தேவாங்கு

தேவாங்கு (Slender loris) என்பது இரவில் இரை தேடும் ஒரு சிறு பாலூட்டி விலங்காகும்.

செந்தேவாங்கு
Red Slender Loris
தேவாங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
தேவாங்குக் குடும்பம்
(லோரிசிடீ)
(Lorisidae)
பேரினம்:
லோரிசு
இனம்:
லோ. தார்டிகிரேடசு
இருசொற் பெயரீடு
லோரிசு தார்டிகிரேடசு
(லின்னேயஸ், 1758)
தேவாங்கு
செந்தேவாங்கின் எலும்புக்கூடு

சற்றும் தொடர்பில்லாத விலங்கு போல் தோற்றம் அளித்தாலும், இது மனிதர்களும் குரங்குகளும் உள்ள முதனி என்னும் வரிசையைச் சேர்ந்த விலங்காகும். இது பெரும்பாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள மழைவளக் காடுகளில் மரங்களிடையே வாழ்கின்றன. உருவத்தில் இது 18-26 செ.மீ் ( 7-10 அங்குலம்) நீளமும் 85-350 கி எடையுமே உள்ள சிறு விலங்கு. பூச்சிகளையும், பறவை முட்டைகளையும், சிறு பல்லிகளையும் உண்ணும். சில சமயங்களில் இலை தழைகளையும் உண்ணும். சுமார் 166-169 நாட்கள் கருவுற்று இருந்து 1-2 குட்டிகளை ஈனுகின்றன. பிறந்த குட்டிகளுக்கு 6-7 மாதம் பாலூட்டி வளர்க்கின்றன.

சூழலியல்

தேவாங்குகள் ஒரு பூச்சியுண்ணியாகும்.

வாழிடம்

இவ்விலங்குகள் பெரும்பாலும் அடர்ந்த மரங்கள் கொண்ட காடுகளில் வாழ்கின்றன. மேலும் பிளவுபடாமல் இருக்கும் காடுகளின் மேற்பரப்பில் வாழ்வதையே இவ்விலங்குகள் விரும்புகின்றன.

அறிவியல் பெயர்

தேவாங்கின் அறிவியல் பெயர் உலோரிசு இடாருடிகிராடசு (Loris tardigradus) (இலினேயசு, 1758)

வகைப்பாடு

தேவாங்கில் இரண்டு கிளை இனங்கள் உள்ளன.

  • செந்தேவாங்கு (Loris tardigradus )
  • சாம்பல் தேவாங்கு (Loris lydekkerianus) (இதுவும் முன்னர் செந்தேவாங்கு என்று அறியப்பட்டது)

இவற்றின் தற்கால சிற்றினங்கள்:

  • பேரினம்: உலோரிசு
    • சாம்பல் தேவாங்கு (Gray Slender Loris), உலோரிசு இலைடெக்கெரியனசு (Loris lydekkerianus)
    • உயர்நிலத் தேவாங்கு, உலோரிசு இலைடெக்கெரியனசு கிராண்டிசு (Loris lydekkerianus grandis)
    • மைசூர் தேவாங்கு, உலோரிசு இலைடெக்கெரியனசு லைடெக்கெரியனசு (Loris lydekkerianus lydekkerianus)
    • மலபார் தேவாங்கு, உலோரிசு இலைடெக்கெரியனசு மலபாரிக்கசு (Loris lydekkerianus) malabaricus
    • வடக்குத் தேவாங்கு, உலோரிசு இலைடெக்கெரியனசு நோருடிக்கசு (Loris lydekkerianus nordicus)
    • செந்தேவாங்கு (Red Slender Loris), உலோரிசு இடாருடிகிராடசு (Loris tardigradus)
    • உலர்நிலச் செந்தேவாங்கு, உலோரிசு இடாருடிகிராடசு இடாருடிகிராடசு (Loris tardigradus tardigradus)
    • ஆட்டன் சமவெளிச் செந்தேவாங்கு (Horton Plains Slender Loris), உலோரிசு இடாருடிகிராடசு நிக்டோசெபைடெசு (Loris tardigradus nyctoceboides)

கடவூர் தேவாங்கு சரணாலயம்

கடவூர் தேவாங்கு சரணாலயம் என்பது இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயம் 11,806 ஹெக்டேர் (29,170 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டுள்ளது.

