வானிலை

வானிலை (Weather) என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட வளிமண்டலத்தில், இடம்பெறும் ஒரு தொகுதி தோற்றப்பாடுகளைக் குறிக்கப் பயன்படுகிறது.

வானிலை நடப்பு நிலையைக் குறிக்கிறது. இது நீண்டகால அடிப்படையிலான சராசரி வளிமண்டல நிலைமைகளைக் குறிக்கப் பயன்படும் தட்பவெப்பநிலை என்பதிலிருந்து வேறுபட்டது. வானிலைத் தோற்றப்பாடுகள் காற்று, முகில், மழை, பனி, மூடுபனி, தூசிப் புயல்கள் போன்ற பொது வானிலைத் தோற்றப்பாடுகளையும்; அரிதாக நிகழும் இயற்கை அழிவுகள், சூறாவளி, பனிப் புயல் போன்றவற்றையும் உள்ளடக்கியது.

வானிலை
Thunderstorm near கரஜு, மடைராவில் இடியுடன் கூடிய மழை

வானிலை இடத்துக்கிடம் வேறுபாடாக அமையும் அடர்த்தி (வெப்பநிலை, ஈரலிப்பு ஆகியவை) நிலைமைகளையொட்டி அமைகின்றது. இவ்வேறுபாடுகள், குறிப்பிட்ட இடத்தில் உள்ள சூரியனுடைய கோணத்தினால் உண்டாகிறது. சூரியனுடைய கோணம் குறித்த இடத்தின் அகலக்கோட்டு (latitude) அமைவிடத்தைப் பொறுத்து வேறுபடுகின்றது.

ஒரு பிரதேசத்தின் வானிலையை பல்வேறு காரணிகள் நிர்ணயிக்கின்றன. வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் காற்றழுத்தம் என்பன சில முக்கிய காரணிகளாகும். இதில் காற்றழுத்த வேறுபாடே காற்று, மழை ஆகியவை இருக்கக்கூடிய பிரதேசத்தைத் தீர்மானிக்கின்றது. புவியின் வளிமண்டலம் சிக்கலானதென்பதால் அதில் ஏற்படும் சிறிய மாற்றங்களும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். வானிலை மாற்றங்களுக்கான அனைத்து சக்தியும் சூரியனிடமிருந்தே பெறப்படுகின்றது. வானிலை புவிக்கு மட்டுமல்லாமல் வளிமண்டலம் உள்ள அனைத்து கோள்களுக்கும் பொதுவானது. உதாரணமாக வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்களிலும் சிக்கலான வானிலை நிலவுகின்றது. வியாழனில் உள்ள பெரும் சிவப்புப் புள்ளி எனப்படும் எதிர்-சூறாவளி அமைப்பானது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒ ரு வானிலையமைப்பாகும்.

காரணம்

வானிலை 
புவி வெப்பமயமாதல் விளைவால் 1880 ஆம் ஆண்டுக்கு பின்னர் 2015 ஆம் ஆண்டு அதிக வெப்பநிலை நிலவிய ஆண்டாக பதிவுசெய்யப்பட்டுள்ளது படத்திலுள்ள நிறங்கள் வெப்பநிலை முரண்பாட்டை காட்டுகிறது. ஆதாரம்: நாசா /தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA)

புவியின் ஒவ்வொரு இடமும் வெவ்வேறு வெப்பநிலையுடன் இருத்தலே வானிலைக்கான முக்கிய காரணமாகும். இதுவே பனிப்புயல் முதல் வெப்பவலை வரைபல்வேறு வானிலை வேறுபாடுகளை உருவாக்குகின்றது. அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த வெப்பநிலை காற்றழுத்த மற்றும் ஈரப்பதத்தில் வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றது. அதிக காற்றழுத்தத்திலிருந்து குறைந்த காற்றழுத்தத்துக்கு காற்று வீசும். காற்றானது புவியின் சுழற்சியால் ஓர் வளைந்த வடிவிலேயே பயணிக்கும். தாழமுக்க நிலையும் காற்றுச்சுழற்சியும் ஒழுங்கமைப்பு ஒன்றைப் பேணி வளர்ச்சியடைந்து அது சூறாவளியாக மாற்றமடையலாம்.

