அண்ணாமலை குப்புசாமி

அண்ணாமலை குப்புசாமி (Aṇṇāmalai kuppusāmy) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் காவல்துறை அதிகாரியும், தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார்.

இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 8 சூலை 2021 அன்று நியமிக்கப்பட்டார்.

அண்ணாமலை குப்புசாமி
அண்ணாமலை குப்புசாமி
மாநில தலைவர் பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
16 சூலை 2021
முன்னையவர்எல். முருகன்
தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர்
பதவியில்
29 அகத்து 2020 – 7 சூலை 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அண்ணாமலை கவுண்டர்

சூன் 4, 1984 (1984-06-04) (அகவை 39)
தொட்டம்பட்டி, சின்னதாராபுரம், கரூர், தமிழ்நாடு, இந்தியா
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்அகிலா சுவாமிநாதன்
பிள்ளைகள்2
பெற்றோர்(s)குப்புசாமி கவுண்டர்
பரமேஸ்வரி
வாழிடம்(s)கரூர், தமிழ்நாடு
முன்னாள் கல்லூரிகோயம்புத்தூர் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி, இந்திய மேலாண்மை கழகம் லக்னோ
வேலைஅரசியல்வாதி
தொழில்முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி
விவசாயி

வாழ்க்கைக் குறிப்பு

இவர் கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் என்ற சிற்றூரை அடுத்த தொட்டம்பட்டி என்ற கிராமத்தில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக விவசாயக் குடும்பத்தில் 4 சூன் 1984 ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர் குப்புசாமி கவுண்டர் மற்றும் பரமேஸ்வரி ஆகியோர் ஆவர். இவர் அகிலா சுவாமிநாதன் என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கல்வி

அண்ணாமலை கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார், தமிழ்நாடு கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து, பொது சேர்க்கைத் தேர்வில் தேர்ச்சி பெற்று இவர் முதுநிலை வணிக நிர்வாகம் படிப்பை உத்தரப்பிரதேசம், லக்னோ இந்திய மேலாண்மை கழகத்தில் முடித்தார். பின்னர் மத்திய அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் 2011 வகுப்பில் முதலிடம் பெற்றார்.[சான்று தேவை] இவர் தமிழ், ஆங்கிலம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.

காவல்துறை பங்களிப்பு

அண்ணாமலை கர்நாடக காவல்துறை பணியாளராக, 2011 ஆண்டு சேர்ந்தார். பின்னர் இவர் கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு அக்டோபர் 2018 வரை மாவட்ட தலைமை காவல் கண்காணிப்பாளராகத் தொடர்ந்தார். 2018 இல் பெங்களூர் தெற்கு காவல் துணை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

இவர் உடுப்பி மற்றும் சிக்மகளூரிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டபோது, மக்கள் தடுக்க முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது காவல்துறை பணியின் போது, ​​இவர் தனது உயர் அதிகாரிகள், முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களிடமிருந்து பல[தெளிவுபடுத்துக] விருதுகளைப் பெற்றுள்ளார்.

பாபா புதன்கிரி கலவரத்திற்கு எதிரான நடவடிக்கையால் அவர் புகழ் பெற்றார். கர்நாடகாவில் கற்பழிப்பு வழக்குகள் மற்றும் மதக் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதில் அவர் சிறப்பாக[எவ்வாறு?] பணியாற்றினார். அவரது நேர்மை மற்றும் தைரியத்திற்காக அவருக்கு வெகுமதி[தெளிவுபடுத்துக] அளிக்கப்பட்டது.

