நடிகர் சூர்யா: இந்திய நடிகர்

சூர்யா (பிறப்பு: 23 சூலை 1975) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார்.

இவர் 1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர் (1997), நந்தா (2001), காக்க காக்க (2003), பிதாமகன் (2003), பேரழகன் (2004), வேல் (2007) , வாரணம் ஆயிரம் (2008), ஏழாம் அறிவு (2011), 24 (2016) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.

சூர்யா
நடிகர் சூர்யா: தனிப்பட்ட வாழ்க்கை, திரைப்பட வாழ்க்கை, பொதுச்சேவை மற்றும் தொண்டு
பிறப்புசரவணன்
சூலை 23, 1975 (1975-07-23) (அகவை 48)
மெட்ராஸ், தமிழ்நாடு, இந்தியா இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1997 – முதல்
சமயம்இந்து
பெற்றோர்சிவகுமார்,
லட்சுமி
வாழ்க்கைத்
துணை
ஜோதிகா (2006)
பிள்ளைகள்தியா, தேவ்

இவரின் நடிப்புத் திறனால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிமா விருதுகள் மற்றும் விஜய் விருதுகள் போன்றவை வென்றுள்ளார். இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் சூர்யா ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் 2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.

தனிப்பட்ட வாழ்க்கை

சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனும் ஆவார். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர். 2006ல் நடிகை ஜோதிகாவை விரும்பி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என்ற குழந்தைகள் உள்ளனர். தற்போது (2012-13) சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.

திரைப்பட வாழ்க்கை

இவரின் முதல் படமான நேருக்கு நேர் திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றது. 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தை வசந்த் இயக்கிருந்தார். ஆனால் இதன் பிறகு வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெறவில்லை. குறிப்பாக காதலே நிம்மதி (1998), சந்திப்போமா (1998),பெரியண்ணா (1999), பூவெல்லாம் கேட்டுப்பார் (1999). இந்தத் திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த ஜோதிகாவை இவர் மணந்துகொண்டார்.

2001 ஆம் ஆண்டில் பாலாவின் (இயக்குனர்) இயக்கத்தில் பிதாமகன் திரைப்படத்தில் நடித்தார். இதில் இவர் திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளியாக நடித்திருப்பார். இந்தப் படம் இவருக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் இவரின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 2003 இல் கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க திரைப்படத்தில் நடித்தார். இதில் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். இந்த இரு திரைப்படங்களும் விமர்சன , வியாபார ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இதன் மூலம் தமிழகத் திரைப்படத்துறை முன்னணி நாயகர்களில் ஒருவரானார். மேலும் 51 வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த ஆண் துணை நடிகருக்கான விருதிற்கு பிதாமகன் திரைப்படத்தில் நடித்ததற்காக பரிந்துரை செய்யப்பட்டது. பின் பேரழகன் திரைப்படத்தில் கல்லூரி மாணவராகவும், கூன் விழுந்த நபராகவும் இரு வேடங்களில் நடித்திருப்பார். இதில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான 52 வது பிலிம்பேர் விருது பெற்றார். 2004 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் ஆய்த எழுத்து (திரைப்படம்) நடித்தார். இவர் இதில் மாணவ தலைவர் வேடத்தில் நடித்திருந்தார்.

2005 ஆம் ஆண்டில் சூர்யா மாயாவி, கஜினி ,ஆறு ஆகிய மூன்று திரைப்படங்களில் நாயகனாக நடித்தார். கஜினியில் மறதிநோய் உள்ளவராக நடித்திருப்பார். இந்தத் திரைப்படம் பாலிவுட்டில் மொழிமாற்றம் செய்யப்பட்டு (கஜினி (2008 திரைப்படம்) அதே பெயரில் வெளியானது. மாயாவி, ஆறு ஆகிய இரு திரைப்படங்களும் வெற்றிப் படமாக அமைந்தது. 2006 இல் சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்), 2007 இல் வேல் (திரைப்படம்) போன்றவற்றில் நடித்தார். இதில் வேல் வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 2008 இல் மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்தார். இதில் தந்தை, மகன் ஆகிய இருவேடங்களில் நடித்திருப்பார். இந்தத் திரைப்படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.

