கொழும்பு: இலங்கையின் வர்த்தகத் தலைநகரம்

கொழும்பு (ஆங்கில மொழி: Colombo, சிங்களம்: කොළඹ) இலங்கையின் சனத்தொகை அடிப்படையில் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலை நகரமும் ஆகும்.

இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

கொழும்பு
கொழும்பின் ஒரு தோற்றம்.
கொழும்பின் ஒரு தோற்றம்.
இடதுபுற மேலிருந்து வலஞ்சுழியாக: இலங்கை வங்கி கோபுரம், கொழும்பு வான்பின்னணிக் காட்சி, கங்காராமையா கோவில், காலி முகத்திடல், பழைய பாராளுமன்றம், கொழும்பு வான்பின்னணிக் காட்சி (கங்காராமையா கோவில்), இலங்கை வங்கி கோபுரமும் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்களும், விடுதலைச் சதுக்கம், உலக வர்த்தகமையம் கொழும்பு.
கொழும்பு: சொற்பிறப்பு, வரலாறு, புவியியல் மற்றும் காலநிலை
கொழும்பு: சொற்பிறப்பு, வரலாறு, புவியியல் மற்றும் காலநிலை
கொழும்பு
மாகாணம்
 - மாவட்டம்

 - கொழும்பு
அமைவிடம் 6°56′N 79°52′E / 6.93°N 79.86°E / 6.93; 79.86
பரப்பளவு
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்
37.31  ச.கி.மீ

 - 0-10 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
நகரத் தந்தை எ. ஜே. எம். முசாம்மில்
துணை நகரத் தந்தை பட்ராணி ஜெயவர்த்தனா
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 10001-10015
 - +9411
 - WP
இணையத்தளம்: www.cmc.lk/

கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற சிங்கள மொழிப் பெயரிலிருந்து மருவியதாகும். [சான்று தேவை] (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் கிறிஸ்தோபர் கொலம்பசை நினைவுகூரும் வகையில் கொலோம்போ என மாற்றப்பட்டது. கொழும்பின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396ஆகக் காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு, இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகும். கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50'இல் அமைந்துள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கொழும்பிலேயே அமைந்துள்ளது. இது தென்னாசியாவின் முதல் வானொலி நிலையமாகும். கொழும்பு பல்கலைக்கழகம், பௌத்த பாளி பல்கலைக்கழகம், தொழில்சார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் கொழும்பு நகர எல்லைக்குள்ளேயே அமைந்துள்ளன. மேலும், கொழும்பின் புறநகர்ப் பகுதியில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பனவும் அமைந்துள்ளன. கொழும்பில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனம், கடற்றொழில் மற்றும் கடல்சார் பொறியியலுக்கான தேசிய நிறுவனம், சமூக அபிவிருத்திக்கான தேசிய நிறுவனம், அக்குவைனாஸ் பல்கலைக்கழகக் கல்லூரி, தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் என்பனவும் பட்டக்கல்வி வழங்கும் நிறுவனங்களாக இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தவிர சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொலைக்கல்வி படிப்பகங்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகங்களும், பட்டப்படிப்பு நிறுவனங்களும் அமைந்துள்ளன.

சொற்பிறப்பு

கொழும்பு என்ற பெயர் 1505ல் போர்த்துகீசியர்களால் முதலில் இந்நகரத்துக்கு வைக்கப்பட்டது எனக் கருதப்படுகிறது. இது பழைய சிங்களமான கொலன் தொட என்பதில் இருத்து எடுக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. கொலன் தொட என்றால் கெலனி(களனி) ஆற்றின் துறைமுகம் என்று பொருள். கொழும்பு என்ற பெயர் சிங்கள பெயரான கொள-அம்ப-தொட்ட என்பதிலிலுருந்தும் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் பொருள் மாந்தோப்புள்ள துறைமுகம் என்பதாகும் கிறித்தோபர் கொலம்பசு நினைவாகக் கொழும்பு என்று பெயரிட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது [சான்று தேவை]. இத்தாலிய கடலோடியான கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானிய மன்னனின் சார்பாக அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் பல ஆண்டுகள் போர்ச்சுகலில் தங்கியிருந்தார். அவரின் போர்த்துகீசிய பெயர் கிறிஸ்டாவோ கொழும்பு. இவர் மேற்கு நோக்கிப் பயணித்து இந்தியாவை அடைய திட்டமிட்டார். அச்சமயத்தில் கிழக்கு நோக்கிப் பயணித்த போர்த்துகீசிய மாலுமியான வாஸ்கோ ட காமா இந்தியாவின் கிழக்குகரையில் உள்ள கோழிக்கோடு நகரை 1498 மே 20ல் அடைந்தார். அதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே கொலம்பசு 1492 அக்டோபர் 12ல் அமெரிக்காவை கண்டுபிடித்தார். அச்சமயத்தில் போர்த்துகிசீயரான லொரன்சோ டி அல்மெய்டா காலி துறைமுகத்தை 1505ல் அடைந்தார். 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய சிங்கள இலக்கண நூலான சிடசங்கரவ கொழம்ப என்பதற்கு துறைமுகம் அல்லது கோட்டை என்று பொருள் கூறுகிறது. அதனால் கொழம்ப என்பதே கொழும்புவுக்கான மூலமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

