தீவு

தீவு அல்லது கடலிடைக் குறை என்பது நான்கு புறமும் கடல், ஏரி, ஆறு போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்ட ஒரு நிலப்பகுதியைக் குறிக்கும்.

உலகில் உள்ள தீவுகளுள் கிரீன்லாந்து மிகப் பெரியதாகும். இலங்கை, அந்தமான் நிக்கோபர் போன்றவையும் தீவுகளாகும். பிற நிலப்பகுதிகளுடன் பாலங்கள் போன்ற செயற்கையான நிலத்தொடர்புகளை உருவாக்கினாலும், குறித்த நிலப்பகுதி தொடர்ந்தும் தீவு என்றே கருதப்படும். சிங்கப்பூர், புங்குடுதீவு போன்றவை இத்தகைய தீவுகள் ஆகும். உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டும் 45,000 தீவுகள் உள்ளன. தீவுகள் பொதுவாக கண்டத்தீவு, கடல் தீவு என இரு வகைப்படும். செயற்கையான தீவுகளும் உள்ளன.

தீவு
ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஆயிரந்தீவுகளில் ஒன்றான இதயத் தீவு, நியூயார்க்

வகைகள்

கண்டத் தீவுகள்

தீவு 
பிரித்தானியா தீவு
ஏதேனும் ஒரு கண்டத்தை அடுத்துள்ள தீவுகளுக்குக் கண்டத்தீவுகள் என்று பெயர். இத்தீவுகள் ஒரு காலத்தில் கண்டத்துடன் இணைந்திருந்தவையாகும். இலங்கை, பிரிட்டன், சப்பானியத் தீவுகள் இவ்வகையைச் சேர்ந்தவை. 

கடல் தீவுகள்

தீவு 
ஹவாய்- எரிமலைத் தீவு

கண்டத்துக்கு மிகத் தொலைவில் கடலில் காணப்படுபவை கடல் தீவுகள் ஆகும். கடலின் அடியிலுள்ள எரிமலையிலிருந்து வெளிப்படும் பாறைக் குழம்பு, மேலும் மேலும் படிவதன் காரணமாக வளர்ந்து, கடலுக்கு மேலே எழும்பி உருவானவை இத்தகைய தீவுகளாகும். ஹவாய்த் தீவு, டகீட்டித் தீவு, சமோவா தீவு ஆகியவை இத்தகைய தீவுகளாகும்.

பவளத் தீவு

கடலில் இறந்த பவளப் பூச்சிகளின் கூடுகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து சிறிது சிறிதாக வளர்ந்து உண்டாவது பவளத் தீவு ஆகும். தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள 'வேக் தீவு' ஒரு பவளத் தீவு ஆகும்.

தீவு 
வேக் தீவு

மண் தீவு

ஆற்றின் நடுவிலோ கழிமுகத்திலோ வண்டல் மண் படிந்து கொண்டே வந்து ஒரு தீவாக மாறுவதும் உண்டு.

அளவியல்

கிரீன்லாந்து 21 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய தீவாகும். உலகின் சிறிய கண்டமான ஆத்திரேலியா 76 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட கண்டமாகும். இது நான்கு புறங்களும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் இதைத் தீவென்று அழைக்காமல் கண்டமென்றே அழைக்கின்றனர். இதிலிருந்து எது தீவு, எது கண்டம் என்பதற்கு அளவியல் வரைமுறை இல்லை என அறியலாம்.

உலகில் பரவலாக அறியப்படும் சில தீவுகள்

தீவுகள் அமைவிடம் பரப்பளவு/ச.கி.மீ
கிரீன்லாந்து வட அட்லாண்டிக் கடல் 8.40,000
நியூ ஃபின்லாந்து வட அட்லாண்டிக் கடல் 42,031
பாபுவா நியூகினி கிழக்கு இந்தியப் பெருங்கடல் 3,06,000
இலங்கை இந்தியப் பெருங்கடல் 65,610
சாவா இந்தியப் பெருங்கடல் 48,900
செவிபசு இந்தியப் பெருங்கடல் 69,000
சுமத்திரா இந்தியப் பெருங்கடல் 1,65,000
போர்னியோ கிழக்கு இந்தியப் பெருங்கடல் 2,80,100
மடகாசுக்கர் கிழக்கு இந்தியப் பெருங்கடல் 2,26,658
டாஃபின் ஆர்க்டிக் கடல் 1,95,928
விக்டோரியா ஆர்க்டிக் கடல் 83,897
எலியசுமேர் ஆர்க்டிக் கடல் 75,767
பிரிட்டன் வடகடல் 84,200
கியூபா கரீபியன் கடல் 44,218
ஹான்ஷு பசிஃபிக் பெருங்கடல் 87,805
வடக்கு நியூசிலாந்து பசிஃபிக் பெருங்கடல் 44,035

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

தீவு வகைகள்தீவு அளவியல்தீவு உலகில் பரவலாக அறியப்படும் சில கள்தீவு இவற்றையும் பார்க்கவும்தீவு வெளி இணைப்புகள்தீவு மேற்கோள்கள்தீவுஅந்தமான் நிக்கோபர்ஆறுஇலங்கைஏரிகடல்கிரீன்லாந்துசிங்கப்பூர்புங்குடுதீவுவெப்ப வலயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுந்தர காண்டம்தமிழக வெற்றிக் கழகம்வினோஜ் பி. செல்வம்தமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தனியார் பள்ளிகீழடி அகழாய்வு மையம்லால் சலாம் (2024 திரைப்படம்)தமிழ்பாண்டவர்நாட்டு நலப்பணித் திட்டம்காயத்திரி ரேமாஇராமர்சமணம்பூக்கள் பட்டியல்இந்திய நாடாளுமன்றம்மாமல்லபுரம்ஆசாரக்கோவைலீலாவதிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கல்விகள்ளுஇராசேந்திர சோழன்பூப்புனித நீராட்டு விழாகள்ளழகர் (திரைப்படம்)கந்தர் அலங்காரம் (திரைப்படம்)செயற்கை மழைபல்லவர்முடியரசன்உன்னாலே உன்னாலேசீர் (யாப்பிலக்கணம்)தனுஷ் (நடிகர்)கண்ணாடி விரியன்அக்பர்சட் யிபிடிதிருக்குர்ஆன்வெண்பாசென்னை மாகாணம்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்முக்கூடற் பள்ளுஅட்டமா சித்திகள்அமெரிக்க ஐக்கிய நாடுகள்பழமொழி நானூறுதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கல்விக்கோட்பாடுஉயிரியற் பல்வகைமைகல்லுக்குள் ஈரம்குறுந்தொகைகேதா மாவட்டம்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைதமிழர் நிலத்திணைகள்மொழிஇந்திய அரசியல் கட்சிகள்சித்த மருத்துவம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)கலைவயாகராவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்மயங்கொலிச் சொற்கள்கங்கைகொண்ட சோழபுரம்இந்திய வரலாற்றுக் காலக்கோடுஅணி இலக்கணம்நீக்ரோகில்லி (திரைப்படம்)சத்திமுத்தப் புலவர்சிவபுராணம்நீரிழிவு நோய்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்சிலம்பம்சிறுகதைஇந்தியத் தேர்தல் ஆணையம்குறிஞ்சிப் பாட்டுஐராவதேசுவரர் கோயில்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மலேரியாதினகரன் (இந்தியா)மயக்கம் என்ன🡆 More