பின்லாந்து

பின்லாந்து (Finland; பின்னிய மொழி: Suomi   ( கேட்க); சுவீடிய: Finland (ⓘ)), அதிகாரபூர்வமாக பின்லாந்துக் குடியரசு (Republic of Finland) என்பது வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நோர்டிக் நாடுகளில் ஒன்றாகும்.

இது வடமேற்கில் சுவீடன், வடக்கில் நோர்வே, கிழக்கில் உருசியா, மேற்கில் பொத்னியா வளைகுடா, தெற்கில் பின்லாந்து வளைகுடா, மற்றும் எசுத்தோனியாவின் குறுக்கேயும் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. 5.6 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பின்லாந்து 338,455 சதுர கிலோமீட்டர்கள் (130,678 சதுரமைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. எல்சிங்கி இதன் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். மக்கள்தொகையின் பெரும்பாலானோர் பின்னிய இனத்தைச் சேர்ந்தவர்கள். பின்னியம், சுவீடியம் ஆகியன அதிகாரபூர்வ மொழிகள் ஆகும். 5.2% மக்கள் சுவீடிய மொழி பேசுகின்றனர். பின்லாந்தின் காலநிலை தெற்கில் ஈரப்பதத்தில் இருந்து வடமுனக் காலநிலை வரை மாறுபடும். நிலப்பரப்பு முதன்மையாக 180,000 க்கும் மேற்பட்ட ஏரிகளைக் கொண்ட ஒரு ஊசியிலைக் காடுகளைக் கொண்டுள்ளது.

பின்லாந்துக் குடியரசு
Republic of Finland
  • Suomen tasavalta
  • Republiken Finland
கொடி of பின்லாந்து
கொடி
சின்னம் of பின்லாந்து
சின்னம்
நாட்டுப்பண்: 
Vårt land
("நமது நிலம்")
பின்லாந்து
பின்லாந்து
அமைவிடம்: பின்லாந்து  (கடும்பச்சை)

– ஐரோப்பியக் கண்டத்தில்  (பச்சை & கடும் சாம்பல்)
– ஐரோப்பிய ஒன்றியத்தில்  (பச்சை)  —  [Legend]

தலைநகரம்எல்சிங்கி
60°10′15″N 24°56′15″E / 60.17083°N 24.93750°E / 60.17083; 24.93750
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகள்
  • சமி
  • கரேலியம்
  • பின்னிய காலோ
இனக் குழுகள்
(2021)
  • 91.5% பின்னியர்
  • 8.5% ஏனையோர்
சமயம்
(2021)
மக்கள்
  • பின்னியர்
  • பின்சு
அரசாங்கம்ஒருமுக நாடாளுமன்றக் குடியரசு
• குடியரசுத் தலைவர்
சௌலி நீனிசுட்டோ
• பிரதமர்
சன்னா மரீன்
சட்டமன்றம்நாடாளுமன்றம்
விடுதலை 
• உருசியப் பேரரசில் இணைவும் தன்னாட்சியும்
29 மார்ச் 1809
• விடுதலை அறிவிப்பு
6 திசம்பர் 1917
• பின்லாந்து உள்நாட்டுப் போர்
சனவரி – மே 1918
• அரசியலமைப்பு உருவாக்கம்
17 சூலை 1919
30 நவம்பர் 1939 – 13 மார்ச் 1940
• தொடர் போர்
25 சூன் 1941 – 19 செப்டம்பர் 1944
1 சனவரி 1995
• நேட்டோவில் இணைவு
4 ஏப்ரல் 2023
பரப்பு
• மொத்தம்
338,455 km2 (130,678 sq mi) (65-ஆவது)
• நீர் (%)
9.71 (2015)
மக்கள் தொகை
• 2022 மதிப்பிடு
Neutral increase 5,567,868 (116-ஆவது)
• அடர்த்தி
16.4/km2 (42.5/sq mi) (213-ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2022 மதிப்பீடு
• மொத்தம்
பின்லாந்து $321.2 பில். (60-ஆவது)
• தலைவிகிதம்
பின்லாந்து $58,010 (21-ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2022 மதிப்பீடு
• மொத்தம்
பின்லாந்து $267.61 பில். (46-ஆவது)
• தலைவிகிதம்
பின்லாந்து $53,745 (16-ஆவது)
ஜினி (2021)positive decrease 25.7
தாழ்
மமேசு (2021)பின்லாந்து 0.940
அதியுயர் · 11-ஆவது
நாணயம் (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+2 (கி.ஐ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கி.ஐ.கோ.நே)
திகதி அமைப்புநா.நா.மா.ஆஆஆஆ
வாகனம் செலுத்தல்வலம்
அழைப்புக்குறி+358
ஐ.எசு.ஓ 3166 குறியீடுFI
இணையக் குறி.fi, .axa
  1. .eu இணையக்குறியும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் பகிரப்படுகிறது.

