தமிழ் இலக்கணம் மாத்திரை

தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது ஒருவன் இயல்பாகக் கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும்.

எழுத்துகள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் ஒரு பொருளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண் இயல்பாகவே மூடித் திறந்து கொள்ளும். இப்படி நம்மை அறியாமல் கண் இமைத்துக் கொள்ளும் கால அளவுதான் மாத்திரை.


அடிக்குறிப்பு

  • "இயல்பெழு மாந்தர்தம் இமைநொடி மாத்திரை" - நன்னூல்
  • பிற்காலத்தவர் இதனைக் கைந்நொடி எனக் கூறுவது பொருந்தாது.
    • குறிப்பு
    எண்ணுவோம் ஒருவர் படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்குத் தெரியாமலேயே அவர் இமை நொடிக்கிறது. அதாவது மூடித் திறக்கிறது. இதுதான் இமைநொடி. இயல்பாக எழும் இமைநொடி மாந்தர் இமைநொடி. பிற உயிரினங்களின் இமைநொடி அன்று. 'அன்பு அரவணைக்கும்' என்று ஒருவர் சொல்வதாக வைத்துக்கொள்வோம். இந்தத் தொடரில் 'அன்பு' என்பதை ஒலிக்க இரண்டரை மாத்திரை. இதுவே குற்றியலுகரமாக ஒலிக்கப்படும்போது இரண்டு மாத்திரை. அடுத்த சொல் வரும்போது விட்டிசை. பின்னர் 'அரவணைக்கும்' என்று வரும் சொல்லை ஒலிக்கும்போது ஏழு மாத்திரை. இத்தொடரை இயல்பாக மொழிய 10 மாத்திரையாவது வேண்டும். இப்போது எண்ணுவோம். 'கைந்நொடி'யை மாத்திரை எனல் தகுமா? எடுத்தல் கால், இணைத்தல் அரை, இறுக்கல் முக்கால், முடித்தல் ஒன்று - என்றெல்லாம் நம் முன்னோர்களில் சிலர் கூறியிருப்பதை விட்டுவிடலாம் எனபதை இவ்விடத்தில் முன்வைப்பதே நல்லது. நன்னூலாரும் இதனைக் கூறவில்லை என்பதை ஆய்ந்து உணர்ந்துகொள்வோம். [[கைந்நொடி'யை மாத்திரை எனல் தகுமா? எடுத்தல் கால், இணைத்தல் அரை, இறுக்கல் முக்கால், முடித்தல் ஒன்று - என்றெல்லாம் நம் முன்னோர்களில் சிலர் கூறியிருப்பதை விட்டுவிடலாம் . என்று மேலே கூறப்பட்ட கருத்து மறுக்கத் தக்கதாகும் ஏனெனில் கால்,அரை, முக்கால் போன்ற மாத்திரை அளவு பற்றிக் கூறியவர் முத்துவீரியம் என்ற இலக்கண நூலை எழுதிய முத்துவீரியர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வகுப்பறையில் ஆசிரியர் மாத்திரை அளவு பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்த வகுப்பறையில் ஒரு மாணவன் எழுந்து நின்று ஆசிரியரை நோக்கி, 'ஆசிரியரே, நீர் மெய்எழுத்துகளுக்கு அரை மாத்திரை என்று கூறினீர்கள். அந்தக் கால அளவு இயல்பாக கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணிமை பாதி இறங்கி வருகின்ற கால அளவு என்று கூற வேண்டுமா?' என்று வினவினால் அதற்கு ஆசிரியர் 'இயல்பாகக் கண்ணிமைக்கும் நேரத்தைக் கணக்கிட்டு அதை இரண்டாக வகுத்துக் கொண்டால் அரை மாத்திரை கால அளவு கிடைத்துவிடும்' என்று கூறிவிடுவார். அக்கருத்து மாணவருக்குத் துல்லியமான அரை மாத்திரை கால அளவை அளந்து கொள்ள இயலாமல் போய்விடும்.அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் இயல்பாக இமைக்கும் கால அளவை அளந்து அரை மாத்திரைக்கு உரிய கால அளவை மிகத் துள்ளியமாகக் கூறிவிடலாம். வசதி வாய்ப்பு இல்லாத அக்காலத்தில் அரை மாத்திரைக்கு உரிய கால அளவை முத்துவீரியம் என்ற இலக்கண நூலின் ஆசிரியர் பகுத்து உரைத்திருப்பது மிகச் சரி என்றே கூறிவிடலாம்.]]
  • Tags:

    🔥 Trending searches on Wiki தமிழ்:

    அத்தி (தாவரம்)தேவயானி (நடிகை)தங்கராசு நடராசன்கார்த்திக் (தமிழ் நடிகர்)தமிழச்சி தங்கப்பாண்டியன்புனித ஜார்ஜ் கோட்டைஅன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)இம்மையிலும் நன்மை தருவார் கோயில்கல்லீரல்இந்திய வரலாறுபரிபாடல்விண்டோசு எக்சு. பி.கலம்பகம் (இலக்கியம்)தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சிவபுராணம்காயத்ரி மந்திரம்ரோகிணி (நட்சத்திரம்)திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கிருட்டிணன்சோழர்சேரன் செங்குட்டுவன்சினைப்பை நோய்க்குறிபஞ்சாயத்து ராஜ் சட்டம்மனித உரிமைஇலட்சம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்மரபுச்சொற்கள்அயோத்தி இராமர் கோயில்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்கொன்றை வேந்தன்வெப்பநிலைதிரிகடுகம்மார்பகப் புற்றுநோய்மார்க்கோனிமதுரைக் காஞ்சிபத்துப்பாட்டுகண் (உடல் உறுப்பு)தேவாங்குஇந்திய அரசியல் கட்சிகள்நிணநீர்க் குழியம்செயங்கொண்டார்புணர்ச்சி (இலக்கணம்)படையப்பாஅண்ணாமலை குப்புசாமிதேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்செயற்கை நுண்ணறிவுவடிவேலு (நடிகர்)புதுக்கவிதைபாண்டியர்வளைகாப்புவிசாகம் (பஞ்சாங்கம்)இந்திய தேசிய சின்னங்கள்இந்திய அரசியலமைப்புஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுவேலு நாச்சியார்தமிழிசை சௌந்தரராஜன்ஆண் தமிழ்ப் பெயர்கள்சைவத் திருமுறைகள்நற்கருணைஉரிச்சொல்திருவண்ணாமலைகுடும்ப அட்டைதமிழர்தங்க மகன் (1983 திரைப்படம்)வைரமுத்துமீனம்ஈரோடு தமிழன்பன்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)பெ. சுந்தரம் பிள்ளைமாமல்லபுரம்கிராம நத்தம் (நிலம்)சிவாஜி (பேரரசர்)மானிடவியல்தொலைக்காட்சிஇந்திய தேசியக் கொடிதமிழக மக்களவைத் தொகுதிகள்கண்டம்🡆 More