சிலி

சிலி (Chile, /ˈtʃɪli/ (ⓘ)) அதிகாரபூர்வமாக சிலி குடியரசு (Republic of Chile) என்பது தென் அமெரிக்காவின் மேற்கே அமைந்துள்ள ஒரு நாடு.

இது உலகின் மிகவும் தெற்கே உள்ள நாடும், அந்தாட்டிக்காவிற்கு மிக அருகில் உள்ள நாடும் ஆகும். இது அந்தீசு மலைகளுக்கும் பசிபிக் பெருங்கடலுக்குப் இடையில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் நீண்டுள்ளது. 756,102 சதுரகிமீ பரப்பளவைக் கொண்ட சிலியின் மக்கள்தொகை 17.5 மில்லியன் (2017-இல்) ஆகும். சிலியின் எல்லைகளாக வடக்கே பெரு, வடகிழக்கே பொலிவியா, கிழக்கே அர்கெந்தீனா நாடுகளும், தெற்கே டிரேக் கடல் பெருவழியும் அமைந்துள்ளன. அத்துடன் இந்நாடு ஈஸ்டர் தீவு, யுவான் பெர்னாண்டசு, சலாசு இ கோமசு, தெசுவென்சுராடசு ஆகிய பசிபிக் தீவுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்தாட்டிக்காவில் 1,250,000 சதுரகிமீ பரப்பளவு பகுதிக்கும் உரிமை கொண்டாடுகிறது. சிலியின் தலைநகரமும் பெரிய நகரமும் சான் டியேகோ ஆகும். இதன் தேசிய மொழி எசுப்பானியம் ஆகும்.

சிலி குடியரசு
Republic of Chile
கொடி of சிலி
கொடி
சின்னம் of சிலி
சின்னம்
குறிக்கோள்: Por la razón o la fuerza
("காரணத்தால் அல்லது பலத்தால்")
நாட்டுப்பண்: 
கடும் பச்சையில் சிலே; இளம் பச்சையில் கோரப்பட்ட ஆனால் கட்டுப்பாடற்ற பகுதி
கடும் பச்சையில் சிலே; இளம் பச்சையில் கோரப்பட்ட ஆனால் கட்டுப்பாடற்ற பகுதி
தலைநகரம்சான் டியேகோa
33°26′S 70°40′W / 33.433°S 70.667°W / -33.433; -70.667
பெரிய நகர்தலைநகர்
தேசிய மொழிஎசுப்பானியம்
சமயம்
(2022)
  • 37.4% சமயமின்மை
  • 0.5% ஏனையோர்
மக்கள்
  • சிலியன்
அரசாங்கம்ஒற்றை சனாதிபதிக் குடியரசு
• அரசுத்தலைவர்
கேப்ரியல் போரிக்
சட்டமன்றம்தேசியப் பேரவை
மேலவை
பிரதிநிதிகள் சபை
விடுதலை 
எசுப்பானியாவிடம் இருந்து
• ஆட்சிக் கவிழ்ப்பு
18 செப்டம்பர் 1810
• அறிவிப்பு
12 பெப்ரவரி 1818
• ஏற்றுக்கொள்ளப்பட்டது
25 ஏப்ரல் 1844
• அரசமைப்புச் சட்டம்
11 மார்ச் 1981
பரப்பு
• மொத்தம்
756,101.96 km2 (291,932.60 sq mi) (37-ஆவது)
• நீர் (%)
2.1 (as of 2015)
மக்கள் தொகை
• 2023 மதிப்பிடு
18,549,457 (65-ஆவது)
• அடர்த்தி
24/km2 (62.2/sq mi) (198-ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2023 மதிப்பீடு
• மொத்தம்
சிலி $597.520 பில்லியன் (45-ஆவது)
• தலைவிகிதம்
சிலி $29,934 (64-ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2023 மதிப்பீடு
• மொத்தம்
சிலி $344.400 billion (45-ஆவது)
• தலைவிகிதம்
சிலி $17,253 (62-ஆவது)
ஜினி (2021)negative increase 46
உயர்
மமேசு (2021)சிலி 0.855
அதியுயர் · 42-ஆவது
நாணயம்சிலியப் பேசோ (CLP)
நேர வலயம்ஒ.அ.நே−4, −6 (சிலியின் நேர வலயம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே-3, −5
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை
வாகனம் செலுத்தல்வலம்
அழைப்புக்குறி+56
ஐ.எசு.ஓ 3166 குறியீடுCL
இணையக் குறி.cl
  1. சட்டமன்றம் வல்பெய்ரசோவ் அடிப்படையில் சட்டமன்றம்.
  2. ஈசுடர் தீவு, சலாசு இ கோமசு தீவுகள் அடங்கலாக; அந்தாட்டிக்காவில் கோரப்பட்ட 1250,000 சதுரகிமீ பகுதி சேர்க்கப்படவில்லை.

