யாப்பிலக்கணம் தொடை

தொடை என்பது யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புகள் வகையைச் சேர்ந்தது.

செய்யுள்களின் சீர்களும், அடிகளும் தொடுத்துச் செல்லுகின்ற முறையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் தொடை என வழங்கப்படுகின்றது. செய்யுள்களின் ஓசை நயத்துக்கும், அவற்றின் இனிமைக்கும் தொடைகள் முக்கியமானவை.

தொல்காப்பிய விளக்கம்

தொல்காப்பியர் தொடைகள் 13708 வகைப்படும் எனக் குறிப்பிடுகிறார்.

தொடை வகைகள்

தொடைகள் பலவகைப் படுகின்றன. இவை,

  1. மோனைத் தொடை
  2. இயைபுத் தொடை
  3. எதுகைத் தொடை
  4. முரண் தொடை
  5. அளபெடைத் தொடை
  6. அந்தாதித் தொடை
  7. இரட்டைத் தொடை
  8. செந்தொடை

என்பனவாகும். இவற்றுள் மோனை, எதுகை, முரண் மற்றும் அளபெடைத் தொடைகள் செய்யுள் அடிகளின் முதற் சீருடன் சம்பந்தப்பட்டிருக்க, இயைபுத் தொடை அடிகளின் இறுதிச் சீர் தொடர்பாக அமைகின்றது.

தொடை விகற்பங்கள்

மேலே கண்ட எட்டுத் தொடைகளிலே முதல் ஐந்து தொடை ஒவ்வொன்றுக்கும் அவை பாவிலே அமைந்து வருகின்ற இடங்களைப் பொறுத்து, எட்டு வகையான வேறுபாடுகள் யாப்பிலக்கண நூல்களிலே சொல்லப்பட்டுள்ளன. இவை யாப்பிலக்கணச் சொற் பயன்பாட்டு வழக்கில் "விகற்பங்கள்" எனப்படுகின்றன. மேற் கூறிய எட்டு விகற்பங்களும் வருமாறு.

  1. அடி
  2. இணை
  3. பொழிப்பு
  4. ஒரூஉ
  5. கூழை
  6. மேற்கதுவாய்
  7. கீழ்க்கதுவாய்
  8. முற்று

மோனை, எதுகை, முரண், அளபெடை, இயைபு ஆகிய தொடைகளில் எட்டுவகையான விகற்பங்கள் ஏற்படும்போது மொத்தம் நாற்பது தொடை விகற்பங்கள் உண்டாகின்றன. இவற்றுடன் விகற்பங்கள் இல்லாத அந்தாதி, இரட்டை மற்றும் செந்தொடைகளும் சேர்ந்து நாற்பத்து மூன்று ஆகின்றது.

அடிக்குறிப்பு

வெளிப்பார்வை

தொடைவகை

Tags:

யாப்பிலக்கணம் தொடை தொல்காப்பிய விளக்கம்யாப்பிலக்கணம் தொடை தொடை வகைகள்யாப்பிலக்கணம் தொடை தொடை விகற்பங்கள்யாப்பிலக்கணம் தொடை அடிக்குறிப்புயாப்பிலக்கணம் தொடை வெளிப்பார்வையாப்பிலக்கணம் தொடைஅடி (யாப்பிலக்கணம்)சீர் (யாப்பிலக்கணம்)யாப்பிலக்கணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சன்ரைசர்ஸ் ஐதராபாத்சிவன்இலக்கியம்சுற்றுச்சூழல்கன்னியாகுமரி மாவட்டம்திணைஅம்பேத்கர்தமிழ் தேசம் (திரைப்படம்)ஏற்காடுஆறுமுக நாவலர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்சப்தகன்னியர்விலங்குகுணங்குடி மஸ்தான் சாகிபுதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்அங்குலம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்திருமுருகாற்றுப்படைமரங்களின் பட்டியல்ரா. பி. சேதுப்பிள்ளைபெருஞ்சீரகம்பெயர்சிவபெருமானின் பெயர் பட்டியல்ரத்னம் (திரைப்படம்)நீரிழிவு நோய்கண்ணாடி விரியன்சென்னை சூப்பர் கிங்ஸ்அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்கடலோரக் கவிதைகள்காச நோய்தைப்பொங்கல்விளையாட்டுஜெமினிகணேசனும் சுருளிராஜனும்தொல்காப்பியம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)குதிரைகவலை வேண்டாம்கொங்கணர்முடியரசன்பிரதமைகருத்தரிப்புதிருநாவுக்கரசு நாயனார்ராஜா சின்ன ரோஜாதிருக்குறள்நீதிக் கட்சிசெவ்வாய் (கோள்)மண்ணீரல்யோகிதிருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்ஐங்குறுநூறுகன்னத்தில் முத்தமிட்டால்வைரமுத்துசுப்மன் கில்சொல்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சூல்பை நீர்க்கட்டிவெண்பாமுடிபுதினம் (இலக்கியம்)காடுவெட்டி குருசிந்துவெளி நாகரிகம்நீர்காவிரிப்பூம்பட்டினம்ஞானபீட விருதுஆகு பெயர்பழமொழி நானூறுவிவேகானந்தர்கௌதம புத்தர்சித்திரைத் திருவிழாபரணி (இலக்கியம்)நெசவுத் தொழில்நுட்பம்பாலை (திணை)கருப்பை நார்த்திசுக் கட்டிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பிரசாந்த்தமிழ்நாட்டின் அடையாளங்கள்குறிஞ்சி (திணை)ஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)ஜே பேபி🡆 More