முகம்மது நபி

முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد‎, பிறப்பு பொ.ஊ.

570, இறப்பு 8 சூன் பொ.ஊ. 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்த அராபியர் ஆவர் .இவர் மத ,சமூக ,அரசியல் தலைவரும் ,இசுலாமிய மதத்தின் நிறுவுனரும் ஆவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார். உலக அளவில் முசுலிம்கள் முகம்மதுவை கடவுளால் மனித உலகிற்கு அனுப்பப்பட்ட கடைசி இறைத்தூதர் என நம்புகின்றனர். இசுலாமிய மதக்கோட்பாட்டின் படி,ஆதம் ,இப்றாகீம் ,மூசா,ஈசா மற்றும் பிற இறைதூதர்களால் கற்பிக்கப்பட்ட ஓரிறைக்கொள்கையை (தவ்ஹீதை) உறுதி செய்யவும் ,போதிக்கவும் முகம்மது நபி இறைவஉந்துதலுக்கு உள்ளாக்கப்பட்டார் . இறைத்தூதர்களின் முத்திரையாக இவர் நம்பப்படுகின்றார்.திருக்குர்ரான் மற்றும் இவரது போதனைகளும் செயற்பாடுகளும் இசுலாமிய மதக்கோட்பாட்டின் அடிப்படையாக உள்ளது .

முகம்மது
இசுலாத்தின் தீர்க்கதரிசி
முகம்மது நபி
பிறப்புமுகம்மது இப்னு அப்துல்லா
கணிப்பு பொ.ஊ. 570
மக்கா
(இன்றைய சவூதி அரேபியாவில்)
இறப்பு8 சூன் 632(632-06-08) (அகவை 62)
மதீனா, அரேபியா (இன்றைய மதீனா, ஹிஜாஸ், சவூதி அரேபியா)
மற்ற பெயர்கள்
  • அபு அல்-காசிம் (குன்யா)
  • ரசூல் ("இறைத்தூதர்")
  • "தீர்க்கதரிசி"
  • (முகம்மது நபியின் சிறப்புப் பட்டங்கள் மற்றும் பெயர்கள் பார்க்கவும்)
இனம்அரபு
செயற்பாட்டுக்
காலம்
பொ.ஊ. 583–609 வியாபாரியாக
பொ.ஊ. 609–632 கொள்கைத் தலைவராக
பின்வந்தவர்
அபூபக்கர் (ரலி)(சன்னி உம்மாவின் தலைவராக)
அலீ(சியா இமாமாக)
மஹதி("இசுலாத்தை மீட்டெடுப்பவராக")
எதிரி(கள்)அபு ஜஹில்
அபு லஹப்
உம் ஜமில்
சமயம்இசுலாம்
பெற்றோர்தந்தை: அப்துல்லா இப்னு அப்துல்-முத்தலிப்
தாய்: ஆமினா பின்த் வாகுப்
வாழ்க்கைத்
துணை
மனைவிதிருமணமாகியவர்
கதீஜா பின்த் குவைலித்595–619
சவுதா பின்த் சம்மா619–632
ஆயிஷா பின்த் அபி பக்கர்619–632
ஹஃபசா பின்த் உமர்624–632
ஜைனப் பின்த் குசைமா625–627
ஹிந்த் பின்த் அபி உமைய்யா629–632
ஜைனப் பின்த் ஜஹ்ஷ்627–632
ஜுவரியா பின்த் அல்-ஹரித்628–632
ரம்லா பின்த் அபி சுஃபியான்628–632
ரைஹானா பின்த் சையது629–631
சஃபியா பின்த் ஹுயை629–632
மைமுனா பின்த் அல்-ஹரித்630–632
மரியா அல்-கிப்தியா630–632
பிள்ளைகள்
  • மகன்கள்
    • காசிம்
    • அப்துல்லாஹ்
    • இப்ராகிம்
  • மகள்கள்


முகம்மது நபி ஒரு கணிப்பின் படி பொ.ஊ. 570இல் சவூதி அரேபியாவில் மக்கா நகரில் பிறந்தார். இவருடைய தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து தம் சிறிய தந்தை அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40ஆவது வயதில் நபித்துவம் பெற்று இறைத்தூதுகள் கிடைக்கத் துவங்கின. அதன் பின்னர் அவர் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினார் முகம்மது நபி.