வரலாறு

கொழும்பு இயற்கையான ஓர் துறைமுகத்தைப் பெற்றிருப்பதால், 2000 வருடங்களுக்கு மேலாக இது கிரேக்கர், பாரசீகர், அராபியர் மற்றும் சீன வணிகர்களால் அறியப்பட்டிருந்தது. 14ம் நூற்றாண்டில் இத்தீவிற்கு பணயம் செய்த இப்னு பதூதா இதனை "கலன்பு" எனக்குறிப்பிட்டார். வர்த்தகத்தை முதன்மை ஆதாரமாகக் கொண்ட பல்லின இசுலாமியர்கள், 8ம் நூற்றாண்டுகளில் கொழும்பில் தங்கி வாழத் தொடங்கினர். அவர்களின் வியாபாரத்திற்கும், சிங்கள இராசதானிகளுக்கும் வெளியுலகுக்கும் இடையிலான வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும் துறைமுகம் உதவியது. அவர்களின் சந்ததியர் தற்போது உள்ளூர் இலங்கைச் சோனகருடன் ஒன்றாகிவிட்டனர்.

போத்துக்கேயர் காலம்

லொரன்சோ டி அல்மெய்டா தலைமையிலான போத்துக்கேய நாடுகாண் பயணிகள் 1505இல் முதலாவதாக இலங்கையை வந்தடைந்தனர். அவர்கள் கோட்டை அரசன் எட்டாம் பராக்கிரமபாகுவுடன் (1484–1508) கறுவாய் வர்த்தகத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டமையால், கொழும்பு உட்பட்ட தீவின் கரையோரப் பகுதியில் வர்த்தகம் செய்ய அவர்களுக்கு வழியேற்பட்டது.

ஒல்லாந்தர் காலம்

1638இல் ஒல்லாந்து கண்டியில் அரசாண்ட இரண்டாம் இராசசிங்க மன்னனுடன் ஒப்பந்தம் செய்தனர். அதன்படி, போர்த்துக்கேயருக்கு எதிரான போரில் அரசனுக்கு உதவியும், இலங்கைத் தீவில் பாரிய வர்த்தக பொருட்களின் ஏகபோக உரிமையும் பரிமாறப்பட்டன. போர்த்துக்கேயர் ஒல்லாந்தரையும், கண்டியினரையும் எதிர்த்தபோதும், அவர்களின் பலமிக்க இடங்கள் மெதுவாக 1639 ஆரம்பத்தில் தேற்கடிக்கப்பட்டன.

ஆங்கிலேயர் காலம்

1796இல் பிரித்தானியர் கொழும்பைக் கைப்பற்றினர். இது பிரித்தானிய படைகளின் புறக்காவலாகக் கண்டி இராட்சியம் கைப்பற்றும் 1815 இல் வரை காணப்பட்டது. ஆங்கிலேயர் கொழும்பை தங்கள் புதிதாக உருவாக்கிய பிரித்தானிய இலங்கையின் முடிக்குரிய மண்டல தலைநகராக்கினர். போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் கொழும்பை முக்கிய படை அரணாகப் பாவித்ததுபோல் அல்லாமல், ஆங்கிலேயர் வீடுகளையும் மக்கள் கட்டுமானங்களையும் கோட்டையினைச் சுற்றிக் கட்டி, தற்போதைய கொழும்பு நகரை உருவாக்கினர்.