2009 இல் அயன் (திரைப்படம்), ஆதவன் (திரைப்படம்) ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 2010 ஆம் ஆண்டில் சிங்கம் திரைப்படத்தில் நடித்தார். இதில் அனுசுக்கா செட்டி உடன் நடித்திருப்பார். இந்தப் படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து சிங்கம் 2 , சி3 (திரைப்படம்) ஆகியவை வெளியாகின. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான ரத்தசரித்திரம் திரைப்படத்தில் நடித்தார். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு திரைப்படத்தில் போதி தருமன் வேடத்தில் நடித்தார். இவரது மனைவி ஜோதிகா நடித்த 36 வயதினிலே எனும் திரைப்படத்தை தயாரித்தார்.

2012 ஆம் ஆண்டு இயக்குனர் கே. வி. ஆனந்த் இயக்கிய மாற்றான் என்ற திரைப்படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி துறையில் தொகுப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து சிங்கம் 2 என்ற அதிரடித் திரைப்படத்தில் நடித்தார். இது 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்பட சிங்கம் தொடரின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த திரைப்படம் 5 ஜூலை 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

2014 ஆம் ஆண்டில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் என்ற திரைப்படம் 15 ஆகஸ்ட் 2014 அன்று வெளியாகி கலப்பு விமர்சனம் பெற்றது. அதே ஆண்டில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாசு என்கிற மாசிலாமணி என்ற திரைப்படமும் வெளியாகி கலப்பு விமர்சனம் பெற்றது.

பொதுச்சேவை மற்றும் தொண்டு

அகரம் என்ற ஒரு பொது நலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வியில் இத்தொண்டு நிறுவனம் சிறந்த பங்காற்றி வருகிறது.

திரைப்படங்களின் பட்டியல்

ஆண்டு திரைப்படம் வேடங்கள் குறிப்புகள்
1997 நேருக்கு நேர் சூரியா
1998 காதலே நிம்மதி சந்துரு
சந்திப்போமா விஸ்வா
1999 பெரியண்ணா சூர்யா
பூவெல்லாம் கேட்டுப்பார் கிருஷ்ணா
2000 உயிரிலே கலந்தது சூர்யா
2001 பிரண்ட்ஸ் சந்துரு
நந்தா நந்தா
2002 உன்னை நினைத்து சூர்யா
ஸ்ரீ ஸ்ரீ
மௌனம் பேசியதே கௌதம்
2003 காக்க காக்க அன்புசெல்வன் பரிந்துரை : சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது
பிதாமகன் சக்தி சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது
2004 பேரழகன் சின்னா, கார்த்தி சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது
ஆய்த எழுத்து மைக்கேல் வசந்த்
2005 மாயாவி பாலையா
கஜினி சஞ்சய் ராமசாமி பரிந்துரை : சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது
ஆறு ஆறுமுகம்
2006 ஜூன் ஆர் ராஜா கௌரவத் தோற்றம்
சில்லுனு ஒரு காதல் கௌதம் சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது
2007 வேல் வாசுதேவன், வெற்றிவேல்
2008 குசேலன் நடிகராகவே சினிமா சினிமா பாடலில் கௌரவத்தோற்றம்
வாரணம் ஆயிரம் கிருஷ்ணன், சூரிய கிருஷ்ணன்
2009 அயன் டேவராஜ் வேலு சாமி பரிந்துரை : சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது
ஆதவன் மாதவன்
2010 சிங்கம் துரை சிங்கம் பரிந்துரை : சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது
ரத்த சரித்திரம் 2 சூர்ய நாராயண ரெட்டி இரண்டாம் பாதியில் கௌரவத் தோற்றம்
மன்மத அன்பு நடிகராகவே ஓயாலே பாடலில் கௌரவத்தோற்றம்
2011 கோ அக நக பாடலில் கௌரவத்தோற்றம்
அவன் இவன் கௌரவத் தோற்றம்
7 ஆம் அறிவு அரவிந்த், போதிதர்மன் பரிந்துரை : சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது
2012 மாற்றான் அகிலன், விமலன் பரிந்துரை : சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது
2013 சென்னையில் ஒரு நாள் நடிகராகவே தோன்றினார் கௌரவத் தோற்றம்
சிங்கம் 2 துரை சிங்கம் பரிந்துரை : சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது
2014 நினைத்தது யாரோ நடிகராகவே கௌரவத் தோற்றம்
அஞ்சான் ராஜூபாய் (கிருஷ்ணா)
2015 மாசு என்கிற மாசிலாமணி மாசிலாமனி, சக்தி
பசங்க 2 தமிழ்நாடன்
2016 24 ஆத்ரேயா, மணிகண்டன், சேதுராமன் பிலிம் பேர் நடுவர் விருது
2017 சிங்கம்3 துரை சிங்கம்
2018 தானா சேர்ந்த கூட்டம் இனியன்
கடைக்குட்டி சிங்கம் கௌரவத் தோற்றம்
2019 என். ஜி. கே நந்த கோபாலன் குமரன்
காப்பான் கதிரவன்
2020 சூரரைப் போற்று நெடுமாறன்
2021 ஜெய் பீம் சந்துரு
2022 எதற்கும் துணிந்தவன் கண்ணபிரான்
2022 விக்ரம் ரோலெக்ஸ் சிறப்பு தோற்றம்

