கேரளம்: இந்திய மாநிலம்

கேரளம் (Kerala, மலையாளம்: കേരളം, Kēraḷaṁ) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று.

இது கிழக்கில் தமிழ் நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் அரபுக் கடல் உள்ளது. மலையாளம் கேரளத்தின் முதன்மையான மொழியாகும். தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகின்றனர். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் கொச்சி,கோழிக்கோடு திருச்சூர் மற்றும் கோட்டயம் ஆகும். இந்திய மாநிலங்களில் கல்வியறிவு (எழுத்தறிவு) விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது.

கேரளம்
மாநிலம்
கேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு
கேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு
கேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு
கேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு
கேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு
மேலிருந்து கடிகார திசையில்: நியமசபா மந்திரம் , கொச்சி நகர வானலை, முழப்பிலங்காடு கடற்கரை சூரிய அஸ்தமனம் , மூணார் மலைப்பகுதி, அதிரப்பள்ளி அருவி , போட்ஹவுஸ்
அடைபெயர்(கள்): கடவுளின் சொந்த நாடு , இந்தியாவின் மசாலாத் தோட்டம், தேங்காய் நிலம், மரங்களின் நிலம், தென்னிந்தியாவின் நகை
கேரளத்தின் வரைபடம்
கேரளத்தின் வரைபடம்
நாடுகேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு இந்தியா
பகுதிதென்னிந்தியா
உருவாக்கம்1 நவம்பர் 1956; 67 ஆண்டுகள் முன்னர் (1956-11-01)
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
திருவனந்தபுரம்
மாவட்டங்கள்
அரசு
 • நிர்வாகம்கேரள அரசு
 • ஆளுநர்ஆரிப் முகமது கான்
 • முதலமைச்சர்பிணறாயி விஜயன் (இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்))
 • சட்டப் பேரவைகேரள சட்டமன்றம்
ஓரவை (141 உறுப்பினர்கள்)
 • நாடாளுமன்ற தொகுதிகள்
 • உயர் நீதிமன்றம்கேரள உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்38,863 km2 (15,005 sq mi)
பரப்பளவு தரவரிசை21வது
உயர் புள்ளி (ஆனைமுடி)2,695 m (8,842 ft)
தாழ் புள்ளி (குட்டநாடு)−2.2 m (−7.2 ft)
மக்கள்தொகை (2018)
 • மொத்தம்3,46,30,192
 • தரவரிசை13வது
 • அடர்த்தி890/km2 (2,300/sq mi)
GSDP (2020-2021)
 • மொத்தம்₹9.78இலட்சம் கோடி
 • தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி2,81,872 (US$3,500)
மொழி
 • அலுவல்மொழிமலையாளம்
 • Additional officialஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+05:30)
தொலைபேசி+91
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-KL
வாகனப் பதிவுKL
மனித மேம்பாட்டுச் சுட்டெண்(2019)கேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு 0.782 (High) · 1வது
படிப்பறிவு (2018)96.2%
பாலின விகிதம் (2011)1084 /1000
இணையதளம்kerala.gov.in
சின்னங்கள்
சின்னம்கேரள அரசு சின்னம்
கேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு
மொழி
கேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு
மலையாளம்
விலங்கு
கேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு
இந்திய யானை
பறவை
கேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு
மலை இருவாட்சி
Fish
கேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு
முத்துப்புள்ளி மீன்
மலர்
கேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு
கொன்றை
பழம்
கேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு
பலாப்பழம்
மரம்
கேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு
தென்னை
பூச்சி
கேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு
Papilio buddha

பெயர்க் காரணம்

கேரளம் என்ற சொல், தமிழ்ச் சொல்லான “சேரளம்” (மலைச் சரிவு) அல்லது சேர நாடு என்பதிலிருந்து தோன்றியது என்பது அறிஞர்களின் கூற்று. இன்றைய கேரளம், வரலாற்றுக் காலத்தில் “சேர நாடு” என்று அழைக்கப்பட்டு வந்தது. பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டு பேரரசர் அசோகரின் கல்வெட்டில் “கேரளபுத்திரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரோமானிய வணிகன் பெரிபுளீசின் நிலவரைபடத்தில், இன்றைய கேரளப் பகுதியை சேரபுத்ரா என்று குறிப்பிடுகின்றார். கேரள மக்கள் மலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர். மலையில் (மேற்கு தொடர்ச்சி மலைகள்) வாழ்பவர்கள் என்பது அதன் பொருள் ஆகும்.