புவியியல் மற்றும் காலநிலை

கொழும்பின் புவியியல் நிலமும் நீரும் கலந்த ஒன்றாகும். நகரத்தில் பல கால்வாய்கள் காணப்படுகின்றன. நகரத்தின் இதயப்பகுதியில் 160 ஏக்கர் பரப்பில் உள்ள பெய்ரா ஏரி காணப்படுகின்றது. இவ்வேரி கொழும்பு நகரை பாதுகாக்க குடியேற்றவாதிகளால் பயன்படுத்தப்பட்டது. நகரின் வடக்கு வடகிழக்கு எல்லையானது களனி ஆற்றினால் வரையறுக்கபடுகிnறது. கொழும்பு கோப்பென் வகைப்பாட்டு முறையில் வெப்பமண்டலத்துக்குரிய காலநிலையை பெற்றுள்ளது. ஆண்டு முழுதும் அதிக வெப்பமில்லா சீரான காலநிலையை பெற்றுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகமாக இதன் வெப்பநிலை 31 டிகிரி செல்சியசு அளவுக்கு இருக்கும் . பருவக்காலமான மே-ஆகத்து வரையும் அக்டோபர்-சனவரி வரையும் அதிக மழைப்பொழிவை பெறும். ஆண்டு சராசரி மழையளவு 2,400 மிமீ ஆகும் .

தட்பவெப்ப நிலைத் தகவல், Colombo, Sri Lanka
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.2
(95.4)
35.6
(96.1)
36.0
(96.8)
35.2
(95.4)
32.8
(91)
33.5
(92.3)
32.2
(90)
32.2
(90)
32.2
(90)
33.6
(92.5)
34.0
(93.2)
34.2
(93.6)
36.0
(96.8)
உயர் சராசரி °C (°F) 30.9
(87.6)
31.2
(88.2)
31.7
(89.1)
31.8
(89.2)
31.1
(88)
30.4
(86.7)
30.0
(86)
30.0
(86)
30.2
(86.4)
30.0
(86)
30.1
(86.2)
30.3
(86.5)
30.64
(87.16)
தினசரி சராசரி °C (°F) 26.6
(79.9)
26.9
(80.4)
27.7
(81.9)
28.2
(82.8)
28.3
(82.9)
27.9
(82.2)
27.6
(81.7)
27.6
(81.7)
27.5
(81.5)
27.0
(80.6)
26.7
(80.1)
26.6
(79.9)
27.38
(81.29)
தாழ் சராசரி °C (°F) 22.3
(72.1)
22.6
(72.7)
23.7
(74.7)
24.6
(76.3)
25.5
(77.9)
25.5
(77.9)
25.2
(77.4)
25.1
(77.2)
24.8
(76.6)
24.0
(75.2)
23.2
(73.8)
22.8
(73)
24.11
(75.4)
பதியப்பட்ட தாழ் °C (°F) 16.4
(61.5)
18.9
(66)
17.7
(63.9)
21.2
(70.2)
20.7
(69.3)
21.4
(70.5)
21.4
(70.5)
21.6
(70.9)
21.2
(70.2)
21.0
(69.8)
18.6
(65.5)
18.1
(64.6)
16.4
(61.5)
பொழிவு mm (inches) 58.2
(2.291)
72.7
(2.862)
128.0
(5.039)
245.6
(9.669)
392.4
(15.449)
184.9
(7.28)
121.9
(4.799)
119.5
(4.705)
245.4
(9.661)
365.4
(14.386)
414.4
(16.315)
175.3
(6.902)
2,523.7
(99.358)
ஈரப்பதம் 69 69 71 75 78 79 78 77 78 78 76 73 75
சராசரி பொழிவு நாட்கள் 5 5 9 14 16 16 12 11 15 17 15 10 145
சூரியஒளி நேரம் 248.0 248.6 275.9 234.0 201.5 195.0 201.5 201.5 189.0 201.5 210.0 217.0 2,623.5
Source #1: World Meteorological Organization, Hong Kong Observatory
Source #2: NOAA

