பாட்டாளி மக்கள் கட்சி: இந்திய அரசியல் கட்சி

பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi, பா.ம.க) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.

இக்கட்சியை 1989களில், மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாறியது. இந்த கட்சியின் சின்னமாக 90-களில் 'யானை' சின்னமும், தற்போழுது 'மாம்பழம்' ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சி
சுருக்கக்குறிபாமக
தலைவர்அன்புமணி ராமதாஸ்
நிறுவனர்ச. இராமதாசு
பொதுச் செயலாளர்வடிவேல் இராவணன்
தொடக்கம்16 சூலை 1989 (34 ஆண்டுகள் முன்னர்) (1989-07-16)
தலைமையகம்தைலாபுரம், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம், சென்னை - 604001, தமிழ்நாடு
மாணவர் அமைப்புபாமக மாணவர் அணி
இளைஞர் அமைப்புபாமக இளைஞர் அணி
தொழிலாளர் அமைப்புபாட்டாளி தொழிற்சங்கம்
கொள்கைசமூகநீதி, சனநாயகம், சமத்துவம், மனித நேயம்
நிறங்கள் நீலம்
மஞ்சள்
சிவப்பு
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி (1998-2004, 2014 – தற்போது வரை)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2004-2009, 2011-13)
ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (2009-2010)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தமிழ்நாடு சட்டப் பேரவை)
5 / 234
தேர்தல் சின்னம்
பாட்டாளி மக்கள் கட்சி: சின்னம், தலைவர், பொதுச்செயலாளர்
இணையதளம்
pmkofficial.com
இந்தியா அரசியல்

இதுவரை இக்கட்சி தமிழ்நாடு சட்டமன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

சனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்ச் 26, 2009 வரை இருந்தது. 14வது மக்களவையில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரா. வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார். இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார்.

சூலை 29, 2010 ஆணையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சிக்கான விதிகளை புதுச்சேரி பாமக பெறாததால் அங்கு பாமக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்துள்ளது. ஆனால் இக்கட்சி சின்னத்தை (மாம்பழம்) இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என கூறியுள்ளது.

தமிழகத்தின் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்களை கொண்டு இருந்தது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 30 தொகுதிகளில் போட்டியிட்டதில் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

15வது மக்களவைக்கான தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது.

பின்னர் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைத்து 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது மற்றும் 3.80% சதவீத வாக்குகளை பெற்றது.

சின்னம்

இக்கட்சி ஆரம்பத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. பகுசன் சமாச் கட்சிக்கு தேசிய அரசியல் கட்சி என்று 1997இல் தகுதி உயர்த்தப்பட்டதாலும் யானை சின்னத்தை அது நாடு முழுக்க பயன்படுத்தியதாலும் யானை சின்னம் அதற்கு ஒதுக்கப்பட்டது. பாமக தமிழ்நாடு மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை இழந்ததால் அதன் யானை சின்னம் பறிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் தகுதி இழக்காததால், அங்கு யானை சின்னத்தை பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் இசைந்தது.

1998இல் இக்கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. அன்றிலிருந்து மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிட்டு வருகிறது. விதிகளின் படி மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் பறித்து விட்டாலும், 2016 சட்டமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட இக்கட்சிக்கு அனுமதி வழங்கியது.

தலைவர்

  1. பேராசிரியர் தீரன் (1989 முதல் - வரை)
  2. எடப்பாடி கணேசன்
  3. கோ. க. மணி (1998 முதல் 2022 வரை)
  4. அன்புமணி இராமதாசு (2022 மே 28 முதல்)

பொதுச்செயலாளர்

  1. தலித் எழில்மலை
  2. வடிவேல் இராவணன்

முக்கியத் தலைவர்கள்

  • ச. இராமதாசு - பாமக நிறுவனர்
  • அன்புமணி ராமதாஸ் - பாமக மாநில தலைவர்
  • கோ. க. மணி - முன்னாள் மாநில தலைவர்
  • என். டி. சண்முகம் - முன்னாள் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர்
  • ஏ. கே. மூர்த்தி - பாமக துணை பொது செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர்
  • அர. வேலு - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் இரயில்வே அமைச்சர்
  • வடிவேல் இராவணன் - பாமக மாநிலப் பொதுச்செயலாளர்
  • திலகபாமா - பாமக மாநிலப் பொருளாளர்
  • கோ.க.ம.தமிழ்க்குமரன் - பா.ம.க. இளைஞரணித்தலைவர்
  • வழக்கறிஞர் கே. பாலு - பாமக பேச்சாளர்