வானிலையானது தொடக்க நிலைக்கான காரணம் காற்றழுத்தம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவை இடத்திற்கு இடம் மாறுபடுவததே ஆகும். இந்த வேறுபாடுகள் பூமியின் ஏதாவது ஒரு புள்ளி மீது சூரியக் கதிர்கள் படும் கோண அளவுகளில் மாறுபாடுகள் இருப்பதாலும், பூமியின் துருவப்பகுதியிலிருந்து மத்தியப் பகுதி வரை மாறுபடும் படுகோணத்தாலும் வானிலையில் மாற்றங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக துருவப் பகுதியில் சூரியக்கதிர்களின் வீீச்சு ஒரு புள்ளியில் குவிக்கப்பட வாய்ப்பில்லாமல் பரந்த நிலப்பகுதியல் விரவியவாறு பரப்பப்படுவதால் அத்தகைய பகுதிகளில் மிகக் குளிச்சியான வானிலை நிலவுகிறது. இவ்வாறு துருவப்பகுதிக்கும் வெப்பமண்டலப் பகுதிக்குமிடையே நிலவும் வலிமையான வெப்பநிலை மாறுபாடுகள் வளிமண்டல காற்றுச் சுழற்சிகளை உண்டாக்குகின்றன. மைய அட்சப்பகுதிகளில் நிலையற்ற வேகமாக வீசும் காற்றுகளால் புற வெப்பமண்டலச் சூறாவளிகள் தோன்றுகின்றன.

ஏனெனில் பூமியின் அச்சு சற்று சாய்வாக இருப்பதால் சூரிய ஒளியானது வருடத்தில் மாறுபடும் நேர அளவுகளில் மாறுபடும் படுகோணத்தில் புவி மீது விழுகிறது. சூன் மாதத்தில் புவியின் வடதுருவம் சூரியனை நோக்கி சற்று சாய்வாக உள்ளதால் திசம்பர் மாதத்தை விட சூரிய ஒளி முழுவது்ம் துருவப்பகுதியல் விழுகிறது. இத்தகைய விளைவுகளே புவியின் காலநிலை மாறுபாடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. புவியன் சுற்றுப்பாதை துணைக்கூறுகளும் சூரிய ஆற்றலை புவி பெற்றுக்கொள்ளும் விதமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவும் காலநிலை மாற்றங்களுக்கு முக்கியக் காரணிகளாக விளங்குகின்றன (பார்க்க : Milankovitch cycles).

சீரற்ற சூரிய வெப்பமே (வெப்ப மண்டல உருவாதல் மற்றும் ஈரப்பத சரிவுகள் அல்லது வளிமுகப் பிறப்பு (gradients) ) புவியில் வானிலை மாற்றங்களுக்கும் மேகங்கள் உருவாதலுக்கும் பணிப்படிவுகள் ஏற்படுவதற்கும் காரணிகளாக அமைகின்றன. புவியின் உயரமான பகுதிகள் தாழ்நிலப்பகுதிகளை விட ஒப்பீட்டளவில் மிகவும் குளிர்ச்சியாக உள்ளன. இதனால் அதிகமான மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் எதிரொலிப்பு வெப்பநிலையும் சேர்ந்து வெப்பப்பரிமாற்ற வீதத்தை (adiabatic lapse rate) உருவாக்குகிறது. சில சூழ்நிலைகளில் இயல்பாகவே உயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபடுகிறது. இந்த தழைகீழான மாற்றம் மலையுச்சிகளில் அதிக வெப்பநிலையும் அதன் கீழாக உள்ள பள்ளத்தாக்குகளில் குறையளவு வெப்பநிலை போன்றவை மூடுபனி உருவாகிறது. இது இடி மின்னலும் ஏற்படுவதை தடுத்துக்கிறது. உள்ளூர் அளவுகளில், வெப்பநிலை வேறுபாடுகள் ஏற்படலாம். ஏனெனில் வெவ்வேறு பரப்புகளில் ( கடல்கள், காடுகள், பனிப்படலங்கள், அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்கள்) மாறுபட்ட பௌதீக குணவியல்புகளான எதிரொளிப்புத்தன்மை, கடினத்தன்மை, அல்லது ஈரப்பத உள்ளடக்கம் ஆகியவை இருக்கின்றன.

மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாடுகள் அழுத்த மாறுபாடுகளில் தாக்கத்தை உண்டாக்குகின்றன. வெப்பமான மேற்பரப்புகள் இதன் மேல்பகுதியிலுள்ள காற்றினையுன் சூடாக்குகிறது. இதன் காரணமான சூடான காற்று விரிவடைந்து அதன் அடர்த்தி குறைகிறது. இது மேற்பரப்பு அழுத்தங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக செங்குத்து அழுத்தம் காற்றினை மேலிருந்து கீழாக நகர்த்தி காற்று வீச்சினை உருவாகிறது. கோரியாலிஸ் விளைவவின் காரணமாக புவியின் சுழற்சி காற்று ஓட்டத்தில் விலகளை ஏற்படுத்துகிறது. இந்த எளிய அமைப்பு முறையே பின்னர் சிக்கலான காலநிலை அமைப்பியல் முறையாக மாறுகிறது.

