நியான்: 10 ஆம் அணுவெண்ணைக் கொண்ட மூலகம்

நியான் (இலங்கை வழக்கு: நியோன்) என்பது ஒரு தனிமம் ஆகும்.

இதன் குறியீடு Ne. அணு எண் 10. அண்டத்தில் பொதுவாகக் காணப்படும் தனிமம் இதுவே. ஆனாலும் புவியில் அரிதாகவே கிடைக்கிறது. இது ஒரு மந்த வளியாகும். நியான் விளக்குகளில் வெற்றிடத்தில் இதனைச் சூடேற்றும் போது சிவந்த நிறத்துடன் ஒளிர்கிறது. இது பொதுவாக காற்றில் இருந்து பிரித்தெடுக்கப் படுகிறது. மந்த வளிமமான நியான் வளிமண்டலக் காற்றில் 65000 ல் ஒரு பங்கே உள்ளது.. ஹீலியம், கிரிப்பிடான்,செனான் போன்ற வளிமங்களின் செழுமை இதை விடக் குறைவு. வளி மண்டலக் காற்றை நீர்மமாக்கி, பகுதிக் காய்ச்சி வடித்தல் மூலம் அதிலுள்ள கூறுகளைத் தனித்துப் பிரித்தெடுத்து விடுகின்றனர். இந்த வழிமுறையை வெற்றிகரமாகச் செய்து 1898 இல் நியான், ஆர்கன், கிரிப்ட்டான், செனான் போன்ற மந்த வளிமங்களை அடுத்தடுத்துக் கண்டுபிடித்தவர்கள் சர் வில்லியம் ராம்சே (Sir William Ramsay:1852–1916) மோரிஸ் டபிள்யூ டிராவர்ஸ் (Morris W. Travers:1872–1961) என்ற இங்கிலாந்து நாட்டு அறிஞர்களாவர். கிரேக்க மொழியில் நியோஸ் என்றால் புதிய என்று பொருள். அச் சொல்லே இதற்குப் பெயர் தந்தது.

நியான்
10Ne
He

Ne

Ar
புளோரின்நியான்சோடியம்
தோற்றம்
colorless gas exhibiting an orange-red glow when placed in a high voltage electric field
நியான்: வரலாறு, காணப்படும் இடங்கள், பண்புகள்
Neon gas in a discharge tube, so-called neon light.
நியான்: வரலாறு, காணப்படும் இடங்கள், பண்புகள்
Spectral lines of neon in the visible region
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் நியான், Ne, 10
உச்சரிப்பு /ˈnɒn/
தனிம வகை நிறைம வளிமம்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 182, p
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
20.1797(6)
இலத்திரன் அமைப்பு 1s2 2s2 2p6
2, 8
Electron shells of neon (2, 8)
Electron shells of neon (2, 8)
வரலாறு
முன்னூகிப்பு W. Ramsay (1897)
கண்டுபிடிப்பு W. Ramsay & M. Travers (1898)
முதற்தடவையாகத்
தனிமைப்படுத்தியவர்
W. Ramsay & M. Travers (1898)
Invention of neon lighting Georges Claude (1910)
இயற்பியற் பண்புகள்
நிலை வளிமம்
அடர்த்தி (0 °C, 101.325 kPa)
0.9002 g/L
திரவத்தின் அடர்த்தி கொ.நி.யில் 1.207 g·cm−3
உருகுநிலை 24.56 K, -248.59 °C, -415.46 °F
கொதிநிலை 27.07 K, -246.08 °C, -410.94 °F
மும்மைப் புள்ளி 24.5561 K (-249°C), 43 kPa
மாறுநிலை 44.4 K, 2.76 MPa
உருகலின் வெப்ப ஆற்றல் 0.335 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 1.71 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 5R/2 = 20.786 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 12 13 15 18 21 27
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 1, 0
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 2080.7 kJ·mol−1
2வது: 3952.3 kJ·mol−1
3வது: 6122 kJ·mol−1
பங்கீட்டு ஆரை 58 pm
வான்டர் வாலின் ஆரை 154 பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்பு face-centered cubic
நியான் has a face-centered cubic crystal structure
காந்த சீரமைவு diamagnetic
வெப்ப கடத்துத் திறன் 49.1x10-3  W·m−1·K−1
ஒலியின் வேகம் (gas, 0 °C) 435 மீ.செ−1]]
பரும தகைமை 654 GPa
CAS எண் 7440-01-9
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: நியான் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
20Ne 90.48% Ne ஆனது 10 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
21Ne 0.27% Ne ஆனது 11 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
22Ne 9.25% Ne ஆனது 12 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
·சா

