இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax; GST) ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

இது அரசியலமைப்பு சட்டம் 2017 (நூற்று இருபத்து இரண்டாம் திருத்தச் சட்டம்)-ஆக அறிமுகமாகிறது. இந்த ச.சே.வரியானது ஜிஎஸ்டி சபை மற்றும் அதன் தலைவர் மத்திய நிதி அமைச்சர் இந்தியாநிர்மலா சீதாராமனால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ச.சே.வரி-யின் கீழ், சரக்கு மற்றும் சேவைகளானது பின்வரும் விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது அவை: 0%, 5%, 12%, 18%, 28% ஆகும். கடினமான விலைமதிப்பற்ற கற்கள் மீது 0.25% சிறப்பு விகிதமும் வடிவமற்ற அரைகுறைவான கற்கள் மற்றும் தங்கம் மீதும் 3% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு தலைவர் சரக்கு மற்றும் சேவை வரி(GST)யை ஜீலை 1 2017 அன்று அறிமுகம் செய்கிறார்.

1 ஜூலை 2017 நள்ளிரவு முதல் துவக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி மற்றும் எதிர்க் கட்சிகள் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வரலாறு

  • மத்திய கலால் வரி
  • வணிக வரி
  • மதிப்பு கூட்டு வரி (வாட்)
  • உணவு வரி
  • மத்திய விற்பனை வரி (CST)
  • ஆக்ட்ரோய்
  • பொழுதுபோக்கு வரி
  • நுழைவு வரி
  • கொள்முதல் வரி
  • ஆடம்பர வரி
  • விளம்பர வரி

சரக்குகள் மற்றும் சேவைகளின் விற்பனை, பரிமாற்றம், கொள்முதல், பண்டமாற்று, குத்தகை, இறக்குமதி போன்ற அனைத்து பரிவர்த்தனைகளிலும் ச.சே.வ விதிக்கப்படும். இந்தியா இரட்டை ஜி.எஸ்.டி மாதிரியைப் பின்பற்றும். இதன் பொருள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஜிஎஸ்டி வரியானது நிர்வகிக்கப்படும். ஒரே மாநிலத்திற்குள் நடைபெறும் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் மத்திய ஜிஎஸ்டி(ஆங்: Central GST (CGST)) ஒன்றிய அரசாலும், மாநில ஜிஎஸ்டி (ஆங்:State GST (SGST)) மாநில அரசினாலும் விதிக்கப்படும். வெவ்வேறு மாநிலங்களுக்கிடையே நடைபெறும் பரிவர்த்தனைகள் மற்றும் சரக்கு அல்லது சேவை இறக்குமதிக்கு, ஒருங்கினைந்த ஜிஎஸ்டி (ஆங்:Integrated GST (IGST)) ஒன்றிய அரசினால் விதிக்கப்படும். GST ஒரு நுகர்வு அடிப்படையிலான வரியாகும், இதனால் சரக்கு மற்றும் சேவைகள் உற்பத்தி செய்யப்படும் மாநிலத்தில் வரி வசூலிக்கப்படாது மாறாக நுகரப்படும் மாநிலத்தில் வரி வசூலிக்கப்படும். IGST மாநில அரசுகள் வரி வசூலிப்பதை சிக்கலாக்குகிறது. முந்தைய அமைப்பில் வரி வசூலிப்பது மாநில அரசின் வரையறைக்குட்பட்டிருந்தது.

விளைவுகள்

ஜிஎஸ்டி வரி விதிப்பினால் வருவாய் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு ஐந்து வருடங்களுக்கு வருவாய் பாதிப்பினை மத்திய அரசு ஈடுசெய்யும்.