தேர்தல் வரலாறு

தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
ஆண்டு தேர்தல் மொத்த வாக்குகள் வென்ற தொகுதிகள் மாற்றம் கூட்டணி முடிவு
1991 10ஆவது சட்டமன்றம் 1,45,982
1 / 194
பாட்டாளி மக்கள் கட்சி: சின்னம், தலைவர், பொதுச்செயலாளர் 1 எதிரணி
1996 11ஆவது சட்டமன்றம் 10,42,333
4 / 116
பாட்டாளி மக்கள் கட்சி: சின்னம், தலைவர், பொதுச்செயலாளர்  3 பாமக+திவாரி எதிரணி
2001 12ஆவது சட்டமன்றம் 15,57,500
20 / 27
பாட்டாளி மக்கள் கட்சி: சின்னம், தலைவர், பொதுச்செயலாளர்  16 அதிமுக+ அரசு
2006 13ஆவது சட்டமன்றம் 18,63,749
18 / 31
பாட்டாளி மக்கள் கட்சி: சின்னம், தலைவர், பொதுச்செயலாளர்  2 திமுக + அரசு
2011 14ஆவது சட்டமன்றம் 19,27,783
3 / 30
பாட்டாளி மக்கள் கட்சி: சின்னம், தலைவர், பொதுச்செயலாளர்  15 திமுக + எதிரணி
2016 15ஆவது சட்டமன்றம் 23,00,775
0 / 234
பாட்டாளி மக்கள் கட்சி: சின்னம், தலைவர், பொதுச்செயலாளர்  3 தோல்வி
2021 16ஆவது சட்டமன்றம் 17,56,796
5 / 234
பாட்டாளி மக்கள் கட்சி: சின்னம், தலைவர், பொதுச்செயலாளர்  5 அதிமுக+ எதிரணி
மக்களவைத் தேர்தல்
வருடம் தேர்தல் மொத்த வாக்குகள் வென்ற தொகுதிகள் மாற்றம் கூட்டணி முடிவு
1996 11ஆவது மக்களவை 5,52,118
0 / 15
பாட்டாளி மக்கள் கட்சி: சின்னம், தலைவர், பொதுச்செயலாளர் 15 பாமக + திவாரி காங்கிரசு தோல்வி
1998 12ஆவது மக்களவை 15,48,976
4 / 5
பாட்டாளி மக்கள் கட்சி: சின்னம், தலைவர், பொதுச்செயலாளர் 4 தேசகூ அரசு
1999 13ஆவது மக்களவை 22,36,821
5 / 7
பாட்டாளி மக்கள் கட்சி: சின்னம், தலைவர், பொதுச்செயலாளர் 1 தேசகூ அரசு
2004 14ஆவது மக்களவை 19,27,367
5 / 5
மாற்றங்கள் இல்லை மமுகூ அரசு
2009 15ஆவது மக்களவை 19,44,619
0 / 6
பாட்டாளி மக்கள் கட்சி: சின்னம், தலைவர், பொதுச்செயலாளர் 5 ஐதேமுகூ தோல்வி
2014 16ஆவது மக்களவை 18,04,812
1 / 8
பாட்டாளி மக்கள் கட்சி: சின்னம், தலைவர், பொதுச்செயலாளர் 1 தேசகூ அரசு
2019 17ஆவது மக்களவை 22,97,431
0 / 7
பாட்டாளி மக்கள் கட்சி: சின்னம், தலைவர், பொதுச்செயலாளர் 1 தேசகூ அரசு

மமுகூ - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தேசகூ - தேசிய சனநாயகக் கூட்டணி ஐதேமுகூ - ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி - பாமக-திவாரி காங்கிரசு முன்னணி

புதுச்சேரி

வருடம் பொதுத் தேர்தல் கிடைத்த வாக்குகள் வெற்றி பெற்ற தொகுதிகள்
1989 9வது மக்களவை 25,021 0
1991 8வது சட்டசபை 11,402 0
1991 10வது மக்களவை 13,375 0
1996 9வது சட்டசபை 11,544 1
1996 11வது மக்களவை 19,792 0
1999 13வது மக்களவை 1,40,920 0
2001 10வது சட்டசபை 36,788 0
2004 14வது மக்களவை 2,41,653 1
2006 11வது சட்டசபை 23,426 2
2009 15வது மக்களவை 2,08,619 0

மக்களவை உறுப்பினர்கள்

எண் வருடம் தேர்தல் உறுப்பினர் தொகுதி வகித்த பதவி
1 1998 12ஆவது மக்களவை தலித் எழில்மலை சிதம்பரம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் (தனி பொறுப்பு), 1999
2 1998 12ஆவது மக்களவை துரை வந்தவாசி
3 1998 12ஆவது மக்களவை கே. பாரிமோகன் தருமபுரி
4 1998 12ஆவது மக்களவை என். டி. சண்முகம் வேலூர்
5 1999 13ஆவது மக்களவை துரை வந்தவாசி 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
6 1999 13ஆவது மக்களவை பு. தா. இளங்கோவன் தருமபுரி
7 1999 13ஆவது மக்களவை ஏ. கே. மூர்த்தி செங்கல்பட்டு இரயில்வே துறை அமைச்சர் (சூலை 2002- 15 சனவரி, 2004)
8 1999 13ஆவது மக்களவை இ. பொன்னுசாமி சிதம்பரம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் (1999-2001)
9 1999 13ஆவது மக்களவை என். டி. சண்முகம் வேலூர் 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), சுகாதாரம் & குடும்ப நலத்துறை அமைச்சகம் (அக்டோபர் 1999 - மே 2000)