போதைக்கு எதிரான நடவடிக்கை

அவரது காவல் பணியின் போது, போதைப்பொருள் மற்றும் புகையிலை விற்பனைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்தார், பல சட்டவிரோத மதுபானக் கடைகளை மூடினார்.[சான்று தேவை]

சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர்

அவர் ராஜினாமா செய்த பிறகு, அவர் ஒரு பேச்சாளராக, இயற்கை விவசாயியாக ஆர்வம் காட்டினார். அவர் ஐஏஎஸ் பயிற்சி மையம், தலைவர்கள் அறக்கட்டளை மற்றும் பல இலாப நோக்கற்ற அறக்கட்டளைகளையும் தொடங்கினார்.[சான்று தேவை]

அரசியல் பங்களிப்பு

அண்ணாமலை ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்க சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் சா ஆகியோரை சந்தித்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் மீது எந்த அளவு ஈர்க்கப்பட்டார் என்பதையும் வாழ்க்கையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்புவதாகவும் தன்னை வெளிப்படுத்தினார். 25 ஆகத்து 2020 அன்று, காவல்துறையை விட்டு ஒரு வருடம் கழித்து, அவர் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி. முரளிதர் ராவ், அவரது நீண்ட நாள் நண்பரும் கர்நாடக பாஜக அமைச்சரான சி. டி. ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

அவர் தமிழ்நாடு 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 24,816 வாக்கு வித்தியாசத்தில் திமுகவில் போட்டியிட்ட ஆர். இளங்கோவிடம் தோற்றார். எல். முருகன் மத்திய அமைச்சரான பிறகு, இவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

Tags:

அண்ணாமலை குப்புசாமி வாழ்க்கைக் குறிப்புஅண்ணாமலை குப்புசாமி கல்விஅண்ணாமலை குப்புசாமி காவல்துறை பங்களிப்புஅண்ணாமலை குப்புசாமி சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர்அண்ணாமலை குப்புசாமி அரசியல் பங்களிப்புஅண்ணாமலை குப்புசாமி மேற்கோள்கள்அண்ணாமலை குப்புசாமிஅரசியல்வாதிஜெகத் பிரகாஷ் நட்டாபாரதிய ஜனதா கட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாக்யராஜ்கால்-கை வலிப்புதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிநற்கருணை ஆராதனைஅனுமன்ஆண்டாள்சிற்பி பாலசுப்ரமணியம்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)சுதேசி இயக்கம்பொது ஊழிசைவத் திருமுறைகள்இன்ஸ்ட்டாகிராம்ரோசுமேரிஇந்தியன் பிரீமியர் லீக்காமராசர்ஆபுத்திரன்மதுரைக் காஞ்சிசேரர்விஜய் (நடிகர்)கரிகால் சோழன்சிலப்பதிகாரம்இங்கிலாந்துமொழிபெயர்ப்புதாவரம்பர்வத மலைகுறிஞ்சி (திணை)உன்னாலே உன்னாலேஐந்திணைகளும் உரிப்பொருளும்திருமலை நாயக்கர் அரண்மனைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)முத்துராமலிங்கத் தேவர்நம்மாழ்வார் (ஆழ்வார்)முகம்மது நபிநயன்தாராதமிழர் நெசவுக்கலைகலித்தொகைபரதநாட்டியம்ஹதீஸ்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்மதுரைமயங்கொலிச் சொற்கள்கிருட்டிணன்உயர் இரத்த அழுத்தம்நாயக்கர்பால் கனகராஜ்திருத்தணி முருகன் கோயில்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)தினேஷ் கார்த்திக்நாம் தமிழர் கட்சிசுடலை மாடன்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்நாயன்மார் பட்டியல்இமயமலைவன்னியர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்ஆறுமுக நாவலர்பெயர்எயிட்சுதாடகைதிருமந்திரம்நாடாளுமன்ற உறுப்பினர்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிபுரோஜெஸ்டிரோன்ஆசியாகொல்லி மலைபாசிப் பயறுஆபிரகாம் லிங்கன்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமுதலாம் உலகப் போர்கல்லீரல்வயாகராதளை (யாப்பிலக்கணம்)ஆ. ராசாதிருவாரூர் தியாகராஜர் கோயில்முல்லை (திணை)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்🡆 More