இந்தியப் பிரதமர்: இந்தியத் தலைமை அமைச்சர்

இந்தியப் பிரதமர் அல்லது இந்தியத் தலைமை அமைச்சர் (ஆங்கிலம்: Prime Minister of India) என்பவர் இந்திய அரசின் செயலாக்கத் தலைவர் ஆவார்.

இவர் இந்தியக் குடியரசுத் தலைவரின் தலைமை ஆலோசகரும் மத்திய அமைச்சரவையின் தலைவரும் ஆவார். இந்தியாவில் பிரதமர் பதவி என்பது மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களால் இந்தியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார், தற்போதைய பிரதமராக நரேந்திர மோதி பதவியில் உள்ளார்.

இந்தியப் பிரதமர்
Bhārat ke Pradhānamantri
இந்தியப் பிரதமர்: பிரதமர் நியமனம், அதிகாரங்கள் மற்றும் பணிகள், பிரதமர் அலுவலகம்
இந்தியப் பிரதமர்: பிரதமர் நியமனம், அதிகாரங்கள் மற்றும் பணிகள், பிரதமர் அலுவலகம்
இந்தியப் பிரதமர்: பிரதமர் நியமனம், அதிகாரங்கள் மற்றும் பணிகள், பிரதமர் அலுவலகம்
தற்போது
நரேந்திர மோடி

மே 26, 2014 (2014-05-26) முதல்
பிரதமர் அலுவலகம்
பதவிஅரசுத் தலைவர்
சுருக்கம்PM
உறுப்பினர்
அறிக்கைகள்
வாழுமிடம்7, லோக் கல்யாண் மார்க், புது தில்லி, இந்தியா
அலுவலகம்பிரதமர் அலுவலகம், தெற்கு கட்டிடம், புது தில்லி, இந்தியா


முகாம் அலுவலகம்: 7, லோக் கல்யாண் மார்க், புது தில்லி, இந்தியா
பரிந்துரையாளர்மக்களவை உறுப்பினர்கள்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகள்
(மக்களவையில் பெரும்பான்மை இழந்து கலைக்கப்படாத வரை)
அரசமைப்புக் கருவிஇந்திய அரசியலமைப்பு
முதலாவதாக பதவியேற்றவர்ஜவகர்லால் நேரு (1947–64)
உருவாக்கம்15 ஆகத்து 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
அதிகாரப்பூர்வமற்ற பெயர்கள்PM
துணை பிரதமர்காலியிடம், (இந்திய துணைப் பிரதமர்)
ஊதியம்2,80,000 (US$3,500) (மாதம்)
(₹3,360,000 ஆண்டு)
இணையதளம்pmindia.gov.in

பிரதமர் பாராளுமன்றத்தின் மக்களவை அல்லது மாநிலங்களவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும். இல்லையென்றால் ஆறு மாதத்திற்குள் மக்களவை\மேலவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒரு பிரதமரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்..

பிரதமர் நியமனம்

இந்தியப் பிரதமர்: பிரதமர் நியமனம், அதிகாரங்கள் மற்றும் பணிகள், பிரதமர் அலுவலகம் 
முதல் பிரதமர் நேருவின் பதவியேற்பு நிகழ்ச்சி, ஆகஸ்ட் 15, 1947

பிரதமர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். பாராளுமன்றத்தின் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை மட்டுமே குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் கூட்டணிக்கட்சித் தலைவரையோ அல்லது அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவரையோ அழைப்பார்.

