ஜன கண மன: இந்திய நாட்டுப்பண் ஆகும்

சன கண மன...

இப்பாடல் வங்காள மொழியில், இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் ஆகும்.

சன கண மன
தமிழ்: மக்கள் பெருங்கூட்டத்தின் மனதில் ஆட்சி செய்பவள் நீ
ஆங்கிலம்: "Thou Art the Ruler of the Minds of All People"
ஜன கண மன: பாடல், தமிழாக்கம், வரலாறு
"ஜன கன மன" வின் தாள் இசை

இந்தியா இந்திய தேசியக் கீதம்
இயற்றியவர்இரவீந்திரநாத் தாகூர்,
11 திசம்பர் 1911
இசைஇரவீந்திரநாத் தாகூர்,
11 திசம்பர் 1911
சேர்க்கப்பட்டது24 சனவரி 1950
இசை மாதிரி
அமெரிக்க கடற்படையால் இசைக்கப்படும் ஜன கண மன இசைக்கருவி வடிவம் (அண். 1983)
ஜன கண மன: பாடல், தமிழாக்கம், வரலாறு
இந்தியா மற்றும் வங்காள தேச கீதங்களை இயற்றிய இரவீந்திரநாத் தாகூர்
ஜன கண மன எனத்தொடங்கும் இந்திய தேசிய கீதத்தைப் பாடும் இரவீந்திரநாத் தாகூர்

பாடல்

சன கண மன அதிநாயக செய கே
பாரத பாக்கிய விதாதா.
பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல சலதி தரங்கா.
தவ சுப நாமே சாகே,
தவ சுப ஆசிச மாகே,
காகே தவ செய காதா.
சன கண மங்கள தாயக செயகே
பாரத பாக்கிய விதாதா.
செய கே, செய கே, செய கே,
செய செய செய, செய கே.

தமிழாக்கம்

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பான இது அரசு பாடநூல்களில் பயன்படுத்தப்படுகின்றது:

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற

    நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்

    மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.
    வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்

    எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்
    இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்
    வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு

    வெற்றி! வெற்றி! வெற்றி!

வரலாறு

1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரசு மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.

சனவரி 24, 1950 ஆம் ஆண்டு தான் "சன கன மண" இந்தியாவின் தேசிய கீதமாகவும், "வந்தேமாதரம்" தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.

பாடும் முறை

  • தேசிய கீதத்தை ஒருநிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது.
  • தேசிய கீதம் பாடும்போது ஆடாமல் அசையாமல் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும்.

மரியாதை

இந்தியாவில் சகல விதமான அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் வழக்கம் உள்ளது.

தேசிய கீதம் அறிமுகமான காலத்தில் அனைத்திந்திய வானொலியின் அன்றாட நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் ஒலிபரப்பட்டது.

திரையரங்குகளில் திரைப்படத்தின் முடிவில் தேசியக்கொடி திரையிலும், தேசிய கீதம் ஒலியிலும் வந்தன. திரையரங்கில் உள்ள மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். தற்காலத்தில் இந்த நடைமுறை இல்லை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஜன கண மன பாடல்ஜன கண மன தமிழாக்கம்ஜன கண மன வரலாறுஜன கண மன பாடும் முறைஜன கண மன மரியாதைஜன கண மன மேற்கோள்கள்ஜன கண மன வெளி இணைப்புகள்ஜன கண மனஇந்தியாஇரவீந்திரநாத் தாகூர்நாட்டுப்பண்வங்காள மொழிவிநாடி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மொழிபெயர்ப்புநாளந்தா பல்கலைக்கழகம்இந்திய தேசிய காங்கிரசுகலைஞர் மகளிர் உரிமைத் தொகைசூரியக் குடும்பம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்குண்டலகேசிபௌர்ணமி பூஜைபழமொழி நானூறுகரிகால் சோழன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)ஔவையார்நாம் தமிழர் கட்சிபுவி நாள்தரில் மிட்செல்பள்ளர்ஏலாதிகுறவஞ்சிதங்கராசு நடராசன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மங்கலதேவி கண்ணகி கோவில்இந்திய விடுதலை இயக்கம்தமிழ்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிவிந்துமெட்பார்மின்மு. க. ஸ்டாலின்நாணயம்வீரப்பன்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்மகேந்திரசிங் தோனிதிணை விளக்கம்அரச மரம்வடிவேலு (நடிகர்)இசுலாம்சுபாஷ் சந்திர போஸ்சுய இன்பம்முருகன்69விஜயநகரப் பேரரசுதேவாரம்சாத்துகுடிமலேரியாதொல்காப்பியம்நிலாதினமலர்திருமூலர்சீறாப் புராணம்கல்வெட்டுயாப்பிலக்கணம்வல்லினம் மிகும் இடங்கள்ஜெ. ஜெயலலிதாநீதிக் கட்சிஈ. வெ. இராமசாமிதமிழ்த் தேசியம்தீரன் சின்னமலைஇயேசு காவியம்மகரம்லால் சலாம் (2024 திரைப்படம்)உரிச்சொல்நீக்ரோசிதம்பரம் மக்களவைத் தொகுதிவினைச்சொல்தேவாங்குமேற்குத் தொடர்ச்சி மலைமரபுச்சொற்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்பாண்டியர்உமறுப் புலவர்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857இராவணன்சத்ய பிரதா சாகுஇந்திய வரலாற்றுக் காலக்கோடுகுற்றியலுகரம்மகாவீரர் ஜெயந்திகள்ளழகர் கோயில், மதுரை🡆 More