ஆவியமுக்கம்

ஆவியமுக்கம் அல்லது ஆவியழுத்தம் (Vapor Pressure) என்பது ஒரு நீர்மத்தின் ஆவியாகும் தன்மையைக் குறிக்கும் அளவீடு ஆகும்.

இது, திண்ம அல்லது நீர்ம மூலக்கூறுகள் அந்நிலையிலிருந்து தப்பிச் செல்வதற்கான போக்கைக் குறிக்கின்றது. ஒரு மூடிய கட்டகத்தில் (closed system) நீர்மத்துடன் (அல்லது திண்மத்துடன்) சமநிலையில் இருக்கும் அதன் ஆவியான வளிமத்தின் அழுத்தமே ஆவி அழுத்தம் அல்லது ஆவியமுக்கம் என்று வழங்கப் படுகிறது.

எல்லாத் திண்மங்களும், நீர்மங்களும், வளிமநிலைக்கு மாறுவதற்கான குணத்தையும், எல்லா வளிமங்களும் மீண்டும் ஒடுங்கி நீர்மம் மற்றும் திண்மமாவதற்கான குணத்தையும் கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், திண்ம, நீர்ம நிலைகளுடன் சமநிலையிலுள்ள வளிம நிலையினால் ஏற்படும் பகுதி அமுக்கம் ஒன்று உண்டு. இதுவே அவ்வெப்பநிலையில், அப்பதார்த்தத்தின் ஆவியமுக்கம் ஆகும். காலநிலையியலில், என்பது வளியிலுள்ள நீராவியினால் ஏற்படுத்தப்படும் பகுதி அமுக்கம் ஆகும்.

ஒரு நீர்மம் அல்லது திண்மத்தின் வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க, அதன் ஆவி அழுத்தமும் அதிகரிக்கும். அதே போல, வெப்பநிலை குறையக் குறைய, ஆவி அழுத்தமும் குறையும்.

வளிமத்தோடு தொடர்பு கொள்ள இருக்கும் பரப்பளவு ஆவியழுத்தத்தை நிர்ணயிப்பதில்லை. அதனால் எந்த மாற்றமும் இராது. ஆனால் நீர்மத்தின் மூலக்கூறுகள் ஆவி அழுத்தத்தைத் தீர்மானிக்கின்றன. இடை-மூலக்கூறு விசை அதிகமாக இருக்கும் நீர்மத்தில் ஆவி அழுத்தம் குறைவாகவும், இடை-மூலக்கூறு விசை குறைவாக இருக்கும் ஒரு நீர்மத்தில் ஆவி அழுத்தம் அதிகமாகவும் இருப்பது இயல்பு.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சங்கம் (முச்சங்கம்)பாரிபிக் பாஸ் தமிழ்திரு. வி. கலியாணசுந்தரனார்பத்து தலசென்னைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கண்ணதாசன்தற்கொலை முறைகள்டுவிட்டர்மலேரியாஜிமெயில்தமிழர் விளையாட்டுகள்கிழவனும் கடலும்பெயர்ச்சொல்திருமூலர்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்சீனாமருதம் (திணை)காரைக்கால் அம்மையார்நீர் பாதுகாப்புமருது பாண்டியர்கள்ளழகர் கோயில், மதுரைபிரேமலுகன்னியாகுமரி மாவட்டம்ஜெ. ஜெயலலிதாமுருகன்கேள்விபொன்னுக்கு வீங்கிஇரா. இளங்குமரன்காதல் (திரைப்படம்)சே குவேராஈரோடு தமிழன்பன்இங்கிலீஷ் பிரீமியர் லீக்சிவனின் 108 திருநாமங்கள்நிதி ஆயோக்தமிழ் நாடக வரலாறுதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்முல்லை (திணை)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்மண் பானைதிருமணம்மதுரை வீரன்ஆவாரைகருப்பைசிவன்இராவணன்சிதம்பரம் நடராசர் கோயில்குப்தப் பேரரசுஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இந்திரா காந்திபுதுமைப்பித்தன்ஏற்காடுமுகம்மது நபிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)தமிழ்நாட்டின் நகராட்சிகள்தங்க மகன் (1983 திரைப்படம்)தேசிய அடையாள அட்டை (இலங்கை)திருக்குறள் பகுப்புக்கள்சங்க காலப் புலவர்கள்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்இரவீந்திரநாத் தாகூர்களப்பிரர்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)மதுரைபொது ஊழிஷங்கர் (திரைப்பட இயக்குநர்)சின்னம்மைகவிதைபாண்டியர்ஸ்ரீலீலாமுத்துராமலிங்கத் தேவர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)மெய்யெழுத்துசிலப்பதிகாரம்குதிரைநாட்டு நலப்பணித் திட்டம்🡆 More