அதிகாரங்கள் மற்றும் பணிகள்

  • பிரதமர் அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வார், குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.
  • பிரதமர் அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவார்.
  • அனைத்து அமைச்சர்களின் துறைகளை ஒருங்கிணைப்பது, அமைச்சர்களின் துறைகளுக்கிடையேயான பிரச்சனைகளைக் களைவது பிரதமரின் பணியாகும்.
  • அரசின் கொள்கைகளை பிரதமரே முடிவு செய்வார்.
  • பிரதமர் இந்திய திட்டக்குழுவின் தலைவராவார்.
  • பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர், பொது தணிக்கை அதிகாரி ஆகியோர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
  • முக்கிய இராணுவ விடயங்கள்.
  • பொதுப்பணிகள் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் பற்றிய கொள்கை முடிவுகள்.
  • மாநிலங்களுக்கான சிறப்பு நிதிகளை வழங்கல் மற்றும் கண்காணித்தல்.
  • முக்கிய பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் பதிலளித்தல்.
  • பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய இராணுவ நிதி போன்றவற்றை நிர்வகித்தல்.
  • மேற்கண்டவற்றுக்கான ஆதாரங்கள்:.

பிரதமர் அலுவலகம்

இந்தியப் பிரதமர்: பிரதமர் நியமனம், அதிகாரங்கள் மற்றும் பணிகள், பிரதமர் அலுவலகம் 
பிரதமர் அலுவலகம் (சவுத் பிளாக்), புது டில்லி

பிரதமர் அலுவலக முகவரி:

இந்தியாவின் இரு முக்கியச் செயலகங்களில் சவுத் பிளாக்கும் ஒன்று, மற்றொன்று நார்த் பிளாக். பிரதமர் அலுவலகம், பிரதமருக்கு செயலாக்க உதவிகளைப் புரியும். பிரதமரின் முதன்மைச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது ஊழல் தடுப்பு மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு போன்ற பிரிவுகளை உள்ளடக்கியது.

பிரதமரின் தேசிய நிதிகள்

பிரதமரின் தேசிய நிவாரண நிதி

1948 ல், பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கு உதவுவதற்காக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப் பட்டது தான் பிரதமரின் தேசிய நிவாரண நிதி. தற்போது இந்நிதி வெள்ளம், பூகம்பம், புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அழிவுகளினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்காக வழங்கப்படுகிறது. பெரும் கலவரங்கள் அல்லது பெரும் விபத்து போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்க்கும் இந்நிதி வழங்கப்படுகிறது. இதய அறுவைசிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்நிதி பயன்படுகிறது. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிதி முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இந்நிதி பொதுத்துறை வங்கிகளில் இருப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

பிரதமரின் தேசிய இராணுவ நிதி

இந்திய இராணுவப் படையினர், துணை இராணுவப் படையினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் நலனுக்காக பிரதமரின் தேசிய இரானுவ நிதி உருவக்கப்பட்டது. இந்நிதி, பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு, நிதி மற்றும் உள்த்துறை அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டும் உள்ள செயற்குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. நிதி அமைச்சரே இந்நிதியின் பொருளாளரும், இணைச் செயலாளரும் ஆவார்.

இந்நிதி, இந்திய ரிசர்வ் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இதற்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

