தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர் மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழ்நாட்டின் தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.

தமிழக மாவட்டங்கள்
தமிழ்நாட்டின் மாவட்டங்கள்
வகைமாவட்டங்கள்
அமைவிடம்தமிழ்நாடு
எண்ணிக்கை38 மாவட்டங்கள்
மக்கள்தொகைபெரம்பலூர் – 565,223 (குறைவு); சென்னை – 4,646,732 (அதிகம்)
பரப்புகள்426 km2 (164 sq mi) சென்னை (சிறியது)  – 6,266.64 km2 (2,419.56 sq mi) திண்டுக்கல் (பெரியது)
அரசுதமிழ்நாடு அரசு
உட்பிரிவுகள்தாலுகாக்கள், வருவாய் கிராமங்கள்

மாவட்டங்களை பிரித்தல் 2019-2020

நவம்பர் 2019-இல் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம் (33), விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் (34), வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் (35) மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம் (36), காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் (37), என 5 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டன. இப்புதிய மாவட்டங்களுக்கு 2019 நவம்பர் 16 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் 2020 மார்ச் 24 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் (38) உருவாக்கப்பட்டது.

வரலாறு

தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
தமிழ்நாட்டின் மாவட்டங்களின் பிரிவினை விவரிக்கும் அசைபடம் 1956 முதல் 2009 வரை
தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
இந்திய வரைபடத்தில் உள்ள தமிழ்நாடு மாநிலம்

1947 ஆகத்து மாதம் இந்திய விடுதலை பெற்ற பின்னர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணமானது, சென்னை மாநிலம் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1953 முதல் 1956 வரையிலான மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலமானது, 1969ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக, தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது. முந்தைய சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை: செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட ஆற்காடு, இராமநாதபுரம், சேலம், தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகியனவாகும். இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டு, தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

மாவட்டம் பிரிப்பு கோரிக்கை

அதிகரிக்கும் மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டும் மற்றும் நிர்வாக வசதிகளுக்காகவும் மாவட்டம் பிரிப்பு கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.

மண்டல வாரியாக மாவட்ட கோரிக்கை

இந்த மாவட்டங்களின் மண்டல வகைப்பாடு பொதுவாக மக்கள், ஊடகங்கள், தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படுகிறது.

மாவட்டங்கள் பட்டியல்

மண்டல வாரியாக மாவட்டங்களின் பட்டியல்

மக்கள் தொகை

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் மக்கட் தொகை 2011 ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 7,21,38,958 ஆகும். இதில் அதிக மக்கள்தொகை உள்ள மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 46,81,087 பேர் வசித்து வருகின்றனர். இம்மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி ஒரு ச.கி.மீ.க்கு 26,903 ஆக இருக்கிறது. இதன்படி மாநிலத்தில் அதிக மக்கள் அடர்த்தி பெற்ற மாவட்டமாக சென்னை உள்ளது. மாநிலத்தின் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள மாவட்டம், நீலகிரி மாவட்டம் ஆகும். நீலகிரி மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி ஒரு ச.கி.மீ.க்கு 288 பேர். கல்வியறிவில் கன்னியாகுமரி மாவட்டம் முதன்மையாக உள்ளது. இங்கு மாவட்டத்தின் 92.14% பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். கல்வியறிவில் 64.71% பெற்று, தருமபுரி மாவட்டம் கடைசி நிலையில் உள்ளது.

அட்டவணை

கீழே உள்ள அட்டவணையில், அனைத்து 38 மாவட்டங்களுக்கான புவியியல் மற்றும் மக்கட்தொகை அளவுருக்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

