தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் | |
---|---|
பதவி | அரசுத் தலைவர் |
உறுப்பினர் | |
அறிக்கைகள் | |
வாழுமிடம் | எண். 9, பி. எஸ். குமாரசாமி ராஜா சாலை, ராஜ அண்ணாமலைபுரம், சென்னை, தமிழ்நாடு-600 028. |
நியமிப்பவர் | தமிழக ஆளுநர் |
பதவிக் காலம் | ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகள் (ஆளுநர் முன்கூட்டியே கலைக்க முடியும்) |
உருவாக்கம் | 17 திசம்பர் 1920 |
இணையதளம் | www |
சென்னை மாகாணம் இன்றைய தமிழ்நாடு, வடக்கு கேரளாவின் மலபார் பகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை மற்றும் ராயல்சீமா பகுதிகள், மற்றும் கர்னாடகத்தின் பெல்லாரி, தெற்கு கன்னடா, மற்றும் உடுப்பி பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆங்கிலேயரின் இந்திய ஆட்சிப்பகுதியாக இருந்தது.
சென்னை பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை ஆளுமை எல்லைகளாக தொடங்கிய சென்னை மாகாணம் ஆங்கில-பிரென்சு (Anglo-French) யுத்தத்திற்கு பிறகு கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் ஆற்காட் நவாப் உடன்படிக்கைக்கு பின்னர் வடக்கு சர்க்கார் தொடங்கி குமரி முனை வரை விரிந்து பரவியது. 1670-ல் பொதுத்துறையில் ஒரு செயலருடன் தொடங்கிய தலைமைச்செயலகம் 1920 ஆம் ஆண்டில் ஆறு துறைகளும் அதனை மேற்பார்வையிட ஒரு தலைமைச் செயலாளரும் கொண்ட கட்டமைப்பாக உருப்பெற்றது. இந்திய அரசு சட்டம், 1919 இயற்றப்பட்டபின் இங்கு 1920-ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சட்டப் பேரவை யின் ஆட்சிக்காலம் மூன்று ஆண்டுகளாக இருந்தது. 132 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.
இந்திய அரசு சட்டம், 1935இன்படி 215 உறுப்பினர்கள் அடங்கிய சட்டப் பேரவையும் 56 உறுப்பினர்களை கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. ஜுலை 1937 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தின் கீழ் முதல் சட்டப் பேரவை பதவியேற்றது. சட்ட மேலவை (Legislative council), எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் மூன்றாண்டு காலத்தில் ஓய்வு பெரும்படியான ஒரு நிரந்தர அமைப்பு.
1939-ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியா மாகாண அரசாங்கங்களை கலந்து பேசாமலே இரண்டாம் உலகப்போரில் இந்தியா பங்கேற்கும் என பிரகடணம் செய்தது. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த முடிவை எதிர்த்து தன் கட்சியின் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பிலிருந்தவர்களையும் ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகக் கோரியது. 1946-ல் பின்னர் நடந்த மாகாண தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
வ. எண் | உருவப்படம் | பெயர் (பிறப்பு–இறப்பு) | தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி | அரசியல் கட்சி | பதவிக் காலம் | நியமித்தவர் | சட்டமன்றத் தேர்தல் | ||
---|---|---|---|---|---|---|---|---|---|
தொடக்கம் | முடிவு | ஆட்சி | |||||||
1 | ஏ. சுப்பராயலு (1855–1921) | மதராசு மாகாண சட்ட மேலவைத் தலைவர் | தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 17 திசம்பர் 1920 | 11 சூலை 1921[RES] | 1ஆவது (206 நாட்கள்) | பிரடெரிக் தேசிகெர் | 1ஆவது | |
2 | பனகல் ராஜா (1866–1928) | சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 11 சூலை 1921 | 11 செப்டம்பர் 1923 | 1ஆவது (792 நாட்கள்) | ரீடிங் பிரபு | ||
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 19 நவம்பர் 1923 | 3 திசம்பர் 1926 | 2ஆவது (1,111 நாட்கள்) | 2ஆவது | ||||
3 | பி. சுப்பராயன் (1889–1962) | சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | சுயேட்சை | 4 திசம்பர் 1926 | 27 அக்டோபர் 1930 | 1ஆவது (1,423 நாட்கள்) | இர்வின் பிரபு | 3ஆவது | |
4 | பி. முனுசுவாமி நாயுடு (1885–1935) | சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 27 அக்டோபர் 1930 | 4 நவம்பர் 1932[RES] | 1ஆவது (740 நாட்கள்) | இர்வின் பிரபு | 4ஆவது | |
5 | ராமகிருஷ்ண ரங்காராவ் (1901–1978) | சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 5 நவம்பர் 1932 | 5 நவம்பர் 1934 | 1ஆவது (730 நாட்கள்) | வெல்லிங்டன் பிரபு | ||
சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 5 நவம்பர்1934 | 4 ஏப்ரல் 1936[RES] | 1ஆவது (516 நாட்கள்) | 5ஆவது | ||||
6 | பி. டி. இராஜன் (1892–1974) | சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 4 ஏப்ரல் 1936 | 24 ஆகத்து 1936[RES] | 1ஆவது (142 நாட்கள்) | |||
(5) | ராமகிருஷ்ண ரங்காராவ் (1901–1978) | சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 24 ஆகத்து1936 | 1 ஏப்ரல் 1937 | 3ஆவது (220 நாட்கள்) | விக்டர் ஹோப் | ||
