1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள், ( 1964 Summer Olympics) அலுவல்முறையாக XVIII ஒலிம்பியாடு விளையாட்டுப் போட்டிகள் (第十八回オリンピック競技大会, Dai Jūhachi-kai Orinpikku Kyōgi Taikai),சப்பானின் தோக்கியோவில் 1964ஆம் ஆண்டு அக்டோபர் 10 முதல் 24 வரை நடத்தப்பட்ட பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.

தோக்கியோ நகருக்கு 1940 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவாயிருந்தது; ஆனால் சப்பான் சீனா மீது படையெடுத்ததால் இந்த வாய்ப்பு எல்சிங்கிக்குத் தரப்பட்டது; ஆனால் இதுவும் இரண்டாம் உலகப் போர் காரணமாக கைவிடப்பட்டது.

1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆசியாவில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் விளையாட்டுக்களாகும். இந்த விளையாட்டுப் போட்டிகளில் முதல்முறையாக விளையாட்டுக்களில் இனவொதுக்கலை கண்டித்து தென்னாபிரிக்கா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. (இருப்பினும் தென்னாபிரிக்கா 1964இல் தோக்கியோவில் நடந்த மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.) தோக்கியோவிற்கு ஒலிம்பிக்கை ஏற்றுநடத்தும் உரிமையை மேற்கு செருமனியில் மே 26, 1959இல் கூடிய 55வது பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அமர்வு வழங்கியது.

நடத்தும் நகரத் தேர்வு

மேற்கு செருமனியின் மியூனிக் நகரில் மே 26, 1959இல் நடந்த பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 55வது அமர்வில் தோக்கியோவிற்கு ஒலிம்பிக்கை நடத்தும் உரிமை வழங்கப்பட்டது; டிட்ராய்ட், பிரசெல்சு மற்றும் வியன்னா நகரங்கள் தோல்வியுற்றன.

1960இல் தனது முயற்சியில் தோற்ற ரொறன்ரோ மீண்டும் 1964க்கு முயன்றது; ஆனால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை.

1964 கோடை ஒலிம்பிக்சு கேட்பு முடிவு
நகரம் நாடு சுற்று 1
தோக்கியோ 1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சப்பான் 34
டிட்ராயிட் 1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஐக்கிய அமெரிக்கா 10
வியன்னா 1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஆஸ்திரியா 9
பிரசெல்சு 1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  பெல்ஜியம் 5

பங்கேற்ற தேசிய ஒலிம்பிக் குழுக்கள்

1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 
போட்டியாளர்கள்
1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 
நாடு வாரியாக மெய்வல்லுநர்கள்

1964ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மொத்தம் 93 நாடுகள் பங்கேற்றன. 16 நாடுகள் முதன்முதலாக ஒலிம்பிக்கில் பங்கேற்றன: அல்சீரியா, கமரூன், சாட், கொங்கோ, கோட் டிவார் (ஐவரி கோஸ்ட் என), டொமினிக்கன் குடியரசு, லிபியா (போட்டியிடவில்லை), மடகாசுகர், மலேசியா, மாலி, மங்கோலியா, நேபாளம், நைஜர், வடக்கு ரொடீசியா (நிறைவு விழாவன்று சாம்பியா என்ற முழுச் சுதந்திர நாடானது), செனிகல், மற்றும் தன்சானியா (தாங்கனியகா என). கிழக்கு செருமனியிலிருந்தும் மேற்கு செருமனியிலிருந்தும் போட்டியாளர்கள் செருமானிய ஐக்கிய அணி என 1956 முதல் 1964 வரை பங்கேற்று வந்தனர். 1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது இசுரேல், தாய்வான் நாட்டு விளையாட்டாளர்களுக்கு அனுமதி விசா வழங்க மறுத்தமையால் இந்தோனேசியா தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.


