பீகார்: இந்திய மாநிலம்

பிகார் அல்லது பீகார் (Bihar) இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம்.

இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது.

பிகார்
बिहार
மாநிலம்
பீகார்: வரலாறு, கல்வி, மக்கள் தொகையியல்

பீகார் அரசு சின்னம்
பண்: மேரே பாரத் கே காந்த் ஹார் (என் இந்தியாவின் மாலை)
இந்தியாவில் பிகாரின் அமைவிடம்
இந்தியாவில் பிகாரின் அமைவிடம்
நாடுபீகார்: வரலாறு, கல்வி, மக்கள் தொகையியல் இந்தியா
பகுதிகிழக்கு இந்தியா
நிறுவப்பட்ட நாள்22 மார்ச்சு 1912(பீகார் நாள்)
மாநிலமாக்கப்படல்26 சனவரி 1950
தலைநகரம் மற்றும்
மிகப்பெரிய நகரம்
பட்னா
மாவட்டங்கள்38
அரசு
 • நிர்வாகம்பீகார் அரசு
 • ஆளுநர்பாகு சவுகான்
 • முதலமைச்சர்நிதிஷ் குமார்
 • சட்டமன்றம்ஈரவை முறைமை
சட்ட மேலவை 75
சட்டப் பேரவை 243
 • நாடாளுமன்ற தொகுதிகள்
 • உயர் நீதிமன்றம்பாட்னா உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்94,163 km2 (36,357 sq mi)
பரப்பளவு தரவரிசை13வது
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்103,804,637
 • தரவரிசை3-ஆவது
 • அடர்த்தி1,102/km2 (2,850/sq mi)
இனங்கள்பிகாரி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+05:30)
UN/LOCODEINBR
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-BR
வாகனப் பதிவுBR
ம.மே.சு.பீகார்: வரலாறு, கல்வி, மக்கள் தொகையியல் 0.447 (low)
ம.மே.சு. தரவரிசை16-ஆவது (2010)
படிப்பறிவு63.8% (மொத்தம்)
73.5% (ஆண்)
53.3% (பெண்)
அதிகாரபூர்வ மொழிஇந்தி
மேலதிக அதிகார மொழிஉருது
இணையதளம்gov.bih.nic.in
சின்னங்கள்
சின்னம்
பீகார்: வரலாறு, கல்வி, மக்கள் தொகையியல்
பீகார் அரசு சின்னம்
பாடல்மேரே பாரத் கே காந்த் ஹார்
விலங்கு
பீகார்: வரலாறு, கல்வி, மக்கள் தொகையியல்
இந்தியக் காட்டெருது
பறவை
பீகார்: வரலாறு, கல்வி, மக்கள் தொகையியல்
சிட்டு
Fishநடைகேட்ஃபிஷ்
மலர்
பீகார்: வரலாறு, கல்வி, மக்கள் தொகையியல்
மலையாத்தி
மரம்
பீகார்: வரலாறு, கல்வி, மக்கள் தொகையியல்
அரச மரம்

2000-ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை பிரித்து சார்க்கண்டு மாநிலம் உருவாக்கப்பட்டது.

வரலாறு

பிகார் முற்காலத்தில் அதாவது பொ.ஊ.மு. 600ல் துவங்கி மகத நாடு என்றழைக்கப்பட்டது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம் தற்போது பாட்னா என்றழைக்கப்படுகிறது. புத்த மதமும் சமண மதமும் இங்குதான் தோன்றின.

கல்வி

பண்டைய பிகார் கல்வியில் சிறந்து விளங்கியது. அப்போது நாளந்தா, விக்கிரமசீலா போன்ற பல்கலைக்கழகங்கள் இங்குதான் இருந்தன. ஆனால் தற்காலத்தில் கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 94,163 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பிகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 104,099,452 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 88.71% மக்களும், நகரப்புறங்களில் 11.29% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 25.42% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 54,278,157 ஆண்களும் மற்றும் 49,821,295 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,106 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 61.80 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 71.20% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 51.50% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 19,133,964 ஆக உள்ளது.

சமயம்

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 86,078,686 (82.69 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 17,557,809 (16.87 % ) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 129,247 (0.12 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 23,779 (0.02 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 18,914 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 25,453 (0.02 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 13,437 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 252,127 (0.24 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தியுடன், போஜ்புரி, உருது, மைதிலி மற்றும் பல வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன.

