உக்ரைன்: கிழக்கு ஐரோப்பிய நாடு

உக்ரைன் (Ukraine, உக்ரைனியன்: Україна, உச்சரிப்பு  (ⓘ), உக்ரையீனா) கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு.

உருசியாவுக்கு அடுத்தபடியாக பரப்பளவில் ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடான உக்ரைன், உருசியாவுடன் கிழக்கேயும், வட-கிழக்கேயும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உக்ரைன் நாட்டின் நடுவில் பாயும் தினேப்பர் ஆறு, உக்ரைனை மேற்கு உக்ரைன் மற்றும் கிழக்கு உக்ரைன் எனப்பிரிக்கிறது.

Ukraine
உக்ரைன்
Україна
Ukrayina
கொடி of உக்ரைனின்
கொடி
சின்னம் of உக்ரைனின்
சின்னம்
நாட்டுப்பண்: Ще не вмерла України ні слава, ні воля  (உக்ரைனிய மொழி)
உக்ரைனின் எழுச்சி இன்னும் புதைக்கப்படவில்லை, அதுபோல் விடுதலையும்
உக்ரைன்: பெயர்க்காரணம், நிர்வாகப் பிரிவுகள் (2020 முதல்), கலாச்சாரம்
தலைநகரம்கீவ்
49°N 32°E / 49°N 32°E / 49; 32
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)உக்குரைனியம்
இனக் குழுகள்
(2001)
மக்கள்உக்ரைனியர்
அரசாங்கம்ஒருமுக பகுதி-சனாதிபதிக் குடியரசு
• அரசுத்தலைவர்
வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
• பிரதமர்
ஒகெல்சி ஒன்சாருக்
• நாடாளுமன்றத் தலைவர்
திமீத்ரோ இரசூம்கொவ்
சட்டமன்றம்விர்கோனவ ராடா
வரலாறு
• கீவன் உருசு
அமைப்பு
882
• கிறித்துவமயமாக்கல்
988
• உருதேனியா இராச்சியம்
1199
• மங்கோலிய ஆக்கிரமிப்பு
1238–1240
• இலித்துவேனிய இராச்சியம் அமைப்பு
1320–1349
• உருசியாவின் கீழ்
தன்னாட்சி உக்ரைனிய மக்கள் குடியரசு
23 (10) சூன் 1917
• விடுதலை
அறிவிப்பு
22 (9) சனவரி 1918
• மேற்கு உக்ரைனிய மக்கள் குடியரசு
13 நவம்பர் 1918
• உக்ரைனிய ஒன்றிணைப்பு
22 சனவரி 1919
• சோவியத் ஆட்சி
10 மார்ச் 1919
• சோவியத்
உறுப்புரிமை
30 திசம்பர் 1922
• சோவியத்தில் இருந்து விடுதலை
24 ஆகத்து 1991a
பரப்பு
• மொத்தம்
603,628 km2 (233,062 sq mi) (45-வது)
• நீர் (%)
7
மக்கள் தொகை
• 2019 மதிப்பிடு
உக்ரைன்: பெயர்க்காரணம், நிர்வாகப் பிரிவுகள் (2020 முதல்), கலாச்சாரம் 42,030,832
(கிரிமியா மூவலந்தீவு, செவஸ்தோபோல் தவிர்த்து) (33-வது)
• 2001 கணக்கெடுப்பு
48,457,102
• அடர்த்தி
73.8/km2 (191.1/sq mi) (115-வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2019 மதிப்பீடு
• மொத்தம்
உக்ரைன்: பெயர்க்காரணம், நிர்வாகப் பிரிவுகள் (2020 முதல்), கலாச்சாரம் $408.040 பில். (47-வது)
• தலைவிகிதம்
உக்ரைன்: பெயர்க்காரணம், நிர்வாகப் பிரிவுகள் (2020 முதல்), கலாச்சாரம் $9,743 (111-வது)
மொ.உ.உ. (பெயரளவு)2019 மதிப்பீடு
• மொத்தம்
உக்ரைன்: பெயர்க்காரணம், நிர்வாகப் பிரிவுகள் (2020 முதல்), கலாச்சாரம் $134.887 பில். (57-வது)
• தலைவிகிதம்
உக்ரைன்: பெயர்க்காரணம், நிர்வாகப் பிரிவுகள் (2020 முதல்), கலாச்சாரம் $3,220 (128-வது)
ஜினி (2016)positive decrease 25.0
தாழ் · 18-வது
மமேசு (2018)உக்ரைன்: பெயர்க்காரணம், நிர்வாகப் பிரிவுகள் (2020 முதல்), கலாச்சாரம் 0.750
உயர் · 88-வது
நாணயம்ஹிருன்யா (₴) (UAH)
நேர வலயம்ஒ.அ.நே+2 (கிஐநே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கி.ஐ.கோ.நே)
வாகனம் செலுத்தல்இடக்கை
அழைப்புக்குறி+380
இணையக் குறி
  • .ua
  • .укр
  1. திசம்பர் 1 இல் விடுதலைப் பிரகடனம், திசம்பர் 26 இல் முழுமையான விடுதலை

