புவியியல் ஆள்கூற்று முறை

புவியியல் ஆள்கூற்று முறை (Geographic coordinate system) என்பது புவியின் மீதுள்ள எந்தவொரு இடத்தையும் கோள ஆள்கூற்று முறையின் இரண்டு ஆள்கூறுகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்தும் ஒரு முறையாகும்.

இதன் போது புவியின் சுழற்சி அச்சை மையமாக கொண்டு ஆள்கூறுகள் கணிக்கப்படுகின்றன. கிரேக்க சிந்தனையாளரான தொலெமி பாபிலோனியர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு வட்டமொன்றை 360 பகுதி(பாகை)களாகப் பிரித்தார்.

  • அகலாங்கு (நிலநேர்க்கோடு) என்பது எந்தவொரு புள்ளிக்கும் நடுக்கோட்டுக்கும் இடையேயான கோணமாகும். ஒன்றுக்கொன்று சமதொலைவான கற்பனை அகலாங்கு கோடுகள் பூமியின் மேற்பரப்பில் சிறு வட்டங்களை அமைக்கின்றன. நிலநடுக்கோடு 0 பாகை அகலாங்காகும். இது ஒரு பெருவட்டத்தை அமைக்கிறது. புவி முனைகள் 90 பாகை அகலாங்குகளாகும் (வட முனை 90° N, தென் முனை 90° S).
  • நெட்டாங்கு (நிலநிரைக்கோடு) என்பது ஒரு புள்ளி ஏதாவது ஒரு புள்ளியிலிருந்து கிழக்காகவோ மேற்காகவோ ஆக்கும் கோணமாகும்: ஐக்கிய இராச்சியத்தின் கிறின்விச் நகரூடாக செல்லும் வட தெற்கான் கோடு 0 பாகையாகக் கொள்ளப்படுகிறது. அகலாங்குகளை போலல்லாது நெட்டாங்குகள் எல்லாமே பெரு வட்டங்களாகும். இக்கோடுகள் யாவும் வட மற்றும் தென்முனைகளில் இணைகின்றன.
புவியியல் ஆள்கூற்று முறை
அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம்

இவ்விரு ஆள்கூறுகளை கையாள்வதன் மூலம் புவி மேற்பரப்பின் எந்தவொரு புள்ளியையும் அடையாளப்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக, சென்னை மாநகரானது அகலாங்கு 13.09° வடக்கு, மற்றும் 80.27° கிழக்கு ஆள்கூறுகளை கொண்டுள்ளது. இதன் கருத்து, புவி மையத்திலிருந்து 13.09° வடக்காகவும்,80.27° கிழக்காகவும் வரையப்படும் ஒரு கற்பனைக் காவியானது சென்னை மாநகரூடாக செல்லும் என்பதாகும்.

பாகையானது பொதுவாக, கலை ( ′ ) விகலை ( ″ ) என பிரிக்கப்படுகின்றது. அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பவற்றை குறிக்க இவை பல முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக அகலாங்கு முதலில் கூறப்படுவது வழக்கமாகும்.

  • DM பாகை:கலை (49:30.0-123:30.0)
  • DMS பாகை:கலை:விகலை (49:30:00-123:30:00)
  • DD தசம பாகை (49.5000-123.5000), பொதுவாக 4 தசமதானங்களுக்கு.

அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பவற்றை கணிப்பிட பயன்படுத்தப்படும் முறைக்கேற்ப (Geodetic system அல்லது datum அல்லது WGS84) ஒரு புள்ளியின் அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பன வேறுபடும். இது இம்முறைகள் பயன்படுத்தும் ஆதாரப்புள்ளியை பொருத்ததாகும்

புவிநிலை ஆள்கூறுகள்

புவிநிலை செயற்கைக்கோள்கள் (உ+ம் தொலைக்காட்சி செயற்கைகோள்கள் ) நிலநடுக்கோட்டுக்கு மேலாக காணப்படுகின்றன. ஆகவே, அவற்றின் நிலையம் நெட்டாங்குகள் மூலமாக வெளிப்படுத்தப்படுகின்றது. அவற்றின் அகலாங்கு மாறுவதில்லை அஃது எப்போதும் பூச்சியமாகும்.

