கண்ணாடி விரியன்

Daboia - கிரே, 1840 (nomen nudum)

கண்ணாடி விரியன்
கண்ணாடி விரியன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Squamata
துணைவரிசை:
குடும்பம்:
Viperidae
துணைக்குடும்பம்:
Viperinae
பேரினம்:
Daboia

ஜான் கிரே, 1842
இனம்:
D. russelii
இருசொற் பெயரீடு
Daboia russelii
(ஜார்ஜ் ஷா, பிரெடெரிக் நொடர், 1797)
வேறு பெயர்கள்

கண்ணாடி விரியன்
கண்ணாடி விரியன்

கண்ணாடி விரியன் () (Russel's Viper, Daboia russelii) என்பது நச்சுத் தன்மை கொண்ட பாம்பு. இவை ஆசியாவில் குறிப்பாக இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும், தென்கிழக்காசியா, சீனாவின் தெற்குப் பகுதி, தாய்வான் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இது பெரும் நான்கு எனப்படும் நான்கு பாம்புகளில் ஒன்று. இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஏறக்குறைய இவை நான்கே காரணம். கண்ணாடி விரியனுக்கு எட்டடி விரியன் (இப்பாம்பு கடித்தவுடன் எட்டடி எடுத்து வைப்பதற்குள் கடிபட்டவர் இறந்துவிடுவார் என்று அன்று இருந்த நம்பிக்கையை இப்பெயர் காட்டுகிறது), ரத்த விரியன் (இப்பாம்பு கடித்த இடத்தில் மிகுதியாக இரத்தம் வெளியேறும் என்று அக்காலத்திய நம்பிக்கையில் இருந்து வந்தது), கழுதை விரியன் (மந்தமாக இருப்பதால்).

உடல் தோற்றம்

கண்ணாடி விரியன் 
கண்ணாடி விரியன். இதன் தற்கால அறிவியற்பெயர் டபோயா ரசெல்லி (Daboia russelii)
  • தடித்த உடல்; கழுத்தைவிடப் பெரிய முக்கோண-வடிவ தலை.
  • தலையின் மேற்பகுதியிலுள்ள செதில்கள் சிறியனவாகவும் அதிக எண்ணிக்கையிலும் உள்ளன.
  • பெரிய மூக்குத்துளை உடையதாகவும், கண்மணி செங்குத்தாகவும் உள்ளன.

நிறம் மற்றும் குறிகள்

  • பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற உடலுடையது.
  • உடலின் நீளவாக்கில் மூன்று வரிசைகளில் தெளிவாகத் தெரியும் பெரிய பழுப்பு (அல்லது கருப்பு) வட்ட (அல்லது நீள்வட்ட) குறிகள் காணப்படுகின்றன. இந்தக்குறிகள் ஒன்றுடன் மற்றொன்று சங்கிலி போல் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ காணப்படுகின்றன.
  • உச்சந்தலைப்பகுதியில் முக்கோண வடிவ வெள்ளை நிறக்குறி உள்ளது. கண்ணுக்கு கீழேயும் பக்கவாட்டிலும் முக்கோண வடிவ கருங்குறிகள் உள்ளன.
  • உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாகவும் பிறை-வடிவக் குறிகளுடனும் காணப்படுகிறது.

நச்சு

விரியன் பாம்பின் நச்சு குருதிச் சிதைப்பானாகும். ஆகவே மருத்துவர்கள் இரத்தம் உறையும் நேரம் மற்றும் இரத்தம் வழியும் நேரம் ஆகியவற்றை மணிக்கொரு முறைச் சோதிப்பர். இது மிகவும் கொடிய விஷம் ஆகும். ஆறு மணி நேரத்தில் உயிரிழக்க நேரிடும்.

மேற்கோள்கள்

Tags:

கண்ணாடி விரியன் உடல் தோற்றம்கண்ணாடி விரியன் நிறம் மற்றும் குறிகள்கண்ணாடி விரியன் நச்சுகண்ணாடி விரியன் மேற்கோள்கள்கண்ணாடி விரியன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தைப்பொங்கல்நான் வாழவைப்பேன்கம்பர்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்மதுரை வீரன்ஆயுள் தண்டனைருதுராஜ் கெயிக்வாட்ஆசியாபுனித ஜார்ஜ் கோட்டைதமிழர் நெசவுக்கலைஇராமர்நிணநீர்க்கணுபலாநஞ்சுக்கொடி தகர்வுரஜினி முருகன்நீதிக் கட்சிகொடைக்கானல்தற்கொலை முறைகள்ஔவையார்சிறுதானியம்கணியன் பூங்குன்றனார்கிராம சபைக் கூட்டம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்உலக மலேரியா நாள்திருவிழாஆப்பிள்புதுச்சேரிஅடல் ஓய்வூதியத் திட்டம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மதுரைக் காஞ்சிசிங்கம்பெருமாள் திருமொழிதமிழக வெற்றிக் கழகம்விளம்பரம்செக்ஸ் டேப்காவிரிப்பூம்பட்டினம்தலைவி (திரைப்படம்)விலங்குதிருப்பதிசட்டம்முத்துராஜாசுந்தரமூர்த்தி நாயனார்வளைகாப்புசட் யிபிடிஇணையத்தின் வரலாறுதிரைப்படம்ர. பிரக்ஞானந்தாதேசிய அடையாள அட்டை (இலங்கை)இந்திய நாடாளுமன்றம்புதினம் (இலக்கியம்)இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தமிழ்நாட்டின் நகராட்சிகள்பிரேமலுதிருவோணம் (பஞ்சாங்கம்)அம்பேத்கர்வரலாறுபனிக்குட நீர்வித்துமக்களாட்சிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சிவம் துபேடேனியக் கோட்டைஇரவீந்திரநாத் தாகூர்திருக்குர்ஆன்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ராஜா ராணி (1956 திரைப்படம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)தீரன் சின்னமலைகாதல் கொண்டேன்சிறுபஞ்சமூலம்குருதி வகைசுயமரியாதை இயக்கம்பிரெஞ்சுப் புரட்சிபத்துப்பாட்டுகாயத்ரி மந்திரம்தமிழ் இலக்கியம்தொழினுட்பம்விஜயநகரப் பேரரசு🡆 More