எசுப்பானியா 16-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இப்பகுதியை இன்காக்களிடம் இருந்து கைப்பற்றித் தனது குடியேற்ற நாடாக்கியது, ஆனால் இப்போது தென்-மத்திய சிலி என அழைக்கப்படும் வசித்த சுதந்திரமான மாப்புச்சி மக்களைக் கைப்பற்றத் தவறிவிட்டது. 1818 ஆம் ஆண்டு எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்த பிறகு 1830களில் ஒப்பீட்டளவில் நிலையான சர்வாதிகாரக் குடியரசாக சிலி உருவானது. 19-ஆம் நூற்றாண்டின் போது, சிலி குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் பிராந்திய வளர்ச்சியைப் பெற்றது, 1880-களில் மாப்புச்சி எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது, அத்துடன் பெரு, பொலிவியா ஆகிய நாடுகளை பசிபிக் போரில் (1879-83) தோற்கடித்து, தற்போதைய வடக்குப் பகுதியைப் பெற்றது. 20-ஆம் நூற்றாண்டில், 1970கள் வரை, சிலி மக்கள்-மயமாக்கல் செயல்முறைக்கு உட்பட்டது இதன்மூலம், விரைவான மக்கள்தொகை வளர்ச்சி, நகரமயமாக்கல் போன்றவை இடம்பெற்றன. அதே நேரத்தில் அதன் பொருளாதாரத்தை முன்னெடுக்க அதன் செப்புச் சுரங்கங்கள் மூலம் ஏற்றுமதியை அதிகளவில் நம்பியிருந்தது. 1960-70களில், நாடு கடுமையான இடது-வலது அரசியலாலும், கொந்தளிப்பாலும் அல்லலுற்றது, இது 1973-இல் சிலி சதித்திட்டத்தில் உச்சக்கட்டத்தை அடைந்து, சால்வடோர் அயேந்தேயின் மக்களாட்சி இடதுசாரி அரசாங்கத்தை அகற்றியது. இதைத் தொடர்ந்து அகுத்தோ பினோச்செட்டின் கீழ் 16 ஆண்டுகால வலதுசாரி இராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டதின் விளைவாக 3,000 க்கும் மேற்பட்டோர் இறந்தும் காணாமலும் போயினர். 1988 இல் நடந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து 1990 இல் பினோச்செட்டின் ஆட்சி முடிவுக்கு வந்து, ஒரு மைய-இடது கூட்டணியால் 2010 வரை ஆட்சி செய்யப்பட்டது.

சிலி அதிக வருமானம் கொண்ட பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது, அத்துடன் தென் அமெரிக்காவில் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நிலையான நாடுகளில் ஒன்றாகும். இது இலத்தீன் அமெரிக்காவை போட்டித்தன்மை, தனிநபர் வருமானம், உலகமயமாக்கல், அமைதி, பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றில் முன்னணிக்குக் கொண்டு சென்றுள்ளது. நாட்டின் நிலைத்தன்மை, மக்களாட்சி வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் சிலி, இப்பிராந்தியத்ல் சிறப்பாக செயல்படுகிறது, மேலும் கனடாவைத் தொடர்ந்து, அமெரிக்கக் கண்டத்தில் இரண்டாவது மிகக் குறைந்த மனிதக்கொலை விகிதத்தைப் பெற்றுள்ளது. சிலி ஐக்கிய நாடுகள் அவை, இலத்தீன் அமெரிக்க, கரிபியன் சமூகம், பசிபிக் கூட்டமைப்பு ஆகியவற்றின் நிறுவன உறுப்பு நாடாகும். 2010 இல் இது பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் இணைந்தது.

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அந்தாட்டிக்காஅந்தீசு மலைத்தொடர்அமைதிப் பெருங்கடல்அர்கெந்தீனாஈஸ்டர் தீவுஉதவி:IPA/Englishஎசுப்பானியம்சான் டியேகோ (சிலி)டிரேக் கடல் பெருவழிதென் அமெரிக்காபடிமம்:En-Chile-pronunciation.oggபெருபொலிவியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இலட்சம்கண்ணகிகொன்றை வேந்தன்பண்பாடுதேர்தல் பத்திரம் (இந்தியா)மதுரைஇந்தியாதிராவிடர்முடியரசன்துபாய்பனைதிணை விளக்கம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கருணாநிதி குடும்பம்பறவைராஜஸ்தான் ராயல்ஸ்பரதநாட்டியம்மாணிக்கவாசகர்நயன்தாராஇலங்கைஒரு அடார் லவ் (திரைப்படம்)தொல். திருமாவளவன்உப்புச் சத்தியாகிரகம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இஸ்ரேல்தமன்னா பாட்டியாவிரை வீக்கம்இந்திய தேசியக் கொடிசத்ய பிரதா சாகுஇந்தியக் குடியரசுத் தலைவர்சாருக் கான்சேது (திரைப்படம்)வன்னியர்சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)பீனிக்ஸ் (பறவை)இனியவை நாற்பதுவீரப்பன்பிரேமலதா விஜயகாந்த்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)அகரவரிசைநவரத்தினங்கள்உயிர்மெய் எழுத்துகள்இரசினிகாந்துஉருவக அணிசு. வெங்கடேசன்தைராய்டு சுரப்புக் குறைவாரணம் ஆயிரம் (திரைப்படம்)இந்திய சமூக ஜனநாயகக் கட்சிஆங்கிலம்ஆரணி மக்களவைத் தொகுதிவிருந்தோம்பல்ஞானபீட விருதுசீவக சிந்தாமணிமயில்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபணவீக்கம்சுற்றுச்சூழல்இந்தியாவில் இட ஒதுக்கீடுடிரைகிளிசரைடுபாவலரேறு பெருஞ்சித்திரனார்ஆதி திராவிடர்திருநாவுக்கரசு நாயனார்குமரகுருபரர்இராவண காவியம்பதினெண்மேற்கணக்குபதிற்றுப்பத்துதேனி மக்களவைத் தொகுதிசன் தொலைக்காட்சிமனித மூளைபரிபாடல்இந்தியத் தேர்தல் ஆணையம்எட்டுத்தொகை தொகுப்புவெ. இராமலிங்கம் பிள்ளைபாரத ரத்னாநவமிதூதுவளைநீதி இலக்கியம்🡆 More