கள்ளு

கள் (ஆங்கில மொழி: toddy, கன்னடம்: ಕಲ್ಲು,தெலுங்கு: కల్లు, மலையாளம்: കള്ള്, இந்தி: ताड़ी) என்பது பனை, தென்னை போன்ற மரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான போதை ஏற்படுத்தும் பானம் ஆகும்.

பனை அல்லது தென்னை மரங்களின் பாளையினை வெட்டி அதிலிருந்து வடியும் பால் போன்ற திரவம் மண் பானைகளில் சேகரிக்கப்படுகிறது. இந்தப் பானம் புளிப்பு கலந்த சுவையுடன் உள்ளது. இதை அருந்துபவர்களுக்குப் போதை ஏற்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் பனங்கள் மற்றும் தென்னங்கள் மதுபானங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் கள் அருந்துவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் பனங்கள் மற்றும் தென்னங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

கள்ளு
பனை மரத்திலிருந்து இறக்கிய பனங்கள்
கள்ளு
பனை மரத்துக் கள்.
கள்ளு
தென்னை மரத்திலிருந்து கள் இறக்குவதைக் காட்டும் 1855இல் வரையப்பட்ட ஓவியம். அருகே மனிதர்கள் இறக்கிய கள்ளைக் குடிக்கிறார்கள்

பனங்கள்

பனைமரம் பூ பூக்கும் தருணத்தில் பனைமரத்தின் உச்சியில் பனையோலைகளுக்கிடையே உருவாகும் பாளை என்ற விழுதை சரியான முறையில் சீவி, அதனை ஒரு சிறிய மண் பாண்டத்தில் உள்ளிட்டு, மண் பாண்டத்தின் கழுத்துப் பகுதியில் கயிற்றால் கட்டிப் பின் மரத்துடன் கட்டுவர். மண் பாண்டத்தில் குருத்தில் இருந்து சொட்டு சொட்டாக வடியும் பனை நீரே பனங்கள்ளு ஆகும்.

பனங்கள்ளை அதிகமாக அருந்தினால் போதை உண்டாகும். பனங்கள்ளுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் அதுவே பதநீர் எனும் இனிப்பான பானமாகும். கோடைகாலத்தில் பதநீரை தினமும் அளவுடன் குடித்தால் உடலில் உள்ள உஷ்ணத்தை நீக்கிக் குளிர்ச்சியைத் தர வல்லது. வாய்ப்புண், குடல் புண்கள் ஆற்றும் குணமுடையது.

பனங்கள்ளிலிருந்து பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனஞ்சக்கரை போன்ற இனிப்பு பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. பனங்கருப்பட்டி பால், காபி, தேநீரில் கலந்து குடிக்கப் பயன்படுகிறது. மேலும் இனிப்புத் தின்பண்டங்கள் செய்ய பனங்கருப்பட்டி பயன்படுகிறது.

ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கள் குடிக்கிறார்கள். கள் உற்பத்தி செய்வது சில பனை இனங்கள் அருகி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணமாகலாம் (எ.கா. சிலி நாட்டு பனை). ஆனால், சிறிய அளவில் கள் உற்பத்தி செய்பவர்களாலும், தனிப்பட்ட விவசாயிகளாலும் வீட்டு வருமானத்திற்காக "கள்" மரங்கள் வளர்ப்பது இவ்வகை மர இனங்கள் பாதுகாப்பிற்கு வித்திடலாம்.

மேற்கோள்கள்

Tags:

ஆங்கில மொழிஇந்தி மொழிகன்னடம் மொழிதமிழ்நாடுதென்னைதெலுங்கு மொழிபனங்கள்பனைமலையாளம் மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

முதல் மரியாதைசிறுதானியம்கண்ணதாசன்நம்ம வீட்டு பிள்ளைதமிழ்விடு தூதுகட்டுவிரியன்கணினிபறவைமங்கலதேவி கண்ணகி கோவில்இந்தியக் குடியரசுத் தலைவர்தரணிவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்பணவீக்கம்கமல்ஹாசன்இந்திய ரிசர்வ் வங்கிஔவையார்கட்டபொம்மன்உத்தரகோசமங்கைகருத்தடை உறைகடலோரக் கவிதைகள்மரபுச்சொற்கள்ஆய்த எழுத்துதமிழ் நீதி நூல்கள்தமிழர் அளவை முறைகள்தமிழ்நாட்டின் நகராட்சிகள்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்கன்னத்தில் முத்தமிட்டால்தாய்ப்பாலூட்டல்திருச்சிராப்பள்ளிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்சினைப்பை நோய்க்குறிகாச நோய்ஏலகிரி மலைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)வணிகம்தற்கொலை முறைகள்தமிழர் கப்பற்கலைதமிழர் நிலத்திணைகள்வளையாபதிதமிழர் பண்பாடுஎல் நீனோ-தெற்கத்திய அலைவுசின்னம்மைஇந்திய மக்களவைத் தொகுதிகள்காம சூத்திரம்இயேசுதிருவரங்கக் கலம்பகம்முதலாம் உலகப் போர்புறப்பொருள்மதுரைக் காஞ்சிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ஆத்திசூடியாதவர்நல்லெண்ணெய்தண்டியலங்காரம்மு. கருணாநிதிநீரிழிவு நோய்விஜயநகரப் பேரரசுகபிலர்தேவநேயப் பாவாணர்தமிழச்சி தங்கப்பாண்டியன்புதினம் (இலக்கியம்)சேரன் செங்குட்டுவன்ஊராட்சி ஒன்றியம்அன்புமணி ராமதாஸ்ஒற்றைத் தலைவலிதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)இடைச்சொல்முருகன்ஆய்த எழுத்து (திரைப்படம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)குப்தப் பேரரசுமுடக்கு வாதம்வரலாற்றுவரைவியல்விபுலாநந்தர்பதிற்றுப்பத்துதிராவிட இயக்கம்🡆 More