வாழ்க்கை

மக்காவில் பிறந்த முகமது, தனது வாழ்நாளில் 52 வருடங்களை அங்கேயே கழித்தார். இந்த 52 வருடக்காலத்தை இரண்டு பாகங்களாக பிரிக்கின்றனர், அவை:

  • இறைதூது கிடைக்கும் முன் முகம்மது நபியின் வாழ்க்கை.
  • இறைதூதர் என தன்னை அறிவித்தப் பின்னர் முகம்மது நபியின் வாழ்க்கை.

இறைத்தூது கிடைக்கும் முன்

முகமது அவர்கள் பொ.ஊ. 570 ஆண்டு பிறந்தார். அவர் இசுலாமிய நாட்காட்டியின் முன்றாவது மாதமான ரபியுல் அவ்வல் மாதத்தில் பிறந்ததாக நம்பப்படுகிறது. பனு ஹாஷிம் எனும் குலத்தை சேர்ந்த மக்காவின் மிகவும் பிரபலமான குடும்பத்தில் அவர் பிறந்தார். . குரைஷ் எனும் பழங்குடியின மக்களின் ஒரு இனமே இந்த பனு ஹாஷிம். ஆபிரகா எனும் அக்குசுமைட் மன்னன் தனது யானை பலம் பொருந்திய படையுடன் மக்காவை தாக்க முயன்று தோல்வியுற்றதனால், பொ.ஊ. 570-ஆம் வருடத்தை யானை ஆண்டு என கூறி வந்தனர். அந்த வருடத்தில் முகமது நபி பிறந்ததாக கூறப்படுகிறது.

யானைப்படையின் அழிவு

105:1 யானைப் படையினருடன் உம் இறைவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

105:2 அவர்களின் சதித்திட்டத்தை அவன் வீணடித்து விடவில்லையா?

105:3 மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அவன் அனுப்பினான்.

105:4 அவை அவர்களின் மீது சுடப்பட்ட களிமண் கற்களை எறிந்து கொண்டிருந்தன.

105:5 பிறகு (கால்நடைகளால்) மென்று தின்னப்பட்ட வைக்கோல் போன்று அவர்களை ஆக்கிவிட்டான்.

முகமதின் பிறப்பிற்கு ஆறு மாதங்கள் முன்னரே அவரது தந்தை அப்துல்லா இறந்துவிட்டார். பாலைவனமே குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது என கருதி, சிறுபிள்ளையான முகம்மதை பாலைவனத்தில் உள்ள ஓர் பெதாவுன் குடும்பத்திற்கு அனுப்பி வைத்தனர். செவிலித்தாய் ஹலிமா பின்த் அபு துயப் மற்றும் அவளது கணவரின் பாதுகாப்பில் இரண்டு வயது வரை முகம்மது வளர்ந்தார். ஆனால், சில மேற்கத்திய இசுலாமிய வல்லுனர்கள் இதை மறுக்கின்றனர். ஆறு வயதில் தன்னைப் பெற்ற தாயான அமீனாவை பறிகொடுத்து அனாதையானர் முகம்மது நபி. அடுத்த இரண்டு வருடங்களுக்கு தனது தந்தை வழி தாத்தா அப்துல் முத்தலிப் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார். .தாத்தாவின் மரணத்திற்குப்பின் பனு ஹாஷிமின் புதிய தலைவரான தனது சிறிய தந்தை அபுதாலிப் மேற்பார்வையில் வளர்ந்தார்,சொந்த மகன் போல கொண்டாடினார். ஆறாம் நூற்றாண்டு அரபு தேசத்தில், ஒரு குலத்தின் வலுவற்றவர்கள் நன்கு கவனிக்கப்படவில்லை என இசுலாமிய வரலாற்று எழுத்தாளரான வில்லியம் மோன்ட்கோமேரி வாட் கருதுகிறார். அவர் எழுதுகையில், 'சிறுவனான முகம்மது சாகாமல் இருக்க மட்டுமே உணவு அளித்து வந்தனர் காப்பாளர்கள், ஏனெனில் அப்பொழுது பனு ஹாஷிம் குலம் வறுமையில் வாடிக்கொண்டிருந்தது'.