உக்ரைன் வடக்கே பெலருசுடனும்; மேற்கே போலந்து, சிலோவாக்கியா, அங்கேரி உடனும்; தெற்கே உருமேனியா, மல்தோவா உடனும்; கரையோரமாக அசோவ் கடல், கருங்கடல் உடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உக்ரைனின் பரப்பளவு 603,628 km2 (233,062 sq mi) ஆகும், மக்கள் தொகை 41.2 மில்லியன்,{{efn|[[கிரிமியா மூவலந்தீவு மக்கள்தொகையைத் (2,416,856) தவிர்த்து}}. இது ஐரோப்பாவில் 8-வது பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாகும். இதன் தலைநகர் கீவ். இதன் ஆட்சி மொழி உக்ரைனியம் ஆகும். பெரும்பான்மை மக்கள் கிழக்கு மரபுவழிக் கிறித்தவர்கள் ஆவர்.

இன்றைய உக்ரைன் பிரதேசத்தில் கிமு 32,000 முதல் குடியேற்றம் இருந்து வருகிறது. இடைக்காலப் பகுதியில், இது கிழக்கு சிலாவிக் பண்பாட்டின் முக்கிய மையமாக இருந்தது. கூவ் உருசு என்ற பழங்குடிக் கூட்டமைப்பு உக்ரைனிய அடையாளத்தின் அடிப்படையை உருவாக்கியது. கிபி 13-ஆம் நூற்றாண்டில் பல பிராந்தியங்களாகப் பிளவுற்று, அதன் பின்னர் மங்கோலியப் படையெடுப்பால் பேரழிவு ஏற்பட்டது. இதனால் பிராந்திய ஒற்றுமை சீர்குலைந்தது. இப்பகுதி போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம், ஆத்திரியா-அங்கேரி, உதுமானியப் பேரரசு, உருசியாவின் சாராட்சி உட்படப் பல்வேறு சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, ஆளப்பட்டது. 17-ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் உக்ரைனிய-கொசாக் பேரரசு தோன்றி செழித்தது. ஆனாலும், அதன் பகுதிகள் இறுதியில் போலந்து, உருசியப் பேரரசுக்கிடையில் பிரிக்கப்பட்டது. 1917 உருசியப் புரட்சியின் பின்னர், உக்ரைனியத் தேசிய இயக்கம் உருவானது. 1917 சூன் 23 இல் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனிய மக்கள் குடியரசு அறிவிக்கப்பட்டது. 1922 இல் உக்ரைனிய சோவியத் சோசலிசக் குடியரசு உருவாகி சோவியத் ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர் ஆனது. சோவியத் ஒன்றியம் 1991 இல் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உக்ரைன் தனிநாடாக விடுதலை அடைந்தது.

