அமெரிசியம்

அமெரிசியம் (Americium) என்பது Am என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கதிரியக்க யுரேனியப் பின் தனிமமாகும்.

இதனுடைய அணு எண் 95. ஆக்டினைடு வரிசைச் சேர்மமான இது தனிம வரிசை அட்டவணையில் லாந்தனைடு வரிசைத் தனிமம் யூரோப்பியத்திற்கு கீழே வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காக்கள் என்றழைக்கப்பட்ட பகுதியில் முதன்முதலில் கிடைத்ததால் ஒப்புமை கருதி இதற்கு அமெரிசியம் எனப் பெயரிடப்பட்டது.

மன்காட்டன் திட்டத்தின் ஒரு பகுதியாக சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்தின்]] உலோகவியல் ஆய்வகத்தில், கலிபோர்னியாவின் பெர்க்லி பகுதியைச் சேர்ந்த கிளென் தி.சீபோர்கு குழுவினர் முதன்முதலில் 1944 ஆம் ஆண்டு கதிரியக்கம் கொண்ட அமெரிசியத்தைக் கண்டறிந்தனர்.. யுரேனியப் பின் தனிமங்களின் வரிசையில் இது மூன்றாவது உறுப்பினராக இருந்த போதிலும் இது கியூரியம் கண்டறியப்பட்ட பிறகே நான்காவதாகக் கண்டறியப்பட்டது. இக்கண்டுபிடிப்பு பொது மக்களின் பார்வைக்கு இரகசியமாக வைக்கப்பட்டு 1945 ஆம் ஆண்டில்தான் வெளியிடப்பட்டது. புளூட்டோனியத்தை அணுக்கரு உலையில் நியூட்ரான்களால் மோதச் செய்து அமெரிசியம் தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் ஒரு டன் அணுக்கரு எரிபொருளில் 100 கிராம் அமெரிசியம் இடம் பெற்றுள்ளது. அயனியாக்க அறை புகை உணரியாக வர்த்தக முறையில் பரவலாக அமெரிசியம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதுவொரு நியூட்ரான் மூலமாகவும் தொழிற்சாலை அளவீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அணுக்கரு மின்கலன்களிலும் வான் கப்பல்களில் உந்து எரிபொருளாகவும்யன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

அமெரிசியம் வெள்ளி உலோகம் போன்ற நிறத்தோற்றம் கொண்ட ஒரு மென்மையான கதிரியக்க உலோகமாகும். 241Am மற்றும் 243Am என்ற இரண்டு ஐசோடோப்புகளை அமெரிசியம் பெற்றுள்ளது. கரைசல்களில் இது +3 ஆக்சிசனேற்ற நிலையை ஏற்கிறது. இதைத் தவிர +2 முதல் +8 வரையிலான ஆக்சிசனேற்ற நிலைகளையும் இது ஏற்பதாக அறியப்பட்டுள்ளது

வரலாறு

அமெரிசியம் 
பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் லாரன்ஸ் கதிரியக்க ஆய்வகத்தில் 60 அங்குல சைக்ளோட்ரான், ஆகஸ்ட் 1939-இல்.

வரலாறு

முன்னதாக அணுக்கரு சோதனைகளின் போது அமெரிசியம் உருவாகிறது என்பது அறியப்பட்டாலும், தேவைக்காக தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டு தனிப்படுத்தப்பட்டது 1944 ஆம் ஆண்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கிளென் தி.சீபோர்க்கு குழுவினர் இதைத் தயாரித்தனர். 60 அங்குல சுழற்சியலைவியை இதற்காக இவர்கள் பயன்படுத்தினார்கள்.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

அமெரிசியம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அமெரிசியம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அமெரிசியம் வரலாறுஅமெரிசியம் வரலாறுஅமெரிசியம் மேற்கோள்கள்அமெரிசியம் புற இணைப்புகள்அமெரிசியம்அமெரிக்காக்கள்தனிம வரிசை அட்டவணைதனிமம்மூலக்கூற்று வாய்ப்பாடுயூரோப்பியம்லாந்தனைடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

திணை விளக்கம்சட் யிபிடிதிருநங்கைலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்ஏலாதிசென்னை சூப்பர் கிங்ஸ்மழைநீர் சேகரிப்புதமிழ்ப் புத்தாண்டுதமிழ் எண்கள்திருநாவுக்கரசு நாயனார்ஆய்த எழுத்துசீவக சிந்தாமணிதிருநெல்வேலிஉமறுப் புலவர்சிங்கம் (திரைப்படம்)அகத்திணைஔவையார்சூரியக் குடும்பம்கண் (உடல் உறுப்பு)பெண்ணியம்மறைமலை அடிகள்ஆயுள் தண்டனைஊராட்சி ஒன்றியம்சிந்துவெளி நாகரிகம்தங்கம்வேளாண்மைகொங்கணர்சி. விஜயதரணிபீப்பாய்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தேவேந்திரகுல வேளாளர்சிறுகதைசித்தர்கள் பட்டியல்கருக்காலம்சிவபுராணம்புரோஜெஸ்டிரோன்ஆனைக்கொய்யாசிறுநீர்ப்பாதைத் தொற்றுதற்குறிப்பேற்ற அணிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்போக்குவரத்துமாத்திரை (தமிழ் இலக்கணம்)இணையத்தின் வரலாறுதெலுங்கு மொழிகொங்கு வேளாளர்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)செக்ஸ் டேப்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்சீறாப் புராணம்மண்ணீரல்திருக்குறிப்புத் தொண்ட நாயனார்குற்றாலக் குறவஞ்சிதினகரன் (இந்தியா)பரணி (இலக்கியம்)புறநானூறுமதுரைக் காஞ்சியோகிபிள்ளையார்குடும்பம்நாளந்தா பல்கலைக்கழகம்தமிழ்ஒளிசித்திரைவிந்துஆப்பிள்பல்லவர்மரபுச்சொற்கள்பிரேமலுமுடியரசன்நாடோடிப் பாட்டுக்காரன்பழமுதிர்சோலை முருகன் கோயில்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019மலையாளம்திருமூலர்டுவிட்டர்சுவாதி (பஞ்சாங்கம்)இந்து சமயம்மதுரைமுக்கூடற் பள்ளுஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்🡆 More