பதினம் வயதில் முகம்மது, அவரது சிறிய தந்தையுடன் சிரியா தேசத்திற்கு வணிகம் செய்ய ஒத்தாசையாகச் சென்றுள்ளார். இசுலாமிய வல்லுநர்கள் இந்த நிகழ்வு முகம்மது அவர்களின் ஒன்பதாவது அல்லது பன்னிரெண்டாவது வயதில் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். மேலும், இது போன்ற ஓர் வணிகப் பயணத்தின் பொழுது, பஹிரா எனும் கிறிஸ்த்துவ துறவியை முகம்மது சந்தித்துள்ளார். அந்த துறவி முகம்மது இறைதூதராக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

முகம்மதின் இளைய வயதை பற்றி தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. மேலும், சில நிகழ்வுகள் வரலாறா அல்லது கதையா என முடிவு செய்ய இயலவில்லை. முகமது அவர்கள் ஓர் வணிகராக பணிபுரிந்துள்ளார். நடுநிலக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் இடையே நடந்த வணிகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது நேர்மையை பாராட்டி, அவருக்கு அல்-அமீன் என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது. முகமதுவை 'பேதமற்ற நடுவர்' என அக்காலத்தில் அவரை பலர் நாடியுள்ளனர்.. அவரது இந்த புகழால் 595-ஆம் ஆண்டில் கதீஜா எனும் நாற்பது வயது விதவை பெண் அவரை திருமணம் செய்ய விரும்பினார். முகம்மது கதீஜாவை மணம் முடித்த பின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததாக கூறப்படுகிறது.

வரலாற்றாசிரியர் இப்னு இஷாக் விவரிக்கையில், பொ.ஊ. 605 ஆம் ஆண்டு காபாவில் கல் பதிப்பு நிகழ்வில் முகம்மது அவர்களின் பங்கு இருப்பதாகக் கூறுகிறார். காபாவில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பொருட்டு அதில் இருந்த புனித கருப்புக் கல் அகற்றப்பட்டது. ஆனால், அந்த கல்லை திரும்ப அதே இடத்தில் எந்த குலத்தை சேர்ந்தவர் நிறுவுவது என்பதில் மக்காவின் தலைவர்கள் மத்தியில் சமரசம் எட்டப்படாமல் போனது. அவ்வழியே யார் அடுத்து வருகிறார்களோ, அவரே அத்திருப்பணியை செய்யத் தகுதியானவர் என்று முடிவு செய்தனர். அப்பொழுது அவ்வழியே முகம்மது நபி வந்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு துணியில் அந்த கருப்பு கல்லை தாங்கி, மற்றவர் உதவியுடன் அதனை காபாவிற்கு எடுத்து சென்று, முகமது அக்கல்லை காபாவில் திரும்ப நிறுவினார்.

இறைத்தூது கிடைத்த ஆரம்ப காலங்கள்.

முகம்மது நபி 
ஜபல் அல்-நூர் எனும் மலையில் அமைந்துள்ள ஹிரா எனும் குகையில் தான் முகம்மதுக்கு குரான் ஓதப்பட்டதாக இசுலாமிய வரலாறு கூறுகிறது.

மக்காவில் உள்ள ஹிரா எனும் மலைக் குகையில், முகம்மது அவர்கள் வருடத்தின் பெரும் வாரங்களை, பிரார்த்தனை செய்து கழிப்பது வழக்கம்.பொ.ஊ. 610-ஆம் வருடம், இதேப்போல் முகமது அம்மலைக்குச் சென்றபோது, கபிரியேல்

96:1 ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! 96:2 (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! 96:3 மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், 96:4 அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; 96:5 மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

. காப்ரியல் முதலாவதாகத் தோன்றியப்பின், முகமது பெரும் துயரத்திற்கு ஆளானார். வீடு திரும்பிய முகமதுவை அவரது மனைவி கதீஜா மற்றும் அவரது கிறிஸ்த்துவ நண்பரான வரக்கா இப்னு நஃபல் இருவரும் ஆறுதல் படுத்தினர். காப்ரியல் தோன்றியதை கண்டு முகம்மது அஞ்சவில்லை என்றும், மேலும் அவர் அந்த நிகழ்வை முன்பே அறிந்ததுபோல அந்த தூதரை வரவேற்றதாகவும் ஷியா வரலாறு கூறுகிறது. கப்ரியலின் முதல் தோற்றத்திற்கு பின்பு மூன்று வருடங்களுக்கு மறுதோற்றம் நடக்கவில்லை, இந்த காலகட்டத்தை ஃபத்ரா என்கின்றனர். இக்காலகட்டத்தில் முகமது தொழுதல் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுப்பட்டு வந்தார். காப்ரியலின் மறுதோன்றாலுக்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பினார் முகமது. கப்ரியல் அவரை பார்த்து "உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை." எனக்கூறி மதபோதகம் செய்யச் சொல்லி தூதர் அறிவுறுத்தினார்.