அச்சுறுத்தல்

உயிரியலாளர்களின் கருத்துப்படி தேவாங்குகள் அதிகமாக வேட்டையாடப்படுவதால் இவை இயற்கையில் அருகி வருகின்றன. தேவாங்கின் உடலிலுள்ள ஒவ்வொரு பகுதியும் மருத்துவக் குணமுடையது என உள்நாட்டு மக்களால் நம்பப்படுகின்றது. தேவாங்குகளின் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். இதற்கு மேலதிகமாக வளர்ந்து வரும் சட்டவிரோதமான செல்லப்பிராணிகளின் கடத்தல் நடவடிக்கைகள் காரணமாகவும் இவை அழிந்து வருகின்றன.

உசாத்துணை

  • S.M.Nair (English edition); Translated by O.Henry Francis (1999). Endangered Animals of India and their conservation (In Tamil). National Book Trust. 
  • Gupta, K.K. 1998. Slender loris, Loris tardigradus, distribution and habitat use in Kalakad-Mundanthurai Tiger Reserve, India. Folia Primatologica. Vol. 69(suppl 1), 394-404.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தேவாங்கு சூழலியல்தேவாங்கு வாழிடம்தேவாங்கு அறிவியல் பெயர்தேவாங்கு வகைப்பாடுதேவாங்கு கடவூர் சரணாலயம்தேவாங்கு அச்சுறுத்தல்தேவாங்கு உசாத்துணைதேவாங்கு மேற்கோள்கள்தேவாங்கு வெளி இணைப்புகள்தேவாங்குஇந்தியாஇரவாடுதல்இலங்கைபாலூட்டிமுதனிவிலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அருந்ததியர்இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்அறுபடைவீடுகள்இந்திய உச்ச நீதிமன்றம்இலட்சம்கொல்லி மலைகரிகால் சோழன்கல்லீரல்திருநாவுக்கரசு நாயனார்பள்ளுதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ஐம்பெருங் காப்பியங்கள்இன்ஸ்ட்டாகிராம்திருக்குறள்கவிதைதொடை (யாப்பிலக்கணம்)ஆய்த எழுத்து (திரைப்படம்)திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்கமல்ஹாசன்சினேகாசீர் (யாப்பிலக்கணம்)மொழிபெயர்ப்புதிணைசூல்பை நீர்க்கட்டிஐங்குறுநூறு - மருதம்கம்பர்மண்ணீரல்சங்க இலக்கியம்நீர் பாதுகாப்புஇமயமலைசுரதாநாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்குறுந்தொகைமஞ்சள் காமாலைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்திவ்யா துரைசாமிமுத்துலட்சுமி ரெட்டிதமிழர் கலைகள்சீறாப் புராணம்சீறிவரும் காளைதமன்னா பாட்டியாபுவிமருதமலை (திரைப்படம்)தமிழ் எண் கணித சோதிடம்சிறுகதைதிருமலை (திரைப்படம்)சீனாஏப்ரல் 25வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பிரேமலுவெள்ளியங்கிரி மலைதமிழ்த்தாய் வாழ்த்துசெஞ்சிக் கோட்டைதளபதி (திரைப்படம்)சங்க காலம்நிணநீர்க்கணுசைவத் திருமுறைகள்பொருளாதாரம்பொருநராற்றுப்படையோனிஎட்டுத்தொகைபெண்பெரியபுராணம்பயில்வான் ரங்கநாதன்நீர் மாசுபாடுராஜேஸ் தாஸ்போயர்திருவண்ணாமலைபிரதமைபக்கவாதம்இந்திய நிதி ஆணையம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்விஜய் வர்மாவினோத் காம்ப்ளிகா. ந. அண்ணாதுரைமுருகன்🡆 More