மரபுச்சொற்கள்

மரபுச்சொற்கள் மரபு ரீதியாக வழங்கிவரும் சொற்களைக் குறிக்கும்.

மரபு என்பது நம் முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் வழங்கினரோ அவ்வாறே வழங்குவது ஆகும். உதாரணமாக, பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர். “நாய் கத்தியது” எனக் கூறுவது வழக்கம். அவ்வாறு கூறுதல் கூடாது. “நாய் குரைத்தது” என்பதே உரிய மரபுத் தொடர்ச் சொல் ஆகும். இவ்வாறு வரும் சில மரபுகள் கீழே உள்ளன.

ஒலி மரபு

உயிரினம் ஒலி(மரபு)
ஆடு கதறும்
எருது எக்காளமிடும்
குதிரை கனைக்கும்
குரங்கு அலப்பும்
சிங்கம் முழங்கும்
நரி ஊளையிடும்
புலி உறுமும்
பூனை சீறும்/கீலும்
யானை பிளிறும்
எலி கீச்சிடும்
ஆந்தை அலறும்
காகம் கரையும்
கிளி பேசும்
குயில் கூவும்
கூகை குழறும்
கோழி கொக்கரிக்கும்
சேவல் கூவும்
புறா குனுகும்
மயில் அகவும்
வண்டு முரலும்
பசு அழைக்கும்/முக்காரமிடும்

உயிரினங்களின் (பறவை, விலங்கு, பூச்சி) ஒலிகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

வினை மரபு

பொருள் வினை(மரபு)
அம்பு எய்தார்
ஆடை நெய்தார்
உமி கருக்கினார்
பூ பறித்தார்
மரம் வெட்டினார்
மாத்திரை விழுங்கினார்
சோறு உண்டார்
தண்ணீர் குடித்தார்
பால் பருகினார்
கூடை முடைந்தார்
சுவர் எழுப்பினார்
முறுக்குத் தின்றார்

வினை மரபுச்சொற்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பிடம் (மரபு)

கறையான் புற்று
ஆட்டுப் பட்டி
மாட்டுத் தொழுவம்
குதிரைக் கொட்டில்
கோழிப் பண்ணை
குருவிக் கூடு
சிலந்தி வலை
எலி வளை
நண்டு வளை

உயினங்களின் வாழ்விடம் மரபுச்சொற்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

தாவர உறுப்பு (மரபு)

வேப்பந் தழை
ஆவாரங் குழை
நெல் தாள்
வாழைத் தண்டு
கீரைத் தண்டு
தாழை மடல்
முருங்கைக் கீரை
தென்னங் ஓலை
கம்பந் தட்டு(திட்டை)
சோளத் தட்டு(திட்டை)

தாவரங்களின் உறுப்பு மரபுச்சொற்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

விலங்கு

கோழிக் குஞ்சு
கிளிக் குஞ்சு
அணிற் பிள்ளை
கீரிப் பிள்ளை
பசுவின்  கன்று
நாய்க் குட்டி
புலிப் பறழ்
சிங்கக் குருளை
யானைக் கன்று
குதிரை கன்று
எருமை கன்று

விலங்குகளின் இளமை மரபுச்சொற்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

சான்றுகள்

வெளியிணைப்புகள்

  1. பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல் (தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்) ப.எண்:222 முதற்பதிப்பு-2011, மறுபதிப்பு-2016.
  2. தமிழ் மரபுச்சொற்கள் (வெளி இணைப்பு) தமிழ்ப்பேராயம் எஸ்.ஆர்.எம் பல்கலை பரணிடப்பட்டது 2017-04-30 at the வந்தவழி இயந்திரம்
  3. தொல்காப்பியம் மரபியல் (விக்கிமூலம்) உரைவளம் பக்கம்

Tags:

மரபுச்சொற்கள் ஒலி மரபுமரபுச்சொற்கள் வினை மரபுமரபுச்சொற்கள் இருப்பிடம் (மரபு)மரபுச்சொற்கள் தாவர உறுப்பு (மரபு)மரபுச்சொற்கள் விலங்குமரபுச்சொற்கள் சான்றுகள்மரபுச்சொற்கள் வெளியிணைப்புகள்மரபுச்சொற்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அஸ்ஸலாமு அலைக்கும்மூவேந்தர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்மாசாணியம்மன் கோயில்தமிழ்நாட்டின் நகராட்சிகள்இந்திய ரூபாய்மருது பாண்டியர்பெயர்வேற்றுமையுருபுபூலித்தேவன்நான் வாழவைப்பேன்வாலி (கவிஞர்)போக்குவரத்துபிள்ளையார்கட்டபொம்மன்மியா காலிஃபாஇரண்டாம் உலகப் போர்முருகன்தமிழ்நாட்டின் அடையாளங்கள்தமிழக மக்களவைத் தொகுதிகள்திணைஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதசாவதாரம் (இந்து சமயம்)அடல் ஓய்வூதியத் திட்டம்கட்டுரைகாச நோய்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்திருநங்கைஅயோத்தி தாசர்வீட்டுக்கு வீடு வாசப்படிபுதுமைப்பித்தன்விடுதலை பகுதி 1திரவ நைட்ரஜன்இலட்சம்நரேந்திர மோதிஎயிட்சுமுதுமொழிக்காஞ்சி (நூல்)பெருமாள் திருமொழிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சிவவாக்கியர்பழமுதிர்சோலை முருகன் கோயில்வெந்து தணிந்தது காடுவினோஜ் பி. செல்வம்மனித மூளைடுவிட்டர்அகமுடையார்கல்விநீர் பாதுகாப்புசோழர்இரத்தக்கழிசல்தமிழக வெற்றிக் கழகம்இளங்கோவடிகள்கருத்தரிப்புதிருப்பாவைமகாபாரதம்பாலை (திணை)ரோசுமேரிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்உத்தரகோசமங்கைகண்ணாடி விரியன்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)புறப்பொருள்தமிழ் விக்கிப்பீடியாகள்ளழகர் கோயில், மதுரைஏப்ரல் 24வானிலைகில்லி (திரைப்படம்)மனோன்மணீயம்தற்குறிப்பேற்ற அணிவெ. இராமலிங்கம் பிள்ளைதேசிக விநாயகம் பிள்ளைமுன்னின்பம்குறுந்தொகைநவதானியம்மழைநீர் சேகரிப்புமட்பாண்டம்தேசிய அடையாள அட்டை (இலங்கை)🡆 More