வண்ணார்

வண்ணார் (Vannar) எனப்படுவோர் இந்திய மாநிலமான, தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர்.

இவர்கள் இலங்கையிலும் வசிக்கின்றனர். இச்சமூகத்தினர் இந்தியாவின், வட மாநிலங்களில் தோபி என்ற பெயரில், இலங்கை நாட்டில் ராஜாகா என்ற பெயரிலும் வசிக்கின்றனர்.

வண்ணார் / ராஜாகா /சூரியகுலத்தோர்
வண்ணார்
அகோர வீரபத்திரர்
மொத்த மக்கள்தொகை
20,72,625
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, இலங்கை
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ராஜகுலத்தோர்

இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.

சொற்பிறப்பு

வண்ணார் என்ற சொல் வண்ணம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது. இதற்கு அழகு என்று பொருள்படும்.வண்ணார்கள் மாநிலத்தின் பூர்வீக மக்களில் ஒருவராகக் கருதப்படுகின்றனர்இச்சமூகத்தினர் கட்டாடி என்னும் பெயரை முதன்மையாக பயன்படுத்துகின்றனர்,இதற்கு குறிசொல்பவன்,பூசாரி, பேயோட்டுபவர்கள் என்று பல பொருள்கள் காணப்படும். வண்ணார்கள் பாரம்பரியமாக தமிழர் நிலைத்திணைகளில் ஒன்றான, மருத நிலத்தில் வாழ்ந்து வருகின்றனர். வண்ணார்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் ஈடுபட்டனர். வண்ணார்கள் தங்கள் குல கடவுளாக குருநாதன் (முருகன்) யை வணங்குகின்றனர் மேலும் அவருடைய அனைத்து கோவில்களிலும் பூஜாரியாக வண்ணார்களே காணப்படுகின்றனர்

வரலாறு

இப்போது கிடைத்திருப்பது சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வண்ணார் மடம் பற்றிய செப்பேடுகள், இவை இரண்டு செப்பேடுகளாய்க் கிடைத்திருக்கின்றது. மேலும் விஜயநகர அரசர் காலத்தில் ஏற்படுத்தப் பட்டதாயும் தெரியவருகின்றது. மூன்று ஏடுகளைக் கொண்ட முதல் செப்பேடும், ஒரே ஏட்டுடன் கூடிய இரண்டாவது செப்பேடும் ஒரே காலத்தைச் சேர்ந்தது என்றும் தெரிய வருகின்றது. இவற்றில் சிவலிங்கம், நந்தி, சூலம், சூரிய, சந்திரர், வீரமணவாளர் தேவி, போன்றவை சிற்பங்களாய்ச் செதுக்கப் பட்டிருப்பதாய்த் தெரியவருகின்றது, விஜயநகர அரசர் மெய்க்கீர்த்தியும், கிருஷ்ணதேவராயர் மற்றும் அச்சுதராயர் காலத்தில் வண்ணார்மடம் புதுப்பிக்கப் பட்ட செய்தியும் இவற்றில் கிடைத்திருப்பதாய்ச் சொல்லப்படுகின்றது, வண்ணார் தோன்றிய விதமும், அதாவது அதற்கான புராண வரலாறும் இதில் சொல்லப்பட்டிருக்கின்றது. ஈசனின் மாமனார் ஆன தட்சன் ஈசனை அழைக்காமல் யாகம் செய்ய, அவனையும், அவனுக்கு உதவியாக யாகத்தில் தொண்டாற்றிய தேவர்கள் மற்றும் தேவிகளை அழிக்கவும் ஈசனால் தோற்றுவிக்கப்பட்டவர் ஈசனின் அம்சம் ஆன வீரபத்திரர், தேவியரை அழிக்கவேண்டி அன்னையால் தோற்றுவிக்கப்பட்டவளே காளி ஆவாள். இருவரும் அவ்வாறே தேவ, தேவிகளை அழித்தனர். இருவரும் அழித்த தேவ, தேவியர் பின்னர் இறைவனாலும், இறைவியாலும் உலக க்ஷேமத்தைக் கருதி மீண்டும் உயிர்ப்பிக்க, வீரபத்திரராலும், காளியாலும் ஏற்பட்ட காயங்களின் குருதி அவர்கள் மீது அழியாமல் இருந்தது. அந்தக் குருதி நீங்க வேண்டி, ஈசன் வருணனை மழை பொழியும்படி ஆணை இட வருணனும் அவ்வாறே மழையாகப் பொழிகின்றான். எனினும் குருதிக் கறை ஆடைகளில் தங்கிவிட்டது. ஆகவே அந்தக் கறை நீங்கவேண்டி வீரபத்திரருக்கு ஈசன் ஆணை இட, அவர் மரபில் ஒருவர் தோற்றுவிக்கப்பட்டார். அவருக்கு வீரன் என்னும் பெயர் சூட்டப்பட்டு தேவ, தேவியரின் ஆடைகளை வெளுக்க அவர் அனுப்பி வைக்கப்படுகின்றார். அந்த வீரபத்திரர் வழியிலும், வீரன் வழியிலும் வந்தவர்களே வண்ணார் எனப்பட்டனர். அவர்கள் பூமியில் வந்து அதே தொழிலைச் செய்தனர்.