வரி வருமானம்

மாதம் 2019-20 வரி வருமானம் மாற்றம் 2018-19 வரி வருமானம் மாற்றம் 2017-18 வரி வருமானம் மாற்றம்
ஏப்ரல் 1,13,865 கோடி (US$14 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  1,03,459 கோடி (US$13 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  NA
மே 1,00,289 கோடி (US$13 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  94,016 கோடி (US$12 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  NA
சூன் 99,939 கோடி (US$13 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  95,610 கோடி (US$12 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  NA
சூலை 1,02,083 கோடி (US$13 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  96,483 கோடி (US$12 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  NA
ஆகத்து 98,202 கோடி (US$12 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  93,960 கோடி (US$12 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  93,590 கோடி (US$12 பில்லியன்)
செப்டம்பர் 91,916 கோடி (US$12 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  94,442 கோடி (US$12 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  93,029 கோடி (US$12 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி 
அக்டோபர் 1,00,710 கோடி (US$13 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  95,132 கோடி (US$12 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி 
நவம்பர் 9,763 கோடி (US$1.2 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  85,931 கோடி (US$11 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி 
திசெம்பர் 94,726 கோடி (US$12 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  83,716 கோடி (US$10 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி 
சனவரி 1,02,503 கோடி (US$13 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  88,929 கோடி (US$11 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி 
பெப்ரவரி 97,247 கோடி (US$12 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  88,407 கோடி (US$11 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி 
மார்ச் 1,06,577 கோடி (US$13 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  89,264 கோடி (US$11 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி 
ஆண்டின் சராசரி 98,114 கோடி (US$12 பில்லியன்) இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி  89,750 கோடி (US$11 பில்லியன்)

ஒத்திசைவு பெயரிடும் முறை (HSN code)

ஒத்திசைவு பெயரிடும் முறை (HSN: Harmonized System of Nomenclature) என்பது ஜி.எஸ்.டி வரிவிகிதத்திற்கு உட்பட்டு பல்வேறு பொருள்களுக்கான வரிவிகிதத்தினை அடையாளம் காணக்கூடிய எட்டு இலக்க குறியீடாகும்.

  • ரூ1.5கோடிக்கு கீழே கடந்த நிதியாண்டில் விற்றுமுதல் கொண்ட நிறுவனம் ஓ.பெ.மு குறியீட்டினை(HSN code) தனது விலைப்பட்டியலில் குறிப்பிடவேண்டாம்.
  • ரூ1.5 கோடி முதல் 5கோடி வரை கடந்த நிதியாண்டில் விற்றுமுதல் கொண்ட நிறுவனம் இரண்டு இலக்க எண்ணிலான ஓ.பெ.மு குறியீட்டினை(HSN code) தனது விலைப்பட்டியலில் குறிப்பிடவேண்டும்.
  • ரூ5 கோடிக்கும் மேலே கடந்த நிதியாண்டில் விற்றுமுதல் கொண்ட நிறுவனம் நான்கு இலக்க ஓ.பெ.அ குறியீட்டினை(HSN code) தனது விலைப்பட்டியலில் குறிப்பிடவேண்டும்.

மின்னணு வழி ரசீது (E-Way Bill)

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் (GSTN) கீழ், 10 கிலோ மீட்டர்(6.2 மைல்)-க்கு மேல் மற்றும் ₹50,000-க்கும் அதிகமாக சரக்குகள் எடுத்து செல்லப்படும்பொழுது, கட்டாயமாக மின்னணு வழி ரசீது உருவாக்கப்படவேண்டும். இது ஜீன் மாதம் 2018 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.

தங்குதடையற்ற மற்றும் விரைவான சரக்கு போக்குவரத்தினை நாடு முழுவதும் உறுதிசெய்யும் வகையில் தணிக்கை நிலையங்கள் நீக்கப்பட்டன..

சட்டம்

ஜிஎஸ்டி சட்டத்தினை அமலுக்குகொண்டு வர 21- உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஜீலை 1 2017 முதல் ஜிஎஸ்டி சட்டம் தேசம் முழுவதும் அமலுக்கு வர இருப்பதால், முன்னதாகவே மாநில மற்றும் யூனியன் பிரதேச ஜிஎஸ்டி சட்டமானது, சம்மு காசுமீர் தவிர்த்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இயற்றப்பட்டது. பத்திரங்கள் கொள்முதல் மற்றும் விற்பனைகளூக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது பத்திரங்கள் பரிவர்த்தனை வரிகள் மூலம் தொடர்ந்து கையாளப்படும்.

