வேலு நாச்சியார்

இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி.

இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.

இராணி வேலு நாச்சியார்
வேலு நாச்சியார்
ஆட்சிகி.பி 1780- கி.பி 1783
முடிசூட்டு விழாகி.பி 1780
முன்னிருந்தவர்முத்து வடுகநாதர்
பின்வந்தவர்வெள்ளச்சி நாச்சியார்
துணைவர்முத்து வடுகநாதர்
தந்தைசெல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி
தாய்முத்தாத்தாள் நாச்சியார்
வேலு நாச்சியார்
இராணி வேலு நாச்சியார் சிலையும் சிவகங்கை அரண்மனையும்

இளமை

1730-ஆம் ஆண்டு, இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாகப் பிறந்தார் வேலுநாச்சியார். ஆண் வாரிசு போல வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746-இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவருக்கு மனைவியானார்.

ஆங்கிலேயர் படையெடுப்பு

1772-இல் ஐரோப்பியரின் படையெடுப்பால் கணவரை இழந்த வேலுநாச்சியார் நாட்டை மீட்டெடுக்க காத்திருந்தார். இந்தப் படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் விருப்பாட்சியில் தங்கி ஐதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் பற்றிப் பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஐதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். 8 காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். மருது சகோதரர்களின் பெரும் முயற்சியினால் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி ஓர் எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. வேலுநாச்சியார் மருது சகோதரர்களே இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.

படை திரட்டல்

1780- ஆண்டு ஜூன் மாதம் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை வைகை ஆற்றின் வழியில் சோழவந்தானையும், பிறகு சிலைமானையும், அதன் தொடர்ச்சியாக திருப்புவனம், முத்தனேந்தல்,நகரங்களை வென்ற பிறகு, கடைசி யுத்தமாக மானாமதுரை நகரத்தில் போர் பயிற்சி பெறாத மக்களின் துணைகொண்டு அந்நிய பரங்கியர்களை வெற்றிக்கொண்டனர். அதன் பிறகு இராணியின் தோரணையோடு, இராணி வேலுநாச்சியார் படைவீரர்கள் புடை சூழ விழாக்கோலம் பூண்ட வேலு நாச்சியார், அதன் பிறகு சிவகங்கை சீமையின் முதல் இராணியாக முடிசூட்டப்பட்டார்.

இறுதி நாட்கள்

1793-இல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்குத் துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் பட்டியல் கீழே உள்ளது.

வேலுநாச்சியார் மணிமண்டபம்

சிவகங்கை மாவட்டம், சூரக்குளம் கிராமத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீர மங்கை வேலு நாச்சியார் நினைவு மண்டபம் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, 18. சூலை 2014 அன்று தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார

அருங்காட்சியகம்

வேலு நாச்சியார் பயன்படுத்திய ஈட்டி, வாள் முதலான பல பொருட்கள் சிவகங்கையில் அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.

நினைவு தபால்தலை

ராணி வேலு நாச்சியார் நினைவு தபால் தலை இந்திய அரசால் 31 டிசம்பர் 2008 அன்று வெளியிடப்பட்டது.

சிவகங்கைச் சீமை வாரிசுகள்

1728 - 1749 - முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்

2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்

3. 1780 - 1790 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்

4. 1790 - 1793 - வெள்ளச்சி நாச்சியார் வேலு நாச்சியார் மகள்

5. 1793 - 1801 - வேங்கை பெரிய உடையனத் தேவர் வேங்கை பெரிய உடையனத் தேவர் வெள்ளச்சி நாச்சியார் கணவர்

5. 1801 - 1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்

6. 1829 - 1831 - உ.முத்துவடுகநாதத்வேர்

7. 1831 - 1841 - மு. போதகுருசாமித்தேவர்

8. 1841 - 1848 - போ. உடையணத்தேவர்

9. 1848 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்

10. 1863 - 1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி

11. 1877 - முத்துவடுகநாதத்தேவர்

12. 1878 - 1883 - துரைசிங்கராஜா

13. 1883 - 1898 - து. உடையணராஜா

1892-ஆம் ஆண்டு ஜமின்தார் முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஜே.எப். பிரையன்ட் முதல் கலெக்டர் ஆவார். 1910-ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மதுரை, திருநெல்வேலியின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் ராமநாதபுரம் ராமநாடு என அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின் 1985-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி ராமநாதபுரம் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

வேலு நாச்சியார் இளமைவேலு நாச்சியார் ஆங்கிலேயர் படையெடுப்புவேலு நாச்சியார் படை திரட்டல்வேலு நாச்சியார் இறுதி நாட்கள்வேலு நாச்சியார் வேலுநாச்சியார் மணிமண்டபம்வேலு நாச்சியார் அருங்காட்சியகம்வேலு நாச்சியார் நினைவு தபால்தலைவேலு நாச்சியார் சிவகங்கைச் சீமை வாரிசுகள்வேலு நாச்சியார் மேற்கோள்கள்வேலு நாச்சியார்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கஞ்சாகாப்பியம்செக் மொழிமுத்தொள்ளாயிரம்தமிழில் சிற்றிலக்கியங்கள்வல்லினம்சங்க காலம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பள்ளர்பணவீக்கம்சேக்கிழார்ஐந்திணைகளும் உரிப்பொருளும்மூன்றாம் நந்திவர்மன்பூப்புனித நீராட்டு விழாதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019போயர்தொழில் நிறுவனங்கள்பார்க்கவகுலம்உரைநடைஇரசினிகாந்துநாம் தமிழர் கட்சிசூல்பை நீர்க்கட்டிதிருநங்கையர் நாள்கர்நாடகப் போர்கள்அருணகிரிநாதர்பகவத் கீதை108 வைணவத் திருத்தலங்கள்தென்காசி மக்களவைத் தொகுதிவரகுகுறுந்தொகைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பதினெண்மேற்கணக்குசிவகங்கை மக்களவைத் தொகுதிஇந்தியத் தேர்தல்கள்மொழிபெயர்ப்புவாரிசுஈரோடு மக்களவைத் தொகுதிதிருநெல்வேலிதிராவிட மொழிக் குடும்பம்வி.ஐ.பி (திரைப்படம்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்குமரகுருபரர்நீர் மாசுபாடுமு. க. தமிழரசுசூரரைப் போற்று (திரைப்படம்)காரைக்கால் அம்மையார்சித்தர்கௌதம புத்தர்ஐக்கிய நாடுகள் அவைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கீழடி அகழாய்வு மையம்வாழ்த்துகள் (திரைப்படம்)தொகைநிலைத் தொடர்மீனாட்சிஉயிர்ச்சத்து டிசிவாஜி (பேரரசர்)மு. மேத்தாவெந்து தணிந்தது காடுபௌத்தம்இராவண காவியம்கரிகால் சோழன்புவிஇரட்சணிய யாத்திரிகம்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்மதீச பத்திரனகலிங்கத்துப்பரணிபொதுத்துறை நிறுவனங்கள், இந்தியாதருமபுரி மக்களவைத் தொகுதிகலைதமிழ்நாடு அமைச்சரவைசீரடி சாயி பாபாவல்லினம் மிகும் இடங்கள்மனித ஆண்குறிசங்கம் மருவிய காலம்சிவபெருமானின் பெயர் பட்டியல்வீரமாமுனிவர்அறிவியல் தமிழ்இந்திய அரசியலமைப்புமுதுமலை தேசியப் பூங்கா🡆 More