"மணியடிப்பதுப்போல வாசகங்கள் தோன்றின" என முகமது கூறியதாக புகாரி ஹதீஸ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. "ஒவ்வொரு தெய்வ வாசகம் தோன்றிய பிறகு, நபிகளின் நெற்றியில் வியர்வை துளிகள் தோன்றும்" என்று அவரது மனைவி ஆயிஷா கூறினார். தனது யோசனைகளையும் தெய்வ வாக்குகளையும் பிரிக்கும் திறன் தமக்கு இருந்ததாக முகம்மது அவர்களே நம்பிக்கை கொண்டார். குர்ஆனின்படி, உலகின் இறுதிகால தண்டனைகளை பற்றி இறைநம்பிக்கை இல்லாதவர்களுக்கு எடுத்து கூறவே முகம்மது இறைத்தூதராக வந்ததாகக் கருதப்படுகிறது. சில இடங்களில், குரான் தீர்ப்பு நாளைப் பற்றி நேரடியாகச் சொல்லாதபோதும், முன்னர் அங்கு இருந்த சமூகங்களின் அழிவை எடுத்துக்காட்டி, முகம்மது காலத்தில் வாழ்ந்தவர்களை எச்சரிக்கிறது. கடவுளின் வாசகங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை எச்சரிப்பதோடு நில்லாமல், தீயவைகளை துறப்பவர்களுக்கும், தெய்வீக வாசகங்களை கேட்பவர்களுக்கும், கடவுளுக்கு சேவகம் செய்பவர்களுக்கும் நற்செய்தி கூறினார். ஓரிறைவாதமே முகமதின் முக்கியப் பணியாகக் கருதப்படுகிறது. அல்லாஹ்வின் பெயரை அறிவிக்கவும் மற்றும் புகழவும் மற்றும் சிலைகளை வழிப்படுதல் அல்லது வேறுக்கடவுளுடன் அல்லாஹ்வை ஒப்பிடுதளையும் தவிர்க்குமாறு குரான் முகம்மது அவர்களுக்கு கட்டளை இடுகிறது.

தன்னைப் படைத்தவரிடம் காட்டவேண்டிய பொறுப்புகள், இறந்தவர்களை உயிர்ப்பித்தல், இறைவனின் கடைசி தீர்ப்பு மற்றும் அதனை தொடர்ந்து சொர்க்கம் மற்றும் நரகத்தை பற்றிய விரிவான விளக்கங்கள் மற்றும் வாழ்க்கையின் அத்தனைக் கோணங்களிலும் கடவுளின் அறிகுறிகள் என பல்வேறு விஷயங்கள் குரானின் முதல் வரிகளில் அடங்கியுள்ளன. இறைநம்பிக்கை, பாவமன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண்சிசுவதைக்குத் தடை என இசுலாமியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

எதிர்ப்பு

இசுலாமிய வரலாற்றுப்படி, முகம்மது நபியை இறைத்தூதர் என அவரது மனைவி கதீஜா தான் முதலில் நம்பினார். கதீஜாவை தொடர்ந்து முகம்மது நபியின் சிறிய தந்தை மகன் அலி இப்னு அபி தலிப், நெருங்கிய நண்பரான அபு பக்கர் மற்றும் வளர்ப்பு மகன் சைத் அவரை நபிகளாக கருத ஆரம்பித்தனர். பொ.ஊ. 613-ஆம் வருடத்தில், முகமது பொதுமக்களுக்கு போதனை புரிய ஆரம்பித்தார்(Quran 26:214). மெக்காவை சேர்ந்த பலர் அவரை புறக்கணித்தனர் மற்றும் கேலி செய்தனர் எனினும், சிலர் அவரை பின்பற்ற ஆரம்பித்தனர். பெரிய வணிகர்களின் தம்பிகள் மற்றும் மகன்கள், குலத்தில் பெரும் பதவியை பறிகொடுத்தவர்கள் மற்றும் அடைய முடியாதோர் மற்றும் நலிந்த அயல்நாட்டினர் - என மூன்று வகையானவர்களே இசுலாத்தில் முதலில் இணைந்தனர்.