பின்லாந்தில் இறுதிப் பனிப்பாறைக் காலத்திற்குப் பிறகு ஏறத்தாழ கிமு 9000 ஆண்டுகள் முதல் மக்கள் வசிக்கின்றனர். கற்காலம் பல்வேறு வெண்களிமண் பாணிகளையும் மற்றும் கலாச்சாரங்களையும் அறிமுகப்படுத்தியது. வெண்கல, இரும்புக் காலங்கள் பெனோசுக்காண்டியா மற்றும் பால்ட்டிக் பிராந்தியத்தில் உள்ள பிற கலாச்சாரங்களுடனான தொடர்புகளால் வகைப்படுத்தப்பட்டன. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, வடக்கு சிலுவைப் போரின் விளைவாக பின்லாந்து சுவீடனின் ஒரு பகுதியாக மாறியது. 1809 இல், பின்னியப் போரின் விளைவாக, பின்லாந்து உருசியப் பேரரசின் ஒரு தன்னாட்சிப் பகுதியாக மாறியது, இதன் போது பின்னியக் கலை செழித்து வளர்ந்தது, விடுதலை பற்றிய உணர்வும் தொடங்கியது. 1906 இல், பின்லாந்து பொது வாக்குரிமையை வழங்கிய முதல் ஐரோப்பிய நாடானது. அத்துடன் அனைத்து வயது வந்த குடிமக்களுக்கும் பொது அலுவலகத்திற்குப் போட்டியிடுவதற்கான உரிமையை வழங்கிய உலகின் முதல் நாடாக மாறியது. 1917 உருசியப் புரட்சியை அடுத்து, பின்லாந்து உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. புதிதாக உருவாகியிருந்த இந்நாடு 1918 இல் பின்னிய உள்நாட்டுப் போரால் பிளவடைந்திருந்தது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், பின்லாந்து பனிக்காலப் போரில் சோவியத் ஒன்றியத்துடனும், நாட்சி செருமனியுடன் இலாப்லாந்துப் போரிலும் ஈடுபட்டது. அதன் பின்னர் தனது பிரதேசத்தின் சில பகுதிகளை இழந்தது, ஆனால் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

1950கள் வரையிலும் பின்லாந்து பெரும்பாலும் ஒரு வேளாண்மை நாடாகவே விளங்கியது. இரண்டாம் உலகப் போரின் பின்னர், அது விரைவாகத் தொழில்மய நாடாக மாறியதோடு, மேம்பட்ட பொருளாதாரத்தையும் உருவாக்கியது. அதே வேளையில் நோர்டிக் மாதிரியின் அடிப்படையில் ஒரு விரிவான நலன்புரி அரசை உருவாக்கியது; நாடு விரைவில் பரவலான செழிப்பையும் அதிக தனிநபர் வருமானத்தை அனுபவித்தது. பனிப்போரின் போது, பின்லாந்து அதிகாரப்பூர்வமான நடுநிலைக் கொள்கையை ஏற்றுக்கொண்டது. பனிப்போர் முடிவில், 1995 இல் பின்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலும், 1999 இல் யூரோ வலயத்திலும், 2023 இல் நேட்டோவிலும் இணைந்தது. கல்வி, பொருளாதாரப் போட்டித்தன்மை, குடியியல் உரிமைகள், வாழ்க்கைத் தரம், மனித மேம்பாடு உள்ளிட்ட தேசிய செயல்திறனின் எண்ணற்ற அளவீடுகளில் பின்லாந்து முன்னணியில் உள்ளது.

பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலா தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர்கள்

பின்லாந்து 
பின்லாந்தின் 11 குடியரசுத் தலைவர், டார்ஜா ஹேலோனென்.
பின்லாந்து 
பின்லாந்தின் தற்போதைய குடியரசுத் தலைவர்,சௌலி நீனிசுட்டோ
குடியரசு தலைவர்கள்
பெயர் பிறப்பு–இறப்பு பதவிக்காலம்
கே. ஜே. ஸ்டால்பர்க் 18651952 19191925
எல். கே. ரெலாண்டர் 18831942 19251931
பி. இ. ஸ்வின்ஹூப்வுட் 18611944 19311937
கே. கால்லியொ 18731940 19371940
ஆர். றைட்டி 18891956 19401944
கார்ல் மன்னெர்ஹெயிம் 18671951 19441946
ஜூஹோ பாசிக்கிவி 18701956 19461956
ஊரோ கெக்கோனென் 19001986 19561981
மௌனோ கொய்விஸ்ட்டோ 19232017 19821994
மார்ட்டி ஆட்டிசாரி 1937 19942000
டார்ஜா ஹேலோனென் 1943 20002012
சௌலி நீனிசுட்டோ 1948– 2012–

நகராட்சிகள்

நகராட்சி மக்கட்தொகை பரப்பளவு அடர்த்தி
ஹெல்சின்கி 564474 184.47 3061.00
யெஸ்ப்பூ 235100 312.00 751.60
டாம்பரெ 206171 523.40 393.90
வன்டா 189442 240.54 780.40
டுர்க்கு 177502 243.40 720.50
உளு 130049 369.43 351.40
லகதி 98773 134.95 730.10
குவோப்பியோ 91026 1127.40 81.00
ஜய்வாச்கைலா 84482 105.90 789.00
பொரி 76211 503.17 150.83
லப்பேன்ரண்டா 59077 758.00 77.70
ரொவனியெமி 58100 7600.73 7.60
ஜொயென்ஸு 57879 1173.40 49.10
வாசா 57266 183.00 311.20
கோட்கா 54860 270.74 203.00

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பின்லாந்து குடியரசுத் தலைவர்கள்பின்லாந்து நகராட்சிகள்பின்லாந்து குறிப்புகள்பின்லாந்து மேற்கோள்கள்பின்லாந்து வெளி இணைப்புகள்பின்லாந்துFi-suomi.oggen:Help:IPA/Swedishen:WP:IPA for Estonian and Finnishஉருசியாஎசுத்தோனியாஎல்சிங்கிஏரிசுவீடன்சுவீடிய மொழிதைகாநோர்டிக் நாடுகள்நோர்வேபடிமம்:Sv-Finland.oggபின்னிய மொழிபின்லாந்து வளைகுடாபொத்னியா வளைகுடாவடக்கு ஐரோப்பா

🔥 Trending searches on Wiki தமிழ்:

உமறுப் புலவர்விசயகாந்துவிருந்தோம்பல்ராதிகா சரத்குமார்பிள்ளையார்தீரன் சின்னமலைஜிமெயில்யானைஐக்கூஅகரவரிசைதனுசு (சோதிடம்)முதலாம் இராஜராஜ சோழன்பெருமாள் திருமொழிமனித மூளைவைப்புத்தொகை (தேர்தல்)இந்தியத் தேர்தல் ஆணையம்சிலம்பம்ஒற்றைத் தலைவலிவிக்ரம்கிருட்டிணன்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிபள்ளிக்கூடம்108 வைணவத் திருத்தலங்கள்திரிகடுகம்ஆனந்த விகடன்சீரடி சாயி பாபாஉன் சமையலறையில்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019பண்பாடுஇரட்டைமலை சீனிவாசன்சச்சின் (திரைப்படம்)நான்மணிக்கடிகைசினைப்பை நோய்க்குறிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழ்ப் பருவப்பெயர்கள்பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்ஈ. வெ. இராமசாமிபாரிதமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல்ஈமோஃபீலியாகண்ணகிலோ. முருகன்பழமுதிர்சோலை முருகன் கோயில்கட்டுவிரியன்பெண் தமிழ்ப் பெயர்கள்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிவேளாண்மைதமிழ் எழுத்து முறைபனிக்குட நீர்ஞானபீட விருதுமின்னஞ்சல்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்அக்கி அம்மைஇன்ஸ்ட்டாகிராம்கலாநிதி வீராசாமிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்நவரத்தினங்கள்மயில்இந்திரா காந்திசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)கணபதி பி. ராஜ் குமார்அரண்மனை (திரைப்படம்)சேக்கிழார்மாமல்லபுரம்விபுலாநந்தர்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)வெந்து தணிந்தது காடுதமிழக வரலாறுமரபுச்சொற்கள்ஈரோடு மக்களவைத் தொகுதிகள்ளழகர் கோயில், மதுரைஅம்பேத்கர்உ. வே. சாமிநாதையர்வைரமுத்துமான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்வெண்குருதியணுஇந்தியப் பிரதமர்இந்து சமயம்🡆 More