7 | கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு (1875–1942) | சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | சுயேட்சை | 1 ஏப்ரல் 1937 | 14 சூலை 1937[RES] | 1ஆவது (104 நாட்கள்) | 1ஆவது | ||
8 | சி. இராஜகோபாலாச்சாரி (1878–1972) | சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | இந்திய தேசிய காங்கிரசு | 14 சூலை 1937 | 29 அக்டோபர் 1939[RES] | 1ஆவது (837 நாட்கள்) | |||
– | ஆளுநர் ஆட்சி | பொ/இ | 29 அக்டோபர் 1939 | 30 ஏப்ரல் 1946 | (2,375 நாட்கள்) | ||||
9 | த. பிரகாசம் (1872–1957) | சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | இந்திய தேசிய காங்கிரசு | 30 ஏப்ரல் 1946 | 23 மார்ச் 1947[RES] | 1ஆவது (327 நாட்கள்) | ஆர்ச்சிபால்ட் வேவல் | 2ஆவது | |
10 | ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1895–1970) | சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | இந்திய தேசிய காங்கிரசு | 23 மார்ச் 1947 | 6 ஏப்ரல் 1949[RES] | 1ஆவது (745 நாட்கள்) | ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை | ||
11 | பூ. ச. குமாரசுவாமி ராஜா (1898–1957) | சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | இந்திய தேசிய காங்கிரசு | 6 ஏப்ரல் 1949 | 26 ஜனவரி 1950 | 1ஆவது | கிருஷ்ண குமாரசிங் பவசிங் |
சென்னை மாநிலம், தற்போதைய தமிழ்நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-இல் உருவாக்கப்பட்டது. தற்போதைய தமிழ் நாடு மற்றும் தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் பகுதிகளும் இம்மாநிலத்தின் பகுதிகளாயிருந்தன. பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் முதன்முறையாக 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டு இங்கு மார்ச்சு 1, 1952-ல் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சென்னை மாநிலம் பிற்பாடு மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் மாறியமைப்புச் சட்டம், 1956-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பின் கேரள மாநிலமும், மைசூர் மாநிலமும் சென்னை மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. பின்னர் ஆந்திர சென்னை மாநிலங்கள் எல்லை மாற்றச் சட்டம், 1959ன் கீழ் ஏப்ரல் 1, 1960 முதல் திருத்தணி வட்டம் மற்றும் சித்தூர் வட்டத்தின் துணைவட்டமான பள்ளிப்பட்டு ஆகியவை சென்னை மாநிலத்தோடும், செங்கல்பட்டு மற்றும் சேலம் மாவட்டங்களின் சில பகுதிகள் ஆந்திர மாநிலத்தினோடும் இணைக்கப்பட்டன.
வ. எண் | உருவப்படம் | பெயர் (பிறப்பு–இறப்பு) | தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி | அரசியல் கட்சி | பதவிக் காலம் | நியமித்தவர் | சட்டமன்றத் தேர்தல் | ||
---|---|---|---|---|---|---|---|---|---|
தொடக்கம் | முடிவு | ஆட்சி | |||||||
1 | பூ. ச. குமாரசுவாமி ராஜா (1898–1957) | சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | இந்திய தேசிய காங்கிரசு | 26 ஜனவரி 1950 | 10 ஏப்ரல் 1952 | 1வது | கிருஷ்ண குமாரசிங் பவசிங் | 2ஆவது | |
2 | சி. இராஜகோபாலாச்சாரி (1878–1972) | சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | இந்திய தேசிய காங்கிரசு | 10 ஏப்ரல் 1952 | 13 ஏப்ரல் 1954[RES] | 2ஆவது (733 நாட்கள்) | சிறீ பிரகாசா | 1ஆவது | |
3 | காமராசர் (1903–1975) | குடியாத்தம் | இந்திய தேசிய காங்கிரசு | 13 ஏப்ரல் 1954 | 31 மார்ச் 1957 | 1ஆவது (1,083 நாட்கள்) | சிறீ பிரகாசா | ||
சாத்தூர் | 13 ஏப்ரல் 1957 | 1 மார்ச் 1962 | 2ஆவது (1,783 நாட்கள்) | ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில் | 2ஆவது | ||||
15 மார்ச் 1962 | 2 அக்டோபர் 1963[RES] | 3ஆவது (566 நாட்கள்) | விஷ்ணுராம் மேதி | 3ஆவது | |||||
4 | எம். பக்தவத்சலம் (1897–1987) | திருப்பெரும்புதூர் | இந்திய தேசிய காங்கிரசு | 2 அக்டோபர் 1963 | 28 பிப்ரவரி 1967 | 1ஆவது (1245 நாட்கள்) | விஷ்ணுராம் மேதி | ||
5 | சி. என். அண்ணாத்துரை (1909–1969) | சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் | திராவிட முன்னேற்றக் கழகம் | 6 மார்ச் 1967 | 13 சனவரி 1969 | 1ஆவது (680 நாட்கள்) | சர்தார் உஜ்ஜல் சிங் | 4ஆவது |
சென்னை மாகாணம் 14 ஜனவரி 1969 அன்று தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழக சட்டபேரவை 14 மே 1986-ல் சட்ட மேலவையை நீக்க தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் பாராளுமன்றத்தில் "தமிழக சட்ட மேலவை (நீக்க) சட்டம், 1986" (Tamil Nadu Legislative Council (Abolition) Act, 1986) எனும் பெயரிலான சட்ட மசோதா 1 நவம்பர் 1986 முதல் அமல்படுத்தப்படுமாறு தமிழக சட்ட மேலவை நீக்கப்பட்டது. தற்பொழுது தமிழக சட்ட அமைப்பு ஓரங்க அமைப்பாக (unicameral) 234 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும், ஒரு நியமன உறுப்பினரையும் கொண்ட சட்டபேரவையாக உள்ளது.
