1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1936 Summer Olympics, இடாய்ச்சு: ஒலிம்பிஷே சம்மர்ஸ்பீலே 1936), அலுவல்முறையாக பதினோராவது ஒலிம்பியாடின் விளையாட்டுப் போட்டிகள் (Games of the XI Olympiad) நாட்சி ஜெர்மனியில் பெர்லினில் நடந்த பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.

இந்தப் போட்டிகளை நடத்திட பார்செலோனா, எசுப்பானியாவை வென்று பெர்லின் உரிமை பெற்றது; நாசிசம் அதிகாரம் பெறுவதற்கு இரண்டாண்டுகள் முன்னதாக பார்சிலோனாவில் ஏப்ரல் 26, 1931இல் நடந்த ப.ஒ.கு அமர்வில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
பெர்லின் ஒலிம்பிக் விளையாட்டரங்கத்தில் ஒலிம்பிக் கொடி பறத்தல்.

1932இல் நடந்த இலாசு ஏஞ்செலசு ஒலிம்பிக்கை விடச் சிறப்பாக நடத்திட 100,000-இருக்கைகள் கொண்ட பிரம்மாண்டமான தடகள விளையாட்டரங்கு, ஆறு சீருடற் பயிற்சியரங்குகள், மற்றும் பல சிறிய அரங்குகளை செருமனி கட்டமைத்தது. தொலைக்காட்சியில் முதலில் காட்டப்பட்ட ஒலிம்பிக்காக அமைந்தது; வானொலி ஒலிபரப்பு 41 நாடுகளில் பரப்பப்பட்டது. $7 மில்லியன் செலவில் இந்தப் போட்டிகளை திரைப்படமாக்க செருமானிய ஒலிம்பிக் குழு திரைப்பட இயக்குநர் லெனி ரீபென்ஸ்டாலை பணியமர்த்தியது. தற்போது விளையாட்டுக்களை படமாக்குவதில் பயன்படுத்தப்படும் பல பொது நுட்பங்களுக்கு இவரது திரைப்படம் ஒலிம்பியா முன்னோடியாக இருந்தது.

அரசுத்தலைவர் இட்லர் தனது அரசின் சாதனைகளையும் செருமானிய இனத்தின் உயர்வினையும் எடுத்துக் காட்ட இந்தப் போட்டிகளை ஒரு கருவியாக எண்ணினார். அலுவல்முறையான நாட்சி நாளிதழ் ஃபோக்கிஷேர் பியோபாஸ்டர் இந்த விளையாட்டுக்களில் யூதர்கள் கண்டிப்பாக பங்கேற்கக் கூடாது என எழுதியது. இருப்பினும், மற்ற நாடுகள் இந்தப் போட்டிகளை புறக்கணிப்போம் என அச்சுறுத்திய பிறகு அனைத்து இனத்தவரும் பங்கேற்க இசைந்தார்.

இந்தப் போட்டிகளில் நுழைவுச்சீட்டு வருமானம் செருமானிய இடாய்ச்சுமார்க் 7.5 மில்லியனாகவும் இலாபம் ஒரு மில்லியனாகவும் இருந்தது. ஆனால் செலவுகளில் பெர்லின் நகரம் கட்டமைப்புகளுக்கு செலவழித்ததும் தேசிய அரசு செலவழித்ததும் சேர்க்கப்படவில்லை. ஓட்டப்பந்தயங்களிலும் நீளம் தாண்டுதலிலும் ஜெசி ஓவென்ஸ் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று போட்டிகளின் நாயகனாகத் திகழ்ந்தார். போட்டி நடத்திய நாடு மிகுந்த பதக்கங்களையும் (89 பதக்கங்கள்), அமெரிக்க ஐக்கிய நாடு இரண்டாவதாக 56 பதக்கங்களையும் வென்றன. அடுத்த 12 ஆண்டுகளுக்கு இரண்டாம் உலகப் போர் காரணமாக எந்த ஒலிம்பிக் போட்டிகளும் நடக்கவில்லை. இதற்கடுத்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 1948இல் இலண்டனில் நடந்தன.