பிரதமர்களைப் பற்றிய குறுந்தகவல்கள்

      இருமுறை இடைக்கால (தற்காலிக) பிரதமர் பொறுப்புப் பதவி வகித்த ஒரே பிரதமர்.
      இவர் 582 நாட்கள் பதவியில் இருந்தார். 1965 பாகிஸ்தான் போரின் வெற்றிக்குப் பின்னர் இவர் கூறிய ஜெய் ஜவான், ஜெய் கிஸான் (வெல்க போர் வீரர், வெல்க விவசாயி) என்ற வாசகம் புகழ்பெற்றது. வெளிநாட்டில் (தஷ்கந்த், சோவியத் ரஷ்யா) இறந்த ஒரே இந்தியப் பிரதமர் இவரே.
      முதல் இந்தியப் பெண் பிரதமர். இவர் 5,831 நாட்கள் பதவியில் இருந்தார், தன் தந்தையும், முதல் பிரதமருமான நேருவைவிட 300 நாட்களே குறைவு.
      விமான ஓட்டுநராக இருந்த இவர் தனது தாயாரும் பிரதமர் இந்திரா காந்தியின் துன்பியல் மரணத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் வேண்டுகோளால் பிரதமர் பதவியை 41 வயதில் எற்ற இந்தியாவின் இளம் வயது பிரதமராவார்.
      காங்கிரஸ் கட்சியில் பல அமைச்சர் பதவி வகித்த இவர் மிகவும் கண்டிப்புடன் கடமை ஆற்றியதாலும் இவர் நிதித்துறை அமைச்சராக இருந்த போது பிரதமர் ராஜீவ் காந்தியின் தாராள மையமாக்கள் மற்றும் பணக்கார துவத்தையும் எதிர்த்தும் பின்பு இராணுவ அமைச்சராக இருந்த போது ராஜீவ் ஆட்சியில் நடைபெற்ற போபர்ஸ் பீரங்கி ஊழல் மற்றும் இராணுவ தளவாடங்கள் வாங்கிய ஊழல்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி ஜனதா தளம் கட்சியை உருவாக்கி சிறிது காலத்திலேயே பிரதமராக ஆனவர்.
      1996 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் இந்தியாவில் பல மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியின் மூலம் பிரதமர் வேட்பாளராக தேர்தலை எதிர்கொள்ளமல் கூட்டணி கட்சி தலைவர்களின் ஏகோபித்த ஆதரவால் ஜனதா தளம் கட்சி சார்பில் பிரதமரானவர்
      இவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்த பிரதமர் மற்றும் உலகளவில் புகழ்பெற்ற பொருளாதார மேதையும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமாவார்.
  • மேற்கண்டவற்றுக்கான ஆதாரங்கள்:.

இந்தியப் பிரதமர்களின் பட்டியல்

    குறியீடு
  • №: பதவியில் உள்ள எண்
  • படுகொலை செய்யப்பட்டார் அல்லது பதவியில் இருக்கும் போது இறந்தார்
  • § முந்தைய தொடர்ச்சியான காலத்திற்குப் பிறகு பதவிக்குத் திரும்பினார்
  • RES பதவி விலகினார்
  • NC நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தொடர்ந்து பதவி விலகினார்

    குறிப்பு
  •   தற்காலிக பிரதமர்
     பாஜக (2)      இதேகா/இதேகா(I)/இதேகா(ஆர்) (6+1 தற்காலிகம்)      ஜ.த (3)      ஜ.க (1)      ஜ.க(ம) (1)      சஜக(ரா) (1)
வ. எண் படம் பெயர்

(பிறப்பு–இறப்பு)