எண். மாவட்டம் குறியீடு தலைநகரம் நிறுவப்பட்டது முந்தைய மாவட்டம் பரப்பளவு (கி.மீ²) மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) தாலுகா/வட்டம் வரைபடம்
மக்கள் தொகை மக்கள் தொகை அடர்த்தி (2011 கணக்கெடுப்பின் படி) (கி.மீ²)
1. அரியலூர் AR அரியலூர் 23 நவம்பர் 2007 பெரம்பலூர் 1949.31 7,54,894 390 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
2. செங்கல்பட்டு CGL செங்கல்பட்டு 29 நவம்பர் 2019 காஞ்சிபுரம் 2,944.96 2,556,244 868 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
3. சென்னை CH சென்னை 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று (முன்னாள் பெயர் "மெட்ராஸ் மாவட்டம்") 426 4,646,732 26,076 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
4. கோயம்புத்தூர் CO கோயம்புத்தூர் 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 4,723 3,458,045 732 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
5. கடலூர் CU கடலூர் 30 செப்டம்பர் 1993 தென் ஆற்காடு மாவட்டம் 3,678 2,605,914 709 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
6. தருமபுரி DH தருமபுரி 2 அக்டோபர் 1965 சேலம் 4,497.77 15,06,843 335 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
7. திண்டுக்கல் DI திண்டுக்கல் 15 செப்டம்பர் 1985 மதுரை 6,266.64 21,59,775 345 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
8. ஈரோடு ER ஈரோடு 31 ஆகத்து 1979 கோயம்புத்தூர் 5,722 22,51,744 394 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
9. கள்ளக்குறிச்சி KL கள்ளக்குறிச்சி 26 நவம்பர் 2019 விழுப்புரம் 3,520.37 13,70,281 389 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
10. காஞ்சிபுரம் KC காஞ்சிபுரம் 1 சூலை 1997 செங்கல்பட்டு (சென்னை மாகாணம்) 1,655.94 11,66,401 704 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
11. கன்னியாகுமரி KK நாகர்கோவில் 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று (திருவாங்கூர்-கொச்சினிலிருந்து மாற்றப்பட்டது) 1,672 18,70,374 1,119 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
12. கரூர் KR கரூர் 30 செப்டம்பர் 1995 திருச்சிராப்பள்ளி 2,895.57 10,64,493 357 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
13. கிருட்டிணகிரி KR கிருட்டிணகிரி 9 பிப்ரவரி 2004 தருமபுரி 5,143 18,79,809 366 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
14. மதுரை MDU மதுரை 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 3,741.73 30,38,252 812 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
15. மயிலாடுதுறை மயிலாடுதுறை 7 ஏப்ரல் 2020 நாகப்பட்டினம் 1,172 9,18,356 784 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
16. நாகப்பட்டினம் NG நாகப்பட்டினம் 18 அக்டோபர் 1991 தஞ்சாவூர் 1,397 6,97,069 498 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
17. நாமக்கல் NM நாமக்கல் 1 சனவரி 1997 சேலம் 3,363 17,26,601 513 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
18. நீலகிரி NI உதகமண்டலம் 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 2,452.5 7,35,394 300 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
19. பெரம்பலூர் PE பெரம்பலூர் 30 செப்டம்பர் 1995 திருச்சிராப்பள்ளி 1,752 5,65,223 320 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
20. புதுக்கோட்டை PU புதுக்கோட்டை 14 சனவரி 1974 தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி 4,663 16,18,345 347 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
21. இராமநாதபுரம் RA இராமநாதபுரம் 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 4,089.57 13,53,445 331 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
22. இராணிப்பேட்டை RN இராணிப்பேட்டை 28 நவம்பர் 2019 வேலூர் 2,234.32 12,10,277 542 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
23. சேலம் SA சேலம் 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 5,205 34,82,056 669 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
24. சிவகங்கை SI சிவகங்கை 15 மார்ச் 1985 மதுரை மற்றும் இராமநாதபுரம் 4,086 13,39,101 328 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
25. தென்காசி TS தென்காசி 22 நவம்பர் 2019 திருநெல்வேலி 2916.13 14,07,627 483 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
26. தஞ்சாவூர் TJ தஞ்சாவூர் 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 3,396.57 24,05,890 708 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
27. தேனி TH தேனி 25 சூலை 1996 மதுரை 3,066 12,45,899 406 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
28. தூத்துக்குடி TK தூத்துக்குடி 20 அக்டோபர் 1986 திருநெல்வேலி 4,621 17,50,176 379 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
29. திருச்சிராப்பள்ளி TC திருச்சிராப்பள்ளி 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 4,407 27,22,290 618 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
30. திருநெல்வேலி TI திருநெல்வேலி 1 நவம்பர் 1956 ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று 3842.37 16,65,253 433 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
31. திருப்பத்தூர் TU திருப்பத்தூர் 28 நவம்பர் 2019 வேலூர் 1,797.92 11,11,812 618 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
32. திருப்பூர் TP திருப்பூர் 22 பிப்ரவரி 2009 கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு 5,186.34 24,79,052 478 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
33. திருவள்ளூர் TL திருவள்ளூர் 1 சூலை 1997 செங்கல்பட்டு (சென்னை மாகாணம்) 3424 37,28,104 1,089 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
34. திருவண்ணாமலை TV திருவண்ணாமலை 30 செப்டம்பர் 1989 வட ஆற்காடு மாவட்டம் 6,191 24,64,875 398 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
35. திருவாரூர் TR திருவாரூர் 18 அக்டோபர் 1991 தஞ்சாவூர் 2,161 12,64,277 585 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
36. வேலூர் VE வேலூர் 30 செப்டம்பர் 1989 வட ஆற்காடு மாவட்டம் 2030.11 16,14,242 795 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
37. விழுப்புரம் VL விழுப்புரம் 30 செப்டம்பர் 1993 தென் ஆற்காடு மாவட்டம் 3725.54 20,93,003 562 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 
38. விருதுநகர் VR விருதுநகர் 15 மார்ச் 1985 மதுரை மற்றும் இராமநாதபுரம் 4,288 19,42,288 453 தமிழ்நாட்டின் மாவட்டங்கள் 

