சினைப்பை நோய்க்குறி

சினைப்பை நோய்க்குறி (Polycystic ovary syndrome)(PCOS) என்பது பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண்தன்மைச் சுரப்பி அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் ஒரு கூட்டு நோய் அறிகுறியாகும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் இல்லாமலிருத்தல், அதிகமான குருதிப்போக்கு, உடலிலும் முகத்திலும் அதிகமான முடிவளர்ச்சி, முகப்பரு, இடுப்பெலும்பு வலி, மலட்டுத்தன்மை, சில தோல் பகுதிகள் மட்டும் கெட்டியாகவும் கருத்தும் மிருதுவாகக் காணப்படுதல் ஆகியன இதன் அறிகுறிகளாகும். மேலும் இதனோடு நீரிழிவு நோய், உடற் பருமன் இதய நோய் , உறங்கும்போது மூச்சு விடுதலில் மாற்றம், சீரற்ற மனநிலை, கருப்பை அகப்படலப் புற்றுநோய் ஆகியவையும் இதனோடு தொடர்புடையனவாகும்..

சினைப்பை நோய்க்குறி
சினைப்பை நோய்க்குறி
மகளிர் நோய் மருத்துவவியல்
சிறப்புGynecology
அறிகுறிகள்முறையற்ற மாதவிடாய் காலம், அதிகப்படியான உதிரப்போக்கு,அதிகப்படியான முடி வளர்தல், மலட்டுத்தன்மை
கால அளவுஅதிக காலம்
சூழிடர் காரணிகள்உடற்பருமன், உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது
சினைப்பை நோய்க்குறி
மீயொலிச் சோதனை மூலம் படமாக்கப்பட்ட சினைப்பை நோய்க்குறி

சினைப்பை நோய்கள் மரபுவழி, சூழல் என இரண்டும் இணைந்த கூட்டுக்காரணிகளால் ஏற்படுகின்றன. உடற்பருமன், போதுமான உடற்பயிற்சியின்மை, குடும்பத்தில் முன்பு எவருக்கேனும் இது காணப்பட்டிருத்தல் ஆகியவை இந்நோய்க்குறி பாதிப்பதற்கான அபாய காரணிகளாகும். ஆண்ட்ரோஜன் அளவு அதிகரித்திருத்தல், சினைமுட்டை வராமலிருத்தல், சினைப்பையில் கட்டிகள் தோன்றுதல் ஆகிய இவற்றில் ஏதேனும் இரண்டினைக் கொண்டு சினைப்பை நோய்க்குறி கண்டறியப்படுகிறது. கட்டிகள் மீயொலிச் சோதனை மூலம் கண்டறியப்படலாம். மேலும் அண்ணீரகச் சுரப்பிக் கோளாறு, தைராய்டு சுரப்புக் குறை,மிகை பால்சுரப்புக் கோளாறு ஆகியவை இருந்தாலும் மேற்கண்ட அதே அறிகுறிகள் தோன்றும்.

சினைப்பை நோய்க்குறிக்கான தீர்வு எதுவுமில்லை. உடற்பயிற்சி, எடைக்குறைப்பு ஆகிய சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் இதற்கான சிகிச்சையாகக் கருதப்படுகிறது. கருத்தடை மாத்திரைகள் சில நேரங்களில் சரியான மாதவிடாய் சுழற்சி, மிகை முடிவளர்ச்சி, முகப்பரு ஆகியவற்றின் ஒழுங்கமைப்பை மேம்படுத்த உதவலாம். மெட்பார்மின், எதிர்- ஆண்ட்ரோஜென் ஆகியவை உதவக்கூடும். முகப்பரு சிகிச்சை, முடி நீக்கு சிகிச்சை ஆகியவையும் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. கருத்தரித்தலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு எடைக்குறைப்பு,மெட்பார்மின் அல்லது குளோம்பிபைன் ஆகியவை நல்ல பயனைத் தரும். சினைப்பை நோய்க்குறி காரணமாய் மலட்டுத்தன்மை ஏற்பட்டோருக்கு மற்ற சிகிச்சைகள் பலனளிக்காத போது செயற்கைமுறைக் கருவூட்டல் மிகுந்த பயன் தருகிறது.

சினைப்பை நோய்க்குறி 18 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்களுக்கிடையே தோன்றும் பொதுவான அகச்சுரப்பித் தொகுதிக் குறைபாடாகும். இந்த வயதுள்ள பெண்களுக்கு அறிகுறிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுன்றன என்பதைப் பொறுத்து சுமார் இரண்டு விழுக்காடு முதல் இருபது விழுக்காடு வரையான பெண்கள் பாதிப்படைகிறார்கள். சினைப்பை நோய்க்குறியின் முதன்மையான விளைவுகளில் ஒன்று மலட்டுத்தன்மையாகும் 1721 இல் இத்தாலியில் தற்பொழுது சினைப்பை நோய்க்குறி என விவரிக்கப்படும் இந்நோய்க்குறி இருப்பதனைக் கண்டறிந்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன.