மக்கள் தொகையியல்

கொழும்பு பல்லின, பல கலாசார நகரம். கொழும்பின் சனத்தொகை சிங்களவர், தமிழர், இலங்கைச் சோனகர் போன்றோரைக் கொண்டு காணப்படுகின்றது. அத்துடன் சீனர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்துக்காரர், மலாயர், இந்திய வம்சாவழியினர் மற்றும் குறிப்பிட்டளவு வெளிநாட்டவர்களான ஐரோப்பியர்களும் எனப் பல்வேறுபட்ட இனக் குழுக்களையும் கொண்டு காணப்படுகின்றது. இது ஒரு சனத்தொகை கூடிய 642,163 மக்கள் வாழும் நகரமாகும். 1866 இல் கிட்டத்தட்ட 80,000 பேர் காணப்பட்டனர். 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது.

இல இனம் சனத்தொகை மொத்த %
1 சிங்களவர் 265,657 41.36
2 இலங்கைத் தமிழர் 185,672 28.91
3 இலங்கைச் சோனகர் 153,299 23.87
4 இலங்கையின் இந்தியத் தமிழர் 13,968 2.17
5 இலங்கை மலேயர் 11,149 1.73
6 பறங்கியர் 5,273 0.82
7 கொழும்புச் செட்டி 740 0.11
8 பரதர் 471 0.07
9 மற்றவர்கள் 5,934 0.96
10 மொத்தம் 642,163 100

அரசு

கொழும்பு: சொற்பிறப்பு, வரலாறு, புவியியல் மற்றும் காலநிலை 
புதிய பரோக் பாணியில் கட்டப்பட்டுள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடம் தற்போது குடியரசுத் தலைவரின் செயலகமாக விளங்குகிறது.
கொழும்பு: சொற்பிறப்பு, வரலாறு, புவியியல் மற்றும் காலநிலை 
கறுவாத் தோட்டத்திலுள்ள கொழும்பு நகர மன்றம்.

மாநகராட்சி

கொழும்பு தனக்கெனத் தனி அரசியலமைப்புக் கொண்ட மாநகராட்சியாகும். மேயரும் மாநகர மன்ற உறுப்பினர்களும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநகராட்சித் தேர்தல்கள்மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக வலது சாரி ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஆட்சியிலிருந்து வருகிறது. 2006ஆம் ஆண்டில் இக்கட்சியின் வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டு இக்கட்சியின் சார்பு பெற்ற சுயேட்சைக் குழுவினர் தேர்தல்களில் வென்றனர். உவைசு மொகமது இமிதியசு கொழும்பின் மேயராக நியமிக்கப்பட்டார்.

மாநகராட்சி கழிவுநீரகற்றல், சாலை பராமரிப்பு, கழிவு மேலாண்மை சேவைகளை வழங்கி வருகிறது. குடிநீர், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புச் சேவைகளுக்குத் தொடர்புடைய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை மற்றும் பல்வேறு தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

தேசியத் தலைநகரம்

போர்த்துக்கேய, டச்சு, பிரித்தானியக் குடியேற்றப்பகுதிகளாக இருந்த கடலோரப் பகுதிகளின் தலைநகரமாக 1700 களிலிருந்து இருந்து வந்துள்ளது. 1815இல் பிரித்தானியர்கள் கண்டி உடன்பாட்டின்படி முழுமையானத் தீவிற்கும் தலைநகரமாக விளங்கியது. 1980 களில் நிருவாகத் தலைநகரை ஸ்ரீ ஜெயவர்தனபுரம் கோட்டைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டது. இதன்படி இலங்கைப் பாராளுமன்றமும் பல அமைச்சகங்களும் துறை அலுவலகங்களும் இப்பகுதியில் கட்டப்பட்ட புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டன. இருப்பினும் இன்றளவிலும் பல அரசு அலுவலகங்கள் கொழும்பிலேயே உள்ளன.