கல்வெட்டு ஆதாரங்கள்

வண்ணார்கள் பற்றிய செய்திகள் பண்டைக் காலம் முதல் கிடைக்கின்றன, ஆனால் அப்போது வண்ணார்கள் குடி ஊழியக்காரர்களாக இல்லை, ஊதியம் பெறும் தொழிலாளர்களாக இருந்துள்ளனர். இதற்குச் சான்றாக, வண்ணார் காணம், வண்ணார் கற்காசு முதலான தொழில் வரிகள் வண்ணாரிடமிருந்து பெறப்பட்டுள்ளன, வண்ணார்கள் துணிக்கு வண்ணம் ஊட்டுபவர்களும், துணிகளில் ஓவியம் தீட்டுபவராகவும் இருந்துள்ளனர், மேலும் வண்ணார்கள் நில உடைமையாளர்களாகவும், கோயிலுக்கு நிலக்கொடை, கோயில் புழங்கு பொருள் கொடை கொடுத்தவர்களாகவும் இருந்துள்ளனர். இப்படி இருந்தவர்கள் எப்போது குடி ஊழியக்காரர்களாக மாறினர் என்று தெரியவில்லை, ஆயினும் 14ஆம் நூற்றாண்டில் கரிசூழ்ந்தமங்கலம் பெருமாள் கோயிலுக்குக் கொடைப்பொருளாக வண்ணார்கள் வழங்கப்பட்ட செய்தியைக் குறிப்பிட்டு கூறப்படுகிறது.

தொழில்

இவர்கள் துணி சுத்திகரிக்கும் தொழிலை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர், அதாவது தெருவிலோ கோயிலிலோ நடைபாதைகளுக்கு தண்ணீர்விட்டு ஈரங்கொள்ளச் செய்யும் தொழிலுடையவன், வண்ணார்களுக்கு ஈரங்கொல்லி என்ற பொருளும் உண்டு. மேலும் இவர்கள் விவசாய தொழிலாளர்களாகவும் இருக்கின்றனர்.

பெயர்கள்

வண்ணார் சமூகம் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது, அவை ஈரங்கொல்லி வண்ணார், பாண்டிய வண்ணார், தீண்டு வண்ணார், தீண்டா வண்ணார், தொண்டைமான் வண்ணார், பெரு வண்ணார், வடுக வண்ணார், துளுக்கவண்ணார்.

பட்டங்கள்

  • பாண்டியர்
  • காத்தவராயன்
  • ஏகவேணி
  • நாயர்
  • மூப்பர்
  • பணிக்கர்
  • சாயக்காரன்
  • மேஸ்திரி
  • வண்ணத்தார்
  • வண்ணக்கன்
  • கோலியர்
  • வேலன்மார்
  • காழியர்
  • தூசர்
  • ஏனாதி
  • நாட்டார்

வண்ணார்கள் பற்றிய குறிப்பு

வலங்கையில் இருந்த சாதிப் பிரிவுகள், வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பணிகளை மேற்கொண்ட சாதிகளாகவும்,அதே நேரத்தில் இடங்கை சாதிப் பிரவுகளானது வேளாண்மை சாராத தொழில்களைச் செய்பவர்களான உலோகத் தொழிலாளர்கள், நெசவாளர்கள் போன்ற கைவினை உற்பத்தித் தொழிலை செய்யும் சாதிகளைக் இருந்தது.சோழர்கள் காலகட்டத்தில் பின்பற்றப்பட்ட இடங்கை வலங்கை ஜாதி வரலாறில் வலங்கைக்கு உரிய வண்ணார்களை பற்றி

தமிழ் வண்ணார் மற்றும் வடுக வண்ணார்கள் பற்றி பரதவர்ஷத்தின் வரலாறுகளில் கூறப்பட்டவை