விடுதலைக்குப் பின்னர், உக்ரைன் தன்னை ஒரு நடுநிலை நாடாக அறிவித்தது; 1994 இல் நேட்டோவுடன் ஒரு கூட்டாண்மையை நிறுவிய அதே வேளையில், உருசியாவுடனும், பிற முன்னாள் சோவியத் நாடுகளுடனும் ஒரு வரையறுக்கப்பட்ட இராணுவ கூட்டாண்மையை உருவாக்கியது. 2013 இல் உக்ரைன் அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச்சின் அரசு உக்ரைன்-ஐரோப்பிய ஒன்றிய கூட்டு உடன்படிக்கையை நிறுத்தி, உருசியாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை நாட முடிவு செய்த பின்னர், யூரோமைதான் என்று அழைக்கப்படும் பல மாத கால ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு அலைகள் தொடங்கி, தீவிரமடைந்தது. கண்ணியத்தின் புரட்சி என அழைக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் யானுக்கோவிச்சை பதவியில் அகற்றி புதிய அரசாங்கத்தை நிறுவ வழிவகுத்தது. இந்த நிகழ்வுகள் 2014 மார்ச் மாதத்தில் உருசியாவால் கிரிமியாவை இணைப்பதற்கான பின்னணியை உருவாக்கியதோடு, 2014 ஏப்ரல் முதல் 2022 பிப்ரவரி உருசியப் படையெடுப்பு வரை, தன்பாசுப் போர், உருசிய ஆதரவுப் பிரிவினைவாதிகளுடன் நீடித்த மோதல் ஆகியவற்றுக்கு வழிவகுத்தது. 2016 சனவரி 1 அன்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் விரிவான சுதந்திர வர்த்தகப் பகுதியை அமைப்பதற்காக விண்ணப்பித்தது.

உக்ரைன் மனித வளர்ச்சிக் குறியீட்டில் 74வது இடத்தில் உள்ள ஒரு வளரும் நாடாகும். இது ஐரோப்பாவில் மிக அதிக வறுமை விகிதத்தாலும், கடுமையான ஊழலாலும் பாதிக்கப்பட்ட நாடாகும். இருப்பினும், அதன் விரிவான வளமான விளைநிலங்கள் காரணமாக, உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாகும். உக்ரைன் ஒரு அரசுத்தலைவர் முறையின் கீழ் ஒரு ஒற்றையாட்சிக் குடியரசு ஆகும். இது சட்டமன்ற, நிர்வாக, நீதித்துறை கிளைகளாக அதிகாரங்களை பிரிக்கிறது. இது ஐக்கிய நாடுகள் அவை, ஐரோப்பியப் பேரவை, ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு, குவாம் அமைப்பு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.

பெயர்க்காரணம்

உக்ரைன் என்ற பெயரின் சொற்பிறப்பியல் தோற்றம் குறித்து பல்வேறு கருதுகோள்கள் உள்ளன. மிகவும் பரவலான கருதுகோள், இது "எல்லைநாடு" என்பதற்கான பழைய சிலாவிக்கு சொல்லில் இருந்து வந்ததாகக் கருதுகிறது.

20 ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான காலப்பகுதியில், ஆங்கிலம் பேசும் உலகில் உக்ரைன் "தி உக்ரைன்" என்று குறிப்பிடப்பட்டது. "உக்ரையீனா" என்ற சொல்லுக்கு "எல்லைநாடு" என்று பொருள்படுவதே இதற்குக் காரணம். ஆனால் 1991 இல் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இச்சொல்லின் பயன்பாடு அரிதாகிவிட்டது. அமெரிக்கத் தூதர் வில்லியம் டெய்லரின் கூற்றுப்படி, "தி உக்ரைன்" என்பது இப்போது நாட்டின் இறையாண்மையைப் புறக்கணிப்பதைக் குறிக்கிறது. உக்ரைனின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு, "தி உக்ரைன்" என்பது இலக்கண ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தவறானது என்பதாகும்.

நிர்வாகப் பிரிவுகள் (2020 முதல்)

2020-ஆம் ஆண்டு உக்ரைன் நாடு, 24 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. கிரிமியாவிற்கு மட்டும் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டுள்ளது. 24 மாகாணங்களை 136 மாவட்டங்களாகவும், 108 நகர்புற மாவட்டங்களாகவும், 1,469 நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரான கீவ் மற்றும் தெற்கில் உள்ள கிரிமியா பகுதியில் உள்ள செவஸ்தோபோல் ஆகிய இரண்டு நகரங்களுக்கும் தன்னாட்சி நிர்வாக உரிமை வழங்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய மாகாணங்கள்