வலயங்கள்

கொழும்பு 15 வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:

அஞ்சல் வலயம் உள்ளடங்கிய பகுதிகள்
கொழும்பு 1 கோட்டை
கொழும்பு 2 கொம்பனித் தெரு மற்றும் ஒன்றிய இடம்
கொழும்பு 3 கொள்ளுப்பிட்டி
கொழும்பு 4 பம்பலப்பிட்டி
கொழும்பு 5 ஹெவ்லொக் நகரம் மற்றும் கிருலப்பனை
கொழும்பு 6 வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை
கொழும்பு 7 கறுவாத் தோட்டம்
கொழும்பு 8 பொரல்லை
கொழும்பு 9 தெமட்டகொடை
கொழும்பு 10 மருதானை, மாளிகாவத்தை மற்றும் பஞ்சிகாவத்தை
கொழும்பு 11 புறக்கோட்டை
கொழும்பு 12 புதுக்கடை மற்றும் வாழைத் தோட்டம்
கொழும்பு 13 கொட்டாஞ்சேனை மற்றும் புளூமெண்டால்
கொழும்பு 14 கிராண்டுபாஸ்
கொழும்பு 15 முகத்துவாரம், மோதரை, மட்டக்குளி மற்றும் மாதம்பிட்டி

பொருளாதாரம்

பெரிய கூட்டுத்தாபனங்களின் தலைமையகங்கள் கொழும்பில் காணப்படுகின்றன. சில வேதியியல், ஆடைகள், கண்ணாடி, சீமெந்து, தோல் பொருட்கள், தளபாடம் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றின் தொழிற்கூடங்கள் இங்கு காணப்படுகின்றன. தெற்காசியாவின் இரண்டாவது உயரமான கட்டடமான உலக வர்த்தக மையம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த 40 மாடி இரட்டைக் கோபுரக் கட்டடம் நகரத்தின் நரம்பு போன்ற கோட்டை பகுதியில் அமைந்துள்ளது.

உட்கட்டமைப்பு

கொழும்பு: சொற்பிறப்பு, வரலாறு, புவியியல் மற்றும் காலநிலை 
உலக வர்த்தக மையத்தின் இரு கோபுரங்கள் மற்றும் வரலாற்றுப் புகழ் மிக்க கார்கீல்சு கட்டிடத்தின் தோற்றம்

கொழும்பு ஒரு நவீன நகரத்தின் பெரும்பாலான வசதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, கொழும்பின் உட்கட்டமைப்பு மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. மின்சாரம், தண்ணீர் மற்றும் போக்குவரத்து என்பன ஓரளவு நல்ல தரத்தில் உள்ளது. இலங்கையின் முக்கிய வணிக வளாகங்களில் பெரும்பாலானவை இங்கு உள்ளன. பல ஆடம்பரமான விடுதிகள், கூடலகங்கள் மற்றும் உணவகங்களும் இங்கு அமைந்துள்ளன. சமீப காலங்களில் நிலத்தின் விலை அதிகளவில் உயர்ந்ததன் காரணமாக அடுக்குமாடி வீடுகள் பல்கிப் பெருகி விட்டது.

கொழும்பு துறைமுகம்

கொழும்பு: சொற்பிறப்பு, வரலாறு, புவியியல் மற்றும் காலநிலை 
கொழும்பு துறையில் உள்ள கொள்கலன்கள்

இலங்கையின் பெரிய துறைமுகம் இந்நகரிலேயே அமைந்துள்ளது. குடியேற்ற காலத்தில் கொழும்பு துறைமுக நகரமாகவே அமைக்கப்பட்டது. இலங்கை கடற்படையின் கடற்படைத்தளம் இத்துறைமுகத்தில் உள்ளது. 2008ல் இத்துறைமுகம் 3.75 மில்லியன் எண்ணிக்கையுள்ள 20 அடி நீளமுள்ள கொள்கலன்களை கையாண்டது. இது 2007ல் கையாண்ட அளவை விட 10.6% அதிகமாகும். 3.75 மில்லியன் கொள்கலன்களில் 817,000 இலங்கையுடையதாகும், மற்றவை இங்கு வைத்துக் கப்பல்களுக்கு இடையே மாற்றப்பட்டதாகும். கொள்கலன்களை கையாளும் திறனைத் துறைமுகம் முழுஅளவில் நெருங்கிவிட்டாதல் இடப்பற்றாக்குறையை சமாளிக்க துறைமுகத்தின் தெற்குப்பகுதியில் விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. .

