைக்கலாம் என்பது சார்ந்த எண்னக்கருக்களை பகிருமாறு கேட்டுக் கொண்டது. பேரள்வில் விளக்குகளை அணைக்கும் எண்ணக்கரு 2006 இல் பேரணைப்பு எனும் பெயரில் உருவாக்கப்பட்டது. இதை இந்நிதியம் பேர்பாக்சு ஊடகத்துக்கு விளக்கிக் கூறியது. இந்நிறுவனம் சிட்னி மேயராகிய குளோவர் மூருடன் இணைந்து இந்நிகழ்ச்சியை நட்த்த ஒப்புகொண்டது. புவி மணி நிகழ்ச்சி 2007 அம் ஆண்டில் சிட்னியில் மார்ச்சு 31 இல் ஆத்திரேலியாவில் இரவு 7:30 மணியில் இருந்து இரவு 8:30 மணிவரையில் கடைபிடிக்கப்பட்டது.2.2 மில்லியன் மக்கள் பங்குபற்றிய இந்த முதல் நிகழ்வின்போது ஆத்திரேலியாவின் மின் நுகர்வு 2.1% - 10.2% அளவுக்குக் குறைந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.

சிட்னி புவி மணி நிகழ்ச்சியால் தூண்டப்பட்ட சான் பிரான்சிசுகோ 2007 அக்தோபரில் விளக்கணைப்பு திட்டத்தை நடத்தியது. இந்த அக்தோபர் நிகழ்ச்சியின் வெற்றியைக் கண்ணுற்ற ஏற்பாட்டாளர்கள் 2008 புவி மணி நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டு விளம்பரப்படுத்தி நடத்த முடிவெடுத்தனர் 2008.

2008 ஆம் ஆண்டு

புவி மணிநேரம் 
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து வான்கோபுரம் தனது பேரொளிவீச்சு விளக்கைப் புவி மணிநேரத்தில் அணைத்து பிறகு மீண்டு ஏற்றியது. (நடுச் சிவப்பு விளக்குக் காட்சிகள் வானூர்தி எச்சரிக்கை விளக்குகள் ஆகும்)

உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்படும் புவி மணிநேரம் என்ற நிகழ்ச்சி மார்ச்சு 29ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு (பிற்பகல் 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையிலான காலப்பகுதி) விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. இது மின் ஆற்றல் சேமிப்பை ஊக்குவிப்பதையும், கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. ஒளிசார் மாசடைதலைக் குறைப்பதற்கும் இது உதவக்கூடும். 2008 ஆம் ஆண்டின் புவி மணி, ஐக்கிய அமெரிக்காவில் தேசிய இருள் வான் வாரத்தின் தொடக்கத்துடன் பொருந்தி வந்தது. புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த புவி மணிநேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓப்பரா மாளிகை, உரோமை நகரின் கொலீசியம், அண்டார்ட்டிகாவின் இசுகாட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.

சோகுபி பன்னாட்டு இணைய அளக்கையின்படி, 36 மில்லியன் அமெரிக்கர்கள் (16% அமெரிக்க மக்கள்) 2008 ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுற்றுச்சூழல் அக்கறையும் அதாவது காலநிலை, மாசுறல் பற்றிய விழிப்புணர்வும் 4% அளவுக்கு (முன் 73%;பின் 77%) மிகுந்துள்ளது என அதே அளக்கை கூறுகிறது.

சபாத்து சடங்குடன் மோதாமல் இருக்க டெல் அவீவு (Tel Aviv) புவி மணிநேர நிகழ்ச்சியை 2008 மார்ச்சு 27 நாளுக்கு நகர்த்தித் திட்டமிட்டது. டப்ளின் தன் புவி மணிநேர நிகழ்ச்சியை இரவு 9 இல் இருந்து இரவு10 மணிக்கு தனது புவி வடக்கிருப்பிடங் காரணமாக நகர்த்தல்.

புவி மணிநேரம் 
அசிரீல் மையம், டெல் அவீவு 2010 ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்ச்சிக்கு இருள்சூழவைத்தல்.
புவி மணிநேரம் 
கொலோசியம் 2008 ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்ச்சிக்கு இருளுதல்
புவி மணிநேரம் 
ஆதித்தோரியோ தெ தெனெரிப் புவி மணிநேர நிகழ்ச்சிக்காக இருளுதல்

பாங்காக்கில் உள்ள தாய்லாந்து நாட்டு உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தின்படி, 73.34 மெவா மின்பயன்பாடு ஒருமணி நேரத்தில் குறைந்துள்ளது. இது 41.6 டன் கரிம ஈராக்சைடுக்குச் சமமாகும். பாங்காக் அஞ்சல் 165 மெவாமணி அளவுக்கு மின்பயன்பாடு குறைந்ததாகவும் அது 102 டன் கரிம ஈராக்சைடுக்குச் சம மாகும் எனவும் வேறு மதிப்பீட்டைக் கூறுகிறது. இது முந்தைய ஆண்டு மே மாத பாங்காக் நகர பரப்புரையின் போதைய மதிப்பை விடக் கணிசமான அளவு குறைவானதாகும். அப்போது 530 மெவாமணி மின்பயன்பாடும் 143 டன் அளவு கரிம ஈராக்சைடும் சேமிக்கப்பட்டது.