வரலாறு

நியான் என்ற வார்த்தை ஆண்பால், பெண்பால் வேறுபாடு அற்ற வடிவம் என பொருட்படும் νέος என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும். பிரித்தானிய வேதியியலாளர் சர் வில்லியம் ராம்சே (1852-1916) மற்றும் மோரிஸ் டபிள்யூ டிராவேர்ஸ் (1872-1961) மூலம் 1898 ஆம் ஆண்டில் லண்டன் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அது காற்று ஒரு திரவமாக மாறும் வரை ராம்சே கருவியில் குளிர்வித்து பின் திரவம் வெப்பமடையும் வரை கொதிக்கவைத்து நியான் பிரித்தெடுக்கப்பட்டது.

    1898ன் இறுதியில் கிட்டத்தட்ட ஆறு வார கால ஆராய்ச்சிக்குப்பின் பிரிதெடுக்கப்பட்டது.

காணப்படும் இடங்கள்

நியானின் நிலையான ஐசோடோப்புகள் நட்சத்திரங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.20Ne ஹீலியம் மற்றும் ஆக்சிஜனை ஆல்பா செயல்முறை-ல் உருக்குவதன் மூலம் உருவாக்கப்பட்டது.இதற்கு 100 மெகா கெல்வின் வெப்பம் தேவைப்படும். ஆனால் இது சூரியனை விட 3 மடங்கு அதிக வெப்பநிலை ஆகும். நியான் உலகளாவிய அளவில் வாயுமண்டலத்தில் ஏராளமாக இருக்கிறது; இது, ஹைட்ரஜன்,ஹீலியம், ஆக்ஸிஜன், கார்பனுக்கு அடுத்து பிரபஞ்சத்தில் அதிகமாக உள்ள ஐந்தாவது தனிமம் ஆகும். பூமியில் அதன் உறவினர் செய்வார்கள், ஹீலியம் போன்ற, இதன் விளைவாக வாயு மற்றும் தூசி மேகங்களில் இருந்து உயர் ஆவி அழுத்தம்,மிக குறைந்த வெப்பநிலை மற்றும் இரசாயன செயலற்றநிலையின் மூலம் பூமி போன்ற சிறிய வெப்பமான திட கோள்கள் உருவாக்கத்தின் போது தங்குகிறது.

பண்புகள்

Ne என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய நியானின் அணுவெண் 10,அணு எடை 20.18, அடர்த்தி 0.839கிகி/கமீ. இதன் உறை நிலையும், கொதி நிலையும் முறையே 24.55 K, 27.05 K ஆகும். மேலும் இதன் அடர்த்தி ஒரு வளிமண்டல அழுத்தத்தில் 0.89990 g/litre ஆகும்.இது மந்த வளிமம் என்றும் வேதிவினைகளில் ஈடுபடாது என்றும் சொல்லப்பட்டாலும் புளூரினுடன் சேர்ந்து கூட்டுப்பொருளை உற்பத்தி செய்கிறது என்பதை சோதனைக் கூடத்தில் மெய்ப்பித்துள்ளனர். நிலையற்ற ஹைட்ரேட்டுக்களை நியான் உண்டாகுகிறது. Ne2+, (NeAr)+, (NeH)+ மற்றும்(NeHe)+ போன்ற அயனிகளை நிற மற்றும் நிறமாலை மானிகளின் ஆய்வில் அறிந்துள்ளனர். மேலும் இதன் ஏலக்ட்ரான் அமைப்பு 1s2,2s2,2p6 ஆகும்.

