தற்குறிப்பேற்ற அணி

தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.

எடுத்துக்காட்டுகள்

எ.கா.1:

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
                                சிலப்பதிகாரம்

விளக்கம்:

கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.

எ.கா.2:

தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை
வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்
கூவினவே கோழிக் குலம்.
                                நளவெண்பா

விளக்கம்:

நளன், தமயந்தியை நீங்கி, காட்டில் விட்டுச் சென்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாகக் கூவுகின்றன. இதைக் கண்ட புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார்.

எ.கா.3:

காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதேன்றோ - நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி
ஒளிக்கின்ற தென்னோ உரை.
                                நளவெண்பா

விளக்கம்:

நளன் கடலோரமாகச் செல்கின்றான். நண்டுகள்("அலவன்") தம் வளையில் இருந்து வெளிப்பட்டு கடல் நாடிச் செல்கின்றன. இதைக் கண்ட புலவர், மனைவியைக் காட்டில் விட்டுச் சென்ற பாதகனைப் பார்க்கக் கூடாது என்றே நண்டுகள் வெளியேறிச் செல்கின்றன என்கிறார்.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சமூகம்வெப்பநிலைகாதல் தேசம்பொருநராற்றுப்படைராஜேஸ் தாஸ்வேதநாயகம் பிள்ளைமாணிக்கவாசகர்வேதம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிஇந்தியன் பிரீமியர் லீக்பள்ளர்சித்திரைத் திருவிழாஅஸ்ஸலாமு அலைக்கும்அகத்திணைஇணையத்தின் வரலாறு2024 இந்தியப் பொதுத் தேர்தல்திருப்பூர் குமரன்தமிழ் இலக்கியம்நிலாபுனித ஜார்ஜ் கோட்டைசேரர்செயங்கொண்டார்பாட்ஷாசீமான் (அரசியல்வாதி)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024வாலி (கவிஞர்)கலம்பகம் (இலக்கியம்)தேவயானி (நடிகை)வாட்சப்நோட்டா (இந்தியா)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ராஜா சின்ன ரோஜாதமிழர் பண்பாடுஓரங்க நாடகம்சுற்றுச்சூழல்இந்திய ரூபாய்கருப்பை நார்த்திசுக் கட்டிதாஜ் மகால்கர்மாசெக் மொழிதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்பெண்களின் உரிமைகள்நீக்ரோசூல்பை நீர்க்கட்டிடேனியக் கோட்டைஆவாரைஇதயம்கிராம ஊராட்சிநான் ஈ (திரைப்படம்)ஐக்கிய நாடுகள் அவைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)தமிழ்த் தேசியம்ஆக்‌ஷன்தமிழ்விடு தூதுகுடும்ப அட்டைபாலை (திணை)இந்திய தேசியக் கொடிவெள்ளியங்கிரி மலைமு. மேத்தாகுகேஷ்எயிட்சுஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)ஆனைக்கொய்யாபோதைப்பொருள்காடுவெட்டி குருகருட புராணம்மு. கருணாநிதிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பழனி முருகன் கோவில்உலா (இலக்கியம்)திருவள்ளுவர்பொதுவுடைமைவெண்பாதமிழில் சிற்றிலக்கியங்கள்அவதாரம்🡆 More