போக்குவரத்து

கொழும்பில் பொது போக்குவரத்து நல்ல முறையில் உள்ளது. பேருந்துகளை அரசும் தனியாரும் நடத்துகின்றனர். மூன்று முதன்மையான பேருந்து முனையங்கள் பேட்டை பகுதியில் உள்ளன. பாசுடின் மாவத்த தொலைதூர பேருந்துகளுக்கானது. மத்திய, குணசிங்கபுரா முனையங்கள் உள்ளூர் பேருந்துக்களுக்கானது. மத்திய பேருந்து நிறுத்தம் பேருந்துகளுக்கான மையமாகத் திகழ்கிறது.

கொழும்பு தொடருந்து மூலம் நாட்டின் பல இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கோட்டை தொடருந்து நிலையம் தொடருந்துகளுக்கான மையமாகத் திகழ்கிறது. 1970 வரை நகரில் டிராம் போக்குவரத்து இருந்தது. வாடகை மகிழுந்து, தானியங்கி மூவுருளி உந்து (மூன்று சக்கர வண்டி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது) போன்றவையும் நகர போக்குவரத்துக்கு உதவுகின்றன. தானியங்கி மூவுருளி உந்து தனிப்பட்டவர்களால் நடத்தப்படுகின்றன, வாடகை மகிழுந்து தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.

இரத்மலானை விமான நிலையம் அனைத்து உள்ளூர் விமான சேவைகளையும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் நகரிற்கு வழங்குகிறது.

    சாலைகள்
    பேருந்து
    தொடருந்து
  • பிரதான பாதை - கொழும்பிலிருந்து பதுளை வரை.
  • தெற்குப் பாதை - கொழும்பிலிருந்து மாத்தறை வரை.
  • வடக்குப் பாதை - கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையானது, இது பொல்காவல சந்தியில் பிரதான பாதை இருந்து விலகிச்செல்கிறது. தற்போது கொழும்பு - வவுனியா வரை மட்டுமே செயற்படுகிறது.
  • புத்தளம் பாதை - கொழும்பிலிருந்து புத்தளம் வரை.
  • களனிப் பள்ளத்தாக்குப் பாதை - கொழும்பிலிருந்து எட்டியாந்தோட்டை வரையானது, தற்போது அவிசாவெலை வரை மட்டுமே செயற்படுகிறது.
  • மன்னார் பாதை (முன்னதாக இலங்கை-இந்தியப்பாதை)- கொழும்பிலிருந்து தலைமன்னார் வரையானது, மதவாச்சிய சந்தியிலில் வடக்குப் பாதையிலிருந்து பிரிந்து செல்கிறது - செயற்பாட்டில் இல்லை.
    படகுச் சேவைகள்
  • ஓர் ஆடம்பரப் படகான ஸ்கோஷியா பிரின்ஸ், இந்தியாவின் தூத்துக்குடிக்கு ஒரு படகு சேவையை நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான படகுச் சேவைகள் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கல்வி

கொழும்பு கல்வி நிறுவனங்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டவை. கொழும்பில் பல பொதுப் பாடசாலைகளில் சில அரசாங்கத்திற்கும் சில தனியாருக்கும் சொந்தமானவை. இவற்றில் பல பிரித்தானிய ஆட்சிக்காலமான 1800களைச் சேர்ந்தவை.

கட்டடக்கலை

கொழும்பு நூற்றாண்டு கால மற்றும் பலதரப்பட்ட வடிவங்களையும் கொண்டு பல கட்டடக்கலைக் கொண்டு காணப்படுகின்றது. பல குடியேற்ற கால போத்துக்கேய, ஒல்லாந்து, பிரித்தானிய கட்டடங்களுடன் உள்நாட்டு பெளத்த, இந்து, இசுலாமிய, இந்திய மற்றும் தற்கால கட்டடக்கலைகள் கொண்ட கட்டடங்கள் காணப்படுகின்றன. நகரத்தின் மையப்பகுதியான "கோட்டை" பகுதியில் பலதரப்பட்ட கட்டடங்களைக் காணலாம். இங்கு புதிய வானளாவி மற்றும் 1700களில் கட்டப்பட்ட வரலாற்றுக் கட்டடங்களையும் காணலாம்.

