நன்னூல், தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலையும் தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல்.
இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழியல் பார்வை இஃது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நன்னூல் பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். தமிழ்மொழி இலக்கண நூல்களுள் தற்போது இருப்பனவற்றில் மிகப்பழமையானதான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்குக் கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும் ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும் எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.
சீயகங்கன் என்ற சிற்றரசர் கேட்டுக் கொண்டதால் பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார் என்று பாயிரம் குறிப்பிடுகிறது.
நன்னூல் இரு அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தினை ஒட்டி எழுதப்பட்ட இந்நூலிலும் 5 அதிகாரங்கள் இருந்தன என்றும் பல காரணங்களுக்காக 3 அதிகாரங்கள் தொலைந்து போயிருக்கக்கூடும் எனவும் சான்றோர் கூறுவர். ஆயினும் தற்போதுள்ள நன்னூலில் இடம்பெற்று இருப்பவை,
மூன்று பகுதிகளை கொண்டுள்ள நன்னூலில் 462 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 7 நூற்பாக்கள் தொல்காப்பியத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும் நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் வைக்கும் முறையைப் பற்றி பேசுவது பாயிராமாகும். பாயிரத்திற்குரிய ஏழு பெயர்கள்:
சிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரம் என இரு வகையாகவும் நூலின் முகவுரையாகவும் அமைந்துள்ளது சிறப்பு. நன்னூல் நூலுக்கு இலக்கணம் சொல்லத் தொடங்குகிறது. நூலுக்குப் பாயிரம் வேண்டும். நூலுக்குரிய இலக்கணங்கள் எவை, அதனை யார் செய்ய வேண்டும். நூலைச் சொல்லும் ஆசிரியர், மாணாக்கர் ஆகியோரது தன்மை முதலானவை இதில் கூறப்படுகின்றன. தொல்காப்பியம் மரபியல் இறுதியில் இவை உள்ளன.
இவ்வதிகாரம் பின்வரும் 5 பகுதிகளாக உள்ளது:
இவ் எழுத்ததிகாரத்தில் மொத்தம் 202 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வதிகாரம் பின்வரும் 5 பகுதிகளாக உள்ளது:
இச் சொல்லதிகாரத்தில் 205 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
This article uses material from the Wikipedia தமிழ் article நன்னூல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.