மெய்யெழுத்து

பிறப்பொலியியலில் (articulatory phonetics), மெய்யொலி (Consonant) என்பது, பேச்சு மொழியின் ஒரு ஒலிவகை ஆகும்.

நெஞ்சிலிருந்து வரும் காற்று வாய்ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மெய்யொலிகள்,

  • அடைப்பொலி,
  • மூக்கொலி,
  • உரசொலி,
  • மருங்கொலி,
  • ஆடொலி,
  • வருடொலி,
  • தொடரொலி

எனப் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

தமிழ் அரிச்சுவடியில் க் தொடங்கி ன் வரையுள்ள 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் (consonant) எனப்படுகின்றன. இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துகள், வல்லினத்தையும் மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் இவ்விரண்டுவகை ஒலிகளுக்கும் இடைப்பட்ட ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.

வல்லினம் மெல்லினம் இடையினம்
க் ங் ய்
ச் ஞ் ர்
ட் ண் ல்
த் ந் வ்
ப் ம் ழ்
ற் ன் ள்

மெய்யெழுத்துகள், உயிரெழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளை உருவாக்குகின்றன.

சொற்களில் மெய்யெழுத்துகளின் பயன்பாட்டுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:-

எழுத்து பெயர் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி ஒலிப்பு சொல்
க் ககரமெய் k க்கம்
ங் ஙகரமெய் ŋ ங்கம்
ச் சகரமெய் ச்சை
ஞ் ஞகரமெய் ɲ ஞ்சு
ட் டகரமெய் ɽ ட்டு
ண் ணகரமெய் ɳ ண்
த் தகரமெய் த்து
ந் நகரமெய் ந்து
ப் பகரமெய் p ப்பு
ம் மகரமெய் m ம்பு
ய் யகரமெய் j மெய்
ர் ரகரமெய் ɾ̪ பார்
ல் லகரமெய் ல்வி
வ் வகரமெய் ʋ வ்வு
ழ் ழகரமெய் ɻ வாழ்வு
ள் ளகரமெய் ɭ ள்ளம்
ற் றகரமெய் r வெற்றி
ன் னகரமெய் n ன்பு

தற்காலத்தில், க்ஷ், ஜ், ஸ், ஷ், ஹ் ஆகிய கிரந்த மெய்யெழுத்துகளும் தமிழ் உரைநடையில் பயன்படுத்தப்படுவதுண்டு. சொற்களில் அவற்றின் பயன்பாட்டுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:-

எழுத்து பெயர் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி ஒலிப்பு சொல்
க்ஷ் க்ஷகரமெய் க்ஷ்மி
ஜ் ஜகரமெய் பூஜ்யம்
ஸ் ஸகரமெய் s ஸ்திரம்
ஷ் ஷகரமெய் ʂ புஷ்பம்
ஹ் ஹகரமெய் h ஹ்ரேன்

இலக்கணம்

மொழி முதலில்

தமிழ் இலக்கணப்படி, தனிமெய்யெழுத்துகள் மொழிமுதலில் வரமாட்டா. ஆயினும், தற்காலத்தில் பிறமொழிச் சொற்களை எழுதும்போது தனிமெய்யெழுத்துகள் மொழிமுதலில் வருமாறும் (எ-டு: க்ரியா, த்ரிஷா) இவ்விலக்கணத்தை மீறி எழுதுவதுண்டு.

க், த், ந், ப், ம் ஆகிய ஐந்து மெய்யெழுத்துகளும் பன்னிரண்டு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும். சகர மெய்யானது அ, ஐ, ஔ ஆகிய மூன்று உயிரெழுத்துகளைத் தவிர்த்து, ஏனைய ஒன்பது உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் எனத் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. ஆயினும், சகர மெய்யும் பன்னிரண்டு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் என நன்னூலில் கூறப்பட்டுள்ளது. வகர மெய்யானது உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்கு உயிரெழுத்துகளைத் தவிர்த்து, ஏனைய எட்டு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும். ஞகர மெய்யானது ஆ, எ, ஒ ஆகிய மூன்று உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் எனத் தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருந்தாலும், இவற்றோடு அகரத்தோடும் சேர்ந்து ஞகர மெய் மொழி முதலாகும் எனப் பவணந்தி நன்னூலில் கூறுகின்றார். யகர மெய்யானது ஆகாரத்தோடு மட்டும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் எனத் தொல்காப்பியர் கூறுகின்றார். எனினும், யகர மெய்யானது அ, ஆ, உ, ஊ, ஓ, ஔ ஆகிய ஆறு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் என்று பவணந்தி நன்னூலில் கூறுகின்றார். ஆயினும், அ, உ, ஊ, ஓ, ஔ ஆகிய உயிரெழுத்துகளுடன் சேர்ந்து யகர மெய் மொழி முதலாகுவதற்குக் காட்டப்படும் எடுத்துக்காட்டுகள் வடசொற்களாக இருப்பதைக் காரணங்காட்டி, பவணந்தியின் கூற்றை மறுப்பதுண்டு.

மேற்கோள்கள்

Tags:

பிறப்பொலியியல்வாய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அன்னி பெசண்ட்முத்தொள்ளாயிரம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)ஆனைக்கொய்யாதைராய்டு சுரப்புக் குறைதன்யா இரவிச்சந்திரன்அனைத்துலக நாட்கள்அம்பேத்கர்சித்ரா பௌர்ணமிகொல்லி மலைசிவன்புலிமுருகன்திருமணம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்இந்தியாவின் பசுமைப் புரட்சிஇடிமழைமூவேந்தர்செண்டிமீட்டர்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்வெள்ளியங்கிரி மலைபுலிசித்தர்கள் பட்டியல்திருத்தணி முருகன் கோயில்மோகன்தாசு கரம்சந்த் காந்திஇந்திய மக்களவைத் தொகுதிகள்மங்கலதேவி கண்ணகி கோவில்மூகாம்பிகை கோயில்இந்திய தேசிய காங்கிரசுமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)கொடைக்கானல்திரு. வி. கலியாணசுந்தரனார்பகிர்வுமாதவிடாய்கிராம சபைக் கூட்டம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்அஜித் குமார்இங்கிலீஷ் பிரீமியர் லீக்தமிழ்நாடு காவல்துறைபரிபாடல்தேவயானி (நடிகை)மண்ணீரல்உயிர்ச்சத்து டிவிபுலாநந்தர்அருணகிரிநாதர்பொது ஊழிகருப்பை நார்த்திசுக் கட்டிசாகித்திய அகாதமி விருதுபர்வத மலைதிருமலை (திரைப்படம்)விராட் கோலிஇந்திரா காந்திமத கஜ ராஜாமாலைத்தீவுகள்முக்கூடற் பள்ளுபிரேமலுகர்மாமுல்லைக்கலிஞானபீட விருதுகருப்பசாமிஅன்புமணி ராமதாஸ்தமிழ்ஒளிசுற்றுச்சூழல் பாதுகாப்புதமிழ் எழுத்து முறைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மருதம் (திணை)சுற்றுலாபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்திருநாவுக்கரசு நாயனார்தமிழ்ப் புத்தாண்டுகனடாசங்கம் மருவிய காலம்108 வைணவத் திருத்தலங்கள்நயினார் நாகேந்திரன்இந்திய அரசியல் கட்சிகள்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்🡆 More