பண்பாடு

வருடாந்த கலாசார நிகழ்வுகள்

கொழும்பின் மிக முக்கிய பிரதான கொண்டாட்டம் புத்தரின் பிறப்பு, ஞானமடைதல் மற்றும் இறப்பு ஆகிய எல்லாம் ஒரேநாளில் நிகழும் சம்பவ தினமாகும். சிங்களத்தில் இது வெசாக் என அழைக்கப்படுகிறது.

கிறித்தவம்

கொழும்பு நகரில் உள்ள கிறித்தவ சபைகளுள் கத்தோலிக்க சபை ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. அங்குதான் இலங்கையின் ஒரே உயர்மறைமாவட்டமான கொழும்பு உயர்மறைமாவட்டம் அமைந்துள்ளது. அதன் கீழ் தனித்தனி ஆயர்களின் கண்காணிப்பில் உள்ள பிற மறைமாவட்டங்கள் பின்வருமாறு:

  • அனுராதபுரம்
  • பதுளை
  • யாழ்ப்பாணம்
  • மட்டக்களப்பு
  • மன்னார்
  • திருகோணமலை
  • இரத்தினபுரி
  • கண்டி
  • காலி
  • சிலாபம்
  • குருணாகல்

முதலில் இலங்கை முழுவதும் இந்தியாவின் கொச்சி மறைமாவட்டத்தின் பகுதியாக இருந்தது. 1834, திசம்பர் 3ஆம் நாளில் இலங்கையில் கொழும்பை மையமாகக் கொண்டு ஒரு தனி மறைமாவட்டத்தைத் திருத்தந்தை 16ஆம் கிரகோரி நிறுவினார். அம்மறைமாவட்டம் "சிலோன் மறைமாவட்டம்" என்னும் பெயரைப் பெற்றது.

ஒரு சில ஆண்டுகளுக்குப் பின், 1845, பெப்ருவரி 17ஆம் நாள் சிலோன் மறைமாவட்டம் "கொழும்பு மறைமாவட்டம்" என்னும் பெயரைப் பெற்றது.

1886, செப்டம்பர் முதல் நாள் கொழும்பு மறைமாவட்டம் "உயர்மறைமாவட்டம்" (Archdiocese) என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டு, பிரதேச முதன்மை மறைமாவட்டம் ஆயிற்று. அது திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தது.

பின்னர், திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் கொழும்பு உயர்மறைமாவட்டம் என்னும் பெயரை 1944, திசம்பர் 6ஆம் நாள் "சிலோனின் கொழும்பு உயர்மறைமாவட்டம்" (Archdiocese of Colombo in Ceylon) என்று மாற்றினார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின், திருத்தந்தை ஆறாம் பவுல் மீண்டும் பெயரை "கொழும்பு உயர்மறைமாவட்டம்" என்று மாற்றினார். அப்பெயரே இன்றுவரை நிலைத்துள்ளது.

கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர் கர்தினால் ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் (Albert Malcolm Ranjith Patabendige Don) ஆவார். இவர் 2009இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டால் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். 2010, நவம்பர் 20ஆம் நாள் மால்கம் ரஞ்சித் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பரப்பளவு 3836 ச.கி.மீ (1482 ச.மைல்) ஆகும். அந்நிலப்பரப்பில் வாழ்கின்ற 5,760,148 மக்களுள் 652,200 பேர் கத்தோலிக்கர் (11.3%) என்று வத்திக்கானிலிருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ ஆண்டேடு (Annuario Pontificio) (2009) கூறுகிறது.

கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் முதன்மைக் கோவில் புனித லூசியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதனுள் "இலங்கை அன்னை மரியா" (Basilica of Our Lady of Lanka) தேவத்தா பகுதியிலும் புனித அந்தோனியார் தேசிய திருத்தலம் கொச்சிக்கடையிலும் உள்ளன.