சரக்கு மற்றும் சேவைகள் வரி பிணையம் (GSTN)

"சரக்குகள் மற்றும் சேவைகள் வரி பிணையம்" (GSTN) ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாக அனைவரும் பங்குபெறும் வகையில் அதாவது அதன் பங்குதாரர்களாக அரசு, வங்கிகள் மற்றும் வரி செலுத்துவோர் இணைந்து செயல்படும் ஒரு தளமாக உருவாக்கப்பட்டது. ஒன்றிய அரசினால் இந்த வரி அமைப்பின் கீழே உள்ள அனைத்து பரிவர்த்தனைகளையும் எளிதாக கண்காணிக்கப்படும் வகையிலும், வரி செலுத்துவோர் அவர்களின் அனைத்து விதமான வரி பரிவர்த்தனை மற்றும் தகவல்களை சேகரிக்கப்பட்டு சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த பிணையமானது மத்திய மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கீட்டில் 10 கோடி (US$1.3 மில்லியன்) முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசு 24.5 சதவீத பங்குகளிலும், மாநில அரசு 24.5 சதவீத பங்குகளிலும் மேலும் மீதமுள்ள 51 சதவீத பங்குகளில் தனியார் வங்கி நிறுவனங்களாலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவைகள் வரி சீர்திருத்தக் குழுக்கள்

27 செப்டம்பர் 2021 அன்று இந்திய நிதி அமைச்சகம் சரக்கு மற்றும் சேவைகள் வரிகள் குறித்து மறு பரிசீலனை செய்து நிதித்துறைக்கு பரிந்துரைகள் வழங்க, மாநில அமைச்சர்கள் கொண்ட இரு குழுக்கள் அமைத்துள்ளது. சரக்கு மற்றும் சேவைகள் வரி விகிதங்கள் குறித்து பரிந்துரைகள் செய்ய ஒரு குழுவும், வரி ஏய்ப்புகளை கண்டறிந்து ஆலோசனைகளை பரிந்துரை செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மின்னனு ரசீது

  • ஜிஎஸ்டியின் கீழ், அக்டோபர் 1, 2020 முதல் ₹500 கோடிக்கு மேல் விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கு B2B பரிவர்த்தனைகளுக்கான மின்-விலைப்பட்டியல் கட்டாயமாக்கப்பட்டது.
  • ஜனவரி 1, 2021 முதல் ₹100 கோடிக்கு மேல் விற்றுமுதல் உள்ளவர்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
  • ஏப்ரல் 1, 2021 முதல், ₹50 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் B2B இ-இன்வாய்ஸ்களை உருவாக்கி வருகின்றன,
  • ஏப்ரல் 1, 2022 முதல் வரம்பு ₹20 கோடியாகக் குறைக்கப்பட்டது.
  • ஜனவரி 1, 2023 முதல் ₹5 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் B2B இ-இன்வாய்ஸ்களை உருவாக்க வேண்டும்.

