கண்ணனின் 108 பெயர் பட்டியல்

கிருஷ்ணரின் பெயர்கள் மற்றும் சிறப்புப் பெயர்களின் பட்டியல் இந்துக்களின் கடவுளான கிருஷ்ணரின் பல்வேறு சிறப்புப் பெயர்களையும், பட்டப் பெயர்களையும், பாகவதம், விஷ்ணு புராணம், அரி வம்சம் போன்ற புராணங்களிலும் மற்றும் மகாபாரத இதிகாசத்திலும் பல்வேறு இடங்களில் குறிக்கிறது.

கிருஷ்ணரின் வானுலக இருப்பிடமாக கோலோகம் என பாகவதம் குறிக்கிறது. கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்திலும், பதின்ம வயதிலும் அருளிய லீலைகளால் செந்தமிழில் கண்ணன் என்றும் சமஸ்கிருதம் கிருஷ்ணன், அவதார நிலைப்பாட்டில் கோபாலன், மதனகோபாலன், மதனசேகரன், ராஜகோபாலன், வேணுகோபாலன், ஸ்ரீதரன், முரளிதரன், கேசவன், கோவர்தனன், இராதா கிருஷ்ணன், போன்ற சிறப்புப் பெயர்களாலும்; கிருஷ்ணன் பெரியவனாக வளர்ந்த பின்னர் எண்மரை மனைவிகளாக அடைந்து, பாண்டவர்களின் நண்பராகி, குருச்சேத்திரப் போரில் அருச்சுனனின் தேரை ஓட்டியதால் பார்த்தசாரதி என்றும், அருச்சுனனுக்கு பகவத் கீதையையும்; உத்தவருக்கு உத்தவ கீதையையும் அருளியதால் கிருஷ்ணர், கீதாச்சாரியன் என்றும் ஜெகத் குரு என்றும் பெயர் பெற்றவர். கிருஷ்ணரின் வரலாற்று கதைகள் இந்தியா முழவதும் உள்ள அனைத்து மொழிகளின் இலக்கியங்களில் காணப்படுகிறது.

கிருஷ்ணரின் உபதேசங்களை உலகம் முழுவதும் பரப்ப அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் பல்வேறு நாடுகளில் செயல்படுகிறது.

கௌடிய வைணவ மரபில் கிருஷ்ணரின் 108 பெயர்கள்

சைதன்யர் நிறுவிய கௌடிய வைணவத்தில் கிருஷணரின் 108 பெயர்களை கூறுகிறது. அவைகள்:

பெயர் பொருள் பெயர் பொருள்
அச்சாலன் தற்போதும் உள்ளவர் அச்சுதன் நழுவாதவர்
அற்புதன் வியக்கத்தக்கவன் ஆதிதேவன் உண்மையான இறைவன்
ஆதித்தியன் அதிதியின் மகன் அஜென்மா பிறப்பில்லாதவன்
அஜெயன் பிறப்பையும், இறப்பையும் வென்றவன் அட்சரன் என்றும் நிலையானவன்
அமிர்தன் மரணம் அற்றவன் ஆனந்தசாகரன் பெருங்கடலைப் போன்று பேரின்பமானவன்
அனந்தன் அளவிட முடியாதவன் அனந்தஜித் என்றும் வெற்றியாளன்
அனயன் தலைமை அற்றவர் அனிருத்தன் தடுத்து நிறுத்த முடியாதவன்
அபாரஜித் வெல்லப்பட முடியாதவன் அவ்வியக்தன் படிகம் போன்று தூய்மையானவன்
பிகாரி எங்கும் பயணம் செய்பவன் பாலகோபாலான் அனைவரையும் ஈர்க்கும் குழந்தை கிருஷ்ணன்
பாலகிருஷ்ணன் குழந்தை கிருஷ்ணன் சதுர்புஜன் நான்கு கைகள் கொண்டவன்
தானவேந்திரன் செல்வங்களை அருள்பவன் தயாளன் இரக்கத்தின் களஞ்சியம்
தயாநிதி இரக்கமுள்ள அருளாளன் தேவாதிதேவன் தேவர்களின் தலைவர்
தேவகிநந்தன் தேவகியின் மகன் தேவேஷ்வா அவதார புருஷன்
தர்மாதியட்சர் தரும தேவன் திரவின் எதிரிகள் அற்றவன்
துவாரகாபதி துவாரகையின் தலைவர் கோபாலன் ஆவினங்களுடன் விளையாடுபவன்
கோபாலப்பிரியன் ஆவினங்களை நேசிப்பவர் கோவிந்தன் ஆவினங்கள், நிலம் மற்றும் முழு இயற்கையையும் அமைதிப்படுத்துபவர்.
ஞானேஸ்வரன் அறிவுக் கடவுள் ஹரி இயற்கையின் அதிபர்
இரண்யகர்பன் "அனைத்தையும் படைப்பவர்" ரிஷிகேசன் அனைத்து உணர்வுகளுக்கும் அதிபர்
ஜெகத்குரு பிரபஞ்சத்திற்கு குரு ஜெகதீஷ்வரன் பிரபஞ்சத்தின் இறைவன்
ஜெகன்நாதர் பிரபஞ்சத்திற்கு தலைவர் ஜெனார்தனன் வரங்களை வழங்குபவர்
ஜெயந்தன் அனைத்துப் பகைவர்களை வெல்பவன் ஜோதிராதித்தியன் சூரியனில் ஒளியாக விளங்குபவர்
கமலநாதன் இலக்குமியின் நாதர் கமலநயனன் தாமரை வடிவக் கண்களை கொண்டவர். T
கம்சந்தகன் கம்சனை கொன்றவர் காஞ்சலோசனன் தாமரைக் கண்ணன்
கேசவன் நீண்ட, கரிய, சுருள் கொண்ட முடியைக் கொண்டவர் கிருட்டிணன் அனைவரையும் கவர்பவன்
இலக்குமிகாந்தன் இலக்குமியின் கணவர் லோகாதியட்சன் மூவுலகின் நாயகன்
மதனன் அன்பிற்கினியவன் மாதவன் இலக்குமியின் கணவர்
மதுசூதனன் மது எனும் அரக்கனை கொன்றவர் மகேந்திரன் இந்திரனுக்குத் தலைவர்
மன்மோகன் தடுமாறத மனம் உடையவன் மனோகரன் அழகின் அதிபதி
மயூரன் மயிலிறகை மணிமகுடமாகக் கொண்டவன் மோகனன் வசீகரமானவன்
முரளி புல்லாங்குழலை இசைப்பவன் முரளிதரன் புல்லாங்குழலை கையில் கொண்டவன்
முரளிமனோகரன் குழல் ஊதி மயக்குபவன் நந்தகுமாரன் நந்தகோபரின் வளர்ப்பு மகன்
நந்தகோபாலன் பசுக்கூட்டங்களின் மீது அன்பு பாராட்டுபவன் நாராயணன் அனைவருக்கும் புகழிடம் அளிப்பவர்
நவநீதசோரன் வெண்ணெய் திருடி உண்பவன் நிரஞ்சனன் அப்பழுக்கற்றவன்
நிர்குணன் குணங்களைக் கடந்தவன் பத்மஹஸ்தன் தாமரைத் தண்டு போன்ற கைகளை கொண்டவன்
பத்மநாபன் தொப்புள் மீது தாமரையைக் கொண்டவன் பரப்பிரம்மம் முற்றான முழுமையான உண்மையானவன்
பரமாத்மா அனைத்து உயிர்களிலும் ஆத்மாவாக திகழ்பவன் பரமபுருஷன் மேலான புருஷன்
பார்த்தசாரதி அருச்சனனின் தேரை ஓட்டியவன் பிரஜாபதி அனைத்து சீவராசிகளையும் படைத்தவர்
புண்ணியவான் தவத்தால் அடையத்தக்கவன் புருசோத்தமன் ஜீவாத்மாக்களில் மேலானவன்
ரவிலோசனன் சூரியனைப் போன்ற கண்களை உடையவன் சகஸ்ராட்சகன் ஆயிரம் கண்களைக் கொண்டவன்
சஹஸ்ரஜித்தன் ஆயிரம் பேர்களை அழித்தவன் சாட்சி அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக விளங்குபவன்
சனாதனன் தொன்று தொட்டு விளங்குபவர் சர்வஜனன் அனைத்தும் அறிந்தவர்
சர்வபாலகன் அனைத்தையும் காப்பவர் சர்வேஸ்வரன் அனைத்திற்கும் தலைவர்
சத்தியவசனன் சத்தியம் மட்டும் பேசுபவர் சத்தியவிரதன் உண்மையையே இலக்காகக் கொண்டவர்
சாதனன் அனைத்தறிவுக்கும் கருவியானவன் சிரேஸ்டன் மிகவும் புகழ்பெற்றவன்
ஸ்ரீகாந்தன் இலக்குமியின் பிரியமானவன் சியாம் கருநிறத்தவன்
சியாமசுந்தரன் கார்மேக அழகன் சுதர்சனன் சுதர்சனம் எனும் சக்கரத்தைக் ஆயுதமாகக் கொண்டவன்.
சுமேதா நுட்பமான அறிவினன் சுரேஷ்வரன் அனைத்து தெய்வங்களுக்கும் தலைவர்
சுவர்க்கபதி சொர்க்கத்தின் தலைவர் திரிவிக்கிரமன் மூவுலகையும் அளந்தவன்
உபேந்திரன் இந்திரனின் நண்பர் வைகுந்தநாதன் வைகுந்தத்தில் உறைபவன்
வர்தமானன் அருவமான (உருமற்ற) இறைவன் வாசுதேவபுத்திரன் வசுதேவரின் மகன்
விஷ்ணு பிரபஞ்சத்தின் இறைவன்/பிரபஞ்சம் விஸ்வதட்சினன் திறமை மற்றும் ஆளுமை மிக்கவன்
விஸ்வகர்மன் அனைத்து பிரபஞ்சங்களையும் படைத்தவர் விஸ்வமூர்த்தி அனைத்து பிரபஞ்சங்களின் வடிவானவர்
விஸ்வரூபன் பிரபஞ்சத்தின் வடிவாகக் காட்சியளிப்பவர் விஸ்வாத்மா பிரபஞ்சத்தின் ஆத்மா
விருசபர்வா அறத்தின் நாயகன் யாதவேந்திரன் யாதவ குல தலைவர்
யோகி யோகியானவன் யோகினாம்பதி யோகிகளின் தலைவர் (யோகீஸ்வரன்)