அறிகுறிகள்

கீழ்க்காண்பவை சினைப்பை நோய்க்குறியின் பொதுவான அறிகுறிகளாகும்.

  • ஒழுங்கற்ற மாதவிடாய்: சினைப்பை நோய்க்குறியானது ஆண்டிற்கு ஒன்பதுக்கும் குறைவான மாதவிடாய் அல்லது மாதவிடாய் வராமை, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு மாதவிடாய் வராமை, பிற மாதவிடாய்க் கோளாறுகள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கிறது.
  • மலட்டுத்தன்மை: பொதுவாக குறைவான சினைமுட்டை வெளிவருதல்.(சினைமுட்டைப் பற்றாக்குறை)
  • ஆண் தன்மை மிகுந்து காணப்படுதல்: முகப்பருக்கள், உடலில் ஆண்களைப் போன்று (மார்பு, முகவாய் ஆகியவற்றில்) முடிவளர்ச்சி ஆகியன இதன் பொதுவான அறிகுறிகளாகும்.ஆனால் இதனால் மாதவிடாய் மிகைப்பு, முடி இழப்பு, ஆகிய அறிகுறிகளும் உருவாகக்கூடும். சினைப்பை நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட சுமார் மூன்றிலொரு பங்கு பெண்களுக்கு ஆண் தன்மை மிகுந்து காணப்படுவதாக ஐக்கிய அமெரிக்காவின் தேசிய குழந்தைகள் நலம் மற்றும் மனிதவளத்துறை ஆய்வொன்று (1990)) தெரிவிக்கிறது
  • வளர்சிதை மாற்ற நோய்க்குறி: இது உடற்பருமன், இன்சுலின் எதிர்ப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு நோய்க்குறியாகும்.இதனோடும் சினைப்பை நோய்க்குறி தொடர்புடையதாகும். சினைப்பை நோய்க்குறி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்சுலின் நீர்மம், இன்சுலின் எதிர்ப்பு, ஹோமோசிஸ்டீன் ஆகியவற்றின் அளவு அதிகரித்துக் காணப்படும்.

பிற இனத்தவர்களை விட ஆசிய இனத்தவர்களுக்கு சினைப்பை நோய்க்குறியின் காரணமாக உடலில் முடி வளர்ச்சியடைதல் குறைவாகவே காணப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

சினைப்பை நோய்க்குறி அறிகுறிகள்சினைப்பை நோய்க்குறி மேற்கோள்கள்சினைப்பை நோய்க்குறிஇதய நோய்உடற் பருமன்நீரிழிவு நோய்மலட்டுத்தன்மைமாதவிடாய்மாதவிடாய் மிகைப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சினைப்பை நோய்க்குறிஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370காதலுக்கு மரியாதை (திரைப்படம்)திருத்தணி முருகன் கோயில்நீரிழிவு நோய் (இரண்டாவது வகை)அடல் ஓய்வூதியத் திட்டம்பணவீக்கம்பாசிப் பயறுபுதிய ஏழு உலக அதிசயங்கள்மரபுச்சொற்கள்பெண்ணியம்குருதிச்சோகைகேள்விதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இயேசுதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்ஆடுஜீவிதம் (திரைப்படம்)சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ஜோதிகாஆங்கிலம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021ராஜஸ்தான் ராயல்ஸ்அவதாரம்குறுந்தொகைகைப்பந்தாட்டம்சமூகம்ஆத்திசூடிமதுரைக் காஞ்சிதிராவிட மொழிக் குடும்பம்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஐங்குறுநூறுஉருவக அணிமு. வரதராசன்ஸ்ரீலீலாமழைடிரைகிளிசரைடுவாலி (இராமாயணம்)வாஸ்து சாஸ்திரம்இராமாயணம்முதுமலை தேசியப் பூங்காஏப்ரல் 23வெ. இராமலிங்கம் பிள்ளைகட்டுவிரியன்பதினெண்மேற்கணக்குபஞ்சதந்திரம் (திரைப்படம்)மியா காலிஃபாசிவாஜி கணேசன்பிரேமலுஇளையராஜாமண் பானைகபிலர் (சங்ககாலம்)சத்ய பிரதா சாகுகருக்கலைப்புநாலாயிர திவ்வியப் பிரபந்தம்நயினார் நாகேந்திரன்அகநானூறுதீரன் சின்னமலைநிலச்சரிவுவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)காளமேகம்பெண் தமிழ்ப் பெயர்கள்மனித வள மேலாண்மைமுதுமொழிக்காஞ்சி (நூல்)பரிபாடல்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஒன்றியப் பகுதி (இந்தியா)அகரவரிசைகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிமுதலாம் இராஜராஜ சோழன்நவரத்தினங்கள்காந்தள்சிதம்பரம் மக்களவைத் தொகுதியானையின் தமிழ்ப்பெயர்கள்நற்றிணைமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ரவிசீனிவாசன் சாய் கிஷோர்108 வைணவத் திருத்தலங்கள்சூர்யா (நடிகர்)🡆 More