நிதி ஆயோக்

நிதி ஆயோக் (NITI Aayog) அல்லது நீதி ஆயோக் என்பது இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும்.

இதில் நிதி (NITI - National Institution for Transforming India) என்பதன் பொருளாகும். இது 2015, சனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து செயல்பட துவங்கியுள்ளது. இதன் தற்போதைய துணைத் தலைவராக சுமன் பெரி உள்ளார்.

துறை மேலோட்டம்
அமைப்பு1 சனவரி 2015; 9 ஆண்டுகள் முன்னர் (2015-01-01)
முன்னிருந்த
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்புது டெல்லி
அமைப்பு தலைமைகள்
  • நரேந்திர மோடி, தலைவர்
  • சுமன் பெர்ரி, துணை தலைவர்
  • பிபேக் தீப்ராய், உறுப்பினர்
  • விகே. சரசுவத், உறுப்பினர்
  • ரமேசு சந்த், உறுப்பினர்
  • வினோத் பவுல், உறுப்பினர்
  • அமிதாப் கந்த், சி இ ஒ
  • தினேஷ் ஆரோரா, இயக்குனர்
மூல அமைப்புஇந்திய அரசு
வலைத்தளம்www.niti.gov.in

வரலாறு

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி மத்திய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டக் குழுவின் முதல் தலைவராக அப்போதைய பிரதமர் நேரு இருந்தார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மத்திய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய குழு அமைக்கப்படும் என அறிவித்தார். இதன்படி 2015, சனவரி 1 ஆம் தேதி திட்டக் குழுவுக்குப் பதிலாக நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.

நிதி ஆயோக் அமைப்பு

இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் செயல்படுவார். துணைத் தலைவர் மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள்.

செயல்பாடுகள்

  • தேசிய வளர்ச்சி கொள்கைகளை பரிந்துரைகள் செய்வது

வெளியீடுகள்

நிதி ஆயோக் நீராதாரம், சுகாதாரம், எளிதாக வர்த்தகம் செய்தல் உள்பட பல்வேறு வகைகளில் மாநிலங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து வரிசைப்படுத்தி அறிக்கை வெளியிடுகிறது.

பள்ளி கல்வி தரக் குறியீடு,2019

பள்ளி கல்வி தரக் குறியீடு 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது .உலக வங்கி பிரதிநிதிகள், கல்வியாளர்கள்கொண்ட குழு 2015-16, 2016-2017 ஆம் ஆண்டுகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அளவுருக்கள்

  • மாணவர்களின் தேர்ச்சி விகிதம்,
  • பள்ளி சேர்க்கை,
  • பங்களிப்பு,
  • உள்கட்டமைப்பு,
  • ஆசிரியர்கள் வசதி,
  • நிர்வாக நடவடிக்கைகள்

என பலவகையிலும் சேர்த்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

வரிசைப்படுத்தும் முறை

இதற்காக பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 3 வகையாக பிரித்து வரிசைப்படுத்தி உள்ளது.

தர வரிசை

மொத்தம் உள்ள 20 பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாட்டில் கேரளா முதலிடத்தில் உள்ளது. கேரளாவின் பள்ளி கல்வித்தரம் 76.6 சதவீதமாக உள்ளது.அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் 72.8 சதவீதம், கர்நாடகம் 69.5 சதவீதம், குஜராத் 61.9 சதவீதம், அசாம் 60.29 சதவீதம், மராட்டியம் 57.43 சதவீதம், தமிழ்நாடு 56.37 சதவீதம் என உள்ளன. இதில் தமிழ்நாடு 7 வது இடத்தில் உள்ளது. மிகவும் குறைவாக உத்தரபிரதேசம் 36.4 சதவீதமாக உள்ளது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

நிதி ஆயோக் வரலாறுநிதி ஆயோக் அமைப்புநிதி ஆயோக் செயல்பாடுகள்நிதி ஆயோக் வெளியீடுகள்நிதி ஆயோக் மேற்கோள்கள்நிதி ஆயோக் வெளியிணைப்புகள்நிதி ஆயோக்திட்டக் குழு (இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

மூவேந்தர்பதினெண்மேற்கணக்குதிரௌபதி முர்முகுறுந்தொகைசங்க காலம்தொல். திருமாவளவன்விஜயநகரப் பேரரசுஇயற்கை வளம்ஈரோடு தமிழன்பன்பொருநராற்றுப்படையோகிகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009எலான் மசுக்ஐங்குறுநூறுகணினிதேவநேயப் பாவாணர்சித்தர்கொடைக்கானல்நீர் மாசுபாடுநிலாஇந்தியாவில் இட ஒதுக்கீடுதமிழில் சிற்றிலக்கியங்கள்நெசவுத் தொழில்நுட்பம்பதிற்றுப்பத்துஅத்தி (தாவரம்)காச நோய்தைராய்டு சுரப்புக் குறைகும்பம் (இராசி)நிலச்சரிவுயோனிஅண்ணாமலையார் கோயில்சிறுதானியம்கூத்தாண்டவர் திருவிழாகுலசேகர ஆழ்வார்முல்லைக்கலிதிருவிழாமுத்துராமலிங்கத் தேவர்தங்க மகன் (1983 திரைப்படம்)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019மாடுவிளாதிமிர் லெனின்ஆத்திசூடிசிறுபாணாற்றுப்படைசீமான் (அரசியல்வாதி)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்வி.ஐ.பி (திரைப்படம்)சிவன்சிவாஜி கணேசன்செயற்கை மழைகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிமஞ்சள் காமாலைஅடல் ஓய்வூதியத் திட்டம்உவமையணிவாணிதாசன்முத்தரையர்நாயக்கர்பரணி (இலக்கியம்)பழமுதிர்சோலை முருகன் கோயில்பஞ்சாங்கம்திருப்பதிகாடுவெட்டி குருவேலுப்பிள்ளை பிரபாகரன்எங்கேயும் காதல்முருகன்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)கஞ்சாமஞ்சும்மல் பாய்ஸ்முக்கூடற் பள்ளுபுளிப்புவைதேகி காத்திருந்தாள்காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்சி. விஜயதரணிஅறிவுஅனுமன்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)ஐஞ்சிறு காப்பியங்கள்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)🡆 More