நவதானியம்

நவதானியங்கள் (Navdhānya) என்பன கோதுமை, நெல், துவரை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, மொச்சை, எள், உளுந்து மற்றும் கொள்ளு ஆகியவையாகும்.

நவதானியங்கள் என்பது பல இந்திய மொழிகளில் "ஒன்பது தானியங்கள்" என்று பொருள்படும். இந்த ஒன்பது தானிய வகைகளும் இந்திய உணவு பண்டங்களில் பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்படும் முக்கிய பொருட்களாகும்.

இந்து இறையியல்

இந்து அண்டவியலில், நவதானியங்கள் என்பது நவக்கிரகங்களை (ஒன்பது கிரகங்கள்) குறிப்பவையாக கருதப்படுகிறது. முறையே தானியங்கள் பின்வரும் கிரகங்களை குறிக்கின்றன:

எண். படிமம் பெயர் உணவு தானியம்
1. நவதானியம்  சூரியன் கோதுமை
2. நவதானியம்  சந்திரன் நெல்
3. நவதானியம்  செவ்வாய் மொச்சை
4. நவதானியம்  புதன் பாசிப்பயறு
5. நவதானியம்  குரு கொண்டைக்கடலை
6. நவதானியம்  சுக்ரன் துவரை
7. நவதானியம்  சனி எள்
8. நவதானியம்  இராகு உளுந்து
9. நவதானியம்  கேது கொள்ளு

வழிபாடு மற்றும் சடங்குகள்

இந்து சமய நம்பிக்கையுடையோர் புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்வுகளுக்காக வீடுகளின் முன்பு பந்தல் அமைத்தல் போன்ற நிகழ்வுகளுக்கான சில வழிபாடுகளின் போது நவதானியத்தை வழிபாட்டுப் பொருளாக வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. உபநயனம் மற்றும் வித்யாரம்பம் போன்ற பாரம்பரிய இந்து சடங்குகள் நவதானியங்கள் வழங்குவதை அல்லது படைப்பதை உள்ளடக்கியன. சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகைகளின் போது, ​​நவதானியத்தில் புதிய எழுத்தோலை மற்றும் எழுதும் கருவிகள் வைக்கப்படுகின்றன.

தென்னிந்தியாவில் பாரம்பரியமாக முலைப்பாரி என்று அழைக்கப்படும் இந்த உணவு தானியங்களின் முளைகள் மாரியம்மன் திருவிழாக்கள் மற்றும் சடங்குகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விழாக்களின் போது கோவில்களில் நவதானிய விதைகள் தட்டுகள் அல்லது தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. விதைகள் ஆரோக்கியமாக முளைத்தால், அது ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகின்றது.

மேற்கோள்கள்

Tags:

உளுந்துஎள்கொண்டைக்கடலைகொள்ளுகோதுமைதுவரைநெல்பாசிப்பயறுமொச்சை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பஞ்சபூதத் தலங்கள்முல்லைக்கலிஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)அபினிஇனியவை நாற்பதுதிருப்பாவைவண்ணார்கி. ராஜநாராயணன்எட்டுத்தொகை தொகுப்புகேள்விசூரரைப் போற்று (திரைப்படம்)செவ்வாய் (கோள்)தமிழில் சிற்றிலக்கியங்கள்புதுமைப்பித்தன்சமணம்செயற்கை மழைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்சேமிப்புசூளாமணிகாடுவெட்டி குருபொருளாதாரம்தமிழ் எண்கள்இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்பூலித்தேவன்சீனாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்கொன்றை வேந்தன்அன்னி பெசண்ட்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இந்து சமயம்அங்குலம்கருப்பசாமிமோகன்தாசு கரம்சந்த் காந்திநான் ஈ (திரைப்படம்)செக் மொழிஇலவங்கப்பட்டைஇரட்டைக்கிளவிசித்திரம் பேசுதடி 2பெண்களின் உரிமைகள்உயிர்மெய் எழுத்துகள்ஆற்றுப்படைதேவாரம்லீலாவதிஇல்லுமினாட்டிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019ரயத்துவாரி நிலவரி முறைதொழினுட்பம்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்பொதுவுடைமைஎட்டுத்தொகைநீர் பாதுகாப்புபெரியபுராணம்இலட்சம்திணை விளக்கம்மதுரை வீரன்புதுச்சேரிகுடும்ப அட்டைஇலங்கைஇந்தியாவில் இட ஒதுக்கீடுசுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிஇந்திய நிதி ஆணையம்இராவண காவியம்எங்கேயும் காதல்பெரும்பாணாற்றுப்படைதிரு. வி. கலியாணசுந்தரனார்மு. வரதராசன்சுவாதி (பஞ்சாங்கம்)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021இயேசு காவியம்ஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)ஆயுள் தண்டனைதமிழ்நாடுபறையர்கடலோரக் கவிதைகள்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஇரா. இளங்குமரன்🡆 More