தொகுதி கட்சி
(கூட்டணி)
பதவிக் காலம் மக்களவை அமைச்சரவை நியமித்தவர்
1 இந்தியப் பிரதமர்: பிரதமர் நியமனம், அதிகாரங்கள் மற்றும் பணிகள், பிரதமர் அலுவலகம்  நேரு, ஜவஹர்லால்ஜவஹர்லால் நேரு
(1889–1964)
புல்பூர், உத்தரப் பிரதேசம் இந்திய தேசிய காங்கிரசு 15 ஆகத்து 1947 15 ஏப்ரல் 1952 16 ஆண்டுகள், 286 நாட்கள் அரசியலமைப்பு மன்றம் நேரு I மவுண்ட்பேட்டன் பிரபு
15 ஏப்ரல் 1952 17 ஏப்ரல் 1957 1ஆவது நேரு II பிரசாத், இராசேந்திரஇராசேந்திர பிரசாத்
17 ஏப்ரல் 1957 2 ஏப்ரல் 1962 2ஆவது நேரு III
2 ஏப்ரல் 1962 27 மே 1964 3ஆவது நேரு IV
தற்காலிகம் நந்தா, குல்சாரிலால்குல்சாரிலால் நந்தா
(1898–1998)
சபர்காந்தா, குசராத்து இந்திய தேசிய காங்கிரசு 27 மே 1964 9 சூன் 1964 13 நாட்கள் நந்தா I இராதாகிருஷ்ணன், சர்வபள்ளிசர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
2 சாஸ்திரி, லால் பகதூர்லால் பகதூர் சாஸ்திரி
(1904–1966)
அலகாபாத்து, உத்தரப் பிரதேசம் இந்திய தேசிய காங்கிரசு 9 சூன் 1964 11 சனவரி 1966 1 ஆண்டு, 216 நாட்கள் சாஸ்திரி
தற்காலிகம் நந்தா, குல்சாரிலால்குல்சாரிலால் நந்தா
(1898–1998)
சபர்காந்தா, குசராத்து இந்திய தேசிய காங்கிரசு 11 சனவரி 1966 24 சனவரி 1966 13 நாட்கள் நந்தா II
3 இந்தியப் பிரதமர்: பிரதமர் நியமனம், அதிகாரங்கள் மற்றும் பணிகள், பிரதமர் அலுவலகம்  காந்தி, இந்திராஇந்திரா காந்தி
(1917–1984)
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், உத்தரப் பிரதேசம் இந்திய தேசிய காங்கிரசு 24 சனவரி 1966 4 மார்ச் 1967 11 ஆண்டுகள், 59 நாட்கள் இந்திரா I
ரெய்பரேலி, உத்தரப் பிரதேசம் இந்திய தேசிய காங்கிரசு (ஆர்) 4 மார்ச் 1967 15 மார்ச் 1971 4ஆவது
15 மார்ச் 1971 24 மார்ச் 1977 5ஆவது இந்திரா II கிரி, வி. வி.வி. வி. கிரி
4 தேசாய், மொரார்ஜிமொரார்ஜி தேசாய்
(1896–1995)
சூரத், குசராத்து ஜனதா கட்சி 24 மார்ச் 1977 28 சூலை 1979[RES] 2 ஆண்டுகள், 126 நாட்கள் 6வது தேசாய் ஜாட்டி, பசப்பா தனப்பாபசப்பா தனப்பா ஜாட்டி
(தற்காலிகம்)
5 சிங், சரண்சரண் சிங்
(1902–1987)
பாகுபத், உத்தரப் பிரதேசம் மதச்சார்பற்ற ஜனதா கட்சி 28 சூலை 1979 14 சனவரி 1980[RES] 170 days சரண் ரெட்டி, நீலம் சஞ்சீவநீலம் சஞ்சீவ ரெட்டி
(3) காந்தி, இந்திராஇந்திரா காந்தி
(1917–1984)
மெதக், ஆந்திர பிரதேசம்
இந்திய தேசிய காங்கிரசு (I) 14 சனவரி 1980[§] 31 அக்டோபர் 1984 4 ஆண்டுகள், 291 நாட்கள் 7ஆவது இந்திரா III
6 காந்தி, ராஜீவ்ராஜீவ் காந்தி
(1944–1991)
அமேதி, உத்தரப் பிரதேசம் இந்திய தேசிய காங்கிரசு (I) 31 அக்டோபர் 1984 31 திசம்பர் 1984 5 ஆண்டுகள், 32 நாட்கள் ராஜீவ் சிங், ஜெயில்ஜெயில் சிங்