சிலை வழிபாடு மற்றும் பல இறைக்கொள்கை பின்பற்றிய மக்காவின் முன்னோரை முகம்மது நபி கண்டித்ததை தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதாக இப்னு சையிது கூறுகிறார். ஆயினும், அவருக்கு எதிர்ப்பு ஆரம்பித்ததற்கான காரணம் அவரது பொது போதனை என குரானிய விளக்கங்களில் கூறப்படுகிறது.அந்நகரை ஆள்பவர்கள் மற்றும் குலங்களுக்கு, அவர்களின் பிடியில் இருந்த செல்வமதிப்புள்ள காபா மற்றும் அதனை சுற்றி அமைந்த முந்தைய மதத்தை, பலர் பின்பற்றுவதை முகம்மது நபி எதிர்க்கிறார் என்பது அச்சுறுத்தலாக தெரிந்தது.மக்காவின் முந்தைய மதத்தை முகம்மது நபி கண்டிப்பதை, அவரது குலமான குரைஷ்க்கு பிடிக்கவில்லை. காரணம், அவர்கள் தான் காபாவின் காப்பாளர்களாக இருந்து வந்தவர்கள்.வணிகர்கள் மத்தியில் பெரும்பதவி மற்றும் திருமணம் மூலம் முகம்மது நபியைத் தடுத்து நிறுத்த சில செல்வந்தர்கள் முயன்றனர், எனினும் அவ்விரண்டையும் முகம்மது நபி மறுத்தார்.

முகம்மது நபி மற்றும் அவரை பின்பற்றியவர்களை பலர் துன்புறுத்தினர். அபு ஜஹ்ல் எனும் மக்காவின் தலைவரின் அடிமையான சுமையா பின்த் கபாப் எனும் பெண் தான் இசுலாத்தின் முதல் தியாகி ஆவார். இசுலாத்தைத் துறக்கக் கூறி அவளை ஈட்டியால் குத்திக் கொன்றனர். இசுலாத்தில் இருந்து மதம் மாற வற்புறுத்தி வேறொரு அடிமையான பிலால் இப்னு ரிபாவின் மார்பில் கல்லை வைத்துக் கொடுமை படுத்தினார் உமையா இப்னு கலப். முகம்மது நபி பனு ஹாஷிம் இனத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு யாரும் தீங்கு இழைக்கவில்லை

பொ.ஊ. 615-ஆம் ஆண்டில் முகம்மது நபியைப் பின்பற்றிய சிலர் எத்தியோபியாவின் அக்குசுமைட் பேரரசிற்குப் புலம்ப்ப்பெயர்ந்தனர். அங்கே, எத்தியோபியாவின் கிறிஸ்துவ பேரரசர் ஆஷாமா இப்னு அப்ஜர் பாதுகாப்பில் ஓர் சிறிய குடியிருப்பை உருவாக்கினர். இவ்வாறு இருவேறு புலம்பெயர்தலை இப்னு சாத் கூறுகிறார். அவர் கூறுகையில், ஹிஜ்ராவிற்கு முன்னரே அதில் பல இசுலாமியர்கள் மக்காவிற்குத் திரும்பியதாகவும், மற்றும் அடுத்த குழு இவர்களை மதினாவில் சேர்ந்தனர். எனினும், இப்னு ஹிஷாம் மற்றும் தபரி எத்தியோபியாவிற்கு ஒரே புலம்பெயர்தல் நடைபெற்றதாகக் கூறுகின்றனர். மக்காவில் இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளே, தன்னை பின்பற்றுபவர்களை அபிசீனியாவில் உள்ள கிறிஸ்த்துவர்கள் மத்தியில் குடியேறும் முடிவை முகமது எடுத்திருக்கலாம் என்பதும், இவர்களின் கூறுதல்களும் ஒற்று போகின்றன.

அல்-தபாரியில் பாதுகாக்கப்பட்ட உர்வாவின் கடிதத்தின்படி, மக்காவில் உமர் மற்றும் ஹம்ஸா இஸ்லாத்திற்கு மதம் மாறியப்பின், பல இசுலாமியர்கள் தங்களின் சொந்த ஊரிற்குத் திரும்ப தொடங்கினர். இருப்பினும், இசுலாமியர்கள் எதியோப்பியாவிலிருந்து மக்கா திரும்பியதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இந்த காரணத்தை அல்-வகிடி, இப்னு சாத் மற்றும் தபரி கூறுகின்றனர், ஆனால், இப்னு ஹிஷம் மற்றும் இப்னு இஷாக் கூறவில்லை.

53:19 இனி நீங்கள் சற்றுச் சொல்லுங்கள்: இந்த ‘லாத்’, ‘உஸ்ஸா’ ; 53:20 மற்றும் மூன்றாவது தேவதையான ‘மனாத்’ ஆகியவற்றின் உண்மை நிலை பற்றி நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா? 53:21 ஆண்மக்கள் உங்களுக்கும், பெண்மக்கள் இறைவனுக்குமா? 53:22 அப்படியென்றால், இது ஒரு மோசடியான பங்கீடேயாகும்! 53:23 உண்மையில், இவையெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட சில பெயர்களேயன்றி வேறெதுவுமில்லை. இவற்றிற்கு இறைவன் எந்த ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. உண்மை யாதெனில், மக்கள் வெறும் ஊகத்தையே பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். மனம்போன போக்கில் செல்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களின் அதிபதியிடமிருந்து அவர்களுக்கு வழிகாட்டல் வந்துவிட்டிருக்கின்றது.