முதலமைச்சரின் பதவிக்காலம் சட்டப்பேரவையின் நம்பிக்கை அவர் மீது உள்ளவரை நீளும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் முதல்வராக இருப்பவர் பதவி விலகவேண்டும். மேலும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையைக்கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356 பிரிவில் (Article 356) குறிப்பிட்டுள்ள ஒர் தகவின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்கு உண்டு. 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது ஆளுனர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. முதலமைச்சராக உள்ள ஒருவர் இறப்பதாலோ, பதவி விலகுவதாலோ அல்லது பதவி நீக்கம்செய்யப்பட்டாலோ உருவாகும் காலியிடத்திற்கு, மாநில ஆளுனர் மற்றொருவரை அமைச்சரவை அமைக்க அழைத்து சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளலாம். எவரொருவருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் அவை கலைக்கப்படும் அல்லது ஆளுனர் ஆட்சி அமைக்கப்படும் அல்லது மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெரும்வரை இடைக்கால பொறுப்பாட்சி அமையும் நிலை எற்படும்.
|
|
வ. எண் | பெயர் | கட்சி | பதவிக் காலம் | |
---|---|---|---|---|
அதிக நாட்கள் தொடர்ச்சியாக பதவியில் இருந்த காலம் | பதவியில் இருந்த மொத்த நாட்கள் | |||
1 | மு. கருணாநிதி | திமுக | 6 ஆண்டுகள், 355 நாட்கள் | 18 ஆண்டுகள், 360 நாட்கள் |
2 | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 4 ஆண்டுகள், 323 நாட்கள் | 14 ஆண்டுகள், 124 நாட்கள் |
3 | எம். ஜி. இராமச்சந்திரன் | அதிமுக | 7 ஆண்டுகள், 198 நாட்கள் | 10 ஆண்டுகள், 65 நாட்கள் |
4 | கே. காமராஜ் | காங்கிரசு | 9 ஆண்டுகள், 172 நாட்கள் | 9 ஆண்டுகள், 172 நாட்கள் |
5 | எடப்பாடி கே. பழனிசாமி | அதிமுக | 4 ஆண்டுகள், 79 நாட்கள் | 4 ஆண்டுகள், 79 நாட்கள் |
6 | எம். பக்தவத்சலம் | காங்கிரசு | 3 ஆண்டுகள், 154 நாட்கள் | 3 ஆண்டுகள், 154 நாட்கள் |
7 | சி. இராஜகோபாலாச்சாரி | காங்கிரசு | 2 ஆண்டுகள், 3 நாட்கள் | 2 ஆண்டுகள், 3 நாட்கள் |
8 | சி. என். அண்ணாத்துரை | திமுக | 1 ஆண்டு, 334 நாட்கள் | 1 ஆண்டு, 334 நாட்கள் |
9 | மு. க. ஸ்டாலின் | திமுக | 2 ஆண்டுகள், 343 நாட்கள் | 2 ஆண்டுகள், 343 நாட்கள் |
10 | ஓ. பன்னீர்செல்வம் | அதிமுக | 237 நாட்கள் | 1 ஆண்டு, 106 நாட்கள் |
11 | ஜானகி இராமச்சந்திரன் | அதிமுக | 23 நாட்கள் | 23 நாட்கள் |
தற்காலிக முதல்வர் | இரா. நெடுஞ்செழியன் | அதிமுக/திமுக | 14 நாட்கள் | 21 நாட்கள் |
வ. எண் | அரசியல் கட்சி | முதலமைச்சர்களின் எண்ணிக்கை | முதல்வர் அலுவலகத்தில் இருந்த மொத்த நாட்கள் |
---|---|---|---|
1 | அதிமுக | 5+1 தற்காலிகம் | 11004 நாட்கள் |
2 | திமுக | 3+1 தற்காலிகம் | 8713 நாட்கள் |
3 | காங்கிரசு | 3 | 5442 நாட்கள் |
14 ஏப்பிரல் 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் இருவர் வாழுகின்றனர்:
This article uses material from the Wikipedia தமிழ் article தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.