பிலிப்பைன் மின்சந்தைக் குழுமம் மின் நுகர்வு மணிலா பெருநகரத்தில் 78.63 மெவா அளவும் உலுசான் நகரில் 102.2 மெவா அளவும் குறைந்ததாக அறிவித்தது. மணிலா பெருநகரத்தில்39 மெவா தேவை இரவு 8:14 மணியளவிலும் உலுசான் நகரில் 116 மெவா தேவை இரவு 8:34 மணியளவிலும் குறைந்ததாக கூறப்படுகிறது.

அயர்லாந்து புவி மணிநேர மாலையில் 1.5% அளவுக்குக் குறைவாக மின் ஆற்றலைப் பயன்படுத்தியுள்ளது. 6:30 இல் இருந்து 9:30 வரையிலான மூன்று மணி நேரத்தில் 50 மெவா அளவு மின் நுகர்வு குறைந்துள்ளது. அதாவது 150 மெவாமணியளவு மின் ஆற்றலைச் சேமித்துள்லது. இது 60 டன் கரிம ஈராக்சைடுக்கு சமமாகும்.

புவி மணிநேரம் 
தங்கவாயில் பாலம், மாரின் உயர்நிலம். பின்னணியில் பொது திறந்த வெளி, 2008 புவி மணிநேரத்துக்கு முன்பும் நிகழ்வின்போதும்

துபாயில் பெருநகரங்கள் அனைத்தும் வெளிவிளக்குகளை முழுமையாக அணைத்துவிட்டன. சிலபகுத்களின் தெரு விளக்குகளும் கூட 50% அளவுக்கு மங்கலாக்கப்பட்டன. இதனால் 100 மெவாமணி மின்சாரம் சேமிக்கப்பட்டதாக மிந்துறையினர் கூறுகின்றனர். இதுபுவி மணிநேரத்துக்கு முன்பிருந்த நுகர்வினும் 2.4% அளவு குறைவனதாகும்.

மிகவும் அருமையான விளைவாக நியூசிலாந்து கிறிஸ்து பேராலய நகரில் அதாவது 13% மின்நுகர்வு குறைந்ததாக அறியவந்துள்ளது. என்றாலும்r, தேசிய மின்கட்டமைப்பு இயக்குநர் நியூசிலாந்து நாட்டின் மின்நுகர்வு புவி மணிநேரத்தில் 335 மெகாவாட்டாக, அதாவது முந்தைய இரு சனிக்கிழமைகளின் மின்நுகர்வான 328 மெகாவாட்டை விடக் கூடுதலாக இருத்தாக அறிவித்துள்ளார். ஆத்திரேலியாவில் மெல்பர்னில் 10.1% மின்நுகர்வும் 2007 இலும் 2008 இலும் புவி மணிநேர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சிட்னியில் 8.4% மின்நுகர்வும் குறைந்துள்ளது. என்றாலும் இது முந்தைய ஆண்டின் 10.2% மின்நுகர்வு குறைவை ஒப்பிடும்போது மிகவும் குறைவே; என்றாலும் புவி மணிநேர செயல் இயக்குநர் ஆகிய ஆண்டி இரிடுலே பிழை வரம்புக் காரணியை வைத்து நகரின் பங்களிப்பு அதே அளவில் இருந்தது எனக் கூறுகிறார்.

கனடா நாட்டு கால்கரியில் மிக அருகிய விளைவு பெறப்பட்டுள்ளது. நகரின் மின் நுகர்வு உச்ச மின்தேவையில் 3.6% அளவு மிகுந்துள்ளது. கால்கரியின் மின்நுகர்வு பெரிதும் அந்நகர வானிலையைச் சார்ந்தமைகிறது. நகரில் கடந்த தொடக்க ஆண்டை விட வெப்பநிலை 12°செ ( 22 °F) அளவு குறைந்துள்ளது. என்மேக்சு எனும் நகர மின்வழங்கும் குழுமம் பிந்தைய ஆண்டுகளில் கால்கரிய்ர்கள் புவி மனிநேர முயற்சியை ஆதரிக்கவில்லை எனவும் 2010, 2011 அம் ஆண்டுகளில் மின் நுகர்வி 1% அளவே குறைந்ததாகவும் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் மின் நுகர்வில் கணிசமான மாற்றம் ஏதும் காணப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளது.

