சிங்களவர்

சிங்களவர் (Sinhalese, සිංහල ජාතිය) (தமிழில் சிங்களர் என்று கூறப்படுவது உண்டு) இலங்கையின் பழங்குடிகளிலொன்றைச் சேர்ந்தவர்கள் அல்லர்.

இவர்கள் இத்தீவின் பெரும்பான்மையினராக உள்ளார்கள். இவர்கள், இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சிங்கள மொழியைப் பேசுகிறார்கள்.

சிங்களவர்
மொத்த மக்கள்தொகை
(18 மில்லியனுக்கு மேற்பட்டது)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
சிங்களவர் இலங்கை       15,173,820 (74.88%)
(2012)
சிங்களவர் ஐக்கிய இராச்சியம்~150,000 (2010)
சிங்களவர் ஆத்திரேலியா100,000-க்கு மேல்
சிங்களவர் இத்தாலி80,738-க்கு மேல் (2008)
சிங்களவர் கனடா70,000-க்கு மேல் (2016)
சிங்களவர் ஐக்கிய அமெரிக்கா100,000 (2016)[நம்பகத்தகுந்த மேற்கோள்?]
சிங்களவர் சிங்கப்பூர்60,000 (2016)
சிங்களவர் மலேசியா25,000 (2016)
சிங்களவர் நியூசிலாந்து30,257 (2016)
சிங்களவர் இந்தியாகுறைந்தபட்சம்-55,000
மொழி(கள்)
சிங்களம், ஆங்கிலம், தமிழ்
சமயங்கள்
சிங்களவர் தேரவாத பௌத்தம்
சிங்களவர் கிறித்தவம்

கி.மு. 5-ஆம் நூற்றாண்டையண்டி, இலங்கையில் வாழ்ந்த பழங்குடியினருக்கும், இந்தியத் துணைக்கண்டத்தின் வங்காளம் மற்றும் ஒரிசாவிலிருந்தும் வந்த குடியேற்றவாசிகளுக்குமிடையே ஏற்பட்ட கலப்பினால் இந்த இனம் உருவானதாகக் கருதப்படுகிறது. சிங்களவரின் வரலாற்று நூல்களும், இலக்கியங்களும், தென்னிந்தியாவிலிருந்து, பெரும்பாலும் பாண்டிநாட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுடன் இனக்கலப்புகள் ஏற்பட்டதைச் சுட்டிக் காட்டுகின்றன. அண்மைக் காலத்தில் செய்யப்பட்ட அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள் சிலவும் இதை உறுதிப் படுத்துகின்றன. இவர்கள் பொதுவாக, காக்கேசிய இனக்குழுவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள், எனினும், அயலிலுள்ள திராவிடர்களுடைய அடையாளங்களும், இவர்களிடம் காணப்படுகின்றன.

சிங்களவர் சமயம்

பௌத்தம் இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு முன், இவர்கள் இந்துசமயத்தையும், பல்வேறு உள்ளூர் நம்பிக்கைகளையும் கைக்கொண்டவர்களாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.[சான்று தேவை] சிங்களவரின் சமய அமைப்புகளையும் நம்பிக்கைகளையும் சிங்களவர் சமயம் குறிக்கின்றது எனலாம். அனைத்து சிங்களவர்களுக்கும் ஒரே சமயத்தைப் பின்பற்றுவது இல்லை என்றாலும், அனேக சிங்களவர்கள் தேரவாத பெளத்த சமயத்தை முதன்மையாகப் பின்பற்றுகின்றார்கள். பௌத்தம் சிங்களவரின் பொதுப் பண்பாட்டை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றது. கந்தன் (முருகன்), பத்தினி (கண்ணகி) போன்ற "தெய்வங்களின்" வழிபாடும் சிங்களவர் சமய நம்பிக்கைகளுடன் கலந்துள்ளது. பௌத்தம் நன்றாக இலங்கையில் வேரூன்றிய பின், ஐரோப்பியர் ஆதிக்கம் ஏற்படும்வரை, சிங்களவர் பெரும்பாலும் பௌத்தர்களாகவே இருந்தார்கள் என்று கூறலாம். கி.பி 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் ஆட்சியின் போது, அவர்கள் ஆட்சியின் கீழிருந்த கரையோர மக்கள் பலர் கத்தோலிக்க சமயத்தைத் தழுவினார்கள். அதன்பின், ஒல்லாந்த, பிரித்தானிய ஆட்சிகளின்போது பலர் அவர்களுடைய மதப்பிரிவான புரொட்டஸ்தாந்து சமயத்துக்கு மாறினார்கள். சிறுபான்மையான சிங்களவர்கள் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றார்கள். இஸ்லாமிய சிங்களவர்களும் உள்ளார்கள்.