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), நிலக்கரி அமைச்சகம் (மே 2000 - பிப்ரவரி 2001)

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் (சூலை 2002 - சனவரி 2004)

10 2004 14ஆவது மக்களவை கோ. தன்ராஜ் திண்டிவனம்
11 2004 14ஆவது மக்களவை ஏ. கே. மூர்த்தி செங்கல்பட்டு 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
12 2004 14ஆவது மக்களவை இ. பொன்னுசாமி சிதம்பரம் 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
13 2004 14ஆவது மக்களவை செந்தில் இராமன் தருமபுரி
14 2004 14ஆவது மக்களவை அர. வேலு அரக்கோணம் இரயில்வே துறை அமைச்சர் (2004) 29 மார்ச், 2009 அன்று இரயில்வே துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்
15 2014 16ஆவது மக்களவை அன்புமணி ராமதாஸ் தருமபுரி

மாநிலங்களவை உறுப்பினர்கள்

வ.எண் பெயர் பதவி ஆண்டு
1 அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினர் 2004 - 2010
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் 2004 - 2009
2 மாநிலங்களவை உறுப்பினர் 2019 - தற்போது வரை

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு

இக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்த கோரிக்கையின் படி, அதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, வன்னியர் சமூகத்தினருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் உள் ஒதுக்கீடாக 10.5% வழங்கி சட்டம் இயற்றியும், அரசாணையும் வெளியிட்டது. தமிழ்நாடு அரசு, வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு செய்தது தவறு என்று கூறிய வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், 10.5% இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. எனவே திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு, 10.5% உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிட்டது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பாட்டாளி மக்கள் கட்சி சின்னம்பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்பாட்டாளி மக்கள் கட்சி பொதுச்செயலாளர்பாட்டாளி மக்கள் கட்சி முக்கியத் தலைவர்கள்பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் வரலாறுபாட்டாளி மக்கள் கட்சி மக்களவை உறுப்பினர்கள்பாட்டாளி மக்கள் கட்சி மாநிலங்களவை உறுப்பினர்கள்பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடுபாட்டாளி மக்கள் கட்சி இவற்றையும் பார்க்கவும்பாட்டாளி மக்கள் கட்சி மேற்கோள்கள்பாட்டாளி மக்கள் கட்சி வெளி இணைப்புகள்பாட்டாளி மக்கள் கட்சி1989தமிழ்நாடுபுதுச்சேரிராமதாஸ்வன்னியர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நான் அவனில்லை (2007 திரைப்படம்)சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்சீமையகத்திநயன்தாராபுனித ஜார்ஜ் கோட்டைவிபுலாநந்தர்முலாம் பழம்திரவ நைட்ரஜன்நேர்பாலீர்ப்பு பெண்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்பொன்னியின் செல்வன்குடும்ப அட்டைதசாவதாரம் (இந்து சமயம்)மாமல்லபுரம்ஜெயம் ரவிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பக்கவாதம்அறுபது ஆண்டுகள்இந்து சமயம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்வேதநாயகம் பிள்ளைஉத்தரகோசமங்கைகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)சங்ககாலத் தமிழக நாணயவியல்தஞ்சாவூர்நான்மணிக்கடிகைமுருகன்கம்பராமாயணத்தின் அமைப்புஅருணகிரிநாதர்சுப்பிரமணிய பாரதிதங்கம்சப்தகன்னியர்விண்டோசு எக்சு. பி.பிலிருபின்தமிழர் நிலத்திணைகள்ரெட் (2002 திரைப்படம்)புறநானூறுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சுப்மன் கில்குறிஞ்சி (திணை)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)பட்டினப் பாலைஇலங்கைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இந்திய அரசியலமைப்புஜிமெயில்மொழிபெயர்ப்புமனித மூளைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்கௌதம புத்தர்ஆங்கிலம்மக்களவை (இந்தியா)நாற்கவிஆத்திசூடிபிக் பாஸ் தமிழ்கண்ணகிஅஜித் குமார்நாயன்மார் பட்டியல்தாவரம்யாதவர்நிதி ஆயோக்கோயம்புத்தூர்அம்பேத்கர்ஜெ. ஜெயலலிதாபார்க்கவகுலம்செயற்கை நுண்ணறிவுபைரவர்காதல் தேசம்கங்கைகொண்ட சோழபுரம்அகத்திணைவேளாளர்குப்தப் பேரரசுவினைச்சொல்ம. கோ. இராமச்சந்திரன்மண் பானைசினேகாசித்திரை🡆 More