நியான் சாதாரண மின்னழுத்தத்தில் மற்றும் அனைத்து மந்த வாயுக்களிளும் ஆழ்ந்த பிளாஸ்மா ஒளி கசிவு ஏற்படுகிறது. மனித கண்ணிற்கு இந்த ஒளி பல கோடுகள் கொண்ட சிவப்பு ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கிறது.ஒளிக்கதிர் ஆய்வு கருவி மூலம் நோக்கினால் இது மறைத்து இது ஒரு வலுவான பச்சை கோடு போன்ற தோற்றத்தில் உள்ளது. நியான் விளக்கில் பொதுவான இரண்டு வகையான பயன்பாட்டில் உள்ளன. நியான் ஒளி விளக்குகள் 100-250 பற்றி வோல்ட் மிகவும் இயக்க கூடியதாக உள்ளன. அவை பரவலாக அதிகாரபூர்வ சுற்று-சோதனை கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் ஒளிவீச்சு டயோடுகள் (LED) இப்போது அத்தகைய பயன்பாடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றது. இந்த எளிய நியான் சாதனங்கள் ஒளிகாட்சிகள் சாதனங்களின் முன்னோடிகளில் மற்றும் பிளாஸ்மா தொலைக்காட்சி திரைகளில் பயன்பட்டது. அதிக மின்னழுத்தம் நியான் குழாய்கள் (2-15 kilovolts) நீண்டவை.இவை கண்ணாடி குழாயில் அடைக்கப்பட்டு மாறும் வடிவங்கள்,விளம்பரம்,கட்டடக்கலை மற்றும் கலை பயன்பாடுகளுக்கு எழுத்துக்களை உருவாக்கலாம்.

பயன்கள்

நியான்: வரலாறு, காணப்படும் இடங்கள், பண்புகள் 
நியான் குழல் விளக்கு

வெற்றிட மின்னிறக்க குழாயில், சிவப்பு-ஆரஞ்சு கலந்த ஒளியைத் தருகிறது. மந்த வளிமங்களில் நியான் வழி செய்யப்படும் மின்னிறக்கமே சாதாரண மின்னழுத்தம் மற்றும் மின்னோட்ட நிலையில் செறிவு மிக்க ஒளியைத் தருகிறது. இதனால் இது விளம்பரத் தட்டிகளில் பயன்படுத்த ஏற்புடையதாய் இருக்கிறது. இடிதாங்கி, உயர் மின்னழுத்தம் காட்டி, தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற பல சாதனங்களில் நியான் வழி மின்னிறக்கம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. நியானும் ஹீலியமும் சேர்ந்த வளிம நிலை ஊடகம் லேசராகப் பயன்தருகிறது. இதில் நியானும் ஹீலியமும் 1:10 என்ற விகிதத்தில் கலக்கப்பட்டிருக்கும்.