." இந்த "நாரைகளின் கதை"(மொழிபெயர்ப்பு: قصة الغرانيق, Qissat al Gharaneeq) எனும் நிகழ்வு தான் "சாத்தானிக் வெர்சஸ்" என்று அறியப்படுகிறது. இந்த கதையின்ப்படி, இது முகம்மது நபி மற்றும் மக்காவினர் மத்தியில் இணக்கம் ஏற்பட வழிவகுத்தது, மற்றும் அபிசீனியா சென்ற இசுலாமியர்கள் வீடு திரும்ப வழி வகுத்தது.

குறிப்பிடத்தக்க சமகால அறிஞர்கள் இந்த கதை மற்றும் வரிகளை மறுத்துள்ளனர். பின்னர், இந்த நிகழ்வுக்கு சில ஒப்புதல்கள் வரத்தொடங்கின, எனினும், 10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் இந்த நிகழ்விற்கு கடும் எதிர்ப்பு தொடர்கிறது. இந்த கதை மற்றும் வரிகளை எதிர்ப்பது மட்டுமே இசுலாமிய நிலை என கருதும் அளவிற்கு எதிர்ப்புகள் தொடர்கின்றன.

617ஆம் ஆண்டு, மக்ஸும் மற்றும் பனு அப்து-ஷம்ஸ் எனும் இரு முக்கிய குரைஷ் குலத்தின் தலைவர்கள், தங்களது வணிகரீதியான எதிரியான பானு ஹஷிம் குலத்திற்கு எதிராகப் புறக்கணிப்பு நிகழ்த்தினர். முகமதுக்கு கொடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பை பனு ஹாஷிம் திரும்பப் பெறவே இந்தப் புறக்கணிப்பு நிகழ்ந்தது. இந்தப் புறக்கணிப்பு மூன்று வருடங்கள் நீடித்தது, எனினும், இதன் கொள்கையில் வெற்றிபெறாமல் சரிந்தது. இந்தக் காலகட்டத்தில் முகமது புனித பயண மாதங்களில் மட்டுமே அறவுரை கூற முடிந்தது. ஏனெனில், இந்த மாதங்களில் மட்டுமே அரேபியர்கள் மத்தியில் சண்டைகள் நிறுத்திவைக்க பட்டிருந்தன.

இஸ்ரா மற்றும் மிஹ்ராஜ்

முகம்மது நபி 
முகமது பயணித்த தூரத்து மசூதியாகக் கருதப்படும் இடத்தில், 705-ஆம் ஆண்டு, அல்-அக்ஸா மசூதி கட்டப்பட்டது. இது ஜெருசேலத்தில் உள்ள அல்-ஹரம் அஷ்-ஷரிப் வளாகத்தின் ஓர் பகுதியாகும். இசுலாமியர்களுக்கு உலகின் மூன்றாவது புனிதத் தலமாக இந்த அல்-ஹரம் அஷ்-ஷரிப் கருதப்படுகிறது.

இசுலாமிய வரலாற்றின்படி, "இஸ்ரா மற்றும் மிஃராஜ் என்னும் இனிய இரவு பயணத்தில், சொர்க்கம் மற்றும் நரகம் பார்வையிட்டார் முகம்மது நபி(சல்).

17:1 மிகத் தூய்மையானவன்; தன் அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன்! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஸ்ஜித் வரையில்! அதன் சுற்றுப்புறங்களை அவன் அருள்வளம் மிக்கதாய் ஆக்கினான். எதற்காக அழைத்துச் சென்றானெனில், தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காண்பிப்பதற்காக! உண்மையில் அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 17:

முந்தைய இறைத்தூதர்களான ஆபிரகாம், மோசஸ், மற்றும் இயேசு ஆகியோருடன் உரையாடினார். முகமதின் வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதிய இப்னு இஷாக், இந்த நிகழ்வை ஓர் ஆன்மீக அனுபவமாக வழங்கியுள்ளார். பின்வந்த அல்-தபரி மற்றும் இப்னு கதிர் போன்ற வரலாற்றாசிரியர்கள், இதனை ஓர் உடல்சார்ந்த அனுபவமாக வழங்கியுள்ளனர். மக்காவில் உள்ள ஓர் புனித இடத்திலிருந்து "அல்-பைது ல-மமூர்" எனும் காபாவின் வானுலக மாதிரிக்கு சென்ற பயணமே இஸ்ரா மற்றும் மிராஜ் என்கின்றனர் சில மேற்கத்திய அறிஞர்கள். பின்பு வந்த அறிஞர்கள் இதனை மக்காவில் இருந்து ஜெருசேலம் சென்ற பயணம் என்றே குறிப்பிடுகின்றனர்.

மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறல்.

முஹம்மது நபி நபித்துவம் வழங்கப்பட்டு பதினான்காம் வருடம் இறைவனின உத்தரவுப்படி தன் உற்ற தோழர் அபூபக்கர்ருடன் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) குடிபெயர்ந்து சென்றார். இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட பொ.ஊ. 622ம் வருடம் இசுலாமிய நாட்காட்டியின் முதல் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது.

மதீனா வாழ்க்கை

மதீனா நகரில் அனைத்து மக்களும் முகம்மது நபியை வரவேற்றனர். முகம்மது நபி தமது ஒட்டகம் சென்று அமர்ந்த அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் தமது தங்குமிடத்தை அமைத்தார். முகம்மது நபி தமது தங்குமிடத்திற்கு அருகில் தொழுகைக்கு கட்டியப் பள்ளிவாசல் அல்-மஸ்ஜித் அந்-நபவி (முகம்மது நபி கட்டிய பள்ளிவாசல்) என்று அழைக்கப்படுகிறது. மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களுக்கும் மதீனா நகர அன்சாரிகளுக்கும் சகோதரத்துவ ஒப்பந்தம் ஏற்படுத்தினார். மேலும் மதீனா யூதர்களுடன் நட்புறவு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.

முகம்மது நபியின் போர்கள்

மக்கா எதிரிகள் பல நிலைகளிலும் முகம்மது நபிக்குத் தொல்லைக் கொடுத்தார்கள். அவர்களைச் சமாளிக்க முகம்மது நபி பல போர்களில் ஈடுபட்டார். பதுருப் போர், உஹத் யுத்தம், கைபர் போர், அகழ்ப்போர், தபூக் போர், ஹுனைன் போர் உள்ளிட்ட பல போர்களில் முகம்மது நபி ஈடுபட்டார்.

மக்கா வெற்றி

48:27 உண்மை யாதெனில், அல்லாஹ் தன் தூதருக்கு உண்மையான கனவையே காட்டியிருந்தான். அதுவோ முற்றிலும் சத்தியத்திற்கு ஏற்பவே இருந்தது. அல்லாஹ் நாடினால் நிச்சயம் நீங்கள் சங்கைமிகு பள்ளிவாசலில் முழு அமைதியுடன் நுழைவீர்கள்; உங்கள் தலைமுடியை மழிப்பீர்கள் அல்லது குறைப்பீர்கள்; மேலும், உங்களுக்கு எந்த அச்சமும் இருக்காது. நீங்கள் எதை அறியாதிருந்தீர்களோ அதை அவன் அறிந்திருந்தான். எனவே அந்தக் கனவு நிறைவேறுவதற்கு முன்பாக அண்மையிலுள்ள இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.

முகம்மது நபி ஹிஜ்ரி 8 இல் ரமலான் 17 அன்று (பொ.ஊ. 630) மக்கா நகருக்கு தமது படையினருடன் அணிவகுத்துச் சென்றார். இராணுவ சண்டை இல்லாமலேயே மக்கா நகரம் முகம்மது நபியின் வசம் வந்தது.

இறுதிக் காலம்

இறுதி ஹஜ்

மக்காவில் இருந்து மதீனா வந்த பின்னர் பத்து வருடங்கள் கழித்து முகம்மது நபி தமது இறுதி ஹஜ் கடமையை மக்காவிற்கு சென்று நிறைவேற்றியப் பின்னர் மதீனா திரும்பினார். அதில் தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.

இறப்பு

தமது கடைசி ஹஜ் யாத்திரைக்கு சில மாதங்களுக்கு பிறகு, முகம்மது காய்ச்சல், தலைவலி மற்றும் பலவீனத்தால் பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்டார். அவர் பொ.ஊ. 632 ஆம் வருடம் சூன் 8 ஆம் தேதியன்று, மதினாவில் 62 அல்லது 63 வது வயதில், அவரது மனைவி ஆயிஷாவின் வீட்டில் மரணமடைந்தார், அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.