மூன்றாவது பரிமாணம்: உயரம், ஆழம்

புவி மேற்பரப்பிலுள்ள ஒரு புள்ளியை முற்றாக வரையறுத்து நிலையப்படுத்த உயரமும் தேவைப்படுகிறது. ஒரு புள்ளியின் உயரமானது ஒரு ஆதார தளத்துக்குச் சார்பாக அதிலிருந்து "செங்குத்தாக" அளக்கப்படுகிறது. புவியின் மையத்திலிருந்து உயரத்தை குறிப்பிட முடியுமாயினும், கடல் மட்டம் பொதுவாக பயன்பாட்டில் உள்ளது. புவியின் ஆழமான அல்லது விண்வெளியில் உள்ள புள்ளிகளைக் குறிக்க மட்டுமே புவி மையத்திலிருந்து அளக்கப்பட்ட தொலைவு பயன்படுத்தப்படுகிறது.

உசாத்துணைகள்

வெளியிணைப்புகள்

Tags:

புவியியல் ஆள்கூற்று முறை புவிநிலை ஆள்கூறுகள்புவியியல் ஆள்கூற்று முறை மூன்றாவது பரிமாணம்: உயரம், ஆழம்புவியியல் ஆள்கூற்று முறை உசாத்துணைகள்புவியியல் ஆள்கூற்று முறை வெளியிணைப்புகள்புவியியல் ஆள்கூற்று முறைதொலெமிபாகை (அலகு)புவி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மனித மூளைவிளக்கெண்ணெய்கருப்பைஎடுத்துக்காட்டு உவமையணிமுலாம் பழம்தமிழ்க் கல்வெட்டுகள்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்தமிழக மக்களவைத் தொகுதிகள்பார்க்கவகுலம்திருவிழாசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்திருநெல்வேலிகருணாநிதி குடும்பம்முதலாம் இராஜராஜ சோழன்சித்தர்நடனம்குன்றக்குடி அடிகள்புற்றுநோய்வேதம்தில்லி சுல்தானகம்தமிழ்ஒளிசுந்தர காண்டம்குருதி வகைதிருவாசகம்ஈரான்பிரேமலதா விஜயகாந்த்சன்ரைசர்ஸ் ஐதராபாத்கிரியாட்டினைன்தொழினுட்பம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்நந்திவர்மன் (திரைப்படம்)எங்கேயும் காதல்வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்இதழ்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்இந்தியன் (1996 திரைப்படம்)அறுசுவைபோக்கிரி (திரைப்படம்)மூன்றாம் நந்திவர்மன்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்இந்திய அரசியலமைப்புதிருக்குறள்கட்டுவிரியன்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிசுற்றுச்சூழல் மாசுபாடுதிருநங்கையர் நாள்கேரளம்வல்லினம் மிகும் இடங்கள்தேம்பாவணிநிணநீர்க்கணுசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)தமிழ் நாடக வரலாறுதிருநாவுக்கரசு நாயனார்முரட்டுக்காளை (1980 திரைப்படம்)தாராபாரதிபிலிருபின்வளைகாப்புபத்துப்பாட்டுபஞ்சபூதத் தலங்கள்திருவள்ளுவர் ஆண்டுமலைபடுகடாம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தமிழில் சிற்றிலக்கியங்கள்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஇராமர்ஆனைக்கொய்யாஉரிச்சொல்தமிழ்பொது ஊழிகாடுவெட்டி குருஆரணி மக்களவைத் தொகுதிஅய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்யுகம்திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்மூங்கில்பரதநாட்டியம்கம்பர்கர்நாடகப் போர்கள்பரணி (இலக்கியம்)🡆 More