அறுபடைவீடுகள்

தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுள்களில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள், ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது.

இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. அவை:

  1. திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்)
  2. திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் (தூத்துக்குடி மாவட்டம்)
  3. திருவாவினன்குடி (எ) பழனி (திண்டுக்கல் மாவட்டம்)
  4. திருவேரகம் (எ) சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்)
  5. திருத்தணி அல்லது குன்றுதோறாடல் (திருவள்ளூர் மாவட்டம்)
  6. பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்)
அறுபடைவீடுகள் is located in தமிழ் நாடு
சுவாமிமலை
சுவாமிமலை
திருத்தணி
திருத்தணி
பழனி
பழனி
பழமுதிர்சோலை
பழமுதிர்சோலை
திருச்செந்தூர்
திருச்செந்தூர்
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்
அறுபடைவீடுகளின் இருப்பிடம்

திருப்பரங்குன்றம்

அறுபடைவீடுகள் 
திருப்பரங்குன்றம் முருகன் கோயில்

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரைக்கு தென்மேற்கில் ஏறத்தாழ 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

திருச்செந்தூர்

அறுபடைவீடுகள் 
திருச்செந்தூர் கோயில்

திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது.

திருவாவினன்குடி

அறுபடைவீடுகள் 
பழனி மலை

பழனி, முருகனின் மூன்றாம் படை வீடாகும். நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.

சுவாமிமலை

அறுபடைவீடுகள் 
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்

சுவாமிமலை முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் எனப் பெயராயிற்று.

திருத்தணி

அறுபடைவீடுகள் 
திருத்தணி முருகன் கோயில்

திருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். இவ்விடத்தின் மலையின் வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்ட தலமாகும். திருத்தணி குன்றின் மீது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தணி முருகன் கோயில் உள்ளது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது. முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.

பழமுதிர்சோலை

அறுபடைவீடுகள் 
பழமுதிர்சோலை முருகன் கோயில்

பழமுதிர்சோலை - முருகனின் ஆறாம் படைவீடாகும். முருகப் பெருமான் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். இங்குள்ள முருகன் கோயில், விஷ்ணு கோயிலான அழகர் கோவில் மலை மீது அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

மேற்கோள்கள்

Tags:

அறுபடைவீடுகள் திருப்பரங்குன்றம்அறுபடைவீடுகள் திருச்செந்தூர்அறுபடைவீடுகள் திருவாவினன்குடிஅறுபடைவீடுகள் சுவாமிமலைஅறுபடைவீடுகள் திருத்தணிஅறுபடைவீடுகள் பழமுதிர்சோலைஅறுபடைவீடுகள் மேற்கோள்கள்அறுபடைவீடுகள்இந்து சமயம்கோயில்தமிழ்நாடுபடைவீடுமுருகன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விண்ணைத்தாண்டி வருவாயாமணிமேகலை (காப்பியம்)இந்திய தேசிய காங்கிரசுநெருப்புதமிழ்நாடு காவல்துறைமக்களவைவிருதுநகர் மக்களவைத் தொகுதிசேரர்நாடார்காதல் (திரைப்படம்)அம்பேத்கர்திருக்குர்ஆன்செக் மொழிஇந்திய வரலாறுகனிமொழி கருணாநிதிஅறுபடைவீடுகள்எட்டுத்தொகைமாணிக்கம் தாகூர்தமிழ் மாதங்கள்கூகுள்இந்தியக் குடியியல் பணிகள் தேர்வுபுதுமைப்பித்தன்49-ஓநிதி ஆயோக்எடப்பாடி க. பழனிசாமிகண்ணனின் 108 பெயர் பட்டியல்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிபுறநானூறுமூலிகைகள் பட்டியல்தற்கொலை முறைகள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்முதலாம் இராஜராஜ சோழன்காரைக்கால் அம்மையார்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005விவேக் (நடிகர்)க. கிருஷ்ணசாமிஇந்திய தேசிய சின்னங்கள்இந்தியப் பொதுவுடைமைக் கட்சிமனித மூளைதிருமால்சுரதாகீழடி அகழாய்வு மையம்பரகலா பிரபாகர்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கன்னி (சோதிடம்)யாழ்உரிச்சொல்அன்னை தெரேசாஆல்பர்ட் ஐன்ஸ்டைன்காளமேகம்கணையம்வட சென்னை மக்களவைத் தொகுதிநேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம்தமிழ்நாடுகுருதி வகைஅழகிய தமிழ்மகன்விரை வீக்கம்பூக்கள் பட்டியல்கருச்சிதைவுதிருமுருகாற்றுப்படையானைதருமபுரி மக்களவைத் தொகுதிபொன்னியின் செல்வன்திருட்டுப்பயலே 2இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தமிழ்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்திருவாசகம்முடக்கு வாதம்சிறுநீரகம்வெள்ளியங்கிரி மலைநாட்டு நலப்பணித் திட்டம்மெய்யெழுத்துதமிழர் பருவ காலங்கள்வாணிதாசன்காச நோய்ஆகு பெயர்நீர் மாசுபாடு🡆 More