சகோதரி நகரங்கள்

நாடு நகரம் மாநிலம்/மாகாணம் ஆண்டிலிருந்து
கொழும்பு: சொற்பிறப்பு, வரலாறு, புவியியல் மற்றும் காலநிலை  சீனா கொழும்பு: சொற்பிறப்பு, வரலாறு, புவியியல் மற்றும் காலநிலை  சாங்காய் கொழும்பு: சொற்பிறப்பு, வரலாறு, புவியியல் மற்றும் காலநிலை  சாங்காய் மாநகராட்சி 2003
கொழும்பு: சொற்பிறப்பு, வரலாறு, புவியியல் மற்றும் காலநிலை  உருசியா கொழும்பு: சொற்பிறப்பு, வரலாறு, புவியியல் மற்றும் காலநிலை  சென் பீட்டர்ஸ்பேர்க் கொழும்பு: சொற்பிறப்பு, வரலாறு, புவியியல் மற்றும் காலநிலை  வடமேற்கு கூட்டாட்சி மாவட்டம் 1997
கொழும்பு: சொற்பிறப்பு, வரலாறு, புவியியல் மற்றும் காலநிலை  ஐக்கிய இராச்சியம் கொழும்பு: சொற்பிறப்பு, வரலாறு, புவியியல் மற்றும் காலநிலை  லீட்சு கொழும்பு: சொற்பிறப்பு, வரலாறு, புவியியல் மற்றும் காலநிலை  இங்கிலாந்து

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

மேலதிக வாசிப்பு

பின்வரும் ஆங்கில நூல்கள் கொழும்பு பற்றிய பல தகவல்களைக் கொண்டுள்ளன.

வெளியிணைப்புக்கள்


Tags:

கொழும்பு சொற்பிறப்புகொழும்பு வரலாறுகொழும்பு புவியியல் மற்றும் காலநிலைகொழும்பு மக்கள் தொகையியல்கொழும்பு அரசுகொழும்பு வலயங்கள்கொழும்பு பொருளாதாரம்கொழும்பு உட்கட்டமைப்புகொழும்பு கல்விகொழும்பு கட்டடக்கலைகொழும்பு பண்பாடுகொழும்பு சகோதரி நகரங்கள்கொழும்பு இவற்றையும் பார்க்கவும்கொழும்பு மேற்கோள்கள்கொழும்பு மேலதிக வாசிப்புகொழும்பு வெளியிணைப்புக்கள்கொழும்புஆங்கில மொழிஇலங்கைஇலங்கை சோனகர்கிபி 16வது நூற்றாண்டுகோட்டே அரசுசிங்களம் மொழிதீவுநகரம்போர்த்துகல்மேற்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)மெட்பார்மின்மியா காலிஃபாஅருந்ததியர்விஜயநகரப் பேரரசுமுத்தரையர்சதயம் (பஞ்சாங்கம்)இந்திய தேசிய சின்னங்கள்ஜீரோ (2016 திரைப்படம்)இராவணன்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவாசுகி (பாம்பு)காடுசுற்றுச்சூழல்ஆண்டாள்திருவாசகம்வேலுப்பிள்ளை பிரபாகரன்திருப்பாவைமுதுமலை தேசியப் பூங்காபொதுவுடைமைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்இமயமலைமனோன்மணீயம்பெரியாழ்வார்குறை ஒன்றும் இல்லை (பாடல்)இயேசுசித்திரை (பஞ்சாங்கம்)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்அறுபடைவீடுகள்தமிழர் நெசவுக்கலைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஜெயகாந்தன்சோளம்தனியார் பள்ளிவிவேகானந்தர்தென்னிந்தியாஎங்கேயும் காதல்கௌதம புத்தர்சிறுகதைவேதம்மும்பை இந்தியன்ஸ்கன்னியாகுமரி மாவட்டம்புவிசீரடி சாயி பாபாஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைபள்ளிக்கரணைஉள்ளூர்முருகன்கூலி (1995 திரைப்படம்)முகலாயப் பேரரசுவிரை வீக்கம்பள்ளர்குலசேகர ஆழ்வார்மலேரியாபால் (இலக்கணம்)காளை (திரைப்படம்)கள்ளர் (இனக் குழுமம்)இந்திய நாடாளுமன்றம்இந்திய மக்களவைத் தொகுதிகள்நவரத்தினங்கள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்நஞ்சுக்கொடி தகர்வுகாரைக்கால் அம்மையார்மலைபடுகடாம்சிலம்பம்தமிழக வரலாறுஅணி இலக்கணம்சீனாதிருநெல்வேலிதிருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்ரோகிணி (நட்சத்திரம்)ஐம்பூதங்கள்பனைகுக்கு வித் கோமாளிஜல் சக்தி அமைச்சகம்தமிழ் இலக்கியம்பெருஞ்சீரகம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்🡆 More