உக்ரேனிய மாகாணங்கள்
உக்ரைனிய மாகாணங்கள்
தன்னாட்சி மாகாணம்
தன்னாட்சி நகரங்கள்

முக்கிய நகரங்கள்

கலாச்சாரம்

உக்ரைன்: பெயர்க்காரணம், நிர்வாகப் பிரிவுகள் (2020 முதல்), கலாச்சாரம் 
புனித மைக்கேல் தேவாலயம், கியிவ்

உக்ரைனின் கலாச்சாரமான உட்கட்டமைப்பு, இயல் மற்றும் இசை ஆகியவை தனது கிழக்கு மற்றும் மேற்கு அண்டைநாடுகளைப் பின்பற்றுகிறது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள், கிருத்தவ மதத்தைச் சார்ந்தராக உள்ளனர். பாலின வேறுபாட்டை பாரம்பரியமாக வைத்திருக்கும் இந்நாட்டின் குழந்தைகளை அவர்களது தாத்தா பாட்டிகளே பராமரித்து வருகின்றனர்

விருந்தோம்பல்

உக்ரைனின் பாரம்பரிய உணவாக கோழி, பன்றி, மாட்டிறைச்சி, மீன் மற்றும் காளான் ஆகியவை உள்ளது. சைவ விரும்பிகளுக்காக உருளைக்கிழங்கு, தானியங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கனிகளை உண்கின்றனர். பிரசித்திபெற்ற உணவுகளாக வாரென்கி ( அவித்த காளான், உருளைக்கிழங்கு மற்றும் பாலாடை அல்லது செர்ரி ஆகியவைகளைக் கலந்த அவியல் ), போர்ஸ்சித் ( முட்டைக்கோசு மற்றும் காளான் அல்லது இறைச்சி ஆகியவற்றைக் கலந்த ஒரு பானம் ), ஓலுப்ட்சி ( மசித்த முட்டைக்கோசுடன் அரிசி, கேரட் மற்றும் இறைச்சி ஆகியவற்றைக் கலந்த ஒரு உணவுவகை ). மேலும் உக்ரைனின் சிறப்பு உணவுகளாக சிக்கன் கியிவ் மற்றும் கியிவ் கேக் ஆகியவையுள்ளன. பானங்களாக பழச்சாறு, பால், மோர், சுத்தமான குடிநீர், தேயலைச்சாறு, குழம்பி மற்றும் இதர உ.பா.க்களும் உள்ளது.

ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைப்பு தொடர்பாக

கிழக்கு உக்ரைன் பகுதியைச் சேர்ந்த மக்களைத் தவிர, ஏனைய பகுதியினர் எல்லாருமே உக்ரைன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைந்துவிட வேண்டும் என்கிற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைந்த பிறகு அண்டை நாடான போலந்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும், வளர்ச்சியும் உக்ரைன் மக்கள் மத்தியில் அதுபோன்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. குறைந்தது 17 பில்லியன் டாலர் நிதியுதவி பெற முடிந்தால் மட்டுமே 2014ஆம் நிதியாண்டுக்குள் சந்திக்க வேண்டிய வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டித் தொகையை உக்ரைன் எதிர்கொள்ள முடியும்.ஐரோப்பிய யூனியனுடனான பேச்சுவார்த்தையில், இந்தத் தொகையை அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஐ.எம்.எப்.பின் நிபந்தனைகள் மிகவும் கடுமையானவை என்பது மட்டுமல்ல, உக்ரைனின் சந்தை முழுமையாக வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்குத் திறந்துவிடப்பட வேண்டும் என்கிற கட்டாயமும் ஏற்பட்டது . அப்படி நேர்ந்தால், உக்ரைனின் உள்நாட்டுத் தொழில்கள் அழிந்துவிடும் அபாயம் இருந்தது.உக்ரைனின் இந்த தர்மசங்கடத்தைப் புரிந்துகொண்ட ரஷ்யா, உக்ரைன் அரசுப் பத்திரங்களில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக உறுதியளித்து, ஐரோப்பிய யூனியனுடனான உறவைத் துண்டித்துக் கொள்ளச் செய்து விட்டது. இதனை எதிர்க்கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு, 2022

உக்ரைன்: பெயர்க்காரணம், நிர்வாகப் பிரிவுகள் (2020 முதல்), கலாச்சாரம் 
உக்ரைனின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ருசியப்படைகளின் முற்றுகையைக் காட்டு வரைபடம்

24 பிப்ரவரி 2022 அன்று அதிகாலையில் உக்ரைன் மீது உருசியா போரைத் துவக்கியது. உக்ரைன் நாட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள இராணுவ நிலைகள் மீது உருசியப் படைகள் தாக்கியது. மேலும் உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் கார்கீவ், ஒடெசா நகரங்களில் உருசியப்படைகள் தரையிறங்கி தாக்கியது. 28 பிப்ரவரி 2022 அன்று போர் நிறுத்தப் பேச்சு வார்த்தை நடத்த உருசியா - உக்ரைன் நாட்டுப் பிரதிநிதிகள் பெலராஸ் நாட்டின் கோமெல் நகரத்தில் கூடினர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க வரைபடங்கள்

உக்ரைன் அமைப்பின் அடித்தளமாக, மாநிலங்களை பல பிரதேசங்களாக பிரித்தனர். இந்த பிரதேசங்களின் பெரும்பாலானவை, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் இருந்தன.

குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

உக்ரைன் பெயர்க்காரணம்உக்ரைன் நிர்வாகப் பிரிவுகள் (2020 முதல்)உக்ரைன் கலாச்சாரம்உக்ரைன் ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைப்பு தொடர்பாகஉக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு, 2022உக்ரைன் வரலாற்றுச் சிறப்புமிக்க வரைபடங்கள்உக்ரைன் குறிப்புகள்உக்ரைன் மேற்கோள்கள்உக்ரைன்உக்குரேனிய மொழிஉருசியாஐரோப்பாகிழக்கு ஐரோப்பாதினேப்பர் ஆறுபடிமம்:Uk-Україна (2).oga

🔥 Trending searches on Wiki தமிழ்:

சமூகம்வேற்றுமையுருபுகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்ஜவகர்லால் நேருநரேந்திர மோதிகாயத்ரி மந்திரம்பெரியாழ்வார்மருது பாண்டியர்கண்ணகிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)108 வைணவத் திருத்தலங்கள்பெரும்பாணாற்றுப்படைநீதிக் கட்சிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஎதுகைமண்ணீரல்காடுவெட்டி குருவிளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)கும்பம் (இராசி)நெடுநல்வாடைஉணவுபறவைபெரிய வியாழன்நாடாளுமன்ற உறுப்பினர்பழமொழி நானூறுதலைவி (திரைப்படம்)அன்னி பெசண்ட்தொகாநிலைத்தொடர்குருதி வகைசந்திரயான்-3சிலப்பதிகாரம்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)திருவண்ணாமலைபெரம்பலூர் மக்களவைத் தொகுதிதிரு. வி. கலியாணசுந்தரனார்ஞானபீட விருதுவிந்துசுடலை மாடன்திருமலை நாயக்கர் அரண்மனைகீழடி அகழாய்வு மையம்பாரதிதாசன்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சிறுநீரகம்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சிதம்பரம் மக்களவைத் தொகுதிமுன்மார்பு குத்தல்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிலோ. முருகன்மருதமலைதூத்துக்குடி மக்களவைத் தொகுதிதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிவிடை (இலக்கணம்)கங்கைகொண்ட சோழபுரம்பிரீத்தி சிந்தாபுரோஜெஸ்டிரோன்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)மாதவிடாய்நாளந்தா பல்கலைக்கழகம்நற்கருணை ஆராதனைஅகரவரிசைசித்தர்கள் பட்டியல்பறையர்பச்சைக்கிளி முத்துச்சரம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஆனைக்கொய்யாவானதி சீனிவாசன்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)ஜி. யு. போப்கொல்லி மலைதேவாங்குஅணி இலக்கணம்காமராசர்ஊராட்சி ஒன்றியம்இந்தியக் குடியரசுத் தலைவர்விசுவாமித்திரர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)நன்னீர்நேர்பாலீர்ப்பு பெண்🡆 More