கருப்பை நார்த்திசுக் கட்டி

கருப்பை நார்த்திசுக்கட்டி (Uterine fibroid) என்பது கருப்பையினுள் உருவாகும் மென்மையான தசைக் கட்டிகள் ஆகும்.

பெரும்பாலும் இக்கட்டிகள் இருப்பதன் அறிகுறி சிலருக்கு ஏற்படுவதில்லை ஆனால் சிலருக்கு மாதவிடாயின் பொழுது மிகுந்த வலியும் அதிக குருதிப்பெருக்கும் ஏற்படும். இக்கட்டிகள் பெரிதாக வளர்கையில் சிறுநீர்ப்பையைத் தள்ளியபடி அழுத்தும். அதனால் அடிக்கடி சிறுநீர்க்கழிக்க உந்துதல் ஏற்படும். சிலவேளை பாலுறவின்போது மிகுந்த வலியை அல்லது முதுகெலும்பு வலியை ஏற்படுத்தலாம். ஒரு பெண்ணுக்கு ஒரு கருப்பை நார்த்திசுக்கட்டியோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகளோ இருக்கலாம். சில நேரங்களில் நார்த்திசுக்கட்டிகள் இருக்கும்போது கருத்தரித்தல் கடினமாக ஆகலாம்.ஆயினும் இது அனைவருக்கும் பொதுவானதல்ல.

கருப்பை நார்த்திசுக் கட்டி
கருப்பை நார்த்திசுக் கட்டி
சிறப்புமகளிர் நோய் மருத்துவவியல்
அறிகுறிகள்மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு
சிக்கல்கள்மலட்டுத்தன்மை
காரணங்கள்கண்டறியப்படவில்லை
சூழிடர் காரணிகள்உடல் பருமன், சிவப்பு இறைச்சி உட்கொள்வது
சிகிச்சைஅறுவை சிகிச்சை

கருப்பை நார்த்திசுக்கட்டிகள் வருவதற்கான காரணம் இதுவரை தெளிபடுத்தப்படவில்லை. ஆயினும் குடும்ப வழியாகவோ உடல் இயக்குநீரின் அளவுகளை வைத்தோ ஓரளவு தீர்மானிக்கப்படுகிறது. உடற்பருமன், சிவப்பு இறைச்சி உட்கொள்ளுதல் ஆகியன கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாவதற்கான ஆபத்தான காரணிகள் ஆகும். இடுப்பெலும்புச் சோதனை, மருத்துவப் படச்சோதனை ஆகியவை மூலம் இதனைக் கண்டறியலாம்.

அறிகுறிகள் எதுவும் தென்படாதபோது எவ்வித சிகிச்சையும் தேவையில்லை. ஆயினும் வலியுடன் குருதிப்போக்கு இருக்கும் பொழுது ஐபுரூபன், பாராசிட்டமால் ஆகியவை ஓரளவு பயன் தரும். கூடுதலாக இரும்புச்சத்துள்ள துணையுணவை அதிக உதிரப்போக்கின்போது எடுத்துக்கொள்ளலாம். கோனாடோட்ரோபின்- இயக்குநீர் வெளியீட்டு மருந்து வகைகள் மூலம் மருத்துவம் செய்தல் நார்த்திசுக்கட்டிகளின் அளவைக் குறைக்கக்கூடும் ஆனால் பக்க விளைவுகள் ஏற்படுவதோடு செலவும் அதிகமாகும். தீவிர அறிகுறிகள் தென்படுகையில் கட்டிகளை அகற்றவோ அல்லது கருப்பையை அகற்றவோ அறுவை சிகிச்சை உதவக்கூடும். கருப்பை தமனி நீக்கம் சில நேரஙகளில் பயன் தரும். புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய வகையைச் சேர்ந்த லெயோமையொசார்கோமா என்றழைக்கப்படும் நார் திசுக்கட்டிகள் மிகவும் அரிதாகும். இவை தீங்கற்ற நார்த்திசுக்கட்டிகளில் இருந்து உருவாவதில்லை.

ஐம்பது வயது வரையுள்ள பெண்களில் 20 விழுக்காடு முதல் 80 விழுக்காடு பெண்களுக்கு கருப்பை நார்த்திசுக்கட்டிகள் வளர்கின்றன. 2013 இல் சுமார் 171 மில்லியன் பெண்கள் இதனால் பாதிப்படைந்தார்கள். பொதுவாக மத்திய அல்லது பிந்தைய இனப்பெருக்க வயதுள்ளவர்களுக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. மாதவிடாய் நிறுத்த காலத்திற்குப் பின் இக்கட்டிகள் அளவில் சிறிதாகிவிடுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் கருப்பை நீக்கு அறுவை சிகிச்சைக்குப் பொதுவான காரணமாக கருப்பை நார்த்திசுக்கட்டிகள் அமைகின்றன.