சிறப்புகள்

  • 5 ஏப்ரல் 1957ல் ஜனநாயக முறைப்படி, ஆசியாவிலேயே முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த முதல் மாநிலம்
  • ஆதி சங்கரர் (பொ.ஊ. 788-820) பிறந்த இடம் காலடி
  • இந்திய செவ்வியல் நடன வடிவம் "கதகளி"யின் பிறப்பிடம்
  • இரப்பர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம்
  • இந்தியாவின் நறுமணத் தோட்டம்
  • களரிப்பயிற்று தற்காப்புக் கலையின் பிறப்பிடம்
  • இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம்
  • வளைகுடா நாடுகளில் பணி புரியும் இந்தியர்களில் கேரள மாநிலத்தவர்கள் அதிகமாக உள்ளனர். அதனால் வெளிநாட்டு செலாவணி கேரளத்திற்கு கூடுதலாக கிடைக்கிறது.

புவியமைப்பு

38,852 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலைகள்; மேற்கில் அரபிக் கடல்; தென்கிழக்கில் தமிழ்நாடு; வடகிழக்கில் கர்நாடகம் எல்லைகளாக அமைந்துள்ளது.

ஆறுகள்

நெய்யாறு, பம்பை, மணிமலை, பெரியாறு, பாரதப்புழை, சித்தாறு மற்றும் மூவாற்றுப்புழை ஆகியவை கேரளத்தின் முக்கிய ஆறுகள்.

வரலாறு

பரசுராமரின் கோடரி கடலைப் பிளந்த தால் தோன்றிய நாடு கேரளம் என்பது புராணக் கதை.இதனை பார்க்கவ சேத்திரம் என்றும் பரசுராம சேத்திரம் என்றும் வழங்குகின்றனர்.
போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல ஐரோப்பியர் கேரளத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். 1947வாக்கில் கேரளம் திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் என மூன்று சமஸ்தானங்களாக இருந்தது.
மலபார் சீரமைப்புச் சட்டம் 1956ன் படி, திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் பகுதிகள் இணைக்கப்பட்டு, நவம்பர் 1956ல் இன்றைய கேரளம் உதயமானது.

பொருளாதாரம்

விவசாயம் முக்கிய தொழில். உணவுப் பொருள் சாகுபடியை விட பணப்பயிர் சாகுபடி அதிகரித்து வருகிறது. பாரம்பரிய தொழில்களான கைத்தறி, கயிறு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில்களும் சிறப்பாக நடைபெறுகிறது.

ஆட்சிப் பிரிவுகள்

கேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு 
கேரள மாவட்டங்கள்
கேரளம்: பெயர்க் காரணம், சிறப்புகள், புவியமைப்பு 

கேரளம் பதினான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருவன:

கேரளத்தில் 63 வட்டங்களும், 1634 வருவாய் ஊராட்சிகளும், 978 ஊராட்சிகளும் ஐந்து நகராட்சிகளும் உள்ளன.

அரசியல்

இது இருபது மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. கேரள சட்டமன்றத்திற்காக, கேரளத்தை 140 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கேரள மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 33,406,061 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 4.91% விகிதம் ஆக உயர்துள்ளது. மக்கள்தொகையில் ஆண்கள் 16,027,412 மற்றும் பெண்கள் 17,378,649 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1084 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 860 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 94.00% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 96.11% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 92.07% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,472,955 ஆக உள்ளது.

சமயம்

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 18,282,492 (54.73 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 8,873,472 (26.56 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 6,141,269 (18.38 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 3,814 (0.01 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 4,489 (0.01 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 4,752 (0.01 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7,618 (0.02 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 88,155 (0.26 %) ஆகவும் உள்ளது.

மொழி

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மலையாத்துடன், தமிழ், கன்னடம், உருது மற்றும் கொங்கணி மொழிகள் பேசப்படுகிறது.

கலைகள்

கூடியாட்டம், கதகளி, கேரள நடனம், மோகினியாட்டம், தெய்யம், துள்ளல் ஆகியவை கேரளத்தின் நாட்டிய வகைகளாகும். வர்மக்கலை, களரி போன்ற தற்காப்புக் கலைகளும் கேரளத்திலிருந்து தோன்றியவையே. செண்டை மேளம் புகழ் பெற்றது.

சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்

சுற்றுலா தலங்கள்

தேக்கடி, பெரியார் தேசியப் பூங்கா, மூணார், வயநாடு, ஆலப்புழாவின் கட்டு வள்ளம், கொச்சி மற்றும் கொல்லம்.

ஆன்மிக தலங்கள்

சபரிமலை, ஆற்றுக்கால் பகவதி கோவில், சோட்டானிக்கரை பகவதி கோயில், ஆறு அய்யப்பன் கோயில்கள், மீன்குளத்தி பகவதி கோயில், குருவாயூர் குருவாயூரப்பன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் மற்றும் மங்கலதேவி கண்ணகி கோவில் ஆகும்.