கிருஷ்ண அஷ்டோத்திரம்

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கூறிய படி கிருஷ்ணரின், கீழ்கண்ட 108 திருப்பெயர்களை உச்சரித்து, பூ அல்லது துளசி இலைகளைக் கொண்டு கிருஷ்ணரை பூசிக்க வேண்டும்.

பொதுப் பயன்பாடிற்கான பெயர்கள்

கிருஷ்ணரின் பொது பயன்பாட்டிற்கான பெயர்கள்:

பெயர் பொருள் பெயர் பொருள் பெயர் பொருள்
அச்சலன் குழந்தை அச்சுதன் தவறிழைக்காதவன் அவ்வியக்தன் தெள்ளத் தெளிவான மனதுடையவன்
பங்கே பிகாரி (வனத்தின் விகாரி என்பதன் திரிபுச் சொல்) (वन के विहारि) பிருந்தாவனக் காடுகளில் விளையாடுவதை நேசிப்பவன் பிகாரி விளையாட்டை நேசிப்பவன் பக்தவத்சலன் பக்தர்களை தூக்கி விடுபவர்
பிரஜேஷா விரஜ மக்களின் தலைவன் சக்கரதாரன் கையில் சக்கரத்தைக் கொண்டவன். தாமோதரன் அன்னை யசோதையால் இடுப்பில் கயிறு கட்டப்பட்டவன்.
தீனபந்து துன்பத்திலிருப்போரின் உறவினன் தீனநாதன் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தருபவர் துவாரகாதீசன் துவாரகையின் தலைவர்
துவாரகாநாதன் துவாரகையின் தலைவர் கண்ஷியாம் கார்மேக நிறத்தவன் கிரிதாரி கோவர்தன மலையை கையால் உயர்த்தி பிடித்தவன்
கோபாலன் இடையன், பசுக்களை காப்பவன், (குறிப்பாக அனைத்து சீவராசிகளை காப்பவர்). கோபிநாதன் கோபியர் உளம் கவர் கள்வன் கோவிந்தன் ஆவினங்களை காப்பவர்
கோவிந்தராஜன் இடையர்களின் அரசன் குருவாயூரப்பன் குருவாயூர் கோயிலில் குடி கொண்டவன் ஹரி பாவங்களை நீக்குபவர், பிறவிச்சுழற்சியிலிருந்து விடுவிப்பவர்.
ஈஸ்வரன் இறைவன் ருஷீகேசன் உணர்வுகளின் தலைவர் ஜெகன்நாதர் பிரபஞ்சத்தின் தலைவர்
ஜெனார்தனன் வரம் தருபவர் காலதேவன் காலத்திற்கு அதிபதி கல்மஷாஹீனன் (Kalmashaheena) பாவமற்றவன்
கண்ணையா பக்தர்களின் சுமைகளை பகிர்ந்து கொள்பவர் அல்லது பக்தர்களிடம் நெருக்கமாக இருப்பவர் கேசவன் நீண்ட முடியை உடையவன் மதன மோகனன் தன் அழகால் கலக்கமடையச் செய்பவன்
மாதவன் இலக்குமியின் நாயகன் மதுசூதனன் மது எனும் அரக்கனை கொன்றவர் மணிகண்டன் கௌஸ்துபம் எனும் மணிமாலையை அணிந்தவன்
முராஹரி முரா எனும் அரக்கனை கொன்றவர் முகிலன் கார்மேக நிறத்தவன் முகுந்தன் வீடுபேற்றுக்கான ஆன்மீக அறிவொளியை அருள்பவர்.
நந்தகோபாலன் இடையர்களுக்குப் பிரியமானவன் நந்தலால் நந்தகோபனுக்குப் பிரியமானவன். பாண்டுரங்கன் பண்டரிபுரத்து வெள்ளை நிற கிருஷ்ணண்
பரப்பிரம்மன் அனைத்திற்கும் மேலான பிரம்மம் பரமேஷ்வரன் மேலான ஈஸ்வரன் பார்த்தசாரதி குருச்சேத்திரப் போரில் அருச்சுனனுக்கு தேரோட்டியவர்.
பிரதிபாவனன் பாவத்தில் வீழ்ந்தவர்களை தூய்மைப்படுத்துபவர் இராதாவல்லபவன் ராதையின் அன்பிற்குரியவன் இராஜகோபாலன் இடையர்களின் அரசன்
ரண்ச்சோதரை (Ranchhodrai) அமைதி காக்கும் பொருட்டு போரை மறுத்து துவாரகைக்கு ஓடியவன் சியாமசுந்தரன் கருப்பழகன் சந்தானம் அன்பானவன்
சந்தானசாரதி வானுலக ஆன்மீக தோரோட்டி சௌரி சூரசேனரின் வழித்தோன்றல் வாசுதேவன் வசுதேவரின் மகன்
யதுநந்தனன் யதுக்களின் அன்பிற்குரியவன் யோகீஷ்வரன் யோகிகளின் தலைவர் யசோதா நந்தனன் யசோதையின் வளர்ப்பு மகன்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

