நிலம் கிராம நத்தம்

கிராம நத்தம் பிரித்தானிய இந்திய ஆட்சியின் போது கிராமபுறங்களில் எதிர்காலத்தில் மக்கள் வீடுகள் கட்டிக்கொள்வதற்கு என ஒதுக்கப்பட்ட நிலம் ஆகும்.

இது ஊர் நத்தம் மற்றும் சேரி நத்தம் என இருவகைப்படும். கிராம நத்தம் அரசாங்கத்தின் சொத்து அல்ல, ஆனால் கிராம பஞ்சாயத்திற்கு சொந்தமானது. இந்நிலத்தில் கிராம மக்கள் குடியிருப்பு நோக்கங்களுக்காக வீடுகள் கட்டலாம். பொதுவாக கிராம நத்தம் நிலத்தின் விற்பனைப் பத்திரம் அல்லது தாய்ப்பத்திரங்கள் இருக்காது. கிராம நத்தம் நிலத்தின் முதல் ஆக்கிரமிப்பாளரே அதன் சரியான உரிமையாளராகக் கருதப்படுகிறார், வருவாய்த் துறையினர் வழங்கும் பட்டா அந்நிலத்தின் முதல் ஆக்கிரமிப்பாளரின் விண்ணப்பத்தில் பேரில் வழங்கப்படுகிறது.

ஒருவர் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக கிராம நத்தம் நிலத்தில் வீடு கட்டி வாழ்கிறர் என்பதற்கு உரிய ஆவணங்களுடன் (வீட்டு வரி, குடிநீர் கட்டணம் & மின்சாரக் கட்டணம்) வருவாய்த் துறைக்கு விண்ணப்பித்து வீட்டு மனைக்கு கிராம நத்தம் பட்டா பெறலாம்.

கிராம நத்தம் நிலத்தில் ஒருவர் ஒரு வீட்டைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்றாலும், எதிர்காலத்தில் அரசின் திட்டங்களுக்கு அந்நிலம் தேவைப்படும்போது அதனை அரசு மீண்டும் எடுத்துக் கொள்ளும் (ஆக்கிரமிப்பு) வாய்ப்பு உள்ளது. சூன் 2013 இல் தமிழக அரசுக்கு எதிராக, ஒரு கிராம நத்தம் நிலத்தின் உரிமையாளர் தொடுத்த வழக்கில், கிராம நத்தம் மீது அரசு உரிமை கோர முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும், கிராம நத்தம் நிலத்தின் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு அளிப்பதன் மூலம் கிராம நத்தம் நிலத்தில் அதன் திட்டத்தை அரசு நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டது.

கிராம நத்தம் நிலத்தில் ஒருவர் ஒரு வீட்டைக் கட்டப் பயன்படுத்தலாம். கிராம நத்தம் நிலத்தை விலை கொடுத்து வாங்குவது எப்போதுமே அபாயகரமான முதலீடாக இருக்கலாம், சட்டப்பூர்வமாக ஒருவர் கிராம நத்தம் நிலத்தில் ஒரு வீட்டைக் கட்டலாம், அதே நேரத்தில் குறைந்த ஆரம்ப செலவின் பலன்களை அனுபவிக்கலாம். பட்டா நிலங்களுடன் ஒப்பிடும் போது, கிராம நத்தம் நிலங்கள் குறைவான மதிப்பு கொண்டிருக்கும். கிராம நத்தம் நிலத்தை வைத்திருப்பவர் பட்டாவுக்கு விண்ணப்பிப்பது முக்கியமாகும். கிராம நத்தம் நிலங்களில் கட்டப்படும் வீடுகளை அதன் உரிமையாளர் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆளில்லாத நத்தம் மனை வீடாக இருந்தால், அதனை புறம்போக்கு நத்தம் என வகைப்படுத்தப்படும். அத்தகைய புறம்ப்போக்கு நத்தம் நிலங்கள் பொறுத்தவரை, அரசாங்கம் ஒரு பாதுகாவலராக செயல்படுகிறது, மேலும் ஒரு தனிநபருக்கு அந்நிலத்தை ஒதுக்கலாம்.

கிராம நத்தம் நிலங்களை வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாது. அத்தகைய நிலத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை உருவாக்க ஒரு கூட்டு முயற்சி வணிக நடவடிக்கையாக கருதப்படுகிறது. கிராம நத்தம் நிலத்தின் உரிமையாளர் நிலத்தில் வசிக்கும் நோக்கத்தை தெளிவாகக் காட்டாத எந்தச் செயலையும் வணிக நடவடிக்கையாக வகைப்படுத்தலாம். கிராம நத்தம் நிலத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டியதால், 2011 இல் சென்னை உயர்நீதிமன்றம், இந்த நடவடிக்கையை ஒரு வணிக நடவடிக்கையாக வகைப்படுத்தலாம் என்று தீர்ப்பளித்தது.

மே 2023இல் நத்தம் நில வகைகளை ரயத்துவாரி மனைகள் என அழைக்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கிராம ஊராட்சிபிரித்தானியாவின் இந்தியப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கீழடி அகழாய்வு மையம்பகிர்வுநன்னூல்கடையெழு வள்ளல்கள்கவிதைமுத்தரையர்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பணவீக்கம்கடல்செயங்கொண்டார்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கோத்திரம்இந்திய தேசிய காங்கிரசுஎட்டுத்தொகை தொகுப்புகடவுள்சப்தகன்னியர்வேதாத்திரி மகரிசிகுண்டூர் காரம்இந்திய தேசியக் கொடிபாரிகுமரகுருபரர்அன்மொழித் தொகைதஞ்சாவூர்சித்திரைத் திருவிழாமுத்தொள்ளாயிரம்இந்தியன் பிரீமியர் லீக்கும்பம் (இராசி)சிறுகதைசித்திரைதினகரன் (இந்தியா)வானிலைபுணர்ச்சி (இலக்கணம்)திருநங்கைரெட் (2002 திரைப்படம்)ஜே பேபிசெங்குந்தர்விஜயநகரப் பேரரசுபுனித ஜார்ஜ் கோட்டைசொல்முத்துலட்சுமி ரெட்டிவெண்குருதியணுரோசுமேரிஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)நான்மணிக்கடிகைராஜா சின்ன ரோஜாவேற்றுமையுருபுதிட்டக் குழு (இந்தியா)புதுமைப்பித்தன்தமிழ் படம் 2 (திரைப்படம்)ராஜேஸ் தாஸ்தொழிலாளர் தினம்யுகம்கண்டம்ஓமியோபதிநீர் மாசுபாடுடேனியக் கோட்டையாதவர்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)கன்னி (சோதிடம்)கல்லணைஅகநானூறுமட்பாண்டம்தமிழர் நிலத்திணைகள்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மார்கஸ் ஸ்டோய்னிஸ்மொழிஉலா (இலக்கியம்)தமிழ் இலக்கியம்பிரதமைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்வாணிதாசன்பிக் பாஸ் தமிழ்அபினிஏப்ரல் 24இதயம்பாரதிய ஜனதா கட்சிமீனம்🡆 More