பங்கேற்கும் தேசிய ஒலிம்பிக் குழுக்கள்
  • 1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  லிபியாவும் துவக்கவிழாவில் கலந்து கொண்டது; ஆனால் அதன் ஒரே மெய்வல்லுநர் (மராத்தான் போட்டியாளார்) போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

பதக்கங்கள்

1964 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் மிகக் கூடுதலாக பதக்கங்கள் வென்ற முதல் பத்து நாடுகள்:

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஐக்கிய அமெரிக்கா 36 26 28 90
2 1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சோவியத் ஒன்றியம் 30 31 35 96
3 1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சப்பான் (நடத்தும் நாடு) 16 5 8 29
4 1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  செருமனி 10 22 18 50
5 1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  இத்தாலி 10 10 7 27
6 1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  அங்கேரி 10 7 5 22
7 1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  போலந்து 7 6 10 23
8 1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஆத்திரேலியா 6 2 10 18
9 1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  செக்கோசிலோவாக்கியா 5 6 3 14
10 1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஐக்கிய இராச்சியம் 4 12 2 18

மரபார்ந்து, நாடுகள் முதலில் அவை பெற்ற தங்கப் பதக்கங்கள், பின்னர் வெள்ளிப் பதக்கங்கள் இறுதியாக வெங்கலப் பதக்கங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

முன்னர்
உரோம்
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
தோக்கியோ

XVIII ஒலிம்பியாடு (1964)
பின்னர்
மெக்சிக்கோ நகரம்


Tags:

1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் நகரத் தேர்வு1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பங்கேற்ற தேசிய ஒலிம்பிக் குழுக்கள்1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பதக்கங்கள்1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மேற்சான்றுகள்1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வெளி இணைப்புகள்1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்1940 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்இரண்டாம் உலகப் போர்இரண்டாம் சீன-சப்பானியப் போர்எல்சிங்கிஜப்பான்தோக்கியோபல்துறை விளையாட்டுப் போட்டிகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நன்னூல்மங்கலதேவி கண்ணகி கோவில்ஜவகர்லால் நேருதிராவிசு கெட்நிலக்கடலைமுதுமலை தேசியப் பூங்காடேனியக் கோட்டைஇங்கிலீஷ் பிரீமியர் லீக்பயில்வான் ரங்கநாதன்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பஞ்சபூதத் தலங்கள்ஜிமெயில்தைப்பொங்கல்நம்ம வீட்டு பிள்ளைகவிதைநாட்டு நலப்பணித் திட்டம்அகநானூறுதமிழ்நாட்டின் நகராட்சிகள்நான் வாழவைப்பேன்கர்மாநாடோடிப் பாட்டுக்காரன்மென்பொருள்உலர் பனிக்கட்டிமுதற் பக்கம்குகேஷ்பழமொழி நானூறுஅகத்திணைநான் ஈ (திரைப்படம்)ஆண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் அடையாளங்கள்கொல்லி மலைஆடுஜீவிதம் (திரைப்படம்)சுப்பிரமணிய பாரதியோகிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்போதைப்பொருள்கிராம சபைக் கூட்டம்ஆங்கிலம்பூப்புனித நீராட்டு விழாயாதவர்வரலாறுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்வேலுப்பிள்ளை பிரபாகரன்இயேசுஜீரோ (2016 திரைப்படம்)இந்தியாவில் இட ஒதுக்கீடுஅமேசான்.காம்அணி இலக்கணம்பி. காளியம்மாள்உயர் இரத்த அழுத்தம்இரசினிகாந்துபிலிருபின்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)கார்த்திக் (தமிழ் நடிகர்)நோட்டா (இந்தியா)மட்பாண்டம்ஆழ்வார்கள்சிவனின் 108 திருநாமங்கள்தமிழர் விளையாட்டுகள்முருகன்ஆப்பிள்ரெட் (2002 திரைப்படம்)தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்மத கஜ ராஜாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்திருமால்குண்டலகேசிமுகம்மது நபிபிரியங்கா காந்திநிதி ஆயோக்திணை விளக்கம்சமணம்பிரெஞ்சுப் புரட்சிகலம்பகம் (இலக்கியம்)சுற்றுச்சூழல்நற்றிணைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சூல்பை நீர்க்கட்டி🡆 More