ஐசுலாந்து

ஐசுலாந்து அல்லது ஐசுலாந்துக் குடியரசு (Iceland, ஐசுலாந்தம்: Ísland அல்லது Lýðveldið Ísland) வடக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு தீவு நாடாகும்.

இது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஐசுலாந்துத் தீவையும் பல தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு நாடு. இது கிரீன்லாந்துக்கு அருகில் ஐரோப்பாக் கண்டத்தில் உள்ளது. இதுவே நோர்டிக் நாடுகளில் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டதும் இரண்டாவது சிறிய நாடுமாகும். இந்நாட்டின் ஐஸ்லாந்து மொழி, உலகத்தின் வட கோடியில் பயிலப்படும் நாகரிக மொழி ஆக உள்ளது. இம்மொழி கேட்க இனிய தாயிருக்கும். வேர்ச் சொற்களும், இலக்கண மரபுகளும் மிகுதியாக உள்ளன. இதன் நெடுங் கணக்கில் 33 எழுத்துக்கள் உள்ளன. கி. பி. 9ஆம் நூற்றாண்டில் மக்கள் குடியேறிய காலத்தில் பயின்றபடியே இப்போதும் இம்மொழி கற்பிக்கப் படுகின்றது.2019 ஆம் ஆண்டு கணக்கின்படி, மொத்த மக்கள் தொகை 360390 ஆகும்.

ஐஸ்லாந்துக் குடியரசு
Lýðveldið Ísland
கொடி of ஐஸ்லாந்தின்
கொடி
நாட்டுப்பண்: எம் நாட்டின் கடவுளே
ஐஸ்லாந்தின் அமைவிடம்
ஐஸ்லாந்தின் அமைவிடம்
தலைநகரம்ரெய்க்யவிக்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)ஐஸ்லாந்தம்
மக்கள்ஐஸ்லாந்தர்
அரசாங்கம்அரசியலமைப்புக் குடியரசு
• ஜனாதிபதி
ஓலஃபுர் கிறீம்சன்
• பிரதமர்
கயர் ஹார்டெ
விடுதலை 
• உள்ளக ஆட்சி
பெப்ரவரி 1, 1904
• விடுதலை
டிசம்பர் 1,, 1918
• குடியரசு
ஜூன் 17, 1944
பரப்பு
• மொத்தம்
103,000 km2 (40,000 sq mi) (107வது)
• நீர் (%)
2.7
மக்கள் தொகை
• அக்டோபர் 2007 மதிப்பிடு
312,8511 (172வது)
• டிசம்பர் 1980 கணக்கெடுப்பு
229,187
• அடர்த்தி
31/km2 (80.3/sq mi) (222வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$12.172 பில்லியன் (132வது)
• தலைவிகிதம்
40,277 (2005) (5வது)
மொ.உ.உ. (பெயரளவு)2006 மதிப்பீடு
• மொத்தம்
$16.579 பில்லியன் (93வது)
• தலைவிகிதம்
$54,858 (4வது)
மமேசு (2004)ஐசுலாந்து 0.960
Error: Invalid HDI value · 2வது
நாணயம்ஐஸ்லாந்திய குரோனா (ISK)
நேர வலயம்ஒ.அ.நே+0 (GMT)
• கோடை (ப.சே.நே.)
நடைமுறையில் இல்லை
அழைப்புக்குறி354
இணையக் குறி.is
  1. "ஐஸ்லாந்து தரவுகள்". www.statice.is. டிசம்பர் 1 2006. ; ;

வரலாறு

874-ல் நார்வேயிலிருந்து வந்த அரசியல் அகதிகள் இங்குக் குடியேறினார்கள். சு. 930-ல் குடி யரசு அமைக்கப்பட்டது. கிறிஸ்தவ சமயம் 1000-ல் ஏற்கப்பட்டது. 1262-ல் குடியரசு மறைந்து நாடு நார்வே மன்னரின் ஆட்சிக்குட்பட்டது. 100 ஆண்டுகள் சென்றபின் டென்மார்க்கின் ஆட்சிக்குட்பட்டு, டேனியர் வசம் இருந்துவந்தது. நெப்போலிய யுத்தங்களின்போது ஐஸ்லாந்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர், ஆனால் 1815-ல் மீண்டும் இதை டேனியருக்குக் கொடுத்துவிட்டனர். 1918-ல் சுதந்திரம் பெற்றது, எனினும் டென்மார்க்கின் அரசரே இதற்கும் அரசராக இருந்து வந்தார். 1944-ல் முழுச் சுதந்திரமுள்ள குடியரசு நாடாயிற்று.

அரசியலமைப்பு

17-6-1944 லிருந்து ஐஸ்லாந்து ஒரு குடியரசு நாடாக இருந்து வருகிறது. சட்ட மியற்ற ஆல்திங் (Althing) என்ற பார்லிமென்டு உள்ளது. அதில் மேற்சபை கீழ்ச்சபை என இரு சபைகள் உள்ளன, ஜனாதிபதியே நிருவாகத் தலைவர். அவருக்குத் துணையாக ஆறு அமைச்சர் களடங்கிய அமைச்சர் குழு ஒன்று உண்டு. ஜனாதிபதி நான்கு ஆண்டுகட்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுவர். பார்லிமென்டு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். வயது வந்த ஆண், பெண் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு, சட்டசபை வேலை அமெரிக்க ஐக்கிய நாட்டினதை ஒக்கும்.