இலங்கை வண்ணார்கள்

இலங்கையில் வண்ணார்கள் வலவை நகரை ஆட்சி செய்த அரசர் பெரியதம்பிரானை தங்கள் குல கடவுளாக வணங்கி வருகின்றனர்

ஒவ்வொரு சமூகத்திற்கும் "நிகண்டு சூளாமணி" மூலம் அவர்களின் அடையாளங்கள் காட்டப்படுகின்றன அந்த வரிசையில் வண்ணார்களுக்கு

தொல்காப்பியத்தில் தும்பை ஒரு திணையாகக் கொள்ளப்பட்டு தும்பைப் போருக்கு என்று தனி இலக்கணம் கூறுவர்.இதனடிப்படையில் இராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பை மாலை அணிந்ததாகக் கம்பர் காட்டுகிறார்.

இவ்வாறு சங்க இலக்கியங்களிலும் தும்பைப்பூச் சூடிப் போருக்குச் சென்ற மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன மேலும் இராமர் துளசி மாலை அணிந்து,அதனுடன் தும்பைப்பூ மாலையும் சூட்டிக்கொண்டான் என்கிறார் கம்பர்

மக்கள்தொகை

தமிழகத்தில் வண்ணார்கள் 20,72,625 பேர் வசிக்கின்றனர்.

குறிப்பிடத்தக்க நபர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Tags:

வண்ணார் சொற்பிறப்புவண்ணார் வரலாறுவண்ணார் கல்வெட்டு ஆதாரங்கள்வண்ணார் தொழில்வண்ணார் பெயர்கள்வண்ணார் பட்டங்கள்வண்ணார் கள் பற்றிய குறிப்புவண்ணார் இலங்கை கள்வண்ணார் மக்கள்தொகைவண்ணார் குறிப்பிடத்தக்க நபர்கள்வண்ணார் இதனையும் காண்கவண்ணார் மேற்கோள்கள்வண்ணார் வெளி இணைப்புவண்ணார்இந்தியாஇலங்கைதமிழகம்தோபிராஜகுலத்தோர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவாரூர் தியாகராஜர் கோயில்கரிசலாங்கண்ணிகுதிரைஅகத்திணைசங்க காலம்முதற் பக்கம்சேவல் சண்டைமாணிக்கவாசகர்கழுகுஇந்திய தேசிய சின்னங்கள்கர்மாதலைவி (திரைப்படம்)மொழிமுத்துராமலிங்கத் தேவர்வாதுமைக் கொட்டைரமலான் நோன்புதிருக்குர்ஆன்அமெரிக்க ஐக்கிய நாடுகள்தற்குறிப்பேற்ற அணிவிண்ணைத்தாண்டி வருவாயாநிதியறிக்கைவராகிகுறிஞ்சிப் பாட்டுபாரதிய ஜனதா கட்சிஎட்டுத்தொகை தொகுப்புதிதி, பஞ்சாங்கம்புரோஜெஸ்டிரோன்கெல்லி கெல்லிதமிழ் படம் 2 (திரைப்படம்)மருது பாண்டியர்ஜெயகாந்தன்ரோசாப்பூ ரவிக்கைக்காரிதமிழர் விளையாட்டுகள்அன்புமணி ராமதாஸ்மார்ச்சு 28இளங்கோ கிருஷ்ணன்விஜய் வர்மாஇந்திய புவிசார் குறியீடுகிளிதமிழ் ராக்கர்ஸ்வாட்சப்கொங்கு வேளாளர்கள்ளுதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்முதலாம் இராஜராஜ சோழன்பரதநாட்டியம்வே. செந்தில்பாலாஜிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்உயிர்மெய் எழுத்துகள்வேற்றுமையுருபுநெடுநல்வாடைகண்ணாடி விரியன்அரசழிவு முதலாளித்துவம்வெற்றிமாறன்இந்திய விடுதலை இயக்கம்இந்திரா காந்திதிருமூலர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமுல்லை (திணை)உருவக அணிஇசுலாமிய நாட்காட்டிகருத்தரிப்புபொன்னியின் செல்வன்மாலை நேரத்து மயக்கம்முத்துராஜாஎகிப்துபல்லவர்கவுண்டமணிகண்டேன் காதலைபறவைதொலைக்காட்சிபுறநானூறுபொருளாதாரம்திருத்தணி முருகன் கோயில்ஜவகர்லால் நேருசுயமரியாதை இயக்கம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்அரிப்புத் தோலழற்சி🡆 More