வளிமண்டலமானது ஒழுங்கின்மை அமைப்பாகும் (chaotic system) இதன் விளைவாக வளிமண்டல அமைப்பில் ஒரு பகுதியில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட மொத்த அமைப்பிலும் பெரும் மாற்றமாக தீவிரமடையக்கூடும். இதனால் வானிலையை முன்கூட்டியே துல்லியமாகக் கணிப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஆயினும் வானிலை முன்கணிப்பாளர்கள் தினமும் அறிவியல் முறையான கணக்கீடுகளால் ஓரளவு துல்லியத்துடன் வானிலையை கணிக்கின்றனர்.

புவியில் வானிலையின் தாக்கம்

பாறைகளின் அரிப்படைதலால் புவியின் வடிவமைப்பை மாற்றியமைப்பதில் வானிலைக்கு பெரும்பங்குண்டு. பாறைகளுடன் மழைநீரும் அதன் அமிலத்தன்மையும் வேதியல் தாக்கமடைவதன் மூலம் பாறைகள் அரிப்படைந்து மண் உருவாகின்றது. உதாரணமாக வரண்ட வானிலை எப்போதும் நிலவும் நஸ்கா மற்றும் எகிப்து பிரதேசங்களில் உள்ள நஸ்கா கோடுகள் மற்றும் பிரமிட்டுகள் சேதமடையவில்லை. இது இயற்கை புவியியல் அம்சவியலிலும் தாக்கம் செலுத்தும்.வானிலை காரணிகளால் பாறை படிப்படியாகச் சிதைவடைந்து மண் மற்றும் கனியங்கள் தோன்றும் செயற்பாட்டுத் தொடர் வானிலையாலழிதல் (Weathering) எனப்படும். வானிலையாலழிதல் வளிமண்டலத்தின் பௌதீகக் காரணிகள், வேதியியல் காரணிகள் மற்றும் உயிரியல் காரணிகளால் நிகழலாம். மண்ணரிப்பு நிகழும்போது, துணிக்கைகள் அரித்து வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால் வானிலையாலழிதலில் துணிக்கைகள் இடம்பெயர்வதில்லை.

பாறைகளில் அல்லது மண்ணில் ஏற்படும் வானிலையாலழிதலானது, பௌதீக வானிலையாலழிதல் மற்றும் வேதியியல் வானிலையாலழிதல் என இரண்டு வகைப்படுத்தப்படும். வானியல் காரணிகளான வெப்பம், நீர், பனிக்கட்டி (Ice) மற்றும் அமுக்கம் என்பன நேரடியாக தாக்கம் செலுத்துவதால் பௌதீக வானிலையாலழிதல் நிகழ்கிறது. அமில மழை போன்ற நேரடி வேதியல் காரணிகளால் சிதைவுகளின் வேதியியல் தாக்கங்களாலும் வேதியியல் வானிலையாலழிதல் நிகழும் . அமில மழையின் காரணமாக சோடியம் மற்றும் குளோரைடு (உப்புகள்) போன்றவை கடல்களில் படிவுகளாகத் தேங்குகின்றன. இப்படிவுகள் காலமாற்றத்தாலும் புவியியல் விசைகளாலும் வேறு வகைப்பாறைகளாகவோ மண் வகைகளாகவோ மாறுபாடு அடையக்கூடும். காலநிலை புவியின் மேற்பரப்பு அரிப்புகளை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

2015 ஆம் ஆண்டுக்கான உலக வானிலை நிகழ்படம்

ஐரோப்பிய வானியல் ஆய்வு அமைப்பான EUMETSAT வெளியிட்ட 2015 ஆம் ஆண்டின் காலநிலை ("A Year in Weather 2015") என்ற காணொளியில் புவியின் காலநிலை ஒரு வருடம் தொடர்ச்சியாக புவி நிலைத் துணைக்கோளின் உதவியுடன் படம்பிடிக்கப்பட்டு அதனைத் தொகுத்து 365 நாட்களும் எவ்வாறு புவியில் காலநிலை மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை ஒரு காலக்கழிவு நிகழ்படமாக (time lapse Video) வெளியிடப்பட்டது. இச்செயலில் EUMETSAT அமைப்பு சப்பானிய வானிலை ஆய்வு நிறுவனம் (Japan Meteorological Agency) மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration) ஆகிய அமைப்புகள் கூட்டாக மேற்கொண்டன.