ஜிஎஸ்டி மின்னனு ரசீது இணைய முணையம்: ஜிஎஸ்டியின் மின்னனு ரசீது, உலகிலேயே முதன்முறையாக ஜிஎஸ்டி வரிகட்டுவோர் தங்களுடைய பி2பி(B2B) விலைப்பட்டியலை அரசாங்கத்தின் இணையமுகப்பின் மூலம் உருவாக்குவதினால் அரசாங்கத்திற்கு தேவைப்படும் அறிக்கைகள் மின்னணு முறையில் தரவு பரிமாற்றம் செய்ப்படுகிறது. இதனால் ஜிஎஸ்டி வரிதாக்கல், வரி செலுத்தும் செயல்முறை எளிதாகிறது, மேலும் பயனர்கள் தங்கள் வாடிக்ககையாளர்களூக்கு தேவையான ரசீதை அரசாங்கத்தின் இணைய போர்டல் மூலம் தனித்துவமான விலைப்பட்டியல் குறிப்பு எண் (IRN) ஆகப்பெறமுடியும், கையொப்பமிடப்பட்ட விலைப்பட்டியல், QR குறியீட்டையும் பெறமுடியும். இந்த இணைய முகப்பு ஏபிஐ ஒருங்கிணைப்பில் பெரும் உந்துதலைக் கொண்ட முகமற்ற அமைப்பு, இது சர்வதேச தரநிலை (UBL/PEPPOL) அடிப்படையில் உருவாக்கப்பட்டது, இதனால் இயந்திர வாசிப்பும் பல்வேறு கட்டமைபுகளுக்கிடையே இயங்கும்தன்மை ஆகருக்கு உருவாக்கி வழங்குகிறது.

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

Tags:

இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி வரலாறுஇந்தியா சரக்கு மற்றும் சேவை வரி விளைவுகள்இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி ஒத்திசைவு பெயரிடும் முறை (HSN code)இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி மின்னணு வழி ரசீது (E-Way Bill)இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி சட்டம்இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி சரக்கு மற்றும் சேவைகள் வரி பிணையம் (GSTN)இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி சரக்கு மற்றும் சேவைகள் வரி சீர்திருத்தக் குழுக்கள்இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி மின்னனு ரசீதுஇந்தியா சரக்கு மற்றும் சேவை வரி குறிப்புகள்இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி மேற்கோள்கள்இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி வெளிப்புற இணைப்புகள்இந்தியா சரக்கு மற்றும் சேவை வரிஇந்திய அரசுஇந்தியாவின் நிதியமைச்சர்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்நிர்மலா சீதாராமன்மறைமுக வரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கட்டுரைபத்து தலமஞ்சள் காமாலைபுனித ஜார்ஜ் கோட்டைஆற்றுப்படைநிறைவுப் போட்டி (பொருளியல்)யுகம்பட்டினப்பாலைகார்த்திக் (தமிழ் நடிகர்)எட்டுத்தொகை தொகுப்புபாரத ரத்னாதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்நிதி ஆயோக்நெய்தல் (திணை)வெண்குருதியணுகில்லி (திரைப்படம்)பெருமாள் திருமொழிஇராமலிங்க அடிகள்சுபாஷ் சந்திர போஸ்சினேகாதொழினுட்பம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சென்னைவீரப்பன்கொன்றைம. கோ. இராமச்சந்திரன்ஆண் தமிழ்ப் பெயர்கள்பெண்ணியம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்கலிங்கத்துப்பரணிதிரிசாதிருக்குறள்பிரதமைகரகாட்டம்பெண்ஐஞ்சிறு காப்பியங்கள்பெரியபுராணம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)திருக்குறிப்புத் தொண்ட நாயனார்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)காரைக்கால் அம்மையார்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தளபதி (திரைப்படம்)குகேஷ்ஐந்திணைகளும் உரிப்பொருளும்சேரர்அகநானூறுஇந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்பக்கவாதம்அருணகிரிநாதர்காதல் தேசம்நாற்கவிதிருநங்கைஎல் நீனோ-தெற்கத்திய அலைவுதமிழர் பருவ காலங்கள்குருதி வகைகிராம ஊராட்சிவிவேகானந்தர்அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்அரிப்புத் தோலழற்சிபதினெண் கீழ்க்கணக்குதிராவிடர்வீட்டுக்கு வீடு வாசப்படிபழமொழி நானூறுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)வானிலைசங்ககால மலர்கள்வராகிதேவாங்குமுகம்மது நபிகண்ணனின் 108 பெயர் பட்டியல்நுரையீரல்காடுபாம்புதிருச்சிராப்பள்ளிஇனியவை நாற்பதுஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)🡆 More