31 திசம்பர் 1984 2 திசம்பர் 1989 8ஆவது
7 சிங், வி. பி.வி. பி. சிங்
(1931–2008)
பதேபூர், உத்தரப் பிரதேசம் ஜனதா தளம்
(தேசிய முன்னணி)
2 திசம்பர் 1989 10 நவம்பர் 1990[NC] 343 நாட்கள் 9ஆவது வி. பி. சிங் வெங்கட்ராமன், ரா.ரா. வெங்கட்ராமன்
8 சந்திரசேகர்
(1927–2007)
பல்லியா, உத்தரப் பிரதேசம் இதேகா(I) 10 நவம்பர் 1990 21 சூன் 1991[RES] 223 நாட்கள் சந்திரசேகர்
9 ராவ், பி. வி. நரசிம்மபி. வி. நரசிம்ம ராவ்
(1921–2004)
நந்தியாலா, ஆந்திரப் பிரதேசம் இந்திய தேசிய காங்கிரசு (I) 21 சூன் 1991 16 மே 1996 4 ஆண்டுகள், 330 நாட்கள் 10ஆவது ராவ்
10 வாஜ்பாய், அடல் பிஹாரிஅடல் பிஹாரி வாஜ்பாய்
(1924–2018)
லக்னோ, உத்தரப் பிரதேசம் பாரதிய ஜனதா கட்சி 16 மே 1996 1 சூன் 1996[RES] 16 நாட்கள் 11ஆவது வாஜ்பாய் I சர்மா, சங்கர் தயாள்சங்கர் தயாள் சர்மா
11 இந்தியப் பிரதமர்: பிரதமர் நியமனம், அதிகாரங்கள் மற்றும் பணிகள், பிரதமர் அலுவலகம்  தேவகவுடா
(1933–)
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், கருநாடகம் ஜனதா தளம்
(ஐக்கிய முன்னணி)
1 சூன் 1996 21 ஏப்ரல் 1997[RES] 324 days தேவகவுடா
12 இந்தியப் பிரதமர்: பிரதமர் நியமனம், அதிகாரங்கள் மற்றும் பணிகள், பிரதமர் அலுவலகம்  ஐ. கே. குஜரால்
(1919–2012)
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், பீகார் ஜனதா தளம்
(ஐக்கிய முன்னணி)
21 ஏப்ரல் 1997 19 மார்ச் 1998 332 நாட்கள் குஜரால்
(10) வாஜ்பாய், அடல் பிஹாரிஅடல் பிஹாரி வாஜ்பாய்
(1924–2018)
லக்னோ, உத்தரப் பிரதேசம் பாரதிய ஜனதா கட்சி
(தே.ச.கூ)
19 மார்ச் 1998[§] 10 அக்டோபர் 1999 6 ஆண்டுகள், 64 நாட்கள் 12ஆவது வாஜ்பாய் II நாராயணன், கே. ஆர்.கே. ஆர். நாராயணன்
10 அக்டோபர் 1999 22 மே 2004 13ஆவது வாஜ்பாய் III
13 இந்தியப் பிரதமர்: பிரதமர் நியமனம், அதிகாரங்கள் மற்றும் பணிகள், பிரதமர் அலுவலகம்  சிங், மன்மோகன்மன்மோகன் சிங்
(1932–)
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், அசாம் இந்திய தேசிய காங்கிரசு
(ஐ.மு.கூ)
22 மே 2004 22 மே 2009 10 ஆண்டுகள், 4 நாட்கள் 14ஆவது மன்மோகன் சிங் I கலாம், ஆ. ப. ஜெ. அப்துல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
22 மே 2009 26 மே 2014 15ஆவது மன்மோகன் சிங் II பாட்டில், பிரதிபாபிரதிபா பாட்டில்
14 இந்தியப் பிரதமர்: பிரதமர் நியமனம், அதிகாரங்கள் மற்றும் பணிகள், பிரதமர் அலுவலகம்  நரேந்திர மோதி
(1950–)
வாரணாசி, உத்தரப் பிரதேசம் பாரதிய ஜனதா கட்சி
(தே.ச.கூ)
26 மே 2014 30 மே 2019 9 ஆண்டுகள், 335 நாட்கள் 16ஆவது மோதி I முகர்ஜி, பிரணப்பிரணப் முகர்ஜி
30 May 2019 தற்போது பதவியில் 17ஆவது மோதி II கோவிந்த், ராம் நாத்ராம் நாத் கோவிந்த்