வானிலையுடன் தொடர்புடைய முக்கியக் காற்றுகள் மற்றும் அழுத்த அமைப்புகள்

மண்டலம் பெயர் அழுத்தம் மேற்பரப்பு காற்றுகள் வானிலை
பூமத்திய ரேகை (0°) நில நடு அமைதி மண்டலம் (ITCZ) (பூமத்திய தாழ் பகுதி) குறைவு லேசான, மாறுபடும் காற்று மேகமூட்டம் எல்லா பருவங்களிலும் ஏராளமான மழை; சூறாவளிகள் உற்பத்தியாகும் பகுதி, அதிக மழை காரணமாக ஒப்பீட்டளவில் குறைந்த கடல் மேற்பரப்பு உப்புத்தன்மை
0°–30°வ மற்றும் தெ வணிகக் காற்று - வடக்கு அரைக்கோளத்தின் வடகிழக்குப் பகுதி ;தெற்கு அரைக்கோளத்தின் தென்கிழக்குப் பகுதி

கோடை (ஈரம்) , குளிர்காலம் (உலர்); வெப்ப மண்டல வானிலை தொந்தரவுகளுக்கான பாதை

30°வ மற்றும் தெ குதிரை அட்சப்பிரதேசங்கள் உயர் லேசான, மாறுபடும் காற்று குறைந்த அளவு மேகம், அனைத்து பருவகாலங்களிலும் வறண்ட வானிலை, அதிகளவு கடல் நீர் ஆவியாதலால் அதிக கடல் மேற்பரப்பு நீர் உப்புத்தன்மை
30°–60°வ மற்றும் தெ மேல்காற்று (Westerlies) - வடக்கு அரைக்கோளத்தின்தென்மேற்குப் பகுதி ; தெற்கு அரைக்கோளத்தின் வடமேற்குப் பகுதி குளிர்காலம் (ஈரப்பதம்), கோடை (வறண்ட வானிலை); மிதமான உயர் மற்றும் குறைந்த அழுத்தத்திற்கான பாதை
60°வ மற்றும் தெ துருவ முனை குறை மாறுபடக்கூடியது புயல், மேகமூட்டமான வானிலை மண்டலம்; எல்லா காலங்களிலும் ஏராளமான மழை
60°–90°வ மற்றும் தெ முனைய கீழைக்காற்று - வடக்கு அரைக்கோளத்தின் வடகிழக்குப் பகுதி ;தெற்கு அரைக்கோளத்தின் தென் கிழக்குப் பகுதி

மிகவும் குறைந்த வெப்பநிலை கொண்ட குளிர் துருவ காற்று

90°வ மற்றும் தெ துருவம் உயர் வடக்கு அரைக்கோளத்தின் தென்முனை ; தெற்கு அரைக்கோளத்தின் வடமுனை குளிர்ந்த, வறண்ட காற்று; அனைத்து பருவங்களிலும் அடர்த்தியற்ற மழை

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

வானிலை காரணம்வானிலை புவியில் யின் தாக்கம்வானிலை 2015 ஆம் ஆண்டுக்கான உலக நிகழ்படம்வானிலை யுடன் தொடர்புடைய முக்கியக் காற்றுகள் மற்றும் அழுத்த அமைப்புகள்வானிலை வெளி இணைப்புகள்வானிலை மேற்கோள்கள்வானிலைஇயற்கை அழிவுகாற்றுசூறாவளிதட்பவெப்பநிலைதோற்றப்பாடுபனிமழைமுகில்மூடுபனிவளிமண்டலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பரிவுஏப்ரல் 15காளமேகம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்பூம்பாறைமகேந்திரசிங் தோனிஅயலான்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்யாவரும் நலம்ஆல்சிங்கப்பூர்பெரியபுராணம்ஐயா (திரைப்படம்)மீனாட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்தற்குறிப்பேற்ற அணிகோத்திரம்மதுரை வீரன்உகாதிமூலம் (நோய்)இராமச்சந்திரன் கோவிந்தராசுஅறுபடைவீடுகள்திருமந்திரம்அறுவகைப் பெயர்ச்சொற்கள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மகாபாரதம்வேதநாயகம் பிள்ளைமாவீரன் (2011 திரைப்படம்)நெசவுத் தொழில்நுட்பம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்முருகன்அங்குலம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்தமிழ்த்தாய் வாழ்த்துநாடாளுமன்ற உறுப்பினர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)மீன் வகைகள் பட்டியல்திருப்பதிகல்வெட்டுஉயர் இரத்த அழுத்தம்சைவ சமயம்கூகுள்திரிசாஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிஇலக்கியம்வசுதைவ குடும்பகம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019முன்னின்பம்அபியும் நானும் (திரைப்படம்)கா. காளிமுத்துமறைமலை அடிகள்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்துரைமுருகன்நந்திவர்மன் (திரைப்படம்)திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சிவன்வேலூர் மக்களவைத் தொகுதிஇந்தியக் குடியரசுத் தலைவர்சனீஸ்வரன்பிகில்பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்சோழர்மதுரைமழைஐராவதேசுவரர் கோயில்மருது பாண்டியர்கம்பர்சித்திரைத் திருநாள் பலராம வர்மன்வாக்குரிமைபிரபுதேவாசிலம்பம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005அஜின்கியா ரகானேஅகத்தியர்பல்லவர்ஆசாரக்கோவைஅண்ணாமலை (திரைப்படம்)🡆 More