பங்கேற்ற நாடுகளும் ஆட்சிப்பகுதிகளும்

    ஆப்பிரிக்கா

    ஆசியா

    ஐரோப்பா

    வட அமெரிக்கா

    ஓசியானியா
    தென் அமெரிக்கா

2013ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்வு

புவி மணிநேர நிகழ்வு 2013, மார்ச்சு 23, சனிக்கிழமை இரவு 8:30 மணியிலிருந்து 9:30 மணிவரை உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. 2013இல் மார்ச்சு மாதத்தின் கடைசி சனிக்கிழமை "புனித சனி" என்று கிறித்தவர்களால் அனுசரிக்கப்படுவதால் ஒருவாரம் முன்னதாக புவி மணிநேரம் கடைப்பிடிக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்வின் சில சிறப்புக் கூறுகள் இவை:

  • உகாண்டா நாட்டில் ஒவ்வொரு மாதமும் 6000 எக்டேர் காடுகள் அழிந்துவருகின்றன. இந்த அழிவைத் தடுக்க முதல் முயற்சியாக புவி மணிநேரம் உகாண்டாவில் நிகழ்ந்தது. சீரழிந்துள்ள சுமார் 2700 எக்டேர் நிலங்களில் தனிமனிதர், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் 2013ஆம் ஆண்டில் குறைந்தது 500,000 மரங்கள் நட வேண்டும் என்று உகாண்டா இயற்கைக்கான உலகளாவிய நிதியம் திட்டம் வகுத்துச் செயல்படுத்தத் தொடங்கியது. "நீ செய்தால் நானும் செய்வேன்" (I will if you will) என்னும் விருதுவாக்கு இதற்கு செயலூக்கம் அளித்தது. ஓர் உகாண்டா வங்கி 250,000 மரங்கள் நடுவதாக உறுதியளித்தது.
  • போட்சுவானா நாட்டின் முன்னாள் அதிபர் ஃபெஸ்டல் மோகே (Festus Mogae) என்பவர் நான்கு ஆண்டுக் காலத்தில் ஒரு மில்லியன் மரங்கள் நடப்போவதாக வாக்களித்தார்.
  • "நீ செய்தால் நானும் செய்வேன்" (இந்தோனேசிய மொழியில் Ini Aksiku! Mana Aksimu?) என்னும் விருதுவாக்கைப் பின்பற்றி இந்தோனேசியா டுவிட்டர் ஊடகத்தைப் பயன்படுத்தி மக்கள் புவி மணிநேரத்துக்குப் பிறகும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட ஊக்குவித்தது.
  • சுற்றுச்சூழல் பேணலில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பதை ஊக்குவிக்க "நீ செய்தால் நானும் செய்வேன்" பரப்புரை 50 நாடுகளுக்கு மேலாக இதில் பங்கேற்க வழிகோலியது.
  • புவி மணிநேரத்தின் தலைவரும் இணைநிறுவுனருமான ஆண்டி ரிட்லீ (Andy Ridley) என்பவர் பின்வருமாறு கூறினார்:

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

புவி மணிநேரம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
புவி மணி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

புவி மணிநேரம் வரலாறுபுவி மணிநேரம் 2008 ஆம் ஆண்டுபுவி மணிநேரம் குறிப்புகள்புவி மணிநேரம் மேற்கோள்கள்புவி மணிநேரம் வெளி இணைப்புகள்புவி மணிநேரம்மின் விளக்குவீடு (கட்டிடம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறம்நாளந்தா பல்கலைக்கழகம்தேம்பாவணிபுவியிடங்காட்டிசின்ன வீடுசூரியக் குடும்பம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வேற்றுமையுருபுமுத்தொள்ளாயிரம்கட்டபொம்மன்சங்க காலப் புலவர்கள்சிறுபஞ்சமூலம்கர்மாதொல்காப்பியம்மஞ்சள் காமாலைஇசைமுதலாம் உலகப் போர்திராவிசு கெட்சைவத் திருமணச் சடங்குதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சங்ககாலத் தமிழக நாணயவியல்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)கிறிஸ்தவம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்புனித யோசேப்புசீரகம்பித்தப்பைகுறவஞ்சிஆண்டாள்காடுவெட்டி குருஉரைநடைம. பொ. சிவஞானம்உயர் இரத்த அழுத்தம்மாற்கு (நற்செய்தியாளர்)வௌவால்தமிழ்விடு தூதுகள்ளர் (இனக் குழுமம்)செயற்கை நுண்ணறிவுகல்லணைவெப்பம் குளிர் மழைஇயேசு காவியம்லிங்டின்வேளாண்மைகழுகுசமூகம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்திரு. வி. கலியாணசுந்தரனார்விளையாட்டுஅறுபடைவீடுகள்வனப்புஐக்கிய நாடுகள் அவைதேவயானி (நடிகை)தமிழ்நாடு அமைச்சரவைநீர் மாசுபாடுகில்லி (திரைப்படம்)சேரன் (திரைப்பட இயக்குநர்)பறவைக் காய்ச்சல்தேவநேயப் பாவாணர்பீப்பாய்முக்கூடற் பள்ளுமுடிபாலின விகிதம்முத்துராமலிங்கத் தேவர்சைவத் திருமுறைகள்மருதமலை முருகன் கோயில்அதிமதுரம்சிவபுராணம்தமிழ்நாடுஇந்திய தேசிய சின்னங்கள்தைப்பொங்கல்பிரசாந்த்தன்யா இரவிச்சந்திரன்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சுப்பிரமணிய பாரதிஆளி (செடி)கண்டம்திருமலை நாயக்கர்பகவத் கீதை🡆 More