துணை பிரதமர்

இந்தியப் பிரதமர்: பிரதமர் நியமனம், அதிகாரங்கள் மற்றும் பணிகள், பிரதமர் அலுவலகம் 
வல்லபாய் படேல் இந்தியாவின் முதல் துணை பிரதமராக இருந்தார்.

துணை பிரதமர், இந்திய அரசின் மத்திய அமைச்சரவையில் ஒரு உறுப்பினர் ஆவார். பொதுவாக ஒரு துணை பிரதமர், உள்துறை அமைச்சகம் அல்லது நிதி அமைச்சகம் போன்ற ஒரு முக்கிய அமைச்சரவையை தன் இலாகாவாக வைத்திருப்பார். துணை பிரதம மந்திரி பதவி அதிகாரப்பூர்வமற்றது, இருப்பினும் இது ஒரு கூட்டணி அரசாங்கத்தின் போதும் அல்லது தேசிய அவசர காலங்களிலும், அரசியல் ஸ்திரத்தன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பதவியை முதலில் வகித்தவர் வல்லபாய் படேல் ஆவார், இவர் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

இந்தியப் பிரதமர் பிரதமர் நியமனம்இந்தியப் பிரதமர் அதிகாரங்கள் மற்றும் பணிகள்இந்தியப் பிரதமர் பிரதமர் அலுவலகம்இந்தியப் பிரதமர் பிரதமரின் தேசிய நிதிகள்இந்தியப் பிரதமர் பிரதமர்களைப் பற்றிய குறுந்தகவல்கள்இந்தியப் பிரதமர் களின் பட்டியல்இந்தியப் பிரதமர் துணை பிரதமர்இந்தியப் பிரதமர் இவற்றையும் பார்க்கவும்இந்தியப் பிரதமர் மேற்கோள்கள்இந்தியப் பிரதமர் குறிப்புகள்இந்தியப் பிரதமர் வெளி இணைப்புகள்இந்தியப் பிரதமர்ஆங்கிலம்இந்திய நாடாளுமன்றம்இந்தியாஜவஹர்லால் நேருநரேந்திர மோதிமக்களவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாயன்மார் பட்டியல்விருத்தாச்சலம்மருதமலைதமிழ்நாடுமுக்கூடற் பள்ளுதிருநாவுக்கரசு நாயனார்அங்குலம்கலித்தொகைசூரரைப் போற்று (திரைப்படம்)பழமுதிர்சோலை முருகன் கோயில்தமிழர் பண்பாடுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஷங்கர் (திரைப்பட இயக்குநர்)மெய்யெழுத்துதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தைப்பொங்கல்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021கலிங்கத்துப்பரணிபரணி (இலக்கியம்)இந்தியத் தலைமை நீதிபதிதிருவிழாவிஜயநகரப் பேரரசுசெஞ்சிக் கோட்டைகுண்டலகேசிசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்தனுசு (சோதிடம்)தேம்பாவணிநெடுநல்வாடைவீரமாமுனிவர்கண்ணனின் 108 பெயர் பட்டியல்கொன்றைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மலைபடுகடாம்கிருட்டிணன்தமிழில் சிற்றிலக்கியங்கள்மே நாள்பனைபால்வினை நோய்கள்நோய்விடுதலை பகுதி 1மதீச பத்திரனமாநிலங்களவைபுதுமைப்பித்தன்காதல் தேசம்தமிழ் நீதி நூல்கள்பள்ளிக்கூடம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்நாம் தமிழர் கட்சிபாரதிய ஜனதா கட்சிஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுவட்டாட்சியர்மார்பகப் புற்றுநோய்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சன்ரைசர்ஸ் ஐதராபாத்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்முதற் பக்கம்இசைதமிழ்நாட்டின் நகராட்சிகள்பணவீக்கம்இந்தியப் பிரதமர்பதிற்றுப்பத்துஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்வேலு நாச்சியார்ரத்னம் (திரைப்படம்)சேரன் செங்குட்டுவன்வெப்பநிலைஎயிட்சுநவக்கிரகம்மட்பாண்டம்வடலூர்லிங்டின்வளையாபதிஸ்ரீசைவத் திருமணச் சடங்குஒற்றைத் தலைவலிஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)அரண்மனை (திரைப்படம்)தமன்னா பாட்டியா🡆 More