1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இளவயது வீரர் இந்தியாவைச் சேர்ந்த அருள் சாமி. இவர் இந்தியா சார்பில் மாரத்தன் போட்டியில் பங்கேற்றார்.

பங்கேற்ற நாடுகள்

1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 
முதல்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற நாடுகள் நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.
1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 
பங்கேற்ற நாடுகளில் போட்டியாளர்களின் எண்ணிக்கை.

பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் 49 நாடுகள் பங்கேற்றன.

பதக்கப் பட்டியல்

1936 ஒலிம்பிக்கில் மிகுந்த பதக்கங்கள் வென்ற முதல் பத்து நாடுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன;

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  GER (நடத்தும் நாடு) 33 26 30 89
2 1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  USA 24 20 12 56
3 1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  HUN 10 1 5 16
4 1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ITA 8 9 5 22
5 1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  FIN 7 6 6 19
1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  FRA 7 6 6 19
7 1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  SWE 6 5 9 20
8 1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  JPN 6 4 8 18
9 1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  NED 6 4 7 17
10 1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  GBR 4 7 3 14

ஒளிப்படத் தொகுப்பு

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்


Tags:

1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பங்கேற்ற நாடுகள்1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பதக்கப் பட்டியல்1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஒளிப்படத் தொகுப்பு1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மேற்சான்றுகள்1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வெளி இணைப்புகள்1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்இடாய்ச்சு மொழிஇரண்டாவது எசுப்பானியக் குடியரசுநாசிசம்நாட்சி ஜெர்மனிபன்னாட்டு ஒலிம்பிக் குழுபல்துறை விளையாட்டுப் போட்டிகள்பார்செலோனாபெர்லின்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிள்ளையார்முத்துராஜாஐராவதேசுவரர் கோயில்வைரமுத்துமுடியரசன்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்கட்டபொம்மன்தேர்தல் நடத்தை நெறிகள்உன்னாலே உன்னாலேசிறுகதைஎம். ஆர். கே. பன்னீர்செல்வம்பத்துப்பாட்டுகுணங்குடி மஸ்தான் சாகிபுபெண்ணியம்அரவிந்த் கெஜ்ரிவால்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்திராவிட இயக்கம்தருமபுரி மக்களவைத் தொகுதிமுத்துராமலிங்கத் தேவர்முத்தரையர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிசீறாப் புராணம்ஆடுதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024தமிழ்த்தாய் வாழ்த்துமகேந்திரசிங் தோனிமஞ்சள் காமாலைவிருதுநகர் மக்களவைத் தொகுதிபிலிருபின்சு. வெங்கடேசன்108 வைணவத் திருத்தலங்கள்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்அகத்தியர்விசயகாந்துஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்மூலம் (நோய்)இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்அறுசுவைஅகத்தியமலைமனித மூளைஅபினிகோலாலம்பூர்இலங்கையின் மாகாணங்கள்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்தமிழில் கணிதச் சொற்கள்இந்திய அரசியலமைப்புதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்அருங்காட்சியகம்பதினெண் கீழ்க்கணக்குஅகழ்ப்போர்பிரேசில்ஆ. ராசாதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிஓ. பன்னீர்செல்வம்பாண்டவர் பூமி (திரைப்படம்)தேர்தல் பத்திரம் (இந்தியா)இந்தியாவின் பொருளாதாரம்பங்களாதேசம்சப்ஜா விதைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகுப்தப் பேரரசுகலைச்சொல்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்நாயன்மார் பட்டியல்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்இந்திய மக்களவைத் தொகுதிகள்யாவரும் நலம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சிவனின் 108 திருநாமங்கள்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிசிங்கம் (திரைப்படம்)சென்னைஇசுலாமிய வரலாறுதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கரிகால் சோழன்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஈரோடு தமிழன்பன்🡆 More