வனுவாட்டு

வனுவாட்டு (Vanuatu, English: /ˌvɑːnuːˈɑːtuː/ (ⓘ), பிசுலாமா: Vanuatu), அல்லது வனுவாட்டு குடியரசு (Republic of Vanuatu) என்பது பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும்.

எரிமலைகளைக் கொண்டுள்ள இத்தீவுக்கூட்டம், ஆத்திரேலியாவுக்கு சுமார் 1,750 கிமீ (1090 மைல்) கிழக்கேயும், நியூ கலிடோனியாவுக்கு 500கிமீ (310மைல்) வட-கிழக்கேயும், பீஜிக்கு மேற்கேயும், சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.

வனுவாட்டு குடியரசு
Republic of Vanuatu
கொடி of வனுவாட்டு
கொடி
Coat of arms of வனுவாட்டு
Coat of arms
குறிக்கோள்: "Long God yumi stanap" (பிசுலாமா மொழி)
"கடவுளினுள் நாம் நிற்கிறோம்"
நாட்டுப்பண்: Yumi, Yumi, Yumi (பிசுலாமா மொழி)
நாம், நாம், நாம்
வனுவாட்டுஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
போர்ட் விலா
ஆட்சி மொழி(கள்)
இனக் குழுகள்
(1999)
மக்கள்நி-வனுவாட்டு
அரசாங்கம்ஒற்றையாட்சி நாடாளுமன்ற குடியரசு
• குடியரசுத்தலைவர்
பால்டுவின் லோன்சுடேல்
• பிரதமர்
ஜோ நட்டுமேன்
சட்டமன்றம்நாடாளுமன்றம்
விடுதலை
• பிரான்சு, மற்றும் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து
30 சூலை 1980
பரப்பு
• மொத்தம்
12,190 km2 (4,710 sq mi) (161வது)
மக்கள் தொகை
• சூலை 2014 மதிப்பிடு
266,937
• 2009 கணக்கெடுப்பு
243,304
• அடர்த்தி
19.7/km2 (51.0/sq mi) (188வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2011 மதிப்பீடு
• மொத்தம்
$1.204 பில்லியன்
• தலைவிகிதம்
$4,916
மொ.உ.உ. (பெயரளவு)2011 மதிப்பீடு
• மொத்தம்
$743 மில்லியன்
• தலைவிகிதம்
$3,036
மமேசு (2013)வனுவாட்டு 0.616
மத்திமம் · 131வது
நாணயம்வனுவாட்டு வாட்டு (VUV)
நேர வலயம்ஒ.அ.நே+11 (VUT (வனுவாட்டு நேரம்))
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+678
ஐ.எசு.ஓ 3166 குறியீடுVU
இணையக் குறி.vu

வனுவாட்டுவில் முதலில் மெலனீசிய மக்கள் வாழ்ந்து வந்தனர். 1606 ஆம் ஆண்டில் போர்த்துக்கீச மாலுமி பெர்னான்டசு டி குயிரோசு என்பவரின் தலைமையில் எசுப்பானியக் கப்பல் இங்கு முதன் முதலில் ஐரோப்பாவில் இருந்து எஸ்பிரித்து சான்டோ என்ற மிகப் பெரிய தீவில் தரையிறங்கியது. இத்தீவுக்கூட்டத்தை குடியேற்றக்கால எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் ஒரு பகுதியாக அறிவித்து, இதற்கு "ஆத்திரேலியா டெல் எஸ்பிரித்து சான்டோ" (Austrialia del Espiritu Santo) எனப் பெயரிட்டார்.

1880களில், பிரான்சும், ஐக்கிய இராச்சியமும் இத்தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியை தமது பகுதிகளாக அறிவித்தன. 1906 ஆம் ஆண்டில் இத்தீவுக்கூட்டத்தை பிரித்தானிய-பிரெஞ்சு கூட்டுரிமை மூலம் "நியூ எபிரைட்சு" (New Hebrides) என்ற பெயரில் நிருவகிக்க உடன்பட்டன. 1970களில் நாட்டில் விடுதலைக்கான இயக்கம் வலுப்பெற்று 1980 ஆம் ஆண்டில் இத்தீவுக்கூட்டம் வனுவாட்டு குடியரசு என்ற பெயரில் விடுதலை அடைந்தது.

சொற்பிறப்பு

பல ஆத்திரோனேசிய மொழிகளில் நிலம் அல்லது வீட்டைக் குறிக்கும் "வனுவா" என்னும் சொல்லில் இருந்தும், நில் என்பதைக் குறிக்கும் டு என்ற சொல்லில் இருந்தும் வனுவாட்டு என்ற பெயர் பிறந்தது.