அறிகுறிகள்

கருப்பை நார்த்திசுக்கட்டி உள்ள பெண்களுக்கு பொதுவாக எந்த அறிகுறியும் காணப்படுவதில்லை. அடிவயிறு வலித்தல் இரத்த சோகை, அதிகமான குருதிப்போக்கு ஆகியன நார்த்திசுக்கட்டிகள் கருப்பையினுள் இருப்பதற்கான அடையாளங்கள் ஆகும். நார்த்திசுக்கட்டிகள் உருவாகியுள்ள இடத்தைப் பொறுத்து பாலியல் உறவின் போது வலி ஏற்படலாம். கருத்தரித்தபின் இக்கட்டிகள் காரணமாக கருச்சிதைவு, குருதிப்போக்கு, முன்கூட்டியே பிறத்தல் அல்லது கருவின் நிலையில் குறுக்கீடு, ஆகியன ஏற்படலாம். மேலும் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மலக்குடல் அழுத்தத்தை ஏற்படுத்தும். கருத்தரித்த பின் அடிவயிறானது கர்ப்பத் தோற்றத்தில் காணப்படுவதைவிட மிகவும் பெரிதாக இருக்கும். சில பெரிதான கட்டிகள் கருப்பைவாய் மற்றும் யோனிக்கு வெளியே வெளிப்பட்டுக் காணப்படும்.

பொதுவாக கருப்பை நார்த்திசுக்கட்டிகள் கொண்ட ஒரு பெண்ணுக்கு கருத்தரிக்காமைக்கு அக்கட்டிகள் காரணமாக இருப்பதில்லை. இக்கட்டிகள் காரணமாக மூன்று விழுக்காடு பெண்கள் மட்டுமே குழந்தை பெறமுடியாமல் இருக்கின்றனர். பெருவாரியான பெண்களுக்கு கருப்பை நார்த்திசுக்கட்டிகள் இருந்தும் கூட கருத்தரித்து சாதாரணமாகக் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். சில நேரங்கள் தவறான இடத்தில் உருவாகும் நார்த்திசுக்கட்டிகள் கருமுட்டைச் செயலைத் தடுத்து மலட்டுத்தன்மையை உருவாக்கலாம்.

அபாயக் காரணிகள்

கருப்பை நார்த்திசுக்கட்டி வளர்வதற்கான சில அபாயக் காரணிகள் மாறுபடக்கூடும். பொதுவாக உடற்பருமன் கொண்ட பெண்களுக்கு நார்த்திசுக்கட்டிகள் உருவாகின்றன. இனப்பெருக்கக் காலங்களில் (வயதில்) மட்டுமே அது தொடர்புடைய ஈத்திரோசன் புரோஜெஸ்திரோன் ஆகியவற்றைச் சார்ந்தே கருப்பைத் நார்த்திசுக்கட்டிகளின் வளர்ச்சி அமைகிறது.

உணவு

பழங்கள் காய்கறிகள் அதிகமாகவுள்ள உணவை எடுத்துக்கொள்ளுதல் நார்த்திசுக்கட்டிகள் வளரும் வாய்ப்பைக் குறைக்கிறது. நார்ச்சத்து, வைட்டமி ஏ, சி, இ, பைட்டோஸ்ட்ரோஜென்கள், கரோட்டினாய்டுகள், இறைச்சி, பால்பொருட்கள் ஆகியவை சில தெளிவற்ற விளைவுகளை ஏற்படுத்தும். சாதாரானமாக வைட்டமின் டி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது நார்த்திசுக்கட்டிகள் வளர்வதைக் குறைக்கக்கூடிம்.

மேற்கோள்கள்

Tags:

கருப்பை நார்த்திசுக் கட்டி அறிகுறிகள்கருப்பை நார்த்திசுக் கட்டி அபாயக் காரணிகள்கருப்பை நார்த்திசுக் கட்டி மேற்கோள்கள்கருப்பை நார்த்திசுக் கட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கணியன் பூங்குன்றனார்விடுதலை பகுதி 1பூப்புனித நீராட்டு விழாபுணர்ச்சி (இலக்கணம்)திராவிட முன்னேற்றக் கழகம்வெப்பம் குளிர் மழைமரபுச்சொற்கள்இந்திய தேசிய காங்கிரசுமறவர் (இனக் குழுமம்)ம. கோ. இராமச்சந்திரன்குணங்குடி மஸ்தான் சாகிபுதொல்காப்பியம்சுரதாபல்லாங்குழிமாசாணியம்மன் கோயில்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்சைவ சமயம்வேர்க்குருபத்து தலசினேகாசிட்டுக்குருவிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ருதுராஜ் கெயிக்வாட்முதுமலை தேசியப் பூங்காகலைசாருக் கான்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்இளங்கோவடிகள்பிளாக் தண்டர் (பூங்கா)அடல் ஓய்வூதியத் திட்டம்எட்டுத்தொகை தொகுப்புசரத்குமார்பெண்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இந்தியப் பிரதமர்நீரிழிவு நோய்பிலிருபின்பகவத் கீதைசைவத் திருமுறைகள்மார்கஸ் ஸ்டோய்னிஸ்கருத்தரிப்புசிறுகதைமூலம் (நோய்)காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்பதிற்றுப்பத்துஇந்திய ரூபாய்தேவதாசி முறைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ந. பிச்சமூர்த்திமத கஜ ராஜாமலையாளம்கூத்தாண்டவர் திருவிழாதிருமால்திருப்பாவைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இரா. இளங்குமரன்ஆண்டுஅமேசான்.காம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழக வரலாறுதிருச்சிராப்பள்ளிர. பிரக்ஞானந்தாபாட்டாளி மக்கள் கட்சிமண் பானைஜே பேபிஇன்ஸ்ட்டாகிராம்ஐஞ்சிறு காப்பியங்கள்மாடுரத்னம் (திரைப்படம்)செம்மொழிமுத்துராமலிங்கத் தேவர்தற்கொலை முறைகள்அப்துல் ரகுமான்தற்குறிப்பேற்ற அணிமுல்லை (திணை)இயற்கைகொன்றை வேந்தன்🡆 More