பள்ளர்: தமிழகத்தில் உள்ள ஒரு சாதியினர்

பள்ளர் எனப்படுவோர் தென்னிந்தியாவில், தென் தமிழகத்தில் வாழுகின்ற ஒரு பட்டியல் சமூகத்தினர் ஆவர்.

இவர்கள் கருநாடகம், கேரளா மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.

மொத்த மக்கள்தொகை
2,272,265
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, இலங்கை
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து, கிறித்துவம்

தமிழகத்தில் பள்ளர், வாய்காரர், காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி, வாதிரியான்,தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். இவர்களை பல்வேறு வரலாற்று இலக்கியங்களும் செப்பேடுகளும் பள்ளர், மள்ளர் மற்றும் தேவேந்திரர் என்கின்றது. எனவே இவர்கள் தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள். பள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திரகுல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் 14 பிப்ரவரி 2021 அன்று சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.

  1. தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
  2. குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35)
  3. பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49)
  4. பண்ணாடி, பட்டியல் சாதிகள் (எண் 54)
  5. மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72)
  6. காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35)
  7. காலாடி, சீர்மரபினர் (எண் 28)
  8. வாதிரியான், பட்டியல் சாதிகள் (எண் 72)

இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்களும் உள்ளன. இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர்.

பள்ளர் என்பதன் பொருள்

பண்டைய விசயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் காலத்தில் இயற்றப்பட்ட பள்ளு இலக்கியங்கள் பள்ளர்களின் வாழ்வியல் பற்றி விளக்குகிறது. சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. பிற்கால பள்ளு சிற்றிலக்கியங்கள் பள்ளர் பற்றியும் அவர்களின் வேளாண் குடிபற்றியும் பல்வேறு செய்திகளைக்கொண்டுள்ளன. இவ்விலக்கியங்களில் பள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி, பண்ணாடி என பல பெயர்களில் பள்ளர்கள் அழைக்கப்படுகின்றனர். மேலும் பள்ளர்கள் இன்றுவரையிலும் பள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி எனும் பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.[சான்று தேவை]

நெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு

நெல், கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த தெய்வேந்திரக் குடும்பன் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.

பள்ளர் பற்றிய குறிப்புகள்

பள்ளர் காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். உழவர், வீரர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக பள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இவ்விருவரும் பள்ளர் குலத்தினராதலால் பள்ளர் என்பதற்கு இலக்கணமாக

பள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.

இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.

என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.

வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (பள்ளர் மலர் அத்தோபர் 1998 பக. 20 – 21). கி.பி. 1528ஆம் ஆண்டு கிருட்டிணதேவராயர் காலத்திய செப்பேடான இது தற்சமயம் மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து திருட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது.

தெய்வேந்திரர் வரலாறு

தெய்வேந்திரன் அன்னம் படைத்தல் :

தெய்வேந்திரன் விருதுகள் :

சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட தமிழ் இலக்கியங்களில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிறப்பையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும்.

பள்ளு இலக்கியம்

பள்ளர் என்ற பெயர் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் பள்ளு இலக்கியத்தில் தான் வருகின்றது. தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் முக்கூடற் பள்ளு. பள்ளு இலக்கியம் சிற்றிலக்கிய வகையை சேர்ந்தது, சிற்றிலக்கிய வகையில் மிகுதியான நூல்களை கொண்டது. இது பண்டைய விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோன்றியது. இந்த பள்ளு நூல்கள் பள்ளர்களின் வாழ்க்கை முறையை விளக்குகிறது..

இவ்வாறு பல பள்ளு நூல்கள் இவர்களை மள்ளர் என்று கூறுகின்றன.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Tags:

பள்ளர் என்பதன் பொருள்பள்ளர் பற்றிய குறிப்புகள்பள்ளர் பள்ளு இலக்கியம்பள்ளர் இதனையும் காண்கபள்ளர் மேற்கோள்கள்பள்ளர் வெளி இணைப்புபள்ளர்இலங்கைகருநாடகம்கேரளாதென்னிந்தியாபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அன்புமணி ராமதாஸ்கழுகுமீனம்சிற்பி பாலசுப்ரமணியம்இந்திய ரிசர்வ் வங்கிஉலா (இலக்கியம்)ஜவகர்லால் நேருகர்மாநெசவுத் தொழில்நுட்பம்இளையராஜாதமிழ் இலக்கியம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்அருணகிரிநாதர்பதினெண்மேற்கணக்குநிதி ஆயோக்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்திருவள்ளுவர்ஆண்டாள்பர்வத மலைபெரும்பாணாற்றுப்படைபாரதி பாஸ்கர்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்மண் பானைபகத் பாசில்முத்துராஜாதேவநேயப் பாவாணர்திருநாள் (திரைப்படம்)தேவாங்குநெல்மாசாணியம்மன் கோயில்ஆனைக்கொய்யாஎட்டுத்தொகை தொகுப்புஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்மனித உரிமைகண்டம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)மரகத நாணயம் (திரைப்படம்)தினகரன் (இந்தியா)காடுசடுகுடுகுறிஞ்சிப் பாட்டுகொன்றை வேந்தன்ஏப்ரல் 26காவிரி ஆறுசென்னையில் போக்குவரத்துமகாபாரதம்இந்திய தேசிய சின்னங்கள்கள்ளுசத்திமுத்தப் புலவர்புறப்பொருள் வெண்பாமாலைஇயேசுநவக்கிரகம்முலாம் பழம்சீறாப் புராணம்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்நரேந்திர மோதிதிருவோணம் (பஞ்சாங்கம்)கருப்பசாமிமெய்யெழுத்துஅரண்மனை (திரைப்படம்)சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ர. பிரக்ஞானந்தாசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்ஜே பேபிதெலுங்கு மொழிசெஞ்சிக் கோட்டைதமிழ்ப் புத்தாண்டுஆய்வுஜன கண மனஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370உமறுப் புலவர்சோல்பரி அரசியல் யாப்புபரிவர்த்தனை (திரைப்படம்)சனீஸ்வரன்🡆 More