வைணவத் திருத்தலங்கள்

108 வைணவத் திருத்தலங்களில் 11 வைணவத் திருத்தலங்கள் கேரளத்தில் அமைந்துள்ளது. அவையாவன:

  1. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், திருவனந்தபுரம் மாவட்டம்
  2. திருக்கடித்தானம், கோட்டயம் மாவட்டம்
  3. திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், எர்ணாகுளம் மாவட்டம்
  4. திருமூழிக்களம், எர்ணாகுளம் மாவட்டம்
  5. திருப்புலியூர், ஆலப்புழா மாவட்டம்
  6. திருச்செங்குன்றூர், ஆலப்புழா மாவட்டம்
  7. திருவண்வண்டூர், ஆலப்புழா மாவட்டம்
  8. திருவல்லவாழ், பத்தனம்திட்டா மாவட்டம்
  9. திருவாறன்விளை, பத்தனம்திட்டா மாவட்டம்
  10. திருவித்துவக்கோடு, திருச்சூர் மாவட்டம்
  11. திருநாவாய், மலப்புறம் மாவட்டம்

விழாக்கள்

ஓணம் மற்றும் விஷு கேரளத்தின் முக்கிய பண்டிகைகளாகும். கிறிஸ்துமஸும் ரமலான் பெருநாளும் இங்கு கொண்டாட படுகிறது. மேலும் திருச்சூர் பூரம் திருவிழா, பெண்களின் ஐயப்பன் கோயில் எனப்படும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் மகம் திருவிழா, மகர விளக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.

இறைச்சி

கேரள மாநிலத்தின் கால்நடை பராமரிப்புத் துறையின் தகவல்படி 2009–2010 ஆண்டில் மட்டும் 61 லட்சம் பசு உட்பட்ட கால்நடைகள் தமிழகம் மூலம் கேரளத்திற்கு இறைச்சிக்காகக் கொண்டு வரப்பட்டன. 18 லட்சம் கால்நடைகள் சோதனையை மீறிக் கடத்தப்பட்டவை.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கேரளம் பெயர்க் காரணம்கேரளம் சிறப்புகள்கேரளம் புவியமைப்புகேரளம் வரலாறுகேரளம் பொருளாதாரம்கேரளம் ஆட்சிப் பிரிவுகள்கேரளம் அரசியல்கேரளம் மக்கள் தொகையியல்கேரளம் கலைகள்கேரளம் சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்கேரளம் விழாக்கள்கேரளம் இறைச்சிகேரளம் மேலும் பார்க்ககேரளம் மேற்கோள்கள்கேரளம் வெளி இணைப்புகள்கேரளம்அரபுக் கடல்இந்தியாகர்நாடகம்கொச்சிகோட்டயம்கோழிக்கோடுதமிழ்தமிழ் நாடுதிருச்சூர்திருவனந்தபுரம்மலையாளம்மலையாளம் மொழிமொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொல்லி மலைதேவாரம்சங்க இலக்கியம்எல் நீனோ-தெற்கத்திய அலைவுஉயிர்மெய் எழுத்துகள்நீலகேசிகாச நோய்பண்டாரம் (சமய மரபு)மொழிபெயர்ப்புகட்டுவிரியன்உலா (இலக்கியம்)எங்கேயும் காதல்தைராய்டு சுரப்புக் குறைதமிழ்நாடு ஊராட்சி மன்றங்கள்விண்டோசு எக்சு. பி.இயற்கை வளம்கிரியாட்டினைன்குருதி வகைபாலை (திணை)திருமந்திரம்இந்திய நாடாளுமன்றம்முத்தொள்ளாயிரம்இந்தியாவில் இட ஒதுக்கீடுசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்தமிழ்விடு தூதுஅருந்ததியர்தமிழ்நாடு சட்டப் பேரவைதிராவிசு கெட்தமிழ் தேசம் (திரைப்படம்)கலைஉமாபதி சிவாசாரியர்அத்தம் (பஞ்சாங்கம்)பதினெண்மேற்கணக்குஇன்னா நாற்பதுசிவவாக்கியர்மூவேந்தர்பதினெண் கீழ்க்கணக்குசிவாஜி கணேசன்கண்ணதாசன்மு. மேத்தாகிராம சபைக் கூட்டம்திட்டக் குழு (இந்தியா)பி. காளியம்மாள்நனிசைவம்கலிங்கத்துப்பரணிஅழகிய தமிழ்மகன்மழைசென்னைஏப்ரல் 23வளி மாசடைதல்வைதேகி காத்திருந்தாள்இல்லுமினாட்டிமகாவீரர் ஜெயந்திநிணநீர்க்கணுஆயுள் தண்டனைவிந்துதேனீகிராம நத்தம் (நிலம்)வாலி (கவிஞர்)தமிழ் நீதி நூல்கள்சிலப்பதிகாரம்திருமலை நாயக்கர் அரண்மனைகலித்தொகைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்குணங்குடி மஸ்தான் சாகிபுசித்தர்தனிப்பாடல் திரட்டுநாயன்மார் பட்டியல்திருமலை நாயக்கர்சேக்கிழார்ஈ. வெ. இராமசாமிதிணை விளக்கம்இந்தியப் பொதுத் தேர்தல்கள்தமிழச்சி தங்கப்பாண்டியன்ஆழ்வார்கள்தேர்தல்இந்திய அரசியல் கட்சிகள்🡆 More