உருகுநிலை

திண்மமொன்றின் உருகுநிலை (Melting Point) என்பது அப்பொருள் திண்ம நிலையிலிருந்து நீர்ம (திரவ) நிலைக்கு மாறும் போதுள்ள வெப்பநிலையைக் குறிக்கும்.

உருகுநிலையில் திண்ம, நீர்ம நிலைகள் சமநிலையில் காணப்படும். ஒரு பொருளின் உருகுநிலையானது அங்கிருக்கும் அழுத்தத்தில் (pressure) தங்கியிருக்கும். எனவே உருகுநிலையானது ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் வரையறுக்கப்படும். வெப்பம் ஏற்றப்படும் போது பொருளின் வெப்பநிலை உயர்ந்து கொண்டு செல்லும், எனினும் பொருள் உருகத் தொடங்கியதும் வெப்பநிலை மாற்றம் எதுவும் இல்லாது வெப்பம் உறிஞ்சப்படும். இது உருகல் மறைவெப்பம் எனப்படும். சில பொருட்கள் நீர்மநிலைக்கு (திரவநிலைக்கு) வராமலே வளிம (வாயு) நிலையை அடைவதுண்டு. இது பதங்கமாதல் என அழைக்கப்படுகின்றது.

எதிர்மாறாக, நீர்மநிலையில் இருந்து திண்மநிலைக்கு மாறும்போதுள்ள வெப்பநிலையைக் குறிக்கும்போது இது உறைநிலை (Freezing Point) எனப்படும். பல பொருட்களுக்கு உருகுநிலையும், உறைநிலையும் ஒன்றாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக தனிமங்களில் ஒன்றான பாதரசத்தின் உருகுநிலை, உறைநிலை இரண்டுமே 234.32 கெல்வின் (−38.83 °C or −37.89 °F). ஆனாலும் சில பதார்த்தங்களுக்கு திண்ம-நீர்ம நிலைமாற்ற வெப்பநிலைகள் வேறுபடும். எடுத்துக்காட்டாக அகார் 85 °C (185 °F) யில் உருகும் ஆயினும், திண்மமாகும் வெப்பநிலை 31 °C - 40 °C (89.6 °F - 104 °F) ஆக இருக்கும்.

சில பொருட்கள் மீக்குளிர்வுக்கு உட்படுவதனால், உறைநிலையானது ஒரு தனிச் சிறப்புள்ள இயல்பாகக் கருதப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக பனிக்கட்டியின் உருகுநிலையானது 1 வளிமண்டல அழுத்தத்தில் 0 °C (32 °F, 273.15 K) ஆகும். நீரின் உறைநிலையும் அதுவேயாகும். ஆனாலும், உறைநிலைக்கு போகாமலே நீரானது சிலசமயம் மீக்குளிர்வுக்கு உட்பட்டு −42 °C (−43.6 °F, 231 K) ஐ அடையும்.

கொதிநிலையைப் போல உருகுநிலை அமுக்க மாற்றத்தால் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்படுவதில்லை. வளியமுக்க நிலையில் அறியப்பட்ட பொருட்களுள் மிகக்கூடிய உருகுநிலையைக் கொண்டது கரிமத்தின் ஒரு வடிவமான கிராபைட் ஆகும். இதன் உருகுநிலை 3948 கெல்வின்கள் ஆகும்.

உருகுநிலை
Kofler bench

மேற்கோள்கள்

Tags:

திண்மம்நீர்மம்பதங்கமாதல்மறைவெப்பம்வளிமம்வெப்பநிலைவெப்பம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்கருத்தரிப்புஇனியவை நாற்பதுஇந்து சமயம்பார்க்கவகுலம்ஆய்த எழுத்து (திரைப்படம்)வன்னியர்திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்அழகர் கோவில்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்மங்கலதேவி கண்ணகி கோவில்செவ்வாய் (கோள்)பனைமுகம்மது நபிசெண்டிமீட்டர்கருக்கலைப்புஇந்திய வரலாறுவ. உ. சிதம்பரம்பிள்ளைநிறைவுப் போட்டி (பொருளியல்)நெசவுத் தொழில்நுட்பம்தங்கராசு நடராசன்கணையம்மருதமலைஉலக ஆய்வக விலங்குகள் நாள்தமிழ்நாடு அமைச்சரவைமாதேசுவரன் மலைதனுஷ்கோடிதைப்பொங்கல்மழைஇலங்கையின் மாவட்டங்கள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்நீதி இலக்கியம்பாண்டியர்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்யாழ்கல்லீரல்திருமந்திரம்அஜித் குமார்கௌதம புத்தர்சென்னை சூப்பர் கிங்ஸ்கருமுட்டை வெளிப்பாடுமுக்கூடற் பள்ளுநற்றிணைமரங்களின் பட்டியல்சூர்யா (நடிகர்)முடக்கு வாதம்ஏற்காடுதமிழ் இலக்கியம்கும்பம் (இராசி)சைவத் திருமுறைகள்விண்டோசு எக்சு. பி.ஔவையார்பகவத் கீதைபதிற்றுப்பத்துஇலட்சத்தீவுகள்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இந்திய மக்களவைத் தொகுதிகள்படித்தால் மட்டும் போதுமாபாம்புசென்னை உயர் நீதிமன்றம்மொழிபெயர்ப்புசுப்பிரமணிய பாரதிஇந்தியக் குடியரசுத் தலைவர்திருப்பாவைபெருமாள் திருமொழிசிறுபஞ்சமூலம்பணவீக்கம்விசாகம் (பஞ்சாங்கம்)பெண்ணியம்மக்களவை (இந்தியா)ஏலாதிஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)ஆண் தமிழ்ப் பெயர்கள்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கார்த்திக் (தமிழ் நடிகர்)🡆 More