முந்தைய மாவட்டங்கள்

வரைபடம் மாவட்டம் ஆண்டுகள் பின்னர் வந்த மாவட்டங்கள்
தமிழ்நாட்டின் மாவட்டங்கள்  செங்கல்பட்டு 1956–1997 காஞ்சிபுரம், செங்கல்பட்டு(2019 முதல்) மற்றும் திருவள்ளூர்
தமிழ்நாட்டின் மாவட்டங்கள்  வட ஆற்காடு 1956–1989 திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை(2019 முதல்) மற்றும் திருப்பத்தூர்(2019 முதல்)
தமிழ்நாட்டின் மாவட்டங்கள்  தென் ஆற்காடு 1956–1993 கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி (2019 முதல்)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

தமிழ்நாட்டின் மாவட்டங்கள் மாவட்டங்களை பிரித்தல் 2019-2020தமிழ்நாட்டின் மாவட்டங்கள் வரலாறுதமிழ்நாட்டின் மாவட்டங்கள் மாவட்டங்கள் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள் மக்கள் தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள் முந்தைய மாவட்டங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள் இதனையும் காண்கதமிழ்நாட்டின் மாவட்டங்கள் மேற்கோள்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்இந்திய ஆட்சிப்பணிஇந்தியாஉதகமண்டலம்கன்னியாகுமரி மாவட்டம்தமிழ்நாடுநாகர்கோவில்நீலகிரி மாவட்டம்மாவட்ட ஆட்சியாளர்மாவட்டம் (இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

விசயகாந்துமுல்லை (திணை)தற்குறிப்பேற்ற அணிஉரிச்சொல்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சூல்பை நீர்க்கட்டிதீரன் சின்னமலைகன்னத்தில் முத்தமிட்டால்ஆழ்வார்கள்சூரியக் குடும்பம்மருதம் (திணை)சங்க இலக்கியம்பால் (இலக்கணம்)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்மூவேந்தர்அருந்ததியர்பத்து தலஅகமுடையார்குடும்ப அட்டைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மூலம் (நோய்)முல்லைப்பாட்டுமார்கஸ் ஸ்டோய்னிஸ்இனியவை நாற்பதுநாளந்தா பல்கலைக்கழகம்சேமிப்புகார்த்திக் சிவகுமார்மதுரைஒற்றைத் தலைவலிபொருநராற்றுப்படைவாட்சப்குருதி வகைலீலாவதிமங்காத்தா (திரைப்படம்)தமிழ் மன்னர்களின் பட்டியல்அட்டமா சித்திகள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்வித்துதினமலர்குறிஞ்சி (திணை)மருதமலை முருகன் கோயில்தமிழ் இலக்கியம்புங்கைதமிழ் எழுத்துருக்களின் பட்டியல்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பட்டினப் பாலைதிணையும் காலமும்அதிமதுரம்செண்டிமீட்டர்அனுமன்பெருஞ்சீரகம்திராவிட மொழிக் குடும்பம்விவேகானந்தர்மெய்யெழுத்துதேவாரம்பனைபைரவர்திணைபிரியங்கா காந்திதிருப்பதிபிரெஞ்சுப் புரட்சிவிந்துதமிழ்நாடு காவல்துறைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்மண்ணீரல்ஏப்ரல் 25மீனம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஔவையார் (சங்ககாலப் புலவர்)மாமல்லபுரம்காடுவெட்டி குருராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இந்திய அரசியலமைப்புதளபதி (திரைப்படம்)தன்வினை / பிறவினை வாக்கியங்கள்சித்திரைஜெயம் ரவி🡆 More