திரைப்படம் ஆடுஜீவிதம்

ஆடுஜீவிதம் ( Aadujeevitham ), தி கோட் லைஃப் என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம் ஆகும்.

மலையாளத் திரைப்பட இயக்குநர் பிளெஸ்ஸி திரைக்கதை எழுதியதுடன், இணைந்து தயாரித்துள்ளார். இத்திரைப்படம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கிடையேயான ஒரு சர்வதேச கூட்டுத் தயாரிப்பாகும். மேலும் அரபு மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உரையாடல்களைக் கொண்டுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு ஆடு ஜீவிதம் என்ற இதே பெயரில் எழுத்தாளார் பென்யாமின் எழுதிய மலையாள புதினத்தின் தழுவலாகும். இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இது சவூதி அரேபியாவில் தனது விருப்பத்திற்கு மாறாக ஆடு மேய்க்கும் வேலையில் அமர்த்தப்பட்ட ஒரு புலம்பெயர்ந்த மலையாளத் தொழிலாளியைப் பற்றிய கதையாகும்.

ஆடுஜீவிதம்
இயக்கம்பிளெஸ்ஸி
தயாரிப்பு
  • பிளெஸ்ஸி
  • கே. ஜி. ஆப்ரகாம்
  • ஜிம்மி ஜீன்-லூயிஸ்
  • ஸ்டீவன் ஆடம்ஸ்
திரைக்கதைபிளெஸ்ஸி
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புபிரித்விராஜ் சுகுமாரன்
ஒளிப்பதிவு
  • சுனில் கே. எஸ்.
  • கே. யு. மோகனன்
படத்தொகுப்புஏ. ஸ்ரீகர் பிரசாத்
வெளியீடுமார்ச்சு 28, 2024 (2024-03-28)
நாடு
  • இந்தியா
  • அமெரிக ஐக்கிய நாடுகள்
மொழி

2008 ஆம் ஆண்டு ஆடுஜீவிதம் புத்தகத்தைப் படித்ததிலிருந்து அக்கதையை படமாக்க பிளெஸ்ஸி விரும்பினார். அதே ஆண்டில் பிரித்விராஜ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் செலவுக் கட்டுப்பாடுகள் காரணமாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு படம் இறுதியாக 2015 இல் இயக்கப்பட்டது. ஜிம்மி ஜீன்-லூயிஸ் மற்றும் ஸ்டீவன் ஆடம்ஸ் ஆகியோரும் பிளெஸ்ஸியுடன் தயாரிப்பாளராக இணைந்தனர். படத்தின் அசல் இசை மற்றும் பாடல்களை ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

முதன்மை படப்பிடிப்புப் பணி மார்ச் 2018 மற்றும் சூலை 2022 க்கு இடையில் வாடி ரம், ஜோர்தான் மற்றும் அல்சீரியாவின் சகாரா பாலைவனங்களிலும், சில காட்சிகள் இந்தியாவின் கேரளத்திலும் படமாக்கப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக படக்குழுவினர் 70 நாட்கள் ஜோர்தானில் சிக்கித் தவித்தனர். படத்தின் முதன்மை புகைப்படம் 14 ஜூலை 2022 அன்று நிறைவடைந்தது.

முப்பரிமாண திரைப்படமாக எடுக்கப்படும் ஆடுஜீவிதம், 2023 கான் திரைப்பட விழாவில் திரையிடத் திட்டமிட்டுள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் திரையரங்குகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர்கள்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

அரபு மொழிஆடு ஜீவிதம்சவூதி அரேபியாபிரித்விராஜ் சுகுமாரன்பென்யாமின் (எழுத்தாளர்)மலையாளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கள்ளர் (இனக் குழுமம்)சங்ககால மலர்கள்அரிப்புத் தோலழற்சிகர்மாரோசுமேரிதமிழ்நாடு காவல்துறைசிறுநீரகம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்வீரப்பன்முன்னின்பம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)மழைமுகம்மது நபிதிருமங்கையாழ்வார்மு. கருணாநிதிதாவரம்எயிட்சுஷங்கர் (திரைப்பட இயக்குநர்)சீரகம்திருமுருகாற்றுப்படைகிராம நத்தம் (நிலம்)உடுமலை நாராயணகவிமக்களவை (இந்தியா)பிரேமம் (திரைப்படம்)பட்டினத்தார் (புலவர்)இந்தியக் குடியரசுத் தலைவர்தமிழில் சிற்றிலக்கியங்கள்கட்டுரைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்சச்சின் டெண்டுல்கர்பழனி முருகன் கோவில்நீ வருவாய் எனகார்லசு புச்திமோன்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்தேவநேயப் பாவாணர்பெண்ஏப்ரல் 26தமிழர் அணிகலன்கள்சிவனின் தமிழ்ப் பெயர்கள்மியா காலிஃபாதாய்ப்பாலூட்டல்சங்க காலம்குலசேகர ஆழ்வார்சாத்துகுடிமரகத நாணயம் (திரைப்படம்)குறை ஒன்றும் இல்லை (பாடல்)முருகன்திக்கற்ற பார்வதிநற்றிணைபெ. சுந்தரம் பிள்ளைதிருப்பாவைதமிழர் உலோகத் தொழில்நுட்பம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்தூது (பாட்டியல்)இந்திய மக்களவைத் தொகுதிகள்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்நாம் தமிழர் கட்சிதட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)கணையம்முகலாயப் பேரரசுகாடுவெட்டி குருதிவ்யா துரைசாமிஅடல் ஓய்வூதியத் திட்டம்அம்மனின் பெயர்களின் பட்டியல்அஜித் குமார்சிவாஜி (பேரரசர்)சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமாதவிடாய்நவக்கிரகம்நிதி ஆயோக்எஸ். பி. பாலசுப்பிரமணியம்வினோஜ் பி. செல்வம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்செவ்வாய் (கோள்)அக்கினி நட்சத்திரம்ஆங்கிலம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்பாலின விகிதம்சூர்யா (நடிகர்)🡆 More