இலக்கியம் பரணி: பரணி பற்றிய அறிமுகம்

பரணி என்பது தமிழில் வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்றாகும்.

போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது பரணி இலக்கியம் ஆகும்.இதை, ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி எனப் இலக்கண விளக்க பட்டியல் விளக்குகிறது.பெரும்போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி என்று வழங்குவதுண்டு. போரிற் தோற்ற அரசன் நாட்டில் போர்க்களம் அமைத்துப் போர் செய்து, வெற்றி பெறுவதால் தோற்ற நாட்டுப் பெயரால் நூலை வழங்குவது மரபு.
பரணி என்னும் சொல்லானது, காடுகிழவோன், பூதம், அடுப்பு, தாழி, பெருஞ்சோறு, தருமன் நாள், போதம் என்னும் பல பொருள்களைத் தரும். இதனைக்

    " காடு கிழவோன் பூதமடுப்பே, தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப் பாகு பட்டது பரணி நாட்பெயரே " - திவாகரம்

என்பதால் அறியலாம்.

பரணிகள்

எண் நூல் ஆசிரியர் காலம்
1 கொப்பத்துப் பரணி - 1054
2 கூடல் சங்கமத்துப் பரணி - 1064
3 கலிங்கத்துப்பரணி செயங்கொண்டார் 1118
4 தக்கயாகப் பரணி ஒட்டக்கூத்தர் 1155
5 இரணியவதைப் பரணி - 1210
6 அஞ்ஞானவதைப் பரணி தத்துவராயர் 1450
7 மோகவதைப் பரணி தத்துவராயர் 1450
8 பாசவதைப் பரணி வைத்தியநாத தேசிகர் 1640
9 திருச்செந்தூர்ப் பரணி சீனிப்புலவர் 18ஆம் நூற்றாண்டு
10 கஞ்சவதைப் பரணி - -
11 கலைசைச் சிதம்பரேசர் பரணி சுப்பிரமணிய முனிவர் 1800

பகுதிகள்

பொதுவாகப் பரணிகள் பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.

  1. கடவுள் வாழ்த்து
  2. கடை திறப்பு
  3. காடு பாடியது
  4. கோயில் பாடியது
  5. தேவியைப் பாடியது
  6. பேய்ப்பாடியது
  7. இந்திரசாலம்
  8. இராச பாரம்பரியம்
  9. பேய் முறைப்பாடு
  10. அவதாரம்
  11. காளிக்குக் கூளி கூறியது
  12. போர் பாடியது
  13. களம் பாடியது
  14. கூழ் அடுதல்

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

Tags:

இலக்கியம் பரணி பரணிகள்இலக்கியம் பரணி பகுதிகள்இலக்கியம் பரணி மேற்கோள்கள்இலக்கியம் பரணி இவற்றையும் பார்க்கவும்இலக்கியம் பரணி கருவிநூல்இலக்கியம் பரணிஆயிரம்தமிழ்பிரபந்தம்யானை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்நாட்டு நலப்பணித் திட்டம்வேர்க்குருகாதல் (திரைப்படம்)ஸ்ரீசூர்யா (நடிகர்)பருவ காலம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழர் நெசவுக்கலைசீமையகத்திபாரத ரத்னாமுதலாம் இராஜராஜ சோழன்ம. பொ. சிவஞானம்இலட்சத்தீவுகள்விஜய் வர்மாமாநிலங்களவைசூரரைப் போற்று (திரைப்படம்)ராமராஜன்நாடோடிப் பாட்டுக்காரன்பொன்னியின் செல்வன்திருமலை (திரைப்படம்)சுப்பிரமணிய பாரதிகா. ந. அண்ணாதுரைவெந்து தணிந்தது காடுவெண்குருதியணுஆற்றுப்படைபணவீக்கம்சேரர்பாண்டியர்காசோலைவிநாயகர் அகவல்யாழ்பால் (இலக்கணம்)கருப்பைகி. ராஜநாராயணன்வாதுமைக் கொட்டைஇயேசு காவியம்வீரப்பன்நம்மாழ்வார் (ஆழ்வார்)தேவேந்திரகுல வேளாளர்சென்னை சூப்பர் கிங்ஸ்கௌதம புத்தர்கிருட்டிணன்கேள்விவானிலைகல்விதொழிலாளர் தினம்திருமால்ஸ்ரீலீலாசுற்றுச்சூழல்அறம்தனிப்பாடல் திரட்டுபி. காளியம்மாள்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்செக் மொழிபட்டினப் பாலைபிளாக் தண்டர் (பூங்கா)பஞ்சதந்திரம் (திரைப்படம்)நயினார் நாகேந்திரன்உரைநடைஇந்திய ரூபாய்சங்க இலக்கியம்மருது பாண்டியர்பள்ளுமஞ்சள் காமாலைஅன்னி பெசண்ட்உயிர்மெய் எழுத்துகள்இந்தியன் பிரீமியர் லீக்சிவனின் 108 திருநாமங்கள்பெருஞ்சீரகம்கருட புராணம்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019காடழிப்புபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ரா. பி. சேதுப்பிள்ளைஅண்ணாமலை குப்புசாமி🡆 More