கண்ணனின் 108 பெயர் பட்டியல் கௌடிய வைணவ மரபில் கிருஷ்ணரின் 108 பெயர்கள்கண்ணனின் 108 பெயர் பட்டியல் கிருஷ்ண அஷ்டோத்திரம்கண்ணனின் 108 பெயர் பட்டியல் பொதுப் பயன்பாடிற்கான பெயர்கள்கண்ணனின் 108 பெயர் பட்டியல் இதனையும் காண்ககண்ணனின் 108 பெயர் பட்டியல் அடிக்குறிப்புகள்கண்ணனின் 108 பெயர் பட்டியல் வெளி இணைப்புகள்கண்ணனின் 108 பெயர் பட்டியல்அரி வம்சம்அருச்சுனன்இந்தியாஇந்து சமயம்இராதா கிருஷ்ணன்உத்தவ கீதைஉத்தவர்எண்மனையாட்டிகிருட்டிணன்குருச்சேத்திரப் போர்கேசவன்கோவர்தனன்பகவத் கீதைபாகவதம்பாண்டவர்பார்த்தசாரதிபுராணம்மகாபாரதம்விஷ்ணு புராணம்ஸ்ரீதரன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வினைச்சொல்விஜய் (நடிகர்)கருக்கலைப்புஇயற்கை வளம்இந்திய அரசியல் கட்சிகள்குப்தப் பேரரசுமுதுமலை தேசியப் பூங்காவிக்ரம்உவமையணிகண்டம்பறவைக் காய்ச்சல்கல்விபழந்தமிழகத்தில் கல்விஇந்தியக் குடியரசுத் தலைவர்பௌர்ணமி பூஜைசங்கம் (முச்சங்கம்)திருமந்திரம்விருத்தாச்சலம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்உருவக அணிசித்ரா பௌர்ணமிவிநாயகர் அகவல்தேவநேயப் பாவாணர்திராவிசு கெட்மனித எலும்புகளின் பட்டியல்குண்டலகேசிதமிழர் விளையாட்டுகள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்வினோஜ் பி. செல்வம்தேவாரம்தமிழ் இலக்கியம்செக் மொழிவாகை சூட வாதமிழ் தேசம் (திரைப்படம்)விலங்குவிடை (இலக்கணம்)யோகிகலம்பகம் (இலக்கியம்)வெ. இராமலிங்கம் பிள்ளைஏலாதிபொருநராற்றுப்படைநடுகல்உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகுருதிச்சோகைநீலகேசிசிதம்பரம் மக்களவைத் தொகுதிபதினெண்மேற்கணக்குஇந்திய தேசிய காங்கிரசுகாய்கறிசெம்மொழிஉயிர் உள்ளவரை காதல்சுப்பிரமணிய பாரதிஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)குற்றியலுகரம்பெண்கள் அதிகாரம்சுற்றுச்சூழல் பாதுகாப்பு108 வைணவத் திருத்தலங்கள்மத கஜ ராஜாசே குவேராசித்ரா பெளர்ணமிஇலட்டுவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்ஆடுஜீவிதம் (திரைப்படம்)சத்திமுத்தப் புலவர்கம்பராமாயணத்தின் அமைப்புதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்பெண்மகாபாரதம்அறுபடைவீடுகள்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்சைவ சமயம்பக்கவாதம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)கரணம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகலாநிதி மாறன்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்மரபுச்சொற்கள்🡆 More