முகமதுநபி(ஸல்) திருமணம் செய்த பெண்கள்

33:28 நபியே! நீர் உம்முடைய மனைவிமார்களிடம் கூறிவிடும்: “நீங்கள் உலகவாழ்வையும், அதன் அழகையும் விரும்புகிறீர்கள் என்றால், வாருங்கள்! நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பிவிடுகின்றேன். 33:29 ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், மறுஉலகையும் நாடுகிறீர்களென்றால் (அறிந்து கொள்ளுங்கள்) உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை தயார் செய்து வைத்துள்ளான்.

  1. கதிஜா
  2. சௌதா பிந்த் சமா
  3. ஆயிஷா
  4. ஹவ்சா பிந்த் உமர்
  5. சைனாப் பிந்த் குசைமா
  6. உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா
  7. யுவேரியா பிந்த் ஹரித்
  8. உம் ஹபிபா ரம்லா
  9. சபியா பிந்த் ஹீயாய்
  10. மைமுனா பிந்த் அல் ஹரித்

நபித்தோழர்கள்

  1. அபூபக்கர் (ரலி)
  2. உமர் (ரலி)
  3. உதுமான் (ரலி)
  4. அலீ (ரலி)
  5. பிலால் (ரலி)
  6. ஜாஃபர் இப்னு அபி தாலிப் (ரலி)

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Tags:

முகம்மது நபி வாழ்க்கைமுகம்மது நபி யானைப்படையின் அழிவுமுகம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறல்.முகம்மது நபி மதீனா வாழ்க்கைமுகம்மது நபி இறுதிக் காலம்முகம்மது நபி முகமதுநபி(ஸல்) திருமணம் செய்த பெண்கள்முகம்மது நபி நபித்தோழர்கள்முகம்மது நபி இவற்றையும் பார்க்கமுகம்மது நபி குறிப்புகள்முகம்மது நபி உசாத்துணைமுகம்மது நபி வெளி இணைப்புகள்முகம்மது நபிஅரபு மொழிஅராபியத் தீபகற்பம்அராபியர்ஆதம் (இசுலாம்)இசுலாமில் இயேசுஇசுலாம்இப்றாகீம்தவ்ஹீதுபகாய் சமயம்பொது ஊழிமக்காமுஸ்லிம்மூசா

🔥 Trending searches on Wiki தமிழ்:

அட்சய திருதியைபழனி முருகன் கோவில்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கள்ளுமுதலாம் இராஜராஜ சோழன்ஆளுமைமருதம் (திணை)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019ஆசாரக்கோவைமலைபடுகடாம்சுற்றுச்சூழல் பாதுகாப்புசெம்மொழிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்ஸ்ரீலீலாமகாவீரர்தமிழர் பண்பாடுமழைகருக்காலம்திருக்குர்ஆன்திணை விளக்கம்கோத்திரம்கலித்தொகைவிண்டோசு எக்சு. பி.அழகர் கோவில்தரணிமாடுவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்கங்கைகொண்ட சோழபுரம்முத்துராமலிங்கத் தேவர்ஆண்டாள்அறுசுவைமண்ணீரல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பிரேமலுபாவலரேறு பெருஞ்சித்திரனார்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்சங்க காலப் புலவர்கள்எட்டுத்தொகைசிவவாக்கியர்சென்னைசங்க இலக்கியம்நீக்ரோஆய்த எழுத்து (திரைப்படம்)கருக்கலைப்புகுருதிச்சோகைமுத்துராஜாதமிழர் பருவ காலங்கள்ஆத்திசூடிர. பிரக்ஞானந்தாஒத்துழையாமை இயக்கம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்திரௌபதி முர்முசிங்கப்பூர்அண்ணாமலை குப்புசாமிமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)தேர்தல் மைதிருமலை நாயக்கர்முலாம் பழம்அவதாரம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஹர்திக் பாண்டியாசாக்கிரட்டீசுஅறுபடைவீடுகள்தாஜ் மகால்கிராம ஊராட்சிசத்ய பிரதா சாகுநவரத்தினங்கள்தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022பெயர்ச்சொல்கீர்த்தி சுரேஷ்வேலு நாச்சியார்இந்தியப் பொதுத் தேர்தல்கள்வைகைகுற்றாலக் குறவஞ்சிஉரைநடைதிரிசாகல்வி உரிமைஇந்திய தேசிய சின்னங்கள்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்🡆 More