முதலில் ஹீலியம் மின்னிறக்கக் குழாயில் வெளிப்படும் ஏலக்ட்ரான்களோடு மோதி கிளர்ச்சியுறுகிறது. இது பின்னர் மீட்சியிலா மோதலினால் நியானுக்குக் கிளர்ச்சியாற்றலை பரிமாற்றம் செய்கிறது. நியானின் கிளர்ச்சியாற்றலும், ஹீலியத்தின் கிளர்ச்சியாற்றலும் மிக நெருக்கமாகச் சமமாக இருப்பதால், ஆற்றல் பரிமாற்றம் முழுமையானதாக இருக்கிறது. வெளியீட்டுத்திறன் அதிகமாக இருப்பதால் இது திறந்த வெளியில் செய்திப் பரிமாற்றத்திற்கும், முப்பரிமான ஒளிப்படப்பதிவுகளுக்கும்(holograms) பயன்படுகிறது. நீர்ம நிலையில் பொருளாதாரச் சிக்கனமிக்க மிகச் சிறந்த குளிரூட்டியாக உள்ளது. நியானின் குளிரூட்டும் திறன் ஹீலியத்தை விட 40 மடங்கு அதிகமாகவும், ஹைட்ரஜனை விட 3 மடங்கு அதிகமாகவும் இருக்கிறது. ஓரணு உடைய நியான் பூமியின் வளிமண்டலத்தின் இரட்டை நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளை காட்டிலும் இலகுவானதாக உள்ளது.எனவே நியான் நிரப்பப்பட்ட ஒரு பலூன் மிகவும் ஹீலியம் பலூன் விட மிக மெதுவாக காற்றில் உயரும்.

நியான்: வரலாறு, காணப்படும் இடங்கள், பண்புகள் 
"நியான்" குறிகளில் நியானோடு மற்ற மந்த வளிமங்களும் சேர்த்து செய்யப்படலாம்.

குறிப்புகள்

புற இணைப்புகள்

Tags:

நியான் வரலாறுநியான் காணப்படும் இடங்கள்நியான் பண்புகள்நியான் பயன்கள்நியான் குறிப்புகள்நியான் புற இணைப்புகள்நியான்அணு எண்அண்டம்தனிமம்புவி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாடுமுதற் பக்கம்செங்குந்தர்இந்தியக் குடியரசுத் தலைவர்இந்திய அரசியலமைப்புஅன்னை தெரேசாதிருக்குறள்உலா (இலக்கியம்)பாட்டாளி மக்கள் கட்சிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மதராசபட்டினம் (திரைப்படம்)யூடியூப்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்பெரும்பாணாற்றுப்படையானைஅவதாரம்எட்டுத்தொகை தொகுப்புஐஞ்சிறு காப்பியங்கள்வீரமாமுனிவர்சே குவேராதமிழ் இணைய இதழ்கள்கரிகால் சோழன்கோத்திரம்கருத்தரிப்புபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சங்க இலக்கியம்செவ்வாய் (கோள்)பீப்பாய்பழனி முருகன் கோவில்ஈரோடு தமிழன்பன்இடைச்சொல்சுற்றுச்சூழல்சிவவாக்கியர்தீரன் சின்னமலைபயில்வான் ரங்கநாதன்வாதுமைக் கொட்டைநாயன்மார் பட்டியல்திராவிட முன்னேற்றக் கழகம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்நான் அவனில்லை (2007 திரைப்படம்)வீட்டுக்கு வீடு வாசப்படிஇந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்சங்ககால மலர்கள்நாயக்கர்வெப்பநிலைபகிர்வுஉ. வே. சாமிநாதையர்தளபதி (திரைப்படம்)தமிழர் நெசவுக்கலைமஞ்சும்மல் பாய்ஸ்அரவான்கவலை வேண்டாம்மதுரை வீரன்மலையாளம்நிறைவுப் போட்டி (பொருளியல்)சித்திரைத் திருவிழாகாதல் (திரைப்படம்)அன்னி பெசண்ட்இராமர்இந்தியாதொல்காப்பியம்வைரமுத்துவேளாண்மைதமிழ் எழுத்துருக்களின் பட்டியல்கபிலர் (சங்ககாலம்)பெயர்ச்சொல்தமிழ் நீதி நூல்கள்சிந்துவெளி நாகரிகம்வெப்பம் குளிர் மழைசித்திரம் பேசுதடி 2அறம்காதல் தேசம்கூகுள்சாய் சுதர்சன்வானிலைமாதவிடாய்இணையத்தின் வரலாறு🡆 More