சிங்கள நாகரிகம்

ஒப்பீட்டளவில் ஒரு சிறிய நிலப்பரப்பில் வாழ்ந்த, சிறிய இனமாக இருந்த பொழுதிலும், பழங் காலத்தில் இவர்கள் கட்டியெழுப்பிய நாகரிகம் வியக்கத்தக்கதாகும். உலர் வலயங்களான இலங்கையின் வடமத்திய பகுதிகளில், கிறித்து சகாப்தத்தின் ஆரம்பத்தை அண்டிய காலப்பகுதிகளிலேயே, அவர்களல் கட்டப்பட்ட பாரிய நீர்ப்பாசனக் குளங்கள், அக்காலத்தில் அவர்களுடைய தொழில்நுட்ப வல்லமைக்குச் சான்றாகும். மேலும் அனுராதபுரம், பொலனறுவை போன்ற இடங்களிலுள்ள இடிபாடுகளினால் அறியப்படும், அக்கால நகர அமைப்புகளும், பௌத்தவிகாரங்களும், அக்காலக் கட்டிடக்கலைத் திறமைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

சிங்களவர் தமிழர் உறவு

சிங்களவர்களும் தமிழர்களும் அருகருகே வசித்து வருவதாலும், வரலாறு, பண்பாடு, வணிகம், அரசியல் போன்ற பல முனைத் தொடர்புகளாலும், பரிமாறுதல்களாலும் விளைவுகளாலும் இறுகப் பின்னப்பட்டதாலும் இரு இனங்களுக்குமிடையான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வுறவு தொன்மையானது, நெருடலானது, பலக்கியது, சிக்கலானது. இந்த உறவை நட்புநிலையில், ஆரோக்கியமாக பேணப்படாமல் விட்டதனாலேயே இலங்கை இனப்பிரச்சினை உருவானதெனலாம்.

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

சிங்களவர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sinhalese people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

சிங்களவர் சமயம்சிங்களவர் சிங்கள நாகரிகம்சிங்களவர் தமிழர் உறவுசிங்களவர் இவற்றையும் பார்க்கவும்சிங்களவர் குறிப்புகள்சிங்களவர் வெளி இணைப்புகள்சிங்களவர்இந்தோ-ஐரோப்பிய மொழிகள்இலங்கைசிங்களம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அணி இலக்கணம்கைப்பந்தாட்டம்பொது உரிமையியல் சட்டம்திருநாவுக்கரசு நாயனார்முலாம் பழம்பழமொழி நானூறுசித்தார்த்மாடுமக்களவை (இந்தியா)நயன்தாராதமிழ்விடு தூதுசைவ சமயம்பொது ஊழிஏப்ரல் 17நீர்சார்பெழுத்துஆய்த எழுத்து (திரைப்படம்)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கன்னி (சோதிடம்)கார்த்திக் (தமிழ் நடிகர்)விளக்கெண்ணெய்இரண்டாம் உலகப் போர்இந்தியக் குடியரசுத் தலைவர்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிஇந்திய அரசியலமைப்புநாயக்கர்இராவண காவியம்சௌந்தர்யா2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புவாக்குரிமைபாரத ரத்னாஇந்திரா காந்திதிருக்குறள்இந்திய நாடாளுமன்றம்விவேக் (நடிகர்)திரைப்படம்இந்திய சமூக ஜனநாயகக் கட்சிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்அரசியல்காயத்ரி மந்திரம்பித்தப்பைகாதல் தேசம்புவிமுதற் பக்கம்திரிகடுகம்சூல்பை நீர்க்கட்டிகமல்ஹாசன்திருப்புகழ் (அருணகிரிநாதர்)நெஞ்சுக்கு நீதி (2022 திரைப்படம்)தேவநேயப் பாவாணர்எச்.ஐ.விதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019நெசவுத் தொழில்நுட்பம்நாடாளுமன்றம்மஞ்சும்மல் பாய்ஸ்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சிவம் துபேபுலிடி. டி. வி. தினகரன்கடிதம்பரணி (இலக்கியம்)தஞ்சாவூர்தொல்காப்பியர்திருமணம்அக்கிஆரணி மக்களவைத் தொகுதிஅஇஅதிமுக தலைமையிலான கூட்டணிஉயர் இரத்த அழுத்தம்நாயன்மார்இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிமுருகன்கலிங்கத்துப்பரணிமின்னஞ்சல்பரிபாடல்இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்ஐக்கூபஞ்சாயத்து ராஜ் சட்டம்தலைவாசல் விஜய்🡆 More