தொலைக்காட்சி

ஆண்டு நிகழ்ச்சி தொலைக்காட்சி குறிப்புகள்
2012 நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளராக

தயாரிப்பாளராக

ஆண்டு திரைப்படம் மேற்கோள்கள்
2015 36 வயதினிலே
2015 பசங்க 2
2016 24
2017 மகளிர் மட்டும்
2018 கடைக்குட்டி சிங்கம்
2019 உறியடி 2
2019 ஜாக்பாட்
2020 பொன்மகள் வந்தாள்
2020 சூரரைப் போற்று

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

நடிகர் சூர்யா தனிப்பட்ட வாழ்க்கைநடிகர் சூர்யா திரைப்பட வாழ்க்கைநடிகர் சூர்யா பொதுச்சேவை மற்றும் தொண்டுநடிகர் சூர்யா திரைப்படங்களின் பட்டியல்நடிகர் சூர்யா தொலைக்காட்சிநடிகர் சூர்யா தயாரிப்பாளராகநடிகர் சூர்யா மேற்கோள்கள்நடிகர் சூர்யா வெளி இணைப்புகள்நடிகர் சூர்யா24 (தமிழ்த் திரைப்படம்)ஏழாம் அறிவு (திரைப்படம்)காக்க காக்க (திரைப்படம்)தமிழகத் திரைப்படத்துறைதமிழ்நாடுதிரைப்படத் தயாரிப்பாளர்நந்தா (திரைப்படம்)நேருக்கு நேர்பிதாமகன்பேரழகன் (திரைப்படம்)வாரணம் ஆயிரம் (திரைப்படம்)வேல் (திரைப்படம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

கடலூர் மக்களவைத் தொகுதிசுதேசி இயக்கம்சென்னை சூப்பர் கிங்ஸ்தேர்தல் நடத்தை நெறிகள்தென் சென்னை மக்களவைத் தொகுதிஉலா (இலக்கியம்)உயர் இரத்த அழுத்தம்ஜெயம் ரவிசிதம்பரம் நடராசர் கோயில்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்நயன்தாராடி. என். ஏ.மதீனாகுடும்பம்இடைச்சொல்கணியன் பூங்குன்றனார்ஐங்குறுநூறுதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிஇறைமறுப்புவெண்பாஅகோரிகள்அமெரிக்க ஐக்கிய நாடுகள்யூலியசு சீசர்தயாநிதி மாறன்தேர்தல் பத்திரம் (இந்தியா)அரிப்புத் தோலழற்சியூதர்களின் வரலாறுகருமுட்டை வெளிப்பாடுவிசுவாமித்திரர்டி. எம். கிருஷ்ணாஞானபீட விருதுசூரியக் குடும்பம்தேசிக விநாயகம் பிள்ளைஇலட்சம்மொழிபெயர்ப்புஐ (திரைப்படம்)மண் பானைஉன்னாலே உன்னாலேதிருமலை நாயக்கர் அரண்மனைலியோதிருட்டுப்பயலே 2வே. தங்கபாண்டியன்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்யாதவர்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்சினைப்பை நோய்க்குறிபி. காளியம்மாள்இசுலாத்தின் ஐந்து தூண்கள்அல்லாஹ்அழகிய தமிழ்மகன்திருவாரூர் தியாகராஜர் கோயில்விண்ணைத்தாண்டி வருவாயாமுகம்மது நபிதங்கம்தமிழ் நாடக வரலாறுபீப்பாய்திருமந்திரம்நற்கருணை ஆராதனைசங்க காலம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சுந்தர காண்டம்தமிழ் இலக்கியப் பட்டியல்வேற்றுமையுருபுசித்த மருத்துவம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்தங்க தமிழ்ச்செல்வன்இன்னா நாற்பதுமகேந்திரசிங் தோனிவிரை வீக்கம்மருது பாண்டியர்மார்ச்சு 27யூடியூப்காமராசர்ஜெ. ஜெயலலிதாதிருமணம்அத்தி (தாவரம்)நற்கருணைபஞ்சதந்திரம் (திரைப்படம்)மாணிக்கவாசகர்🡆 More