புவியியல்

வனுவாட்டு 
வனுவாட்டுவின் நிலவரை

வனுவாட்டு எரிமலை விளைபொருட்களாகத் தோன்றிய சுமார் 82 சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு Y-வடிவத் தீவுக் கூட்டம் ஆகும். இவற்றில் 65 மக்களற்ற தீவுகள் ஆகும். வட, த்னெ முனைத் தீவுகளுக்கிடையேயான தூரம் கிட்டத்தட்ட 1,300 கிமீ (810 மைல்) ஆகும். இரண்டு தீவுகள் (மெத்தியூ மற்றும் ஹன்டர் தீவுகள்) பிரான்சினால் நியூ கலிடோனியாவின் கூட்டிணைவில் நிருவகிக்கப்படுகிறது.

போர்ட் விலா வனுவாட்டுவின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இது எஃபாட்டே தீவில் உள்ளது. அதற்கடுத்த பெரிய நகரம் லூகன்வில் எஸ்பிரித்து சான்டோ தீவில் உள்ளது. வனுவாட்டுவின் அதியுயர் புள்ளி எஸ்பிரித்து சான்டோவில் உள்ள தப்வெமசானா மலை ஆகும். இதன் உயரம் 1,879 மீ (6,165 அடி) ஆகும்.

வனுவாட்டுவின் மொத்தப் பரப்பளவு கிட்டத்தட்ட 12,274 சதுரகிமீ (4,739 சது.மைல்), இவற்றில் நிலப்பரப்பு கிட்டத்தட்ட 4,700 சதுரகிமீ (1,800 சதுரமைல்) ஆகும். பெரும்பாலான தீவுகள் செங்குத்தானவையாகவும், திரமற்ற மணலையும் கொண்டுள்ளன, நன்னீர் மிகக்குறைந்தளவே உள்ளன. வனுவாட்டுவின் 9% நிலப்பகுதியே வேளாண்மைக்கு உகந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது.

வனுவாட்டுவில் பெருமளவு செயல்நிலை எரிமலைகள் காணப்படுகின்றன. பல கடலடி எரிமலைகளும் உள்ளன. 2008 நவம்பரில் 6.4 அளவு கடலடி எரிமலை வெடிப்பு இடம்பெற்றது. ஆனாலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. 1945 இலும் எரிமலை வெடிப்பு இடம்பெற்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

வனுவாட்டு சொற்பிறப்புவனுவாட்டு புவியியல்வனுவாட்டு மேற்கோள்கள்வனுவாட்டு வெளி இணைப்புகள்வனுவாட்டுஆத்திரேலியாஉதவி:IPA/Englishஓசியானியாசொலமன் தீவுகள்தீவு நாடுதீவுக்கூட்டம்நியூ கலிடோனியாபசிபிக்படிமம்:En-us-Vanuatu.oggபிசுலாமா மொழிபீஜிமீட்டர்மைல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அழகு முத்துக்கோன்இலங்கையின் மாவட்டங்கள்பதினெண் கீழ்க்கணக்குசினேகாஅழகிய தமிழ்மகன்யாழ்உயிர்ச்சத்து டிநீர் மாசுபாடுவாணியர்குண்டூர் காரம்கருக்கலைப்புஇரட்டைமலை சீனிவாசன்திருட்டுப்பயலே 2தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்திருவாசகம்தேவநேயப் பாவாணர்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சித்தர்இராவணன்பிலிருபின்மதீச பத்திரனஎயிட்சு2024 இந்தியப் பொதுத் தேர்தல்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிசெக் மொழிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மக்களவை (இந்தியா)குமரிக்கண்டம்டிரைகிளிசரைடுசெயற்கை மழைமாதம்பட்டி ரங்கராஜ்அகரவரிசைஇந்திய ரிசர்வ் வங்கியுகம்ஐக்கிய அரபு அமீரகம்கம்பர்நகைச்சுவைஆனைக்கொய்யாஎஸ். பி. வேலுமணிசங்க இலக்கியம்பரிபாடல்நாயன்மார் பட்டியல்உத்தரப் பிரதேசம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்காயத்ரி மந்திரம்தினகரன் (இந்தியா)சேது (திரைப்படம்)விண்ணைத்தாண்டி வருவாயாதமிழ் மாதங்கள்ஏறுதழுவல்மு. க. தமிழரசுபசுபதி பாண்டியன்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கவுண்டர்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிஇயற்கை வளம்மத கஜ ராஜாதினேஷ் கார்த்திக்இந்திய தேசிய காங்கிரசுதமிழக வரலாறுமுகம்மது நபிஒற்றைத் தலைவலிசின்னம்மைஆல்பர்ட் ஐன்ஸ்டைன்கல்லீரல்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கொன்றைகருத்தரிப்புஇந்தியத் தேர்தல்கள்திருநாவுக்கரசு நாயனார்அஜித் குமார்பிள்ளைத்தமிழ்ஹோலிடெல்லி கேபிடல்ஸ்🡆 More