பொருளாதாரம்

கங்கை ஆறும் மற்றும் அதன் துணை ஆறுகளும் பாயும் கங்கைச் சமவெளியில் பிகார் அமைந்துள்ளதால் வேளாண்மைத் தொழில் சிறப்பாக உள்ளது. கோதுமை, நெல் மற்றும் கரும்பு முக்கிய விளைபயிர்களாகும்.

மாவட்டங்கள்

பீகார்: வரலாறு, கல்வி, மக்கள் தொகையியல் 
பிகார் மாநிலத்தின் மாவட்டங்கள்

பிகார் மாநிலம் நிர்வாக வசதிக்காக ஒன்பது கோட்டங்களாகவும், முப்பத்து எட்டு வருவாய் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் விவரம்;

ஆன்மிகத் தலங்கள்

கயை, நாலந்தா பல்கலைக்கழகம், புத்தகயா, மகாபோதி கோயில், கேசரியா, ராஜகிரகம் மற்றும் வைசாலி ஆகும்.

போக்குவரத்து

தொடருந்து

கிழக்கு இந்தியா, மேற்கு இந்தியா மற்றும் வடக்கு இந்தியாவை இணைக்கும் இருப்புப்பாதைகள் அனைத்தும் பட்னா சந்திப்பு தொடருந்து நிலையம் வழியாக செல்கிறது.

வானூர்தி நிலையம்

பாட்னாவில் உள்ள லோகநாயகன் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பன்னாட்டு விமான நிலையம் இந்தியாவின் நகரங்களுடனும் மற்றும் பன்னாட்டு நகரங்களுடனும் இணைக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகள்

புதுதில்லி - கொல்கத்தா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 2 பாட்னா வழியாக செல்கிறது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

பீகார் வரலாறுபீகார் கல்விபீகார் மக்கள் தொகையியல்பீகார் பொருளாதாரம்பீகார் மாவட்டங்கள்பீகார் ஆன்மிகத் தலங்கள்பீகார் போக்குவரத்துபீகார் மேலும் பார்க்கபீகார் மேற்கோள்கள்பீகார்இந்தியாபாட்னா

🔥 Trending searches on Wiki தமிழ்:

உலகத் தமிழாராய்ச்சி மாநாடுமதராசபட்டினம் (திரைப்படம்)கலைசூரியக் குடும்பம்ஆண்டு வட்டம் அட்டவணைஇனியவை நாற்பதுதங்க மகன் (1983 திரைப்படம்)விசயகாந்துதேவாங்குமலைபடுகடாம்கஞ்சாதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்திரிசாமாத்திரை (தமிழ் இலக்கணம்)அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)சூல்பை நீர்க்கட்டிஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)சூர்யா (நடிகர்)முதலாம் இராஜராஜ சோழன்சதயம் (பஞ்சாங்கம்)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)கொன்றைநீக்ரோஅன்னை தெரேசாலெனின்குண்டூர் காரம்மதுரைஇந்தியத் தேர்தல்கள் 2024மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்)திருமுருகாற்றுப்படைபோயர்உலக சுற்றுச்சூழல் நாள்யுகம்மாமல்லபுரம்விளாதிமிர் லெனின்சூழல் மண்டலம்மதுரைக் காஞ்சிநாம் தமிழர் கட்சிபழமொழி நானூறுஇந்திமதுரை வீரன்உலா (இலக்கியம்)வேலுப்பிள்ளை பிரபாகரன்கர்மாகர்ணன் (மகாபாரதம்)பறவைக் காய்ச்சல்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்ஹர்திக் பாண்டியாவிபுலாநந்தர்கைப்பந்தாட்டம்பெண்சிவன்நுரையீரல்திராவிட மொழிக் குடும்பம்பால கங்காதர திலகர்தமிழ் நாடக வரலாறுதமிழ்நாடு அமைச்சரவைநீரிழிவு நோய் (இரண்டாவது வகை)மரபுச்சொற்கள்மாதேசுவரன் மலைவேதம்பாண்டியர்கருப்பைவாணிதாசன்விருத்தாச்சலம்மஞ்சள் காமாலைதீரன் சின்னமலைஅயோத்தி இராமர் கோயில்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சிதம்பரம் நடராசர் கோயில்கீழடி அகழாய்வு மையம்சுயமரியாதை இயக்கம்திதி, பஞ்சாங்கம்வாலி (கவிஞர்)மோகன்தாசு கரம்சந்த் காந்திநீர் பாதுகாப்புகோத்திரம்யானை🡆 More