டி. எம். கிருஷ்ணா

டி.

எம். கிருஷ்ணா (T. M. Krishna, பிறப்பு:22 சனவரி 1976) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.

டி. எம். கிருஷ்ணா
டி. எம். கிருஷ்ணா
டி. எம். கிருஷ்ணா
பிறப்புசனவரி 22, 1976 (1976-01-22) (அகவை 48)
சென்னை , தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிகருநாடக இசைப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1988–தற்போது வரை
பெற்றோர்டி.எம்.ரங்காச்சாரி - பிரேமா ரங்காச்சாரி
வாழ்க்கைத்
துணை
சங்கீதா சிவகுமார்

ஆரம்பகால வாழ்க்கை

இவரின் தந்தை ஒரு தொழிலதிபர். தாய், கலாபீடம் எனும் பெயரில் ஒரு இசைப்பள்ளியை நடத்திவந்தார். ஆரம்பகால இசைப்பயிற்சியை பி. சீதாராம சர்மாவிடம் பெற்ற டி. எம். கிருஷ்ணா, பின்னர் செங்கல்பட்டு ரெங்கநாதனிடம் இசை பயின்றார். செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயரிடம் ஏழாண்டு காலம் இசைப்பயிற்சியை பெற்றுள்ளார் டி. எம். கிருஷ்ணா.

தொழில் வாழ்க்கை

பாடகராக இருப்பதோடு, பாடக் கற்றுத்தரும் ஆசிரியராகவும் விளங்குகிறார். இசையமைப்பாளராகவும், இசை குறித்து எழுதும் எழுத்தாளராகவும் இருக்கிறார். உலகம் முழுதும் பயணித்து இசை நிகழ்ச்சிகளில் பாடுகிறார்; இசை பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருகிறார்.

இலங்கையில் இசை நிகழ்ச்சிகள்

இலங்கை கொழும்பில் 2010ல் இசைக் கச்சேரி செய்த டி. எம். கிருஷ்ணா, 2011ல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அக்டோபர் மூன்றாம் நாள் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த அவரது சுமார் மூன்று மணி நேர கச்சேரிக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியின் செயற்பாடுகள் அவரைக் கவர்ந்தன. அக்கல்லூரியின் முன்னேற்றத்துக்கு பாடுபடப்போவதாக கிருஷ்ணா தெரிவித்தார்.

விருதுகள்

  • சிறந்த முக்கியக் கலைஞர் - யூத் அசொசியேசன் போர் கிளாசிக்கல் மியூசிக், 1989
  • திறமைமிகு பாடகர் (25 வயதிற்குக் கீழ்)- மியூசிக் அகாதெமி (சென்னை), 1994
  • சிறந்த இளம் பாடகர் - கிருஷ்ண கான சபா, 1995
  • சிறந்த இசைக் கலைஞர் - நாரத கான சபா, 1995
  • அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் விருது - மியூசிக் அகாதெமி (சென்னை), 1996
  • யுவ கலா பாரதி - பாரத் கலாச்சார், 1997
  • ஸ்ரீரங்கம் கோபாலரத்தினம் விருது - மியூசிக் அகாதெமி, 1998
  • ராமகிருஷ்ண ஐயர் விருது - மியூசிக் அகாதெமி, 1999
  • சிறந்த கலைஞர் - மியூசிக் அகாதெமி, 2001
  • இளைஞர் விருது - மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளை, 2001
  • கல்கி கிருஷ்ணமூர்த்தி விருது, 2001
  • இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது, 2014
  • ரமோன் மக்சேசே விருது, 2016

மேற்கோள்கள்

வெளியிணைப்பு

Tags:

டி. எம். கிருஷ்ணா ஆரம்பகால வாழ்க்கைடி. எம். கிருஷ்ணா தொழில் வாழ்க்கைடி. எம். கிருஷ்ணா இலங்கையில் இசை நிகழ்ச்சிகள்டி. எம். கிருஷ்ணா விருதுகள்டி. எம். கிருஷ்ணா மேற்கோள்கள்டி. எம். கிருஷ்ணா வெளியிணைப்புடி. எம். கிருஷ்ணா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பள்ளிக்கூடம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தொல்காப்பியம்நிணநீர்க் குழியம்தமிழிசை சௌந்தரராஜன்திராவிட இயக்கம்வடலூர்அஜித் குமார்கஞ்சாதங்கராசு நடராசன்முத்தரையர்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்தமிழ் இலக்கியப் பட்டியல்முள்ளம்பன்றிபர்வத மலைதிருநங்கைபறையர்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பாரதிதாசன்மதராசபட்டினம் (திரைப்படம்)கௌதம புத்தர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அம்பேத்கர்நிணநீர்க்கணுவைரமுத்துஉலா (இலக்கியம்)பாலின விகிதம்சித்ரா பௌர்ணமிநெல்அடல் ஓய்வூதியத் திட்டம்சச்சின் (திரைப்படம்)நாச்சியார் திருமொழிவைதேகி காத்திருந்தாள்மூவேந்தர்கோயம்புத்தூர்மதுரை நாயக்கர்கட்டுவிரியன்இளங்கோவடிகள்சிறுதானியம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்நீர்போக்கிரி (திரைப்படம்)குறிஞ்சிப் பாட்டுஒன்றியப் பகுதி (இந்தியா)கட்டுரைதிருவிளையாடல் புராணம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்நாயக்கர்இன்குலாப்உவமையணிதிருவாசகம்தமிழ்த்தாய் வாழ்த்துஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஐங்குறுநூறுவிராட் கோலிஜெயகாந்தன்தசாவதாரம் (இந்து சமயம்)நயினார் நாகேந்திரன்நவக்கிரகம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைபரிதிமாற் கலைஞர்சீனாகொடைக்கானல்இந்திய வரலாறுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ஆகு பெயர்விசயகாந்துபஞ்சபூதத் தலங்கள்சிவாஜி (பேரரசர்)அறம்ஏப்ரல் 25வரலாற்றுவரைவியல்இந்தியன் (1996 திரைப்படம்)அம்மனின் பெயர்களின் பட்டியல்இந்திய தேசியக் கொடிமுக்கூடற் பள்ளுரத்னம் (திரைப்படம்)🡆 More