அமைப்பு

இதன் நீளம் 300 மைல் ; அகலம் 200 மைல் ஆகும். மொத்த பரப்பு 39,758 சதுர மைல்கள் ஆகும். இங்குள்ள மக்களிற் பெரும்பாலோர் ஸ்காந்தினேவியர் ஆவர். ரேக்யவீக் (Reykjavik) தலைநகரம் ஆகும். இது ஒன்றே பெரிய பட்டணமாக உள்ளது. இங்கு ஒரு பல்கலைக்கழகம் உள்ளது. இத்தீவு எரிமலைப் பீடபூமி. இப்போது இங்கு 20 விழி எரிமலைகள் உள்ளன. மற்றும், பல வெந்நீர் பீச்சுக்களும் உள்ளன. அடிக்கடி பூகம்பம் நிகழ்வதுண்டு, கடற்கரைப் பகுதிகளே மக்கள் வாழத் தகுந்தவை. கோடையில் பெரும்பாலும் நாள்முழுதும் பகலாகவும், குளிர் காலத்தில் நாள் முழுதும் இரவாகவும் இருக்கும். பெரிய மரங்கள் இல்லை ; ஓக் மரமும் சிறுத்தே வளரும். மக்கள் கல்வீட்டில் வாழ்கிறார்கள். கோடை காலம் குறைந்திருப்பதால் கோதுமையும் மற்ற தானியங்களும் விளையா. சுமார் எட்டில் ஏழு பகுதியே விவசாயத்திற்கு ஏற்றது. ஆங்காங்குக் காற்றடைப்பான வெ ளி க ளி ல் உருளைக்கிழங்கு போன்ற வேர்ப்பயிர்கள் வளர்கின்றன, கால்நடைகள், ஆடுகள், குதிரைகள் முதலியவைகளை வளர்ப்பதும் மீன் பிடித்தலுமே முக்கியமான தொழில்கள். கூட்டுறவுப் பால்பண்ணைத் தொழிலும் நடைபெற்று வருகிறது. காய்கறிகள், பழங்கள், நிலக்கரி, மரம் முதலியன வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகின்றன . உப்பிட்டு உலர்த்திய மீன் ஏற்றுமதியாகின்றது. ஐஸ்லாந்தில் இருப்புப்பாதை இல்லை. பெரும்பாலும் குதிரைகளில் ஏறியே பிரயாணம் செய்கிறார்கள். மக்கள் அனைவரும் எழுத்தறிவு உடையவராக உள்ளனர். குழந்தைகள் ஏழு முதல் 14 வயது வரை பள்ளிக்குச் செல்வர், பள்ளிக்கு வரமுடியாத குழந்தைகளுக்கு , அவர்கள் இருப்பிடத்துக்கே ஆசிரியர்கள் சென்று கற்பிப்பர்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

ஐசுலாந்து பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

ஐசுலாந்து  விக்சனரி விக்சனரி
ஐசுலாந்து  நூல்கள் விக்கிநூல்
ஐசுலாந்து  மேற்கோள் விக்கிமேற்கோள்
ஐசுலாந்து  மூலங்கள் விக்கிமூலம்
ஐசுலாந்து  விக்கிபொது
ஐசுலாந்து  செய்திகள் விக்கிசெய்தி

Tags:

ஐசுலாந்து வரலாறுஐசுலாந்து அரசியலமைப்புஐசுலாந்து அமைப்புஐசுலாந்து வெளி இணைப்புகள்ஐசுலாந்து மேற்கோள்கள்ஐசுலாந்து ஆதாரங்கள்ஐசுலாந்து9ஆம் நூற்றாண்டுஅட்லாண்டிக் பெருங்கடல்ஐசுலாந்து மொழிஐரோப்பாஐஸ்லாந்திக் மொழிகி.பி.கிரீன்லாந்துதீவு நாடுநோர்டிக் நாடுகள்வடக்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நீலகிரி மக்களவைத் தொகுதிஜி. யு. போப்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிபெரியாழ்வார்ஏலாதிசமரச சுத்த சன்மார்க்க சங்கம்திருப்போரூர் கந்தசாமி கோயில்தமிழக வரலாறுஅன்னை தெரேசாவெண்குருதியணுநாட்டு நலப்பணித் திட்டம்முத்தொள்ளாயிரம்பால் கனகராஜ்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தேவநேயப் பாவாணர்புதினம் (இலக்கியம்)முடக்கு வாதம்எம். சின்னசுவாமி அரங்கம்அண்ணாமலை குப்புசாமிஆல்இரசினிகாந்துகொடைக்கானல்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிஇனியவை நாற்பதுவீரப்பன்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)நீர் மாசுபாடுபிரேமலுதிருநங்கைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ஈ. வெ. இராமசாமிமெய்யெழுத்துசங்ககால மலர்கள்ஆரணி மக்களவைத் தொகுதிநடுக்குவாதம்மயில்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்மு. மேத்தாசந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறுசீர் (யாப்பிலக்கணம்)கணினிபரிபாடல்மழைவல்லினம் மிகும் இடங்கள்சித்திரைகோத்திரம்அனுமன்இந்திய வரலாறுசித்திரைத் திருவிழாமதுரைமொழிபெயர்ப்புஜெயம் ரவிசூரரைப் போற்று (திரைப்படம்)காமராசர்கா. ந. அண்ணாதுரைதிருமந்திரம்சிவாஜி கணேசன்பிலிருபின்ஊராட்சி ஒன்றியம்குப்தப் பேரரசுகாம சூத்திரம்பழமுதிர்சோலை முருகன் கோயில்கீர்த்தி சுரேஷ்தமன்னா பாட்டியாபூரான்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)புதிய ஏழு உலக அதிசயங்கள்எயிட்சுதிருட்டுப்பயலே 2மலைபடுகடாம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்